பிக் ப்ளாங்க் 9

 

பிரபஞ்ச அறிவியலை பற்றி பேசும் போது அது ஆயிரம் கைகளுள்ள ஆக்டபசை தடவிப் பார்ப்பது போல பல்வேறு நிலைகளில் ஆய்ந்து விளங்க வேண்டி இருக்கிறது. ஆழ்ந்து சிந்திப்பவர்கே மலைப்பபான விஷயம். தேடத்தேட புதிய கேள்விகளையே அடைகிறோம். நாம் இடம் காலம் பொருள் என்ற முப்பரிமாணத்தில் சிக்கியிருக்கிறோமல்லவா? இதை விட்டு வெளியே முடியுமா? வேறு பரிமாணங்களில் என்ன இருக்கிறது. இந்த மாயை எப்படி உருவானது?

நம் பரிமாணத்தை  நாம் கடக்கக முடியாமல் இருக்கும் தடை என்ன? இடத்தை பொறுத்த வரை நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம்  வரலாம் போல் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையா? உதாரணமாக நான் வீட்டை விட்டு துபாய் போகிறேன். அங்குள்ள ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் போகிறேன். ஏன் உலகம் முழுதும் ஒரு ரவுண்டு போய் வருகிறேன், ராக்கட்டில் ஏறி விண்வெளிக்குகு கூட போய் விட்டு பத்திரமா வீட்டுக்கு வர முடியும். இடத்தில் பயணம் சீராகவோ?சீரற்றோ? வட்டப் பாதையிலோ? செல்ல முடியும். புறப்பட்ட இடத்துக்கு திரும்ப வரமுடியும்??. No..Not Exactly. நாம் இருக்கும் பூமி, சூரியன், மில்கி வே எல்லாம் சுழன்று  இடத்தில் முன்னேறி ஒரு திசையில் பயணிக்கிறது விண் வெளியிலிருந்து பார்க்கும் போது நாம் புறப்பட்ட இடத்துக்கு மீண்டும் வருவதில்லை. நம் வீடே  பூமியோடு வெளியில் இடம் பெயர்ந்து விடுகிறது. இடம் விர்சுவலாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. இடம் நகரும் போது காலமும் விர்சுவலாக ஒரு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

 கடந்த காலம் என்பது நம் நினைவு,எதிர்காலம் என்பது கற்பனை நிகழ் காலத்தில் மட்டும் இருக்கிறோம். ஆனால் அந்த நிகழ் காலம் என்பதின் அகலம் என்ன? ஒரு கணமா? ஒரு நொடியா? எவ்வளவு சிறிய காலத்தை நிகழ் காலமென்பது? அதுவும் காலத்தின் சிறு அளவு தானே? நிகழ் காலம் என்று ஒன்று இருக்கிறதா? ஒரு சம்பவம் நடந்த பின் தான் நம் புலன்கள் உணர்கிறது. நாம் அனைத்தயும் கடந்த காலத்தில் தான் உணர்கிறோம். நம் நிகழ் காலம் என்பதும் கடந்த காலம் தான். ஒரு துப்பாக்கி குண்டு நம்மை நோக்கி வருவதை  நாம் உணருமுன்னே அது துளைத்து சென்றுவிடும். ஆனால் ஒரு பஸ் வந்தால் அதில் துள்ளி ஏறி போக  போகமுடியும். ஆனால் அந்த பஸ் நம்மை கடந்து விட்டால் அதை மீண்டும் அடுத்த நிமிடம் அதை வர வைக்க முடியாது. ஒரு வேளை  நாம் துப்பாக்கி ரவையை விட வேகமாகபயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நம்மை பின்னாலிருந்து சுட முடியுமா? அந்த ரவை நம் காலத்தில் பார்த்தால் பின்னோக்கி செல்லும். பஸ்ஸின் வேகத்தில் பயணிக்கிறோம் என்றால் பஸ் நம்மை கடந்து செல்லுமா? விண்வெளியில் வெவ்வெறு வேகத்தில் பயணிப்பவர்களுக்கு நிகழ் காலம் என்பது  எப்படி ஒன்றாக இருக்கும்? வெளியில் இடமும் காலமும் ஒரே டைமன்சன் அச்சில் இருக்கிறது. நாம் இங்கிருந்து  வேறு இடத்துக்கு நகரும் போது இந்த இடம் காலம் பற்றிய அனுபவம் நினைவகத்தில் தான் இருக்கிறது.இங்கே என்று நாம் நினைக்கும் இடமும் விண்ணில்  ஒளி வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் இங்கேயும் விர்சுவலாக வேறு வேறு. அது போல இருவரின் நிகழ் காலமும் வேறு. இருவரின் நினைவும் வேறு.

இடத்துக்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு பார்த்தோம்.இடத்துக்கும் பொருளுக்கும்  தொடர்பு உண்டு. பொருள் இடத்தில் இருக்கிறது. சரி காலத்துக்கும் பொருளுக்கும்  தொடர்பு இருக்கிறதா? ஆம் .. பொருட்கள் காலத்திலும் பயணிக்கிறது. இன்று நாம் காணும் பல பொருட்கள் காலத்தால் பரிணமித்தவை. கோடானு கோடி உயிர்கள் எல்லாமே ஒரு செல்லில் இருந்து காலத்தால் பரிணாமம் அடைந்து பல கிளைகளாய் கிளைத்தவை.உயிர்களின் பரிணாம கிளைகள் காலத்தில் ஐ பாரல்லல் ஆக கூட பயணிக்கிறது. அவற்றின் நினைவுகள் நம் நினைவுகளோடு பங்கு வைப்பதாலேயே அவற்றை நாம் அடையாளம் காண்கிறோம். ஒரு வேளை  அப்படி எதோ ஒரு பரிணாம கட்டத்தில் ஒரு கிளை ஒரு காலத்தில் பிரிந்து நம் நினைவுகளை விட்டு மறைந்து போயிருந்தால் அது நம்மால் அடையாளம் காண முடியாத ஏலியனாக வேறு புலன்களோடு வேறு ரியாடிட்டி அனுபவித்துகொண்டு இருக்கும் சாத்தியம் உண்டா? நம்மோடு நினைவை பங்கு வைக்காத பொருட்கள், உலகங்கள் டார்க் மேட்டரில் இருக்கிறதா? மொத்த பிரபஞ்சத்தில் நாம் அறிந்த வெளி வெறும் 5 % தான். நாம் நம் கடந்த காலத்தில் 7 மில்லியன் வருடம் நம் நினைவகத்தில் பின்னோக்கி போனால் நாம் ஒரு மனுஷனாவே இருக்க மாட்டோம். அப்படித்தான் அணுக்கள் தனிமங்கள், மூலக்கூறுகள் அனைத்தும்  ஹீலியம்,ஹைட்ரஜனிலிருந்து பரிணாமம் பெற்றது தான்.ஒவ்வொரு பொருளிலும் இடம் காலம் பற்றிய நினைவுத் தொடர்பு உண்டு. அப்படியானால் இந்த நினைவு தான் நான்காவது டைமன்சனா? இந்த நினைவு எங்கே இருக்கிறது ? யூனிவர்சல் மெமரியை அடைய முடியுமா? அதன் மூலம் காலங்களில் முன் பின் பயணிக்க முடியுமா? யோசிப்போம்.

கருத்துகள்