இடுகையிட்டது
Sathik Ali
தேதி:
நம் பிரபஞ்சம் எல்லையற்றதா? இல்லை அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு அப்பால் காலக்சிகளோ? நட்சத்திரங்களோ? இல்லை. அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? நம் உணர்வுக்கு என்னவென்று புலப்படா Dark matter . நம் உணர்வின் அலைவரிசை மாற மாற அங்கே பல parallel universe கள் புலப்படக் கூடும். அங்கே ஏதோ ஒரு யூனிவர்சில் நான் இப்போது LKG , அல்லது MBBS படித்துக் கொண்டிருக்கலாம். ஏதோ ஒன்றில் இந்திய பிரதமராக இருக்கலாம். அல்லது வரலாறு ஆகியிருக்கலாம். இந்த parellal universe எத்தனை இருக்கும்? முடிவிலா எண்ணிக்கையில் இருக்குமா? சாத்தியமில்லை. காரணம் முடிவிலா ஒன்று என்பது அனைத்துமாக இருக்கிறது. முடிவிலா தோற்றங்கள் பிரபஞ்சங்களுக்கு இருக்குமென்றால் என் வீட்டு பூனையின் சாயலில் கூட பிரபஞ்சங்கள் இருக்கும் சாத்தியத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. முடிவிலா இணை பிரபஞ்சங்கள் இருக்குமென்றால் இந்த பிரபஞ்சமே எல்லைகளற்று இருக்கலாமே. இந்த எண்ணிக்கை நிச்சயம் ஒரு பெரிய நம்பருக்கு பின் சுருங்கி இன்னொரு அமைப்பின் பாகமாகிவிடும். அது போல பிரபஞ்சம் தோன்று முன் என்ன இருந்தது ? என்ற கேள்வியும் இதே புதிர் தான். சென்ற பதிவில்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்