பிக் பிளாங்க் 3


நாம் உணரும் பிரபஞ்சம் ஒரு மாயை (virtual) என்பது  நம் இருப்பை புரட்டிப்போடூம் உண்மை என்பதால் பலருக்கும் அதை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமும் சிக்கலுமிருக்கிறது.

இதோ என் கண் முன்னே நான் தொட்டு உணரும் இந்த உலகை எப்படி பொய் என்பேன்? கற்பனை என்பேன்?

மாயாவாதம் புதிதொன்றும் இல்லை. இந்திய  மற்றும் மேற்கத்திய நாடுகளில்  ஏற்கனவே  பேசப்பட்ட கருத்தியல் தான். அதை தான் பாரதியாரும் நிற்பதுவே, பறப்பதுவே கற்பனை தானோ ? என்று கேள்வி கேட்டு பாடி விட்டு  பாம்பு மாயை என்றால் அதன் விஷமும் மாயை தானே பின் ஏன் ஆளைக் கொல்கிறது ?என்று கேட்டு மாயாவாதம் பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தார்.  பாரதியாரை போலவே பலருக்கும் மாயை சரியாக பிடி தராது. தற்கால அறிவியல் இப்போது மாயையை புரிந்து கொண்டு வருகிறது.

முதலில் மாயை என்பது  கற்பனை அல்ல. பொய் என்றும் அர்த்தம் அல்ல.  எதிரே  இருக்கும் யானைபை நாம் அப்படி கற்பனை செய்யவில்லை . ஏதோ ஓரு தளத்தில்  இருக்கும் ஏதோ ஒன்றை யானையாக நாம் எதிரே உணர்கிறோம்.  நம் புலன்கள் தான் அந்த ஏதோ ஒன்றை நிகழ் காலத்தில்  யானையாக  அது இருக்க ஓர் இடத்துடன் உணரச் செய்கிறது. நம் நினைவுகள் கால உணர்வை ஏற்படுத்தி  யானையின் அசைவை உணரச் செய்கிறது..  நிற்பதும் நடப்பதும் கற்பனையல்ல.. தோற்ற மயக்கம். 
இனி அந்த யானை நம் தோற்ற மயக்கமென்றால் அது நம்மை மிதித்தால் செத்துப் போவதேன்? பாம்பு விஷம் கொலவதேன்?  காரணம் யானை எப்படி மாயையோ அது போல நம் உடலும் மாயையாக இருப்பதால் தான்.  யானை நம்மை மிதிப்பது  என்பது யானையின் தோற்றத்திற்கு காரணமாக எது இருந்ததோ அது நம் உடலின் மாயைக்கு காரணமான டேட்டாவை பாதித்து விடுகிறது. 
நாம் என்பதும் நம் உடல் என்பதும் வேறா?
உணர்வது தான் நாம். உணரப்படுது மாயை. நாம் நம் உடலை மாயையில் உணர்கிறோம். இந்த உடலை நம் அடையாளமாக கருதுகிறோம்.

நம் ரியாலிட்டி என்பது அடுக்கடுக்காக பல மாயைகளில் உருவானது.  அதாவது நாம் ஒரு அறையின் நடுவிலிருப்பதாய் உணர்கிறோம் . மெல்ல நகர்ந்து அறையின் எல்லைகளை பார்த்தால் அதில் கதவு இருப்பது தெரியும்  கதவை திறந்து வெளி வந்தால் அப்போதும் நாம் ஒரு வீட்டில் மாட்டிக் கொண்டு இருப்பது நம் ரியாலிடியாய் இருக்கும். அறையையும் பார்க்க முடியும் . இன்னும்  வீட்டின் எல்லைகளை கண்டு பிடித்தால் வீட்டின் மெயின் கதவு தெரியும். அதையும் திறந்து வெளி வந்தால் வீடே ஒரு கப்பலில் இருப்பதும், கப்பல் நகர்வதும் புரியும் . நமக்கு விளங்க விளங்க நம் ரியாலிடியும் மாறி விடுகிறது. நாமும் மாறி விடுகிறோம். 

கருத்துகள்