பிக் ப்ளாங்க் 16

 


நாம் தொட்டு உணரும்  உடல்  சூட்சுமமான  குவான்டம் நிலையில்  முற்றிலும் வேறொன்றாக இருக்கிறது. உடல் சுமார் 30 ட்ரில்லியன் சொந்த செல்களால் மற்றும் 40 ட்ரில்லியன் கிருமிகளால் ஆனது. இந்த செல்கள் எல்லாம் நாம் என்ற entity யின் சுயத்தை உருவாக்குவதில் பங்கு வகிப்பவை. ஒவ்வொரு செல்லும் அதன் மூல செல்களிலிருந்து இப்போதைய நம்மை உருவாக்க  பிரிந்து  பிரிந்து உறுப்புகளாய் உருவானவை. உண்மையில்  நம் தன்னுணர்வு தான் உடலனுபவத்தை இப்படி உருவாக்குகிறது . பல செல்களாய் பிரிவது நினைவில் மட்டுமே அதன் உண்மை நிலையில் அவை ஒற்றை 'செல்'லின்  கால பரிணாம காட்சிதான். ஒரு செல் என்பதும்  கோடிக் கணக்கான அணுக்களால் ஆனது . அத்தனை கோடி அணுக்களும் கூட  ஒற்றை அணுவின் காலப் பரிணாம காட்சி தான். அந்த ஒற்றை அணுவில் பல்வேறு  சுழல் பாதையில் சுழலும் பல்வேறு எலக்ட்ரான்கள் , மற்றும் அணுத்துகள்கள் எல்லாம் ஒற்றை மின் காந்த துகளின் பல்வேறு காலப் பதிவு . அது துகள் நிலையிலன்றி  அதிர்வாக இருக்கிறது .  நம் தன்னுனர்வு ஒரு  குறிப்பிட்ட ரிதத்தில்  அந்த அதிர்வுகளை இடைமறித்து அதை அளந்தறிய முற்படும் போது அது துகள் வடிவமாகிறது .இதன் யூனிட் ஒரு குவாண்டா.

புரோட்டா மாவிலிருந்து ஒவ்வொரு உருண்டையாக உருட்டி எடுத்து பெரிய தட்டில் அடுக்கி வைப்பார்களே அது போல இந்த கான்சியஸ் அதிர்வுகளை  விர்சுவல் துகள்களாக்கி நினைவில் ஒரு குறிப்பிட்ட ரிதத்தில் அடுக்குகிறது. இந்த துகள்கள் நினைவில் அது குறிப்பிட்ட காலத்தில்  அடுக்கப்படும் போது பொருட்கள் வடிவம் பெறுகிறது.

சூப்பர் கான்சியஸ்னசும் தன்னுணர்வும் ஒன்றா?
சூப்பர் கான்சியஸ்னஸ் மட்டுமே இருக்கிறது. அது தன்னை அறியும் பொருட்டு  தன்னுணர்வு எனும் பேத உணர்வுக்கு ஆட்படுகிறது.தன் இயல்பு நிலை உணர விர்சுவலாக தனக்கென ஒரு ஐடென்டியை உருவாக்கி உணர்கிறது . எனவே நம் தன்னுணர்வுக்கு ஒரு நினைவு தொடர்பும். ஒரு குறிப்பிட்ட அதிர்வும் இருக்கிறது. அதிர்வு  மாறும் போது நம் ரியாலிட்டியும்  மாறிவிடும்.

இந்த அதிர்வு எங்கே நடக்கிறது?

ஒரு ரப்பர் பேண்ட் அதிர்வதை போல இது இருக்கிறது. ரப்பர் பேண்டின் உள்ளே இருப்பது  தன்னுணர்வு தனக்கொரு ஐடென்டிடி உருவாக்கிய வட்டம் .அதற்குள் இடம் , காலம் , பொருள் ,இயக்கம்,சக்தி , பிரபஞ்சம்,உடல் எல்லாமாக மாயா  உருக் கொள்கிறது , ரப்பர் பேண்டுக்கு வெளியே உரு நிலைக்கு வராத un manifested  , நம்  தன்னுணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்ட அறிய முடியா  dark matter , dark enegy சங்கதிகள்.  இந்த இரு நிலைகளுக்கு இடையே உள்ள தகவல் ஓட்டம் , நிலைமாற்றம்  தன்னுணர்வின் எல்லைகளில் நடக்கிறது. அதன் அனுபவங்கள் தன்னுணர்வின் தன்மையை, அது உணரும் ரியாலிட்டியை நகர்த்திக் கொண்டிருக்கிறது.  எலக்ட்ரான்கள் சுழல்வதாக தோன்றுவதற்கும் தன்னுணர்வின் இந்த  நகர்வு தான் காரணம்.  இந்த அணுத்துகள்கள் உண்மையில் நகர்வதில்லை, தன்னுணர்வின் ரிதத்திற்கு ஏற்ப தோன்றி மறைகின்றன. மறையும் போது அது un manifested நிலையில் Dark லிருக்கும்.

இதுவே நம் தன்னுணர்வு விர்சுவலாக ஒரு பொருளாக  உருக்கொடுத்து அதற்கு ஒரு சுழல் திசையை கொடுக்கும் போது  அங்கே விர்ச்சுவலாக எதிர் திசையில் ஒரு ஆன்டி மேட்டரும்  உருவாகிறது.  அதாவது நம் தன்னுணர்வில் அனுபவப்படும் ஒரு அதிர்வு  எலக்ட்ரானாக உருக் கொண்டு கால வெளி  A யில் தோன்றி space time B யில் சுழன்று மறையும் போது B யிலிருந்து A க்கு ஒரு anti matter  எலக்ட்ரானுக்கு எதிர் சக்தி நிலையில் positron ஆக எதிர் திசையில் கடந்த காலத்துக்கு  பயணிக்கிறது.  இந்த  மாயை தான் பல எலக்ட்ரான்களை , பல  செல்களை, பல நட்சத்திரங்களை , பல ரியாலிட்டிகளை உருவாக்கி சுழல செய்வது.  எப்படி ஒரே இயக்கம்   தன்னுணர்வின் பரிணாமத்தால் அதன் பல்வேறு கோணத்தில்  நினைவில் பதிவாகி பல பொருட்களாக  இருக்கிறதோ அது போல  விர்சசுவலாக  நம் தன்னுணர்வு கடந்து சென்று மறந்த நினைவுகளில் , அல்லது இனி வரும் காலத்தில் தன்னுணர்வு அனுபவிக்க இருக்கும் , பல கால  ,பல கோணத்திலான நிலைகளில் ,ஒரே சமயத்தில் பல  பிரபஞ்சங்கள் நம் கான்சியசுக்கு வெளியே இருக்கும் சாத்தியம் உண்டு. பாசிட்ரானின் இயக்கம் போல் காலத்தால்  பின்னோக்கி செல்லும் பிரபஞ்சங்கள் உண்டு .
இதை தான்  மல்டி வெர்ஸ் கொள்கை விளக்குகிறது  .  ஒரு பிரபஞ்சத்தில் நல்லவனாக , ஆணாக , சிறுவனாக, ஏழையாக  இருக்கும் நீங்கள் மற்ற பிரபஞ்ச நிலைகளில் , தீயவனாக , பெண்ணாக , செல்வந்தனாக , முதியவராக கூட இருக்கலாம். 

 ஒரு எலக்ட்ரானை கவனிக்கும்  செயலே அதன் திசையும் தீர்மானிக்கிறது. அதுவே மேக்ரோ நிலையில் நாம் எடுக்கும் ஒம்வொரு முடிவுகளாலும் ,நம் ஒவ்வொரு செயல்களாலும் அதன் விளைவிற்கேற்ற  parellel universe க்குள் நாம் அறியாமல்  மாறி விடுகிறோம் ..ஒரு செல் இரண்டாக பிரிந்து ஒரே சமயத்தில் இரண்டும் இருப்து போல்.ஒரு செல்லிருந்து புதிய செல்லுக்கு வந்த தன்னுணர்விற்கு தன் இன்னொரு காப்பி பற்றி தெரியாது.

நம் தன்னுணர்வின் முன்னோக்கிய பரிணாமமே ஒரு கட்டத்தில் காலத்தின் எதிர் திசையில் செல்லலாம் அப்போது நாம் உணரும் ரியாடியே வேறாக இருக்கும் . அந்த மாற்றம் நாம் உணர முடியாதவாறு மறதியும் தன்னுணர்வை தொடரும்.  இது  ஒரு  மாபெரும் சுழலாக இருக்கும். மாபெரும் என்று சொன்னது நீண்ட காலத்தை குறிக்க என்றாலும் நம் அனுபவத்துக்கு வெளியே காலம் அவ்வவு நீளமில்லை. அது வேறு டைமன்சனில் ஒற்றைப் புள்ளியில்  இருக்கிறது. 

கருத்துகள்