மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்

 • ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சில வேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.
 • எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.
 • நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 • மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.
 • சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.
 • மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

 • ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.
 • எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.
 • மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.
 • அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள்.
 • நோயாளி அனுபவப்படுவது நோய்க் குறிகளைத் தான். அதனைக் கொண்டு மருந்தை தீர்மானிக்கக் கூடாது. ஒரு மருத்துவர் சரியாக ஆராய்ந்து, சில பரிசோதனைகள், செய்து நோயை தீர்மானித்து மருந்து கொடுப்பது தான் சரி.
 • காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள்.
 • ஒரு முறை திறந்த குப்பி மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்க வேண்டாம். குளிர் பதன பெட்டியில் வைத்தால் கூட இரு வாரங்களில் செயல் திறன் குறைய ஆரம்பிக்கும்.
 • மருந்து கொடுக்க சமையல் கரண்டிகளை பயன் படுத்தாதீர்கள். அளவு மாறிவிடும்.
 • ஒருவர் உபயோகித்த மருந்தை இன்னொருவருக்குக் கொடுக்காதீர்கள்.
 • வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கோடுக்காதீர்கள். அதற்கு சளியை வெளி்யேற்றும் வேறு மருந்து உண்டு.
 • முன்பு காய்ச்சலுக்கு உபயோகித்த ஆன்டி-பயாடிக் மாத்திரைகளை அடுத்தமுறை காய்ச்சல் வரும் வரை வைத்திருந்து கொடுக்காதீர்கள்.
 • சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும்
 • அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.
 • மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவும்.
 • மருந்துக்கள் குழநதைகளுக்கு எட்டும்படி வைக்க வேண்டாம். வீட்டில் மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்து வைக்கவேண்டாம்.
 • நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார்.
 • ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். உதாரணமாக பல்வலிக்கு பல் மருத்துவரிடம் போகிறீர்கள். அவர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வருகிறீர்கள். அடுத்து மூட்டு வலிக்கு வேறு மருத்துவரிடம் போய் வலி நிவாரணி மருந்து வாங்கி அதையும் சாப்பிடும்போது மருந்து ஒவர் டோஸ் ஆகிவிடும்.
 • மருத்துவர் தரும் மருந்துகள் அதே அளவில் அதே நேரத்தில் சாப்பிடவும். நோயிலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்ததும் மருந்துக்களை நிறுத்தி விடக்கூடாது.
 • மருத்துவர் ஆலோசனைப்படி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து உண்ணவும்.
 • சில மருந்துகளை சாப்பிடும்போது சிலருக்கு ஓவ்வாமை ஏற்படலாம். உடனே அந்த மருந்தை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
 • அவசரம் இல்லாத பட்சத்தில் இன்ஜெக்ஸனை விட வாய் வழி மருந்து தான் பாதுகாப்பு.
 • மருத்துவர் எழுதித்தந்து வாங்கிய மருந்தானாலும் அவரிடம் ஒருமுறை காட்டி சரி பார்த்துக் கொள்ளவும். போலி மருந்துகள் நிறைய மார்கட்டில் உள்ளன எச்சரிக்கையாக இருங்கள்.
 • மருத்துவர் விலையுர்ந்த சில கம்பனி மருந்துக்களை எழுதித்தந்தால் அதற்கு நிகரான ஜெனெரிக் மருந்துகள் உண்டா? என்று கேளுங்கள். ஜெனெரிக் மருந்துகள் பொதுவாக மிகவும் விலை குறைவாக கிடைக்கும். இரண்டிலும் ஒரே மருந்து தான் இருக்கும். உதாரணமாக "பனடால்” என்ற காய்ச்சல், வலி நிவாரண மாத்திரைக்கு நிகரான ஜெனெரிக் மாத்திரை "பேராசிட்டமால்". பனடாலில் இருப்பது பேராசிட்டமால் தான். இது பெரும் பணத்தை மிச்சப்படுத்தும்.
 • மருத்துவர் எழுதித்தரும் மாத்திரைகளின் ஒருமடங்கு டோஸ் கூடிய மாத்திரைகள் பெரும்பாலும் அதே விலையில் கிடைக்கும். அதை வாங்கி பாதி மாத்திரை சாப்பிட்டால், மாத்திரை செலவு பாதியாகும். உதாரணமாக 40 mg மாத்திரைக்குப் பதில் 80 mg மாத்திரை வாங்கி பாதி சாப்பிடவும். ஆனால் குழாய் மாத்திரைகளயும், சிறப்பு பூச்சு பூசிய மாத்திரைகளயும் இம்முறையில் வெட்டிச் சாப்பிடதீர்கள். மருத்துவர் பரிந்துரை படி செய்யுங்கள்.
 • மருத்துவர் மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு கருதி இரன்டு மாத்திரை போதும் என்று நீங்களாக சுருக்கிகொள்வது மிக ஆபத்தில் போய் முடியும்.
 • இரதக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ நிறுத்துவது மிக ஆபத்தாகிவிடும்.
 • காய்ச்சலுக்கு மருத்துவரிட்ம் செல்கிறீகள். அவர் எழுதி தந்த மருந்தில் நோய் குணமாகவில்லை, அடுத்தமுறை செல்லும்போது அவர் வேறு மருந்து எழுதி தருவார். இப்போது நீங்கள் புதிய மருந்துடன் மீத மிருக்கும் பழய மருந்தையும் சேர்த்து சாப்பிடாதீர்கள். இப்போது எழுதித் தந்ததையே தொடருங்கள்.
 • ஒரு நேர மருந்து மறந்து விட்டால் அடுத்த நேரம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அந்த நேரம் உள்ளது மட்டும் சாபபிட வேண்டும்.
மேலும் படிக்க
மருத்துவரை காணும் முன்.....
பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

கருத்துகள்

அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்கள்.. பாராட்டுக்கள்...
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு விழுப்புணர்வு

அதுவும் தாங்கள் எழுதியதையே மீண்டும் சுட்டி கொடுத்து எழுதியிருப்பது நல்லாயிருக்கு.

இவையெல்லாம் சரியாக பின்பற்ற தான் சோம்பேறித்தனம் + அலட்சியம்.
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விழிப்புணர்வு பதிவு
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
மருத்துவர் தேர்வில், "சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து?" என்ற கேள்விக்கு "Glimepride" என்று எழுதும் மருத்துவ மாணவர், டாக்டராகி தன்னுடைய சர்க்கரை நோயாளியின மருந்து சீட்டில் "Amaryl " என்று எழுதுகிறார்..இதில் விஷயம்
என்னவென்றால், "க்ளிமேப்ரிடே" என்ற இந்த மருந்து சர்க்கரை நோய்க்கு
கொடுக்கப்படும் ஒரு உப்பு. பத்து மாத்திரை கொண்ட ஒரு பட்டியின் விலை ரூ 2 .ஆனால் "Amaryl " என்ற கம்பெனி பிரண்டு பெயரில் வரும் இதே மருந்தின் விலை ரூ.125.

"Cetrizine" எனப்படும் ஒரு மருந்து சாதாரண ஜலதோஷத்துக்கு தரப்படுவது. இதன் விலை பத்துக்கு ரூ.1.20 . ஆனால் "Cetzine" என்ற பெயரில் இது ரூ.35 க்கு விற்க்கபடுகிறது. டாக்டர் அதைத்தான் எழுதுகிறார்.

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் “streptokinase” அல்லது “urokinase” என்ற மாரடைப்புக்கான ஊசி, மார்க்கெட்டில் பிரண்டு செய்யப்பட்டு ஐயாயிரத்துக்கு விற்கபடுகிறது.

ஏழைகள் எப்படி இந்த மருந்துகளை வாங்க முடியும்..டாக்டர்கள் மருந்துகளின் பொது பெயரை எழுதி பழக வேண்டும்?

இது அமீர்கான் தன்னுடைய column ஒன்றில் ஹிந்துவில் எழுதியது..
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஏதாவது மாத்திரையை விழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும்; சிலர் கையில் “பாம்’ வைத்துக்கொண்டு அதை தடவிக் கொண்டே இருப்பர். உண்மையில், இவர்களுக்கு எந்த கோளாறும், வலியும் இருக்காது.
உணவு சாப்பிட்டபின், ஜீரணத்துக்கு என ஒரு மாத் திரை வாயில் போட்டுக்கொள்வர்; தலைவலி வராமலேயே டப்பாவை பாக்கெட்டில் இருந்து எடுத்து தடவிக்கொள்வர். இதுவும் ஒரு வகையில் “போபியா’ தான்.
இப்படி சாப்பிட்டு வருவதால், உடலில் எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தியும் விடலாம்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Commonly prescribed antibiotic - amoxicillin - is ineffective for treating coughs and other chest infections, and can be harmful if overused, experts claim.

Their overuse can lead to side effects such as diarrhea, rash, vomiting and the development of resistance, researchers warned.

"Patients given amoxicillin don't recover much quicker or have significantly fewer symptoms," said Paul Little from the University of Southampton.

"Indeed, using amoxicillin to treat respiratory infections in patients not suspected of having pneumonia is not likely to help and could be harmful," Little said in a statement.
----The Indian express Dec 19 2012
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Generic Drugs, Are They as Good as Brand Names?
Medical Author: Melissa Stoppler, M.D.
Generic drugs are copies of brand-name drugs that have exactly the same dosage, intended use, effects, side effects, route of administration, risks, safety, and strength as the original drug. In other words, their pharmacological effects are exactly the same as those of their brand-name counterparts.

An example of a generic drug, one used for diabetes, is metformin. A brand name for metformin is Glucophage. (Brand names are usually capitalized while generic names are not.) A generic drug, one used for hypertension, is metoprolol, whereas a brand name for the same drug is Lopressor.

Many people become concerned because generic drugs are often substantially cheaper than the brand-name versions. They wonder if the quality and effectiveness have been compromised to make the less expensive products. The FDA (U.S. Food and Drug Administration) requires that generic drugs be as safe and effective as brand-name drugs.

Actually, generic drugs are only cheaper because the manufacturers have not had the expenses of developing and marketing a new drug. When a company brings a new drug onto the market, the firm has already spent substantial money on research, development, marketing and promotion of the drug. A patent is granted that gives the company that developed the drug an exclusive right to sell the drug as long as the patent is in effect.

As the patent nears expiration, manufacturers can apply to the FDA for permission to make and sell generic versions of the drug; and without the startup costs for development of the drug, other companies can afford to make and sell it more cheaply. When multiple companies begin producing and selling a drug, the competition among them can also drive the price down even further.

So there's no truth in the myths that generic drugs are manufactured in poorer-quality facilities or are inferior in quality to brand-name drugs. The FDA applies the same standards for all drug manufacturing facilities, and many companies manufacture both brand-name and generic drugs. In fact, the FDA estimates that 50% of generic drug production is by brand-name companies.

Another common misbelief is that generic drugs take longer to work. The FDA requires that generic drugs work as fast and as effectively as the original brand-name products.

Sometimes, generic versions of a drug have different colors, flavors, or combinations of inactive ingredients than the original medications. Trademark laws in the United States do not allow the generic drugs to look exactly like the brand-name preparation, but the active ingredients must be the same in both preparations, ensuring that both have the same medicinal effects.
Reference: Office of Generic Drugs, Center for Drug Evaluation and Research, U.S. Food and Drug Administration (FDA), Generic Drugs: What you need to know. 2009.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். மருந்துகளை வாங்கும் போது அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்..

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட‍ சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நாம் உட்டகொள்ளும் வலி நிவாரணி சிறிது சிறிதாக உடலில் தேங்கினாலும் அது ஒரு குறிப்பிட் அளவு சேர்ந்ததும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்து உள்ளதை எடின்பர்க் என்ற ம
த்துவமனை பதிவு செய்யதுள்ளது என்று பல்கலை கழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பராசிட்டம்மால் உட்கொண்ட சில மணி நேரத்திலே வலி பறந்து ஒடுகிறது என பலர் இதனை எடுத்து கொள்கின்றனர்.இதில் ஒரு நபர் உட்கொள்ளும் அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டம்மால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை உணராமலேயே பலர் இருந்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
உடலின் சக்தியை அதிகரிப்பதற்காக வைட்டமின் ஏ, பி என்று மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். அதை தாங்களாகவே கடைகளில வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் மட்டும் உடலுக்கு எந்த பலனும் கிடைத்து விடாது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதால் பண விரயம் மட்டுமே ஏற்படுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்!
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தாண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனையில் 132 கடைகளில் 61ல் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தகைய கடைகளில் வேலை பார்ப்பவர்கள், டாக்டர் சீட்டில் என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பதே தெரியாமல் வேறு மருந்து மாத்திரைகளை தர வாய்ப்புள்ளது. படித்த சிலர் மட்டுமே இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். சாதாரண பாமர மக்களோ, மெடிக்கல் ஷாப்பில் தரும் மாத்திரையை அப்படியே வாங்கி செல்கிறார்கள்.ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் பார்மாசிஸ்ட் எதற்கு தேவை என்றால், அவர் வெறும் மருந்து, மாத்திரை எடுத்து தருவதற்கு மட்டுமல்ல, டாக்டர் தரும் மருந்து சீட்டையும் கவனிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.
உங்கள் ஏரியா மெடிக்கல் ஷாப்கள் தவறான மருந்தை தந்ததாலோ அல்லது அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ

044-24335201,
044-24335068 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
A Dangerous Combination: Calcium and Your Heart

Calcium supplements raise your risk of heart attack by 24%.

That's what a new study published in the prestigious BMJ or British Medical Journal revealed about the popular pills recommended by doctors everywhere for "stronger bones."

And those numbers are true even if you take your calcium with vitamin D.
While this may surprise most people, calcium that is not "activated" by vitamin K2 will NOT stick to your bones.

And when all that extra calcium gets into your blood stream, it sticks to places it doesn't belong, like your veins and arteries... making the soft tissues in your body as hard as a rock.

Calcium Deposits Turn Your Body into Concrete

The study from the British Medical Journal also looked at the composite risk of heart attack and stroke and found that calcium supplements raise your risk of BOTH by 15%.

You see, a stroke is like a heart attack that happens in your brain. When your blood vessels are blocked by calcium build up, oxygen can't get to your brain cells. And when those brain cells start dying, you have a stroke on your hands.

But a build up of calcium in different parts of your body (other than your bones) can lead to other problems, like:
Cellulite and scar tissue
Heart disease and atherosclerosis (hardening of the arteries)
Dental plaque and gum disease
Hypothyroidism (under active thyroid)
Obesity and diabetes
Alzheimer's disease
Breast cancer and cysts (fibrocystic breasts)
Gallstones, colon cancer and Crohn's disease
Kidney stones
Ovarian cysts
Cataracts, glaucoma, and macular degeneration
Bone spurs, stiff joints, osteoarthritis, tendonitis and bone cancer
Most people -- including many doctors -- believe cholesterol alone clogs up your arteries. But that's not the whole truth.

A recent study shows that up to 90% of those fatty, cholesterol deposits are "calcified," in other words, "turned to stone" by the calcium that is not sticking to your bones.

And it's these calcium deposits that are increasing your risk of heart attack, stroke and a dozen other diseases.

Get Calcium From the Food You Eat

Truth is, you don't need calcium supplements. The evidence shows they may increase your risk of disease.

To help your body build strong bones, calcium needs to be "bioavailable."
That means it needs to be in a form your body can absorb and use properly. And the best way to get bioavailable calcium is through the food you eat.

The best sources are milk, cheese, yogurt and dark, leafy greens like spinach, kale and broccoli. If you can find raw sources of milk and cheese, those are the best. But even processed dairy will give you a reliable dose of calcium your body can actually use.

And the studies back this up.

Research published in the American Journal of Epidemiology shows that calcium from natural sources lowers your risk of dying of all causes by 25% and lowers your risk of heart disease by 23%.

Jason Kennedy
Bolland MJ, Grey A, et al. Calcium supplements with or without vitamin D and risk of cardiovascular events. BMJ. 2011 Apr 19;342:d2040
Danilevicius CF, Lopes JB, et al. Bone metabolism and vascular calcification. Braz J Med Biol Res. 2007 Apr;40(4):435-42.
Kaluza J, Orsini N, et al. Dietary calcium and magnesium intake and mortality. Am J Epidemiol. 2010 Apr 1;171(7):801-7.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்
உலக நாடுகள் வெகு நாட்களுக்கு முன்பே தடை செய்த பின்பும் இந்தியாவில் விற்பனையில் இருந்த இந்த மாத்திரைகள் தாமதமாகதான் தடை செய்யப்பட்டன. ஆனால் இன்னமும் பல மருந்துக்கடைகளில் விற்கவும் செய்கின்றன.
இதோ அந்த தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்.
1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு - நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்
சரி, இந்த மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் என்ன தெரியுமா?
1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol
இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள்.
இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களுமே தான் -உங்கள் அன்பானவர்களை எச்சரியுங்கள்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
அடென்லால், கால்ஸிகார்ட், ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த என்று இருதய சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும் அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை. இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச் சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல, இருதய இயக்கத்தையே பாழாக்கும். அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும் கெடும். இரத்த அழுத்தத்திற்கான இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்பவர்கள் போலிகள் (Indian Drugs and Cosmetics Act, 1940 Schedule-J) சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாக சீரழிப்பவை.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
மந்த்லி இன்டெக்ஸ் ஆப் மெடிக்கல் ஸ்பெஷாலிட்டி (எம்.ஐ.எம்.எஸ்.,)’ என்ற மருத்துவ இதழின் ஆசிரியர் டாக்டர் சந்திரா எம்.குல்காதி, ‘50 வயதான நோயாளிகள் இருமல் மற்றும் தொண்டை, கரகரப்பிற்காக, வலிக்காக எரித்திரோமைசின் சாப்பிடுகின்றனர். Dyspepsiaவிற்காக ‘சிசாபிரைடு’ விழுங்குகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மாரடைப்பால் இறக்கலாம். ‘சிசாபிரைடு’ இருதயத்துடிப்பு சீரற்று மரணத்தை தழுவுகின்றனர் என்கிறார்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
டி.சி.ஜி.ஐ., யின் அங்கீகாரம் இல்லாமல் சந்தையில் தற்போது 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடு இல்லாத நிலைமையால் நாட்டில் தற்போது 17 ஆயிரம் மருந்து, மாத்திரை உற்பத்திக் கம்பெனிகள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக மட்டுமில்லாமல், சோதனைக்கு உட்படுத்தப்படாத மருந்துப் பொருட்களையும் பயன்படுத்தி கூட்டுக் கலவையில் மாத்திரைகள், மருந்துகள் தயாரிக்கப்படுவதால் அவை நோயாளிகளின் உடல்நிலையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. Aceclofenac மாத்திரை வலி மற்றும் வீக்கங்களைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இந்த மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல வளர்ந்த மற்றும் முன்னேற்றங்களாலும் இதற்கு அனுமதி இல்லை. ஆனால், இந்தியாவில் அனைத்து விதமான வலிகளுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
‘நிம்சூலிட்’ பயன்படுத்துவது பற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த மாத்திரை இந்தியாவில் வலி நிவாரணியாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நமது வளர்ச்சி அடையாத அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் போன்றவற்றில் இந்த மாத்திரைகளை மார்க்கெட்டிங் செய்ய மறுக்கப் பட்டுள்ளது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்நாட்டில் அந்த மருந்து, மாத்திரைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெருமளவு விற்கப்படுகின்றன. ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனம் ‘நிம்சூலிட்’டை தங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 25 நாடுகளிலும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. காய்ச்சலை குறைக்க, பெரியவர்களுக்கு ஏற்படும் மற்ற பல உபாதைகளைத் தவிர்க்கவும் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மற்ற 168 நாடுகளிலும் இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அனுமதியே வழங்கப்பட வில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ‘லேக்சைடு பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம் மட்டும் இந்த மருந்தை உற்பத்தி செய்து மெக்சிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மட்டும் அனுமதி பெற்றுள்ளது. ஆனால், இம்மருந்தை அமெரிக்காவில் விற்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த மருந்தை சாப்பிட்ட பின்பு இரு குழந்தைகளுக்கு Reye’s Syndrome ஏற்பட்டு இறந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பின்லாந்தில் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதை மாற்றவேண்டிய நிலைக்கு, கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் நிம்சூலிட் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம செயல் இழந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கான்பூரைச் சேர்ந்த ஒருவர் நிம்சூலிட் சாப்பிட்டதால் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரை செய்வது தொடர்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இதன் விற்பனையை அதிகரிக்க பெருமளவு ஸ்பான்சர் செய்கின்றன. காய்ச்சல் பாதித்த ஒருவரை நிம்சூலிட் அதிலிருந்து விடுபடச் செய்யும். உடம்பின் வெப்பநிலையை வழக்கத்திற்கும் மாறாக குறைக்கும் தன்மை கொண்டது. உயிருக்கும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் வழங்கும். ஆனாலும், பக்கவிளைவுகளோ அதைவிட பயங்கரமானதாக அமையும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
According to a leading Danish scientist, drugs used to treat psychiatric disorders in the west may be responsible for the deaths of half a million people over the age of 65.

“Given their lack of benefit, I estimate we could stop almost all psychotropic drugs without causing harm – by dropping all antidepressants, ADHD drugs and dementia drugs … and using only a fraction of the antipsychotics and benzodiazepines we currently use. This would lead to healthier and more long-lived populations.” says Professor Peter Gøtzsche, the Research director at Denmark’s Nordic Cochrane Centre.

His research was published in the British Medical Journal

Under-reporting of deaths in industry funded trials is another major flaw. Based on some of the randomized trials that were included in a meta-analysis of 100,000 patients by the US Food and Drug Administration, I have estimated that there are likely to have been 15 times more suicides among people taking antidepressants than reported by the FDA—for example, there were 14 suicides in 9,956 patients in trials with fluoxetine and paroxetine, whereas the FDA had only five suicides in 52,960 patients, partly because the FDA only included events up to 24 hours after patients stopped taking the drug.” Gøtzsche says in his research.

An additional study of patients around 55 years old found benzodiazepines and similar drugs resulted in a death rate twice as high. But sadly, the reality of living without these drugs can be scary to people who have been prescribed them.