பிக் ப்ளாங்க் 17


நம் பிரபஞ்சம் எல்லையற்றதா? இல்லை அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு அப்பால் காலக்சிகளோ? நட்சத்திரங்களோ? இல்லை. அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? நம் உணர்வுக்கு என்னவென்று புலப்படா Dark matter . நம் உணர்வின் அலைவரிசை மாற மாற அங்கே பல parallel universe கள் புலப்படக் கூடும். அங்கே ஏதோ ஒரு யூனிவர்சில் நான் இப்போது LKG , அல்லது MBBS படித்துக் கொண்டிருக்கலாம். ஏதோ ஒன்றில் இந்திய பிரதமராக இருக்கலாம். அல்லது வரலாறு ஆகியிருக்கலாம்.
இந்த parellal universe எத்தனை இருக்கும்? முடிவிலா எண்ணிக்கையில் இருக்குமா? சாத்தியமில்லை. காரணம் முடிவிலா ஒன்று என்பது அனைத்துமாக இருக்கிறது. முடிவிலா தோற்றங்கள் பிரபஞ்சங்களுக்கு இருக்குமென்றால் என் வீட்டு பூனையின் சாயலில் கூட பிரபஞ்சங்கள் இருக்கும் சாத்தியத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. முடிவிலா இணை பிரபஞ்சங்கள் இருக்குமென்றால் இந்த பிரபஞ்சமே எல்லைகளற்று இருக்கலாமே. இந்த எண்ணிக்கை நிச்சயம் ஒரு பெரிய நம்பருக்கு பின் சுருங்கி இன்னொரு அமைப்பின் பாகமாகிவிடும்.

அது போல பிரபஞ்சம் தோன்று முன் என்ன இருந்தது ? என்ற கேள்வியும் இதே புதிர் தான். சென்ற பதிவில் எலக்ட்ரான்கள் இயக்கம் பற்றி பார்த்தோமே? நம் தன்னுணர்வு கவனிக்கத் தொடங்கியதும் Un manifested black matter லிருந்து Time space பரிமாணத்தில் A யில் தோன்றி சுழன்று B யில் மீண்டும் black matter க்குள் மறைந்து விடுகிறது. ஆனால் aniti matter ஆக positron ஆக B யிலிருந்து reverse காலத்தில் A யை அடைகிறது . ஒரு துகள் electron , மற்றும் positron ஆக இரண்டாக பிரிந்து quantum entangle ment படி opposte Dimension களில் சுழல்வதாய் தோன்றுகிறது.

தனி நிலைகளில் காலம் இரு திசைகளில் பயணித்தாலும் அது கான்சியசின் அனுபவம் மட்டுமே . அதன் இயல்பில் அது நியுட்ரலாகவும் சுழற்சி, தோற்றம், மறைவு, இடம், காலம், திசை ஏதுமற்ற நிலையில் இருக்கிறது. இந்த இயக்கமே macro லெவலில் பிரபஞ்சம் பெரு வெடிப்பாய் தோன்றி சுழன்று மறைவது. பிரபஞ்சத்தை மாபெரும் எலக்ட்ரோனாக உருவகித்தால் ஒரு எலக்ட்ரான் பல எலக்ட்ரான்களாய் தோற்றம் பெற்று இருப்பது போல் மல்டி வெர்ஸ் எனும் பல பிரபஞ்ச சாத்தியக்கூறு விளங்கும். ஓரே அதிர்வுகள் தான் அணுவிலும் அண்டத்திலும் , பிண்டத்திலும் ஒரே மாதிரி இயக்கங்களுக்கு காரணம்.

இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆரம்ப நிலை , ஒரு முடிவு நிலை இருக்கிறது. இதை எப்படி கண்டுபிடித்தார்கள்? விண் வெளி என்பது காலவெளி (space time ) யாகும். நவீன தொலை நோக்கிகள் மூலம் விண்ணில் இருந்து வரும் அலைகளில் விண்வெளியின் கடந்த கால காட்சியை பார்க்கிறோம் . அது ஒரு ஒழுங்கான அமைப்பிலிருந்து ஒழுங்கற்ற நிலைக்கு விரிந்து பரந்து கொண்டு வருவதை entropy என்பார்கள். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இந்த entropy அதிகரித்து கொண்டே வருவதால் எல்லாம் ஈர்ப்பிழந்து collapse ஆகி முடிவுக்கு வந்து விடும். தன்னுணர்வில் நிகழும் இந்த ஆரம்பத்தை பெருவெடிப்பு என சொல்லக் காரணம் இருக்கிறது .ஒரு பட்டாசு திரியை பற்ற வைத்தவுடண் ஒரு செகண்ட் சரசரவென்னு திரியில் பற்றி விட்டு "டொம் " என்று வெடிக்குமே இது போல் பிரபஞ்ச ஆரம்ப 10⁻³⁵ முதல் 10⁻³³ second ல் தான் அதன் 10⁴⁰ சைசுக்கு பிரம்மாண்டமாய் வியாபித்தது. இந்த அதிரடி விரிதல் தான் வெடிப்பு. ஆனால் இதில் வெடிச் சத்தம் எல்லாம் இல்லை. அதன் பின் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் எல்லா திசையிலும் விரிகிறது. ஆனால் இந்த விரிதல் எல்லா இடத்திலும் ஒரே போலில்லை. இதனால் வெளியில் ஏகப்பட்ட மேடு பள்ளங்கள் பொருண்மை மற்றும் ஈர்ப்பில் வேறுபாடுகள். கருந்துளைகள் குறுக்குப் பாதைகள்.

மனிதர்கள் மரணிப்பது போல ஒளியை விட வேகமாக விலகி செல்லும் காலக்சிகள் நிரந்தரமாக நம் பிரபஞ்சத்தை விட்டு மறைந்து வேறு ரியாலிட்டிக்கு கடந்து விடுகிறது. அதை நம் கான்சியசின் அலைவரிசை மாறினால் அன்றி தொடர முடியாது.ஒளி வேகம் கான்சியசின் வேகத்துக்கு நெருக்கமானது. பிரபஞ்சம் வெடித்த குறுகிய காலத்துக்கள் நம் காலம் 14 பில்லியன் ஆண்டுகளை கடந்து விட்டோம்...? நிற்க.. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியில் பிடிபட்ட சில சிவப்பு புள்ளிகள் காலக்சியின் ஆரம்ப கால தோற்றத்தை ஒத்து இருக்கிறது. இதன் காலத்தை கணக்கிட்டால் 800 மிலியன் ஆண்டுகளே ஆகிறது என பிரபஞ்ச வயதை குழப்பியிருக்கிறது. விஞ்ஞானிகள் அது பற்றி மெதுவாக ஒரு முடிவுக்கு வரட்டும்...

ஆனால் பிரபஞ்ச முடிவு என்ன வேகத்தில் இருக்கும் என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அது ஒரு ரயில் ப்ரேக் பிடித்து மெதுவாகி நிற்பது போல் நிற்காதாம். ஒரு பவர் கட் போல , இயல்பாய் தொடரும் அனைத்து இயக்கங்களும் சட்டென அதன் மூல நிலைக்கு திரும்பி விடுமாம். கண நேரத்தில் அனைத்தும் சுருட்டப்படும் ஒரு ஹார்ட் அட்டாக்கின் அவகாசம் கூட தராமல் .

கருத்துகள்