பிக் ப்ளாங்க் 4

 


மாயப் பிரபஞ்சம் ( Virtual universe ) குறித்து அறிவியல் என்ன சொல்கிறது?

நம் பிரபஞ்சம் முடிவற்றது அல்ல.. அதற்கு ஓர் எல்லை இருக்கிறது அந்த எல்லைக்கு அப்பால் நட்சத்திரங்களோ காலக்சிகளோ ஏன்..வெளி கூட  இல்லை.  அந்த எல்லையை நோக்கி நாம்  ஒளி வேகத்தில் பயணித்தாலும்  அந்த பாதையே  வளைந்து  புறப்பட்ட இடம் நோக்கி செலுத்தும்.. அப்படியானால் அந்த எல்லைக்கு அப்பால் என்ன தான் இருக்கிறது? இன்னொரு ரியாலிடி.? இன்னோரு பரிமாணம்?   இன்னோரு பிரபஞ்சம்?
சரி..  நாம்  அறியும் பிரபஞ்சமும் அதன் அண்ட கோளங்களும் அனைத்து பருப் பொருட்களும் அடங்கிய  வெளி கூட  ஊதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பலூனில் காணப்படும் புள்ளிகள் போல இருக்கிறது. எனில் அந்த பலூனுக்குள் என்ன இருக்கிறது?  டார்க் மேட்டர் ? இன்னொரு ரியாலிட்டி? நம் ரியாலிடிக்கு  நேரெதிரான விதிகளை உடைய ரியாலிடி? தெரியாது அங்கேயும் ப்ளாங்க்.

சரி நம் பிரபஞ்சம் எப்போது தோன்றியது? அப்போது  தான் காலம் தோன்றியது . அதற்கு முன்  அது வேறொரு ரியாலிடியின் பாகமாக இருந்து இடம் , பொருள் காலம் என முப்பரிமாண புதிய ரியாலிடியாக வெடித்ததா?  அங்கேயும் ப்ளாங்க் . 
ஆனால் இதற்கு தோற்றம் இருக்கிறது , மாற்றம் இருக்கிறது.. முடிவு? ஆம் அதுவும் இருந்தாக வேண்டும் . அப்போது   இந்த வெளி என்னவாகும் ? பொருட்கள் எல்லாம் எங்கே மறைந்து விடும் ? Big bang போலவே அது ஒரு big crunch ஆக இருக்கும். அப்போது அது இங்கிருந்து அழிந்து  வேறு புதிய பரிமாணமாக  வெடிக்குமா? அப்போது மனிதர்கள் உயிர்கள் இருக்குமா ? அவற்றுக்கு என்னவாகும்? உயிர்கள் இல்லாவிட்டால் இந்த மாற்றங்களை அறிவது யார்? யாரும் அறியாத ஒன்று நிகழ முடியுமா? இருப்பது தான் சாத்தியமா? 
வெடித்து சிதறிய இந்த வெப்பச் சிதறலில் இந்த உயிர்கள் மனிதர்கள் எல்லாம் எப்படி தோன்றினார்கள்? ஏன் தோன்றினார்கள்? மனிதர்கள் தோன்றிய பின் தான் இந்த ரியாலிடியையும் பிரபஞ்சத்தையும் இப்படி உணர்கிறார்களா? 

சரி நாம்  உணரும்  இந்த பிரபஞ்சம் எதனால் ஆனது? நாம் அறிந்த பொருட்களின் fundamental ஆன யூனிட் எது ? 
அனைத்தும் ஒரு குறிப்பிட்ட திசை வேகத்தில் நகரந்து கொண்டிருக்கிறது . சுழன்று கொண்டிருக்கிறது . அசையாமல் கிடக்கும்  கல்லினுள் கூட இயக்கம் இருக்கிறது. அனைத்து பொருட்களும் சேர்மங்கள் , தனிமங்களால் ஆனது. தனிமங்கள்  மூலக்கூறுளாலானது.   மூலக்கூறுகள் அணுக்களால்  ஆனது.  இவை பல்வேறு சக்தி நிலைகளில் இணைந்து பல்வேறு குணமுடைய பொருட்களாக தோன்றுகிறது. ஆனால்  அவற்றின் அடிப்படை நிலைக்கு செல்லுந் தோறும் அவை தன் அடையாளங்கள் அனைத்தும் இழந்து 99.9 % காலி இடமாக உள்ள அணுக்களாக இருக்கிறது. அவ்வளவு காலியான இடத்தில் மிக மிக நுண்ணிய எலக்ட்ரான்கள் சுற்றுகிறது.  அணு எப்படி இருக்கும்.

 நாம் பள்ளியில் படித்தது எல்லாம் அணுவை புரிந்து கொள்ள அறிவியல்  உருவாக்கிய மாடல் தான். உண்மையில் அணு அப்படி அல்ல . மிக அதி வேகமான சுழல்  இயக்கத்தில்  இருக்கும் மின் காந்த நுண் சக்தி துகளின் காம்பேக்ட் அமைப்பு..  அந்த இயக்கத்தை படமாக வரைய முடியாது.  இன்னும்  எலக்ட்ரான்களின் திசை வேகத்தை கணக்கிடும் போது அது எங்கே இருக்கிறது? என கணிக்க முடியாது. அதனை ஒரு இடத்தில் ஸபாட் பண்ணின்ல் திசை வேகத்தை கணிக்க முடியாது.ஒரு அணுவில் இத்தனை எலக்ட்ரானைகள் சுற்றுகிறதா? அல்லது அதி வேகத்தில் இயங்கும் ஒரு எலக்ட்ரானை தான் பல எனர்ஜி நிலைகளில் பல எலக்ட்ரான்களாக பார்க்கிறோமா? இந்த எலக்ட்ரான்களின் சுழற்சியும் விசித்திரம் , அதன் இயக்கம் சீராக ஒரு கார் சாலையில் போவது போல் இல்லை..  அதன் நகர்வு தோன்றி தோன்றி மறைந்து இயங்குகிறது. அப்படி எனில் அது நகரும்போது மற்றொரு சருள் பாதையில் நகர்கிறது அதாவது அதன் பாதி சுழல் நாம் உணரக்கூடிய பரிமாணத்திலும் மறு பாதி நமக்கு புலப்படாத பரிமாணத்தில் மறைந்து பயணிக்கிறது?  Interesting?  

 அணுவுக்குள் பல அடிப்படை துகள்கள் இருக்கிறது .இவை துகள் என்றா சொன்னேன்? இன்னும் ஆழமாக அதை அணுகினால் அவை துகள்களே இல்லை சக்தி அதிர்வுகள்.அந்த அதிர்வுகளை நம் புலன் அனுபவம்  தான் meterialise  செய்கிறது. அதிர்வுகளுக்கு திடம் மணம் குணம் எல்லாம் கொடுப்பது நாம் தான்.. நாமில்லாவிட்டால்  இங்கு இடம் ,பொருள், ஆற்றல், காலம், என எதுவுமில்லை , வேறொரு பரிமாணத்தின் அலைகளாக அல்லது ஏதோ ஒன்றாக  இருக்கும். அப்படி சூட்சும பிரபஞ்ச அறிவும் ப்ளாங்க் நமக்கு ஆக இருக்கிறது. ஆனால் பிரபஞ்சத்தை உருவாக்குவதில் நம் பங்கு இருப்பது தெரிகிறது..

கருத்துகள்