21 January 2009

இரத்த சோகை இல்லாமல் செய்வோம்

நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து உள்ளது. இது தான் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

இரத்த சோகை நோயின் அறிகுறிகள் யாவை?
மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, தோல் மற்றும் நகங்கள் வெளுத்து விடுவது, முகம், கை, கால் வீங்கி விடுவது, மூச்சுவிடச் சிரமம் தலை சுற்றல்,தலை வலி.,உள்ளங்கை,பாதம் குளிராக இருத்தல்,இதயம் பட படத்தல், செங்கல் ,மண் போன்றவை உண்ணத்தோன்றுதல்

இரத்த சோகை நோய் வருவதற்கான காரணங்கள்:
 1. சத்து குறைவான உணவினால் இரத்தச்சத்து மற்றும் ஃபோலிக்ஆசிட் எனும் சத்து நமது உணவில் குறைவதால்.
 2. புற்று நோய்களுக்கு தரப்படுகின்ற கீமோதெரப்பி, ரேடியம் தெரப்பி எனப்படும் மருத்துவ சிகிச்சையால்
 3. நம் குடலில் உண்டாகும் குடல் புழுக்களால்
 4. நமது உடலின் உண்டாகும் பல்வேறு வியாதிகளால்
 5. மூளையில் ஏற்படும் புற்று நோய் கட்டியால் ஏற்படும் இரத்தக்கசிவுகளால்
 6. மூக்கில் இரத்தம் வருவதால்
 7. வாய் மற்றும் தொண்டைப்புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்
 8. சுவாசப்பையில் நுரையீரல் புற்று நோய் மற்றும் டிபி நோய்களால்
 9. இரைப்பையில் அல்சர் ஏற்படும் புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்
 10. மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற காய்ச்சல்களால் கல்லீரல் மற்றும் கணையம் போன்றவகைகளில் வீக்கம் ஏற்பட்டு இரத்த வாந்தி வருவதால்
 11. குடல் புண்களால் குடல் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய தன்மை இழப்பதால்
 12. சிறுநீரகத்தில் புற்று நோய்கட்டிகளால்
 13. மேலும் டி.பி.நோய் போன்றவற்றின் பாதிப்புகளால் இரத்த கசிவு ஏற்படுவதால்
 14. கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் மற்றும் உதிரக்கட்டிகளால் உதிரப்போக்கு அதிகம் ஏற்படுவதால்.
 15. நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதால்
 16. குடல் மற்றும் மலம் கழிக்கும் ஆசனவாய் போன்ற பகுதிகளில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதால்
 17. ஆசனவாயில் மூலம் மற்றும் பவுத்திரம் போன்றவைகளால் இரத்த கசிவு ஏற்படுதல்
 18. கர்பிணிப் பெண்கள் பேறுகாலத்திலும், குழந்தைகளுக்கு பாலுட்டும் காலத்திலும் சத்தான உணவை சாப்பிடாமல் இருத்தல்
இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ?
மேற்கூறிய அறிகுறிகள் எது இருந்தாலும் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB%) அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த பட்சம் கீழ்கண்டவாறு இருத்தல் நலம்

HB % அதிக பட்சம் -14.08 gm %

ஆண்கள் - 13.00 gm %

பெண்கள்-11.00 gm %

கர்ப்பிணி பெண்கள்-10.00 gm %

குழந்தைகள்-12.00 gm %

பள்ளி செல்லும் வயதினர்-12.00 gm %

முதியோர்கள்-10.00 gm %

சிகிட்சை:
மருத்துவரின் அலோசனைப் பெற்று 6 மாதங்களுக்கு ஒருமுறை குடல் புழுக்களை அழிக்கும் பூச்சி மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

இரத்த சோகை அதிகம் இருப்பின் இதற்கும் மருத்தவரின் ஆலோசனை பெற்று 3 மாதங்களுக்கு தொடர்ந்து இரும்புச்சத்து மாத்திரை மற்றும் Folic Acid மாத்திரையும் சாப்பிடவேண்டும்.

தினமும் இரத்தச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள், பழங்கள், பேரீத்தம் பழம், பச்சைகாய்கறிகள், பசுமையான கீரைகள், தானிய வகைகள், காய்ந்த பழம் மற்றும் கொட்டை வகைகள், வெல்லம், மாமிச வகைகள், ஈரல், முட்டை, பால் ஆகியவைகளை உணவில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமே உண்ணும் உணவு நன்கு செரித்து இரத்த உற்பத்திக்கு வழி வகுக்கும்.

கர்ப்பகாலக் குருதிச்சோகை

குருதிச்சோகை என்பது கர்ப்பகாலத்தில் ஒருபொதுவான மருத்துவ நிலமை. ஊட்டச்சத்து குறைவான உணவுப்பழக்கம் இந்நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.


பிரதான காரணங்கள்:-

* இரும்புசத்து, உயிர்ச்சத்து B12, குறைபாட்டால் இரத்த செல்கள் உருவாவது குறைதல்.
* நீண்டகாலக் குருதிப்போக்கு.

கர்ப்பகாலத்தில் மாதவிடாய்க் குருதிப்போக்கு போன்ற பொதுவான குருதியிழப்பு நிலைமைகள் இல்லாதபோதிலும் கர்ப்பத்தில் விருத்தியடையும் குழந்தை தனது ஊட்டச்சத்துத்தேவைகள் அனைத்தையும் தாயின் குருதியிலிருந்தே பெற்றுக்கொள்வதால் இரும்புச்சத்தின் தேவையும் அதிகரிக்கின்றது.

கர்ப்பகாலக் குருதிச்சோகை நோய்நிலைமையால் ஏற்படக்கூடிய விரும்பத்தகா விளைவுகள்

* கருச்சிதைவு
* குறைமாத்த்தில் குழந்தை பிறத்தல்
* குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல்
* இதயநோய்கள் தீவிரமடைதல்
* தாயின் இறப்பு
* தொற்றுநிலைமைகளிற்கான வாய்ப்பு

நோய் அறிகுறி

* தலைச்சுற்று
* களைப்பு
* பலவீனம்
* கடினவேலையின் போது மூச்சு வாங்குதல்

சிகிச்சை முறைகள்
கர்ப்பத்திற்கு முன்

* போதுமான ஊட்டச்சத்துணவுகள் உட்கொள்ளல்.
* உரிய உடல்நிறையைப்பேணுதல்.

Download As PDF

24 comments:

Sathik Ali said...

இரத்த சோகைப் பற்றி மேலும் தகவலுக்கு http://siddhavaithiyan.blogspot.com/2010/06/blog-post.html

raji said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்


http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html

Sathik Ali said...

அகத்திக் கீரை, கீழா நெல்லிக்கீரை போன்றவற்றை சேகரித்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்து சுத்தமான பசும்பாலில் கலக்கவும்.
இதை தினமும் காலை, மாலை என தினமும் இருவேளை சாப்பிட்டு வரவும். சுமார் 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை நீங்கி உடல் சுறுசுறுப்பு பெறும்.
* இதேபோன்று, கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து, மலைத்தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
தொடர்ந்து 90 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையை விரட்டலாம்.

Sathik Ali said...

பெரும்பாலான நேரத்தில் அனீமியாவை தேர்ந்தெடுத்த உணவின் மூலமே சரியாக்கிட முடியும். முதல் தேர்வு கீரை. சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என கிடைக்கும் எல்லா கீரைகளிலும் இரும்பு சத்து அதிகம் உண்டு
எள்ளும் பனைவெல்லமும் அடுப்பங்கரை இரும்புச் சுரங்கங்கள். இரண்டிலும் உள்ள இரும்பு நம் வீடு அரும்புகளுக்கு அவசியமானது.
கம்பு, வரகு இரண்டும் இரும்பு சத்து ரொம்ப ரொம்ப அதிகமுள்ள பாரம்பரிய தானியங்கள்
பாசிப்பயறு, தொலிஉளுந்து, சிகப்பு கொண்டை கடலை, முளைகட்டிய தானியங்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களும் இரும்பைச் சீரணிக்க உதவிடும். பழங்களில் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி சோகை உள்ளவர்கள் தினசரி சேர்க்க வேண்டியன. பெரிய நெல்லிக்கனியின் விட்டமின் சி சத்து இரும்பை உடம்பு உள் வாங்க உதவிடும்.

Sathik Ali said...

பருப்பு, தானியம், பச்சை காய்கறி, கீரை வகைகள், பேரீச்சம்பழம், உலர்ந்த பழங்கள், வெல்லம், மாமிசம், மீன், முட்டை, ஈரல் உட்பட உணவுகளை உண்ண வேண்டும்.

இரும்பு சத்து உடலில் சேர வைட்டமின் சி சத்து மிக அவசியம். தினமும் எலுமிச்சை பழரசம், மோர் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.சமச்சீராக இத்தகைய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
தானியம் பழம், காய்கறிகளை அதிகமாகவும், பயறு, பால் மற்றும் இறைச்சியை மிதமான அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் எண்ணெயை மிக குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல், தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தல், அளவான உடற்பயிற்சி, 7 மணி நேர உறக்கம் போன்றவை ரத்தசோகையை தூர விரட்டும்.

Sathik Ali said...

கீரைகள்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பழங்கள், தானியங்கள்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

பீட்ரூட்

பீட்ரூட் காய்கறியில் உயர்தரை இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதோடு வைட்டமின் சி சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக்கொள்ளப்படும்.

மாமிசம், சிப்பி உணவு

இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Sathik Ali said...

ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம்
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை: நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Sathik Ali said...

இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப் புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில் சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியாவில் தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது. இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேர்கிறது. வயிற்றில் புழு தோன்றுவதைத் தவிர்க்க அனுபவ ரீதியான மருத்துவம் தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. அல்பெண்டிசால் மருந்து சாப்பிடுவது அல்லது மூன்று நாட்களுக்கு, இரண்டு வேளை மெபெண்டசால் மருந்து சாப்பிடுவது என்ற நிலை உள்ளது.
சரியான முறையில், சரியான அளவு மருந்து சாப்பிடவில்லை எனில், வயிற்றில் எல்லா புழுக்களும் அழியாமல், சதை வழியே மற்ற பாகங்களுக்குப் பரவும் நிலை ஏற்படும்.
கீரைப் புழு ஒருவரிடம் இருந்தால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வந்து விடும். இதனால், இந்தப் புழுவை அழிக்க, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்குப் பின், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளராமல் இருக்க…
* சமையல் செய்வதற்கு முன், கையை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், ஒவ்வொரு முறை சிறுநீர், மலம் சென்ற பின்னும், கையை மிகச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* கையில் நகங்கள் வளர்ந்தால், இடுக்குகள் இல்லாமல், சீராக கத்தரிக்கப்பட வேண்டும்.
* பச்சைப் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நன்கு சமைக்கப்படாத காய்கறிகளை சாப்பிடக் கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்கு முன், நன்றாகக் கழுவ வேண்டும்.
* படுக்கை விரிப்புகளை, வாரத்திற்கு இரு முறை மாற்ற வேண்டும். துவைத்த விரிப்புகளை, வெயில் படும்படி உலர்த்த வேண்டும்.
ரத்தசோகை ஏற்படாமல் இருக்க, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

Sathik Ali said...

நாள் ஒன்றுக்கு, 10 முதல் 15 மி.லி., கிராம் வரை இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. மாட்டுக்கறி,ஆட்டுக்கறி, கோழிக்கறி, இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
சைவம் சாப்பிடுபவர்கள், சோயா, கோதுமை, ஓட்ஸ், உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
காய்கறிகளில் உள்ள சில ரசாயனங்கள், அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தடை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட, காய்கறியில் கிடைக்கும் சத்து குறைவானதே. எனவே, காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
குழந்தைகளும், பெண்களும் இரும்பு ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உணவுடன் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். தினமும் ஒரு மாத்திரை என சாப்பிடத் துவங்கலாம். எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடன் சாப்பிடலாம். அமிலம் கலந்த சாறு, இரும்புச் சத்து உடலில் நன்கு உறிஞ்சிக் கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டால், கூடவே வாழைப்பழமோ, கொய்யா பழமோ சாப்பிடலாம். இரும்புச் சத்து மாத்திரையுடன், கால்சியமோ, துத்தநாகச் சத்து நிறைந்த மாத்திரையோ சாப்பிடக் கூடாது.

Sathik Ali said...

The term 'An apple a day keeps the doctor away' is suitable in case of anemia. Try to consume 2 to 3 apples on a daily basis. They have rich iron content and thus, are helpful in treating anemia.

While anemic people are recommended to have food rich in iron content, Vitamin C is required for the absorption of iron. Try to include lots of citrus fruits in your diet, such as orange, lemon, etc.

Vitamin B12 is very helpful in curing anemia. Animal protein and organic meats, like kidney and liver, are considered to be good sources of this vitamin. Consuming them will prove to be beneficial for those suffering from anemia.

Consumption of beetroot, as a cooked vegetable or in salad, is one of the best home remedies for anemia. You can also consume beetroot juice for the purpose.

Sun bath is also recommended for anemic people, as it increases the production of red blood cells.

Anemia can be cured by eating about 1/2 to 1 tsp. of the tincture of Yellow dock root, thrice in a day. You can also go for 1/2 to 1 tsp of extract of dandelion leaf and/or root, twice a day.

Consumption of a ripe banana; mashed and mixed with a tablespoon of honey, will prove to be beneficial in treating anemia.

Apple and tomato juice have been found to be beneficial in treating anemia. Consume a glass of each, at least once in a day.

Soak about 7 almonds, in water, overnight. Throw away the water in the morning, peel off the skin of almonds and grind them, to form a paste. Have this paste in the morning, for at least three months.

Anemic can benefit from a combination of apple cider vinegar and blackstrap molasses. Combine 2 tsp of apple cider vinegar and 2 tsp of blackstrap molasses and add 1 cup water. Drink this decoction once a day.

Sathik Ali said...

If you have heavy periods, do two things. One the first sign of your period take one ibuprofen, this will reduce flow. Then on day two put Apple cider vinegar in water, one tablespoon to two cups. Just dilute it enough. You have to dilute it so you don't hurt your throat or stomach. This will reduce your period so that you are not bleeding as much and will help your anemia. It will work!!!!!!!!!!!!!!!!!!"

Sathik Ali said...

I don't know who first gave us the recipe, but it is said that it really works:

Take a pound of beef stew meat (or any other cut you can get, no or low fat) and put it into a Glass canning jar, some do this without any added water, some add
only a little, not higher than the level of the meat. Put the lid and band on the canning jar, and put this into a canner or large deep pot, add some water and put the lid on the pot, bring to a boil, then simmer for 6 hours. All of the IRON is cooked out of the meat and into the water. Give this to the person who is anemic or anticipating surgery, and also give them Black Strap Molasses, the one with the highest iron, calcium and magnesium, listed on this website, ONE tablespoon along with the beef broth. This will shock the doctors, just how fast it will build the blood. We are giving my mother 1 cup three times a day. So you may need to cook several pounds, jars at a time. Our friends are doing this for us too, and one of them got about 1 quart of juice from 4 (four) pounds of beef.

IMPORTANT: Don't fill the jars too full, because when it is boiling you can lose some of the juice into the pot, and any juice lost is IRON lost. Leave at least a couple of inches above the meat in each jar

Sathik Ali said...

One teaspoon daily dipped and dripping with Blackstrap Molasses (House of Herbs 70% iron content) totally eliminated my anemia, dizziness and fatigue.

Sathik Ali said...

Sickle-cell Anemia, Natural Cures
The treatment is eating foods that are high in nitrilosides. These nitrilosides are transformed in your body to thiocyanate which prevents your blood from sickling. Some are these foods are millet, african yams, sorghum, and apricot seeds.

Foods Containing B17 (Nitrilosides)
http://www.vitaminb17.org/foods.htm

Sathik Ali said...

To increase the Hemoglobin count you can give "Black Resins" and dry fig slices soaked in the water overnight. Take 6to8 black resins and 2 slices of fig and soak them in a cup of water over night. In the morning on empty stomach eat the rasins and fig slices chewing them thorouhly and drink the water in which they were soaked.

Ramani S said...

மிக்க பயனுள்ள பகிர்வு
விரிவான அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நன்றி

Sathik Ali said...

Heme iron மற்றும் non-heme iron என்று இரு பெரும் பிரிவாக இரும்புச்சத்தை பிரிக்கும் உணவியலாளர்கள், உடலுக்கு உடனடியாக இரும்பை பரிமாறும் தன்மை, heam iron உள்ள புலால் உணவுக்கு இருப்பதால் அதற்கே 1ம் ரேங்க் கொடுக்கின்றனர்.

Sathik Ali said...

தினம் காலை சப்பாத்திக்கு பாலக் பன்னீர், மதியம் சாம்பாருக்கு முருங்கை கீரை பொரியல் என சாப்பிடுங்கள். இப்போது பிரபலமாகி வரும் ‘டோஃபு‘ எனும் சோயாபால் கட்டியை கொஞ்சம் தக்காளி/ நெல்லிக்காய் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். பாலிஷ் போடாத கைக்குத்தலரிசியில் சாதம் வையுங்கள். மாலை கொண்டைக்கடலை சுண்டலும், இரவில் கம்பு ரொட்டியோ, ராகி தோசையோ சாப்பிடுங்கள். இரும்புச்சத்து சரியான அளவில் கிடைக்கும்.

Sathik Ali said...

பழங்களில் உலர்ந்த அத்தி, உலர் திராட்சை, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம் இவை எல்லாம் இரும்புச்சத்து நிறைந்தவை. தக்காளி, சிகப்பு கொய்யா, மாதுளையும் இரும்பை கொஞ்சமாய் தரும்.

Sathik Ali said...

வெள்ளை அரிசியை விட கைக்குத்தல் புழுங்கலில் இரும்புச்சத்து அதிகம். கம்பு தினை ராகியில், அரிசியை விட இரும்பு சத்து அதிகம்.

Sathik Ali said...

இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் ஃபோலிக் அமைலமும் அவசியம்.ஆதலால், அடிக்கடி நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் என சாப்பிடுவது நீங்கள் சாப்பிடும் இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும்.

Sathik Ali said...

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.

மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.

இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

Sathik Ali said...

அனிமியா இருப்பது தெரிந்தால் மருத்துவரிடம் கேட்டு இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம். ஸ்லோரிலீஸ் ஐயர்ன் எனப்படும் ஒருவகை சப்ளீமெண்ட் உண்டு. அது உடலுக்குள் இரும்புசத்தை மெதுவாக ரிலீஸ் செய்து அது கிரகிக்கபடுவதை அதிகரிக்கும்.

Sathik Ali said...

சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும்.
உலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் குறைவு
அசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.
சைவர்கள் இரும்புசத்து உள்ள உணவுகளை உண்கையில் கூட வைட்டமின் சீ உள்ள உணவுகள் (நெல்லி, கொய்யா) உண்பது இரும்புசத்து கிரகிப்பதை சுமார் 3- 4 மடங்கு அதிகரிக்கிறது.
இரும்புசத்து உள்ள உணவுகளை உண்டு 2 மணிநேரம் முன்/பின் டீ, நட்ஸ், முழு தானியம் முதலானவற்றை தவிர்க்கலாம். டீயில் உள்ளெ டேனின், நட்ஸ், தானியத்தில் உள்ள பைட்டிக் அமிலம் முதலானவை இரும்புசத்து கிரகிப்பை குறைத்துவிடும்.
இரும்புசத்து உள்ல உணவுகளை உண்கையில் உடன் கால்ஷியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும். உதா: பால்,தயிர். கால்ஷியம் இரும்பு நுகர்வை குறைத்துவிடும்.
இரும்புசட்டியில் சமைத்தால் இரும்பு அதிக அளவில் உடலில் சேரும்
இரும்புசத்து உள்ள சைவ உணவுகள்:
தினம் ஒரு தேங்காய் உண்டால் சுமார் 10 மிகி இரும்புசத்து கிடைக்கும். தேங்காயில் உள்ல இரும்புசத்து அதிக அளவில் உடலில் சேர்கிறது.
ஹிமாலயன் சால்ட் இரும்புசத்து அதிகம் உள்ள வகை உப்பு. சாதா உப்புக்கு பதில் அதைபயன்படுத்தலாம்.
பீன்ஸ், பருப்புகள். இவற்றுடன் நெல்லிகனி, லெமென் ஜூஸ் முதலானவற்றை உன்டுவந்தால் இரும்புசத்து நுகர்வு அதிகரிக்கும்
பூசணிவிதையில் இரும்பு சத்து உண்டு
பிளாக்சீட் பவுடரிலும் உண்டு. தினம் 2 ஸ்பூன் பிளாக்சீட் பவுடர் உண்டால் 1.2 மிகி இரும்புசத்து கிடைக்கும்
கிணற்றுநீர், இயற்கையான சுனைநீர் ஆகியவற்றில் மண்ணின் தன்மையை பொறுத்து இரும்புசத்து கிடைக்கும். இரும்புகுழாய்களில் வரும் நீரிலும் இரும்புசத்து கிடைக்கலாம். ஆனால் இதை முழுமையாக நம்பி இருக்க முடியாது