05 August 2009

உடல் பருமனா? உணவை மாற்றுங்கள்


உடல் பருமன் குறிப்பாக குழந்தைப் பருவம் மற்றும் வளர் இளம் பருவ ஆண், பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றுக்கு சிறு வயதிலேயே ஆளாகிறார்கள். இதற்குக் காரணம் உணவுக்கு ஏற்ற உழைப்பு இல்லாமை, அளவுக்கு அதிக உணவு, கொழுப்புச் சத்து மிகுந்த தின்பண்டங்கள், பொரித்த உணவு, சிப்ஸ், பப்ஸ் போன்றவை சாப்பிடுவதே.
இளம் வயதில் உடல் வளர்ச்சி பெற அதிக உணவு தேவைப்படுகிறது .ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வளர மறுத்து, அபரிமிதமான உணவை நஞ்சு என்று கருதும். உடலின் தேவைக்கு மட்டும் உண்ணப் பழக வேண்டும்.
உடல் உழைப்பு மிகுந்தவர்கள் அதற்கேற்றவாறு அதிகப்படியான கலோரி சாப்பிட வேண்டும். உடலுழைப்பு குறைவாக வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக கலோரி தரும் உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைக்கு அதிகமான உணவை நீங்கள் சாப்பிட்டு, அது கலோரியாக செலவிடப்படாத நிலையில், உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது; விளைவு உடலின் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உடல் பருமன் பிரச்னையாக மாறுகிறது.சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்பட பல நோய்கள் வந்துவிடும்.

எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று பலர் தினமும் காலை உணவை கட் செய்து விடுகின்றனர் இது தவறு என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.இரவு உண்ட உணவு செரித்து  உடல் சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான உணவு அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலைஉணவை   அதிக அளவில் உண்ணாமல் ஜூஸ், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.

உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள் கூடாது என எண்ணி அனைத்து கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்ப்பதும்  தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது.  புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
கொழுப்புச் சத்து நிறைந்த பால்-தயிர்-சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து, பருப்பு, மஞ்சள் கரு இல்லாத முட்டை, சோயா போன்ற புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடத் தொடங்குங்கள்.

 உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம்.  மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
 உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கில் கணக்கின்றி  சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நொறுக்கு தீனிக்கு பதில் திராடச்சை பழங்கள்  சாப்பிடுவது உடலுக்கு நல்லது

நகர வாழ்க்கையில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் நமது உணவுப் பழக்க வழக்கங்களையும் அதுபோல் மாற்றிக்கொள்ளவேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாத நிலையில் 6 இட்லி சாப்பிடுபவர்கள் அதை 4-ஆகக் குறைத்துக் கொள்ளலாம்.இட்லியின் எண்ணிக்கையைக் குறைத்தால் அடுத்த வேளை முன்கூட்டியே பசி எடுக்கும். அதை ஈடுகட்ட சாம்பார், சட்னியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். சத்துகளை மட்டுமே தந்து எடையை அதிகரிக்காது என்பதால் பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம். அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. சாப்பிடுகிற இட்லி, சாதம் போன்றவற்றைக் குறைத்து அதை ஈடு கட்ட சாம்பார், கூட்டு, பொறியல் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.இப்படி நோய் வராமல் தடுக்க நம் உணவு முறைகளை மாற்றி பயன் பெறலாம்.
பசி எடுத்தவுடன் இஷ்டம்போல் சாப்பிடாமல், சிந்தித்து சத்தான சமச்சீரான உணவுகளை சிறு வயதிலிருந்தே சாப்பிட்டுப் பழக வேண்டும். நோய் வந்தாலும் உணவு பாதி, மருந்து பாதி என பிரச்னைகளை நாமே எளிதாக தீர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியத்தின் மற்றொரு பெரிய அம்சம் உடற்பயிற்சி..உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகள்  எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது .சின்னச் சின்ன விஷயங்களைக் கூட உடல் உறுப்புகளுக்கு அசைவு கொடுத்து நாம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யும் நிலையில் தசைகள் வலுப்படும்; எலும்புகள் உறுதிப்படும். "தண்ணீர் கொண்டு வா! ஃபேனை போடு, லைட்டை அணைத்து விடு! என்றெல்லாம் மற்றவருக்கு கட்டளையிடாமல் அன்றாட வேலைகளை நாமே செய்யலாம். பக்கத்தில் மார்க்கெட் போக முடிந்த அளவு மோட்டார் பைக்கை தவிர்த்து நடந்தே போகலாம்.உடற்பயிற்சியினால் ரத்த ஓட்டம் சீர்பட்டு, உடம்பின் உறுப்புகளைச் செம்மையாக செயல்பட வைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்:
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
என்ன சாப்பிடலாம்?
மூட்டுவலி (Arthritis)
உயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்
இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
நடக்கலாம் வாருங்கள்?
உடற் பயிற்சி - சில உண்மைகள்

Download As PDF

15 comments:

நட்புடன் ஜமால் said...

கொழுப்புச் சத்து நிறைந்த பால்-தயிர்-சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து, பருப்பு, மஞ்சள் கரு இல்லாத முட்டை, சோயா போன்ற புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடத் தொடங்குங்கள்.
]]

நல்ல தகவல் ஐயா!

அபுஅஃப்ஸர் said...

படிக்க நல்லாதானிருக்கு ஆனால் செயல் படுத்தனும்னு நினைக்கும்ப்ப்போதுதா...????

நல்ல தகவல் சாதிக் தொடர்ந்து கலக்குங்க (நான் சொன்னது எழுதுவதை)

சாதிக் அலி said...

//படிக்க நல்லாதானிருக்கு ஆனால் செயல் படுத்தனும்னு நினைக்கும்ப்ப்போதுதா...????//

ஹ ஹா! வேற வழியில்ல அபூ அஃப்ஸர்.நம்மை விட வரும் தலைமுறையினருக்கு மிகுந்த வழிப்புணர்வு தேவை.அப்படி ஆகி விட்டது நமது உணவுப்பழக்கமும் வாழ்க்கை முறையும்.

Suresh Kumar said...

நல்ல தகவல்

harini said...

i like your site
from manawalakurichy

Sathik Ali said...

உட்ம்பு இளைக்க சித்த வைத்தியர் சொல்றதயும் இங்கே கேளுங்க http://siddhavaithiyan.blogspot.com/2010/08/blog-post.html

Sathik Ali said...

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும். பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும்.பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

Sathik Ali said...

நம் நாட்டில் பொற்கொடி என்னும் கரிசலாங்கண்ணியை அடிக்கடி பருப்பு, நெய் சேர்த்து பொரியல், குழம்பு கடைசல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம். இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல் நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

உடல் கனமும், பருமனையும், தொந்தியையும் குறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல் உணவில் இரண்டு முதல் நான்கு வாரம் தொடர்ந்து உண்டுவர, நல்ல பலனுண்டு. வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி இவைகளைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, பச்சையாக வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, அங்கங்கே விழும் சதை மடிப்புகள் மறையும்.

வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும். மேலும் உடல் பலத்திற்கு காலையில் எழுந்ததும் தேன் 2 ஸ்பூன் எடுத்து கால் தம்ளர் பசும்பாலில் கலந்து பருகவும்.

இரவில கொண்டைக் கடலை 1 பிடி எடுத்துத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வேக வைத்து, அதனை வடிகட்டி அதில் சீமை அத்திப் பழம் 2, பசும்பால் அரை டம்ளர் கலந்து காய்ச்சி, கற்கண்டு சிறிது சேர்த்து, காலை நேரத்தில் பருகவும்.

ராகி, கோதுமை, புழுங்கல் அரிசி இவற்றை அரை கிலோ எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து, கஞ்சி செய்து, அதில் கால் ஸ்பூன் பொடியைக் கலந்து தினம் 1 வேளை பருகி வரவும். எல்லாவற்றுக்கும் மேலாக கீழ்க்கண்ட முறைப்படி கஞ்சி செய்து தினம் ஒரு வேளை கட்டாயம் பருக வேண்டும்.

பாதாம் பருப்பு -2, பிஸ்தா பருப்பு 5, கசகசா 1 ஸ்பூன் இவையனைத்தையும் மாலை நேரத்தில் கால் டம்ளர் பசும்பாலில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின் அதனை அப்படியே அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். இப்படி 3 மாதம் சாப்பிட, உடம்பு கல் போன்று வலிமை பெறும்.

Sathik Ali said...

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

Sathik Ali said...

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

Sathik Ali said...

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

Sathik Ali said...

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்

Sathik Ali said...

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

Sathik Ali said...

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

Sathik Ali said...

கொழுப்புக்களை கரைக்கும் உணவுகள்.

1)ஓட்ஸ்
ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும்.இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

2)முட்டை
முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.

3)ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

4)மிளகாய்
மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.

5)பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் கொழுப்புக்களை கரைக்கும்

6)பருப்பு வகைகள்
குறைவான கலோரிகள் அதிக அமினோ ஆசிட்டுகள் இருக்கிறது.

7)ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும்.

8)மீன்
மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிடுவது நல்லது

9)நிலக்கடலை, பாதாம் போன்ற நட்ஸ்
நட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது.

10)தேன்
தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது இயற்கை வைத்தியம்

11)க்றீன் டீ
க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

12)கறுவா (பட்டை)
பட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.

13)பப்பளிமாசு பழம்
தினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.

14)கேரட்
கேரட் மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.

15)நீர்
தினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

16)தானியங்கள்
தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும்.

17)அன்னாசிப்பழம்


18)கொழுப்பு நீக்கிய பால் உணவுகள்

19)இஞ்சி
நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.