பிக் ப்ளாங்க் 12

 

வானத்தை அண்ணாந்து பார்த்தால் எத்தனை நட்சத்திரங்கள் ஒரே போல கொட்டிக் கிடக்கிறது.பூமியில் எத்தனை மனிதர்கள்,மனித உடலில் எத்தனை செல்கள்,எத்தனை அணுக்கள் அதில் எத்தனை எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மரங்களில் ஒரே வடிவத்தில் இலைகள். இந்த வடிவங்கள் அனேகமாக ஒன்று போலிருக்கிறது.ஏன் இந்த பிரபஞ்சம்  பொருட்களின் நகல்களாய் நிறைந்து கிடக்கிறது? உண்மையில் அத்தனை  கோடி பொருட்கள் இருக்கிறதா? இல்லை ஒரே பொருள் தான் இருக்கிறதா? பொருட்கள் எப்படி உருவாகிறது?
ஒரு செடியில் ஒரு அரும்பு தோன்றி மொட்டாகி பூவாய் மலர்ந்து வாடி காயாகி,கனிகிறது. இந்த நிகழ்வை  ஒரு காமிராவில் மணிக்கு ஒரு முறை ஃபோட்டோ எடுத்து எல்லாவற்றையும் சுவரில் வரிசையாய் ஒட்டி வைக்கிறோம். இப்போது நம் சுவரில் ஏராளமான படங்கள் அந்த நிகழ்வின் ஒவ்வொரு டைம்லைனிலும் ஒவ்வொரு ஆங்கிளிலும் எடுக்கப்பட்டு வெவ்வேறு பொருளாய் தோன்றும். இந்த சுவர் தான் நம் நினைவகம் அதில் ஒட்டப்பட்டுள்ள அத்தனை சித்திரங்களும் ஒரே நிகழ்வின் வெவ்வேறு நிலையிலான நினைவுப் பதிவுகள். நாம் அதை மீட்டெடுத்து உணரும் போது அவை பல பொருட்களாய் தோன்றுகிறது. உங்கள் சிறு வயது முதல் இதுவரை உள்ள புகைப்படங்களை ஒரே  ஆல்பத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் இந்த முழு பிரபஞ்ச தோற்றமும் நினைவு பிரதிகளால் கட்டமைக்கப்பட்டது.ஒரு இசை கச்சேரி ஸ்பீக்கரில் ஒலிக்கும் போது அதில் எத்தனை விதமான இசைக்கருவிகள் ஒரே சமயத்தில் ஒலித்தாலும் ஒற்றை  ஸ்பீக்கரின் அதிர்வுகள் தான் அது.நம் அனுபவம் தான் பல ஒலிகளை அதில் உணர்கிறது.

நம் உடலின் , உறுப்புகளின் அடைப்படை யூனிட்  செல்களே. அனைத்து செல்களும் அதன் உட் பொருளில் ஏறக்குறைய ஒன்று போலிருக்கிறது.மட்டுமல்ல அத்தனையும் ஒரு செல்லிலிருந்து பிரிந்து வந்தவை தான்.செல் பிரிதல் என்பது தொடர்ச்சியான ஒரு இயக்கம் ஒரு செல் Physical நிலையில் தான் இரண்டாக பிரிந்ததாய் தோன்றுகிறது. சூட்சும நிலையில் அவை ஒன்றாகத்தான் இருக்கிறது. மனிதக் குழந்தைளும் தாயின் எக்ஸ்டென்சனாக தொப்பிள் கொடியாய் இணைந்தே பிறக்கிறது. நாம்  physical ஆக பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக உணர்ந்தாலும் சூட்சும நிலையில் நம் ஆன்மாவின் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறது. நாம் பூமியிலிருந்து வேறுபட்டிருப்பதை போல் தோன்றினாலும் புவி ஈர்ப்பால் சூட்சுமமாக இணைந்திருக்கிறோம். பல மில்லியன் ஆன்டுகளாக நம் முன்னோர்களது புகைப்படங்களை ஒரு ஆல்பத்தில் தொகுத்தால் நம் ஆரம்ப கால தாத்தா படம் ஒரு கடல் மீனாக இருக்கும். ஒரு தங்க மோதிரத்தின்  பரிணாம வரலாற்றில் ஒரு காலத்தில் அது ஹைட்ரஜனாக இருந்திருக்கும். வானத்தில் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே சக்தி அதிர்வுகளின் பல்வேறு கால தோற்றங்களே.வெளியில் இடமும் காலமும் ஒன்றாய் இணைகிறது. வெளி என்பது காலத்தில் விரிந்து நிற்கும் காட்சி.காலம் பொருட்களை வெளிப்படுத்துகிறது. எல்லா பொருட்களும் இப்படி ஒன்றிலிருந்து பரிணாமம் பெற்று வந்தாலும் கூடவே  அதன் பூர்வீகமும் நிலையும் நிகழ் காலத்தில் அதனோடு பயணிக்கிறது. அதாவது நாம் நிகழ் காலம் என்று அனுபவிப்பது அத்தனையும்  கடந்த கால நினைவுகளின் ஒரு பகுதியை தான். நம் ரியாலிட்டி என்பது இந்த நினைவு காப்பிகளால் கட்டமைக்கப்படுகிறது.

பொருட்களின் அடிப்படையாக இருக்கும் அணுவிற்குள் என்ன நடக்கிறது? அணு என்பது பல எலக்ட்ரான்,ப்ரோட்டான்,நியூடரான், லெப்டான்.போசான் இன்னும் நிறைய அணுத் துகள்களால்  ஆனது ?? இல்லை அலைகள் .. இல்லையில்லை அதிர்வுகள் ..ம்..ஆனால் எது அதிர்கிறது?
நாம் என்றும் உணரும் உணர்வு தான் கான்சியஸ்னெஸ்.இந்த தன் உணர்வுக்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு அப்பால் உள்ளதை அதனால் உணர முடியாது. உணர முடியாதவை  வேறு பரிமாணம். தன்னை "மேசை" என்று உணரும் ஒரு entity தன்னை "மரம்" என உணராது.ஆனால் மேசையின் மூலப்பொருள் மரம். தன்னை மரம் என நினைக்கும் entity அதன் மூலப்பொருளான கார்பன் போன்ற மூலக்கூறுகளை உணராது. இப்படி நம் கான்சியசின் எல்லைகளில் அனுபவப்படும் அதிர்வுகளே நம் ரியாலிடியை படைக்கிறது. ஒரு வெள்ளை ஒளி ஒரு Prism வழி பயணிக்கும் போது ஏழு வண்ணமாக வெளிப்படுகிறது.இப்படித்தான் நாம் பல வண்ணங்கள் போல  உணரும் காலம் இடம் பொருள் எல்லாம் இன்னொரு ரியாலிட்டியில்  வெள்ளை ஒளிபோல  ஒரே தளமாக  இருக்கிறது. நாம் கான்சியஸ் அந்த அதிர்வுகளை ஐம்புலன்கள் எனும் ஃபில்டர்களால் உணர முற்படும் போது நாம் அறியா ப்ளாக் எனர்ஜியானது  பொருள்,இடம்,காலம் என்ற முப்பரிமாணத்தில் உருக்கொள்கிறது. பார்டிகிள் தியரி இதை  higgs field , higgs Boson கடவுள் துகள் என்று விளக்கம் தருகிறது.

கான்சியஸின் ஒரு அனுபவம்  கான்சியசின் நினைவை அப்டேட் செய்து அதன் எல்லையை மாற்றி விடுகிறது. இதனால் அது புது அனுபவம் பெறுகிறது. இந்த புது அனுபவ நினைவு அதை மீண்டும் அப்டேட் செய்து விடுகிறது.இதனால் நம் கான்சியசானது   மேட்டர், ஆன்டி மேட்டர் என இரு பரிமாணங்களுக்குள் மாறி மாறி சுவிட்சிங் ஆகும். இந்த சுவிட்சிங் கம்ப்யூட்டர் இயலின் பைனரி டேட்டா போன்றது எனலாம். memory bytes போல இந்த அனுபவ டேட்டாகள் நினைவகத்தில் பதிந்து வளர்வது சக்தி அலைகளாக சுழல்களாக நம் தன்னுணர்வால் உணரப்படுகிறது. இப்படித்தான் எலக்ட்ரான்கள் மனோ வேகத்தால் சுழல்கிறது.அந்த ஒற்றை சுழல் நம் நினைவில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல எலக்ட்ரான்களாக பல சக்தி நிலையில் பல பொருளாக இடம், கால உணர்வில் இயக்கம் பெறுகிறது. அதாவது அந்த இயக்கம் நம் கான்சியசில் மேட்டராக ஒரு திசையில் இடம் காலத்தில் பயணிக்கும் போது இடையிடையே காணாமல் போய்விடுகிறது.அந்த சுழலின் ஒரு பக்கம் நம் ரியாலிட்டியிலும் மறுபக்கம் டார்க் ரியாலிட்டியிலும் இருக்கிறது. காணாமல் போகும் நேரம் அது ஆன்டி மேட்டராக எதிர் திசையில் கடந்த காலத்துக்கு செல்கிறது. அது சுழன்று மீண்டும் நம் கான்சியசின் பிடிக்குள் வரும்போது அது இன்னொரு எலெக்ட்ரானாக தெரிகிறது . டார்க் ரியாலிடி என நான் சொல்வது நாம் அறியாத பரிமாணம். ஆம் அணுத்துகள்கள் காலத்தில் முன்னும் பின்னும் அலைகிறது. இது நாம் கவனிப்பதால் பல எலக்ட்ரான்களாய் ,பல அணுக்களாய், பல செல்களாய், பல மனிதர்களாய்  நினைவில் விரிகிறது . பல பரிமாணங்கள், multiverse  எல்லாமே இப்படி உருவாவது தான். கான்சியசின் கவனிப்பு நின்று விட்டால் பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களும் ஒன்றாகி மறைந்து விடும், இடம் காலம் உட்பட.
நம் கான்சியஸ் உணர்வதற்கு அப்பால் அங்கு எலக்ட்ரான்கள் இல்லை.அதன் திசையும் பயணமும்,இடமும்,காலமும் இல்லை.கான்சியஸ் தான் இந்த அனுபவம் உண்டாக்குகிறது. இந்த நட்சத்திரங்கள் கிரகங்களை சுழல வைப்பதும் பிரபஞ்சத்தில் சக்தி ஓட்டத்துக்கும்,அணு ஈர்ப்பு முதல் புவி ஈர்ப்பு வரை அத்தனை ஈர்ப்பு சக்திக்கும் காரணமாயிருப்பது இந்த கான்சியசின் அனுபவ அப்டேட் தான்.

கருத்துகள்