நம் தன்னுனர்வு ஒரு சூப்பர் கான்சியஸ் எனும் பெரு மரத்திலிருந்து கிளைத்து மனித உணர்வை அடைந்திருக்கிறது. இந்த கிளை அறிவை தேடுதவில் பரிணமித்திருக்கிறது. நம் தன்னுணர்வு தனிப்பட்ட ஒன்றில்லை. பிரபஞ்சத்தில் நாம் உணரும் அத்தனை உயிர்களும் பொருட்களும் நம் தன்னுணர்வில் பங்களிக்கிறது . நம் குடலில் வாழும் ஒரு பாக்டீரியாவானாலும், குடிக்கும் நீரானாலும், உண்ணும் உணவானாலும் அதன் உணர்வுகள், தேவைகள் நம் தன்னுணர்வை பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஸ்வீட்டை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அது உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாவின் ஆசையாக இருக்கலாம். வயிற்றிலிருக்கும் குழந்தை தனக்கு எது தேவை என்ற சிக்னலை தாயின் உணர்வுகளுக்கு கடத்துகிறது. பிரபஞ்சத்தின் பல்வேறு சக்தி அதிர்வுகள் சூட்சும நிலையில் நம் உணர்வை பாதிக்கிறது. நம் உணர்வுக்கேற்ப நமக்கு ஃபிசிக்கலாக ஒரு உடல் , புலன்கள், பூமி, விண்வெளியில் ஒரு இடம், ஒரு சுழல் பாதை அனுபவிக்கிறோம். இது மாயை, விர்சுவலானது . நம் தன்னுணர்வு கணந்தோறும் புது அனுபவங்களால் மெலிதாக மாறிக் கொண்டிருக்கும். மரணம் போன்ற பெரிய மாற்றங்களால் முற்றிலும் புதிய அனுபவங்களுக்குள் நம் தன்னுணர்வு மாறும் போது மறதியும் அது போல் பெரிதாக உணர்வில் நிகழும். இதனால் நாம் மற்றவர்களளிடமிருந்து பவுதிகமாக தொடர்பறுந்து விடுகிறோம்.
குமரியிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறோம். ஜன்னலோர இருக்கை. வழியில் ஒவ்வொரு ஊராக கடந்து போவது போல் நம் தன்னுணர்வை அனுபவங்கள் கடந்து போகும். மதுரை வரும்பொது நம் கான்சியஸ் மதுரையில் இருக்கும். இந்த பயணத்தில் சுவாரசியமான பகுதி என்னவென்றால். மதுரை வந்ததும் நம் ஒரு பகுதி அங்கிருந்து பெங்களூர் செல்ல விரும்புகிறது ஒரு பகுதி சென்னைக்கு செல்ல விரும்புகிறது . நம் கான்சியஸ் இரண்டாக பிரிந்து ஒன்று சென்னைக்கும் ஒன்று பெங்களூருக்கும் பயணிக்கிறது பாரல்லலாக. ஆனால் நாம் ஒரு பாதையில் தான் நம் இருப்பை அடையாளம் காண்கிறோம் .மற்ற பாதையில் நம் இருப்பும் பயணமும் நம்மால் அறிய முடிவதில்லை. அது வேறொரு எனது வேறொரு பரிமாண பாரல்லல் பயணம். இப்படி நாம் முடிவெடுக்கும் ஒவ்வொரு கணமும் அது நம் ரியாலிட்டியை வாழ்வை பாதிக்கிறது மாற்றுகிறது. புதிய பாதையில் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள் நம்மை மாற்றி விடும். உதாரணமாக பெங்களூர் செல்லும் பாதையில் பக்கத்து சீட்டில் ஒரு மது பாலாவின் அறிமுகம் உங்கள் கான்சியசை இன்னோரு பயணத் தேர்வுக்கு தள்ளிவிடும் . அதே போல சென்னைக்கு பயணித்த கான்சியஸ் பக்கத்து சீட்டில் ஒரு மதுப்பிரியரை சந்தித்து அதன் பாதிப்பால் வழியில் இறங்கி ஒரு பாருக்கு செல்லலாம். இப்படி நாம் யாரையோ பாதித்து கொண்டும் மற்றவர்களால் பாதிக்கப்பட்டும் மனோ இச்சையை பின்பற்றி பயணிக்கிறது. பயண வழியில் பல்வேறாக பிரிந்தும் , பல்வேறு கான்சியசுகள் இணைந்தும் பயணிக்கிறது. நாம் பயணிக்கும் பஸ் விரைவாக அல்லது மெதுவாக பயணிப்பது போல காலமும் பாரல்லல் பயணங்களில் வெவ்வேறு வேக அனுபவம் பெறலாம்.
ஒரு இடத்தில் நாம் எதிரே சந்திப்பது , காதலிப்பது , கொல்வது, சாப்பிடுவது , வளர்த்துவது எல்லாமே எப்போதோ நம்மிலிருந்து பிரிந்த நாம் தான்.
தனிப்பட்ட கான்சியசாக தோன்றுவது மாயை. நாம் இறக்கும் போது தனிப்பட்டதாக தோன்றும் இந்த மாயை தான் அழிகிறது. நம் உடல் மண்ணுக்கு போனாலும் நம் உடலுக்கு காரணமான சூட்சும சக்திகள் அழிவதில்லை. அதாவது உங்கள் உடலை கட்டமைத்த தண்ணீர் தனிமங்கள் அணுக்கள் எதுவும் உடல் அழிந்தாலும் அழிவதில்லை , அவற்றின் தன்னுணர்வு தான் உங்கள் தன்னுணர்வின் அடிப்படை. ஒரு அலுவலகத்தில் வேலை பார்பவர்கள் அலுலகம் மூடினாலும் ரிமோட்டாக சூட்சும நிலையில் வெவ்வேறு இடங்களிலிருந்தும் இணைந்து பணியாற்ற முடியும். Quantum entanglement இதை அனுமதிக்கிறது. காரணம் இடம் என்பது விர்சுவல் . சூட்சும நிலையில் எல்லாமும் எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும் இருக்கிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மறு சுழற்ச்சி செய்யப்படும் போது அது பாட்டில் என்ற ஃபிசிக்கல் உணர்வு அழிந்து நாற்காலி என்ற புதிய வடிவம் பெற்றாலும் அதன் ப்ளாஸ்டிக் என்ற கான்சியஸ் அழியாது.
இப்போது ஒரு கேள்வி . நாம் எந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதை நாம் தேர்வு செய்ய முடிவதை போல் தெரிகிகிறது. உண்மையில் நாம் அனுபவங்களை தான் தேர்வு செய்கிறோம். ஆனால் இந்த பாதையும் , இடங்களும் ஏற்கனவே இருக்கிறதா? சென்னையையும் மதுரையும் , பங்களூரையும் உருவாக்கி அதற்கான ரூட்டையும் போட்டது யார்? நம் பயணம் எல்லா சாத்தியக் கூறுகளிலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்படிருக்கிறதா? அப்படியானால் இந்த வாழ்வு மாயை மட்டுமல்ல.. யாரோ ஒருவர் உருவாக்கிய simulation விளையாட்டா? நாம் செய்யும் move களுக்கு ஏற்ப consequence அனுபவங்கள் ஏற்கனவே எழுதப்பட்டதா?
நாம் யாரோ புரொக்ராம் செய்த கேம் விதிகளுக்குள் வாழும் கேம் கதாபாத்திரமா? அதை அறிய என்ன வழி?
நம் கான்சியசின் தற்போதைய நிலை என்பது நம்மால் தொடர்பு கொள்ள முடிகிற நினைவுகளை பொறுத்தது. நம் அனுபவங்கள் எங்கே நினைவுகளாக உள்ளது? அந்த நினைவுகளை யாராவது ஆக்சஸ் செய்து நம் ரியாலிடியை மாற்ற முடியுமா? அப்படி மாற்றும் சக்தியுடைய வேறு படைப்புகள் வேறு பரிமாணத்தில் இருக்கிறதா? எல்லா சாத்தியங்களையும் யோசிப்போம்..
கருத்துகள்