நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 10


 உடல் காயங்கள் போலவே மனக் காயங்களும் அதிக வலி ஏற்படுத்துபவை. உடல் காயங்கள் நாளடைவில் ஆறிவிடும். ஆனால் மனக் காயங்கள் ஆயுள் முழுதும் ஆறாம வலியேற்படுத்தும். அந்த வலியை  நாம் குணப்படுத்த முயலும் போதெல்லாம் அது ரணமாகிக் கொண்டிருக்கும். இந்த உளக்காயங்கள்  பலரையும் வாழ்வின் அந்த வலிமிகுந்த  இடத்திலே  நகர விட்டமல் நிறுத்தி விடும். அதை தாண்டிய இன்பங்களை தலையை தூக்கி பார்க்க விடாம வாழ்வை முடக்கி போடும். பெரும் பாலும் அந்த வலி தரும் காயங்கள் ஒரு பிரிவாக இருக்கலாம், நெருங்கிய ஒருவர்  மரணமாக இருக்கலாம், ஒரு காதல் தோல்வியாக இருக்கலாம். ஒரு உறவின் பிரிவு, நட்பின் பிரிவு, துணையின் பிரிவு நம் நினைவுகளில் உள்ள மகிழச்சியான தருணங்களை , வலிமையாக, பாது காப்பாக உணர்ந்த தருணங்களை, நம்பிக்கையாக உணர்ந்த தருணங்களை வலியாக்கிவிடும்.

 நம் அடையாளத்தின் பெரும் பகுதியாயிருந்த கடந்த கால நினைவுகள் ஒரு பிரிவால் பெரும் வலியாக ஒரு நொடியில் மாறிவிட்டால் அதை வலியை விட்டு வெருண்டோட நினைக்கும் போது எதிர் காலமும் உயிரற்றததாகி விடுகிறது. சில நம்பிக்கை துரோகங்கள்,அவமானங்கள், சிறு வயதில் ஏற்படும் அழுத்தமான காயங்கள் கூட ஆழமாக  மனதில் புதைந்து அதை கடக்க முடியாமல் செய்து விடும், அந்த காயங்கள்  நம்மை, நம் கண்ணோட்டத்தை,நம் உலகத்தை   மாற்றிவிடும். அதன் பின் நம் வாழ்வில் நடக்கும் எந்த சந்தோச நிகழ்வையும்  அனுபவிக்க முடியாமல் செய்துவிடும்.

எல்லோர் மனதிலும் இப்படி ஏதாவது காயங்கள் சிறிது பெரிதாக இருக்கும். ஒரே சம்பவம் கூட எல்லோருக்கும் ஒரு போல் வலி தருவதில்லை. உள்ளத்தின் வலிகள் ஒருவனை கல்லை கட்டி கடலில் போட்டது போல அவனை கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கடித்து விடும். பலரும் அதை எப்படி  கையாள்வது என தெரியாமல் அந்த வலியுடன் வாழ்ந்து அது உடல் நோயாக மாறி வாழ்வை முற்றுகை இட்டு விடுகிறது.

இது போன்ற வலியால் உண்டாகும் டிப்ரசன்  மன அழுத்தம் போன்ற  நோய்களை அப்படியே விட்டால்,  உடலின் ஹார்மோனல் பேலன்ஸ் கெட்டு அனைத்து விதமான நோய்களாக வெளிப்படும் உடலின் ஒவ்வொரு பாகமும் நம் நொயெத்திர்ப்பு சக்தியால் தாக்கப்பட்டு கெடும். கடைசியில் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் , கிட்னி ,என முக்கிய  மண்டலங்கள் செயலிழக்கும், டிப்ரசன காரணம் சிலர் சாப்பிடாமல் ,சிலர் அதிகமாக சாப்பிட்டு தன்னை தண்டித்து கொள்வார்கள், சிலர் மவுனமாகி விடுவார்கள், வாழ்க்கையை வெறுத்து விடுவார்கள், சிலர்  உலகை, சுற்றத்தை வெறுத்து மூர்க்கர்களா மாறிவிடுவார்கள், நிலையற்ற வேலை .எல்லோரிடமும் சண்டை எரிச்சல் கோபம். என வாழ்வு வீணாகும்.

  சிலர்  இந்த வலிகள் தரும்  டிப்ரசன் உணர்வால  அந்த நினைவுகளை மறக்க   மது, சிகரெட், போதைப்பொருள், பாலியல் வெறி என  ஒரு மோசமான பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். அது அவர்களை சுய உணர்வற்றவர்களாக  மாற்றி மொத்தமாக அழித்து இல்லாமல் செய்து விடும். இது ஒரு மெதுவான தற்கொலை முயற்சி.  சிலர்  இந்த வலிகளை எதிர்கொள்ள தெரியாமல் தற்கொலையே  தீர்வு என முடிவெடுத்து விடுகிறார்கள்.  சிலர் இந்த உளக் காயங்கள் காரணமாக மற்றவர்களால் அடிக்கடி காயம் பட்டு அதனால் எதிர்வினையாற்றி தன் வாழ்வையும் கெடுத்து தன்னை சுற்றியுள்ளவர் வாழ்வையும் நாசமாக்கி விடுகிறார்கள்,.பிறரால் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

சிலர் இந்த வலிகளை எதிர்கொள்ள முடியாமல் சுய உணர்வுடன் அதை நினைப்பதை தவிர்க்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள், தங்கள் வலிகளை மறக்கச்செய்யும் ஏதாவது உயர்ந்த லட்சியங்களை மனதில் உருவாக்கி அதை நோக்கி கடுமையாக உழைக்கிறார்கள். கதை , கவிதைகள், கலைகள், இசை  என சிலர் அந்த உணர்வுக்ளை படைப்பாக்கி விடுகிறார்கள், சிலர் தொழில், வியாபாரம் வேலை, விளையாட்டு என  தங்கள் மனதை, மூளையை தங்கள் இலட்சியங்களில் பிசியாக வைத்துக்கொள்வதன் மூலம் வலியை தவிர்க்க முனைகிறார்கள், வாழ்வில் சாதனை புரிந்த, வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் உள்ளும் நிச்சயம் ஒரு மனக் காயம் இருக்கும், அந்த காயங்கள் தரும் பெரும் மன எழுச்சியே அவர்கள் வாழ்வில் வெர்றி பெற தேவையான செயலூக்கத்தை, சக்தியை கொடுக்கிறது. பலருக்கு அது மோசமான வறுமை தந்த வலியாக , சாதீய அவமானமாக இருக்கலாம்.  ஆனால் அதில் ஒரு பிரச்சனை அவர்கள் வாழ்வில் தன் லட்சியத்தை அடைந்த பின் மீண்டும் அங்கே ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் மீண்டும் அந்த பழைய வலியால் மது, போதை ,டிப்ரசன் மாத்திரைகள், சைக்கியாட்ரிக் கன்சல்டேசன் ,என தொடரக்கூடும். சிலர் ஆன்மீகத்தை நாடுவார்கள். அனேகமாக மார்கட் இழந்த ஸ்டார்கள்..
 
 மன பிரச்சனைகளுக்கு  சைக்கியாட்ரிக் மருத்துவ மனைகள் உண்மையில் தீர்வு தருவதில்லை, தற்காலிக நிவாரணமே தருகிறது. சில மருந்துகள் மூலம். மன அழுத்ததால் உடலில் ஏற்படும்  சில ரசாயன மாற்றங்களை மட்டுப்படுத்துகின்றன. இது தற்காலிமாக அந்த உணர்வுகள் ஏற்படாமல் மட்டுப் படுத்துகிறது. போதை மருந்து மூளையை தாக்கி சிந்தனையை மட்டுப்படுத்துவது போல இது சில ரசாயனங்களை மட்டுப்படுத்துகிறது. 

நம் உணர்வுகள் என்பது பவுதீகமாக ரசாயன மாற்றங்களாக வெளிப்படுகிறது. கவலை உணர்வுக்கு ஒரு ரசாயனம் ,சந்தோசத்துக்கு ஒரு ரசாயனம், கோபப்படும்போது ஒரு ரசாயனம், இந்த ரசாயனத்தை கூட்டி குறைப்பது மூலம் உணர்வுகளை மாற்றிவிடலாம் என சைக்கியாட்ரிக் மருத்துவம் நினைக்கிறது, அது உடலை ஒரு பவுதீகப் பொருளாகத்தான் பார்க்கிறது. உடல் என்பது பவுதீகமல்ல. நம் emotion கள் (not feelings) மூளையின் ரசாயன மின்சார விளைவே. உடல் வலிக்கு பாராசிட்டமால் கொடுக்கிறோம் அது தற்காலிகமாக வலியை மூளை உணர்வதை தடுக்கிறது. அதேவேளை உடல் தான் அந்த வலிக்கான காரணத்தை காயத்தை குணப்படுத்த வேலை செய்கிறது. அது போல சைக்யாட்ரிக் மருந்துகள் தற்காலிகாமாக உணர்வுகளை கட்டுப்படுத்துகிறது. ஆனால் உண்ர்வுக்கு காரனமான மன வலியை உடல் தானாக குணப்படுத்துவதில்லை. அதற்கு மறதி என்றொரு வழிமுறை உடலுக்கு இருந்தாலும். நாம் அந்த வலி தரும் இழப்புக்கு முந்திய இன்பமான நினைவுகளை இழக்க விரும்பாததால் திரும்பத் திரும்ப அசை போட்டு அந்த காயத்தை ஆறவிடாமல் கீறிக்கொண்டிருக்கிறார்கள். இதானல் சைக்யாட்ரிக் மருந்துகளை காலம் பூரா தொடரவேண்டிய நிர்பந்தம். மன நல  ஆஸ்பத்திரிகள் நிரந்தர கஸ்டமர்களாலும் நோட்டுக்கட்டுகளாலும் நிரம்பி வழிகிறது.மருந்துக் கம்பனிகள் கொழிக்கிறது.

 இது மக்கள் உணர்வு பெற வேண்டிய முக்கியமான விஷயம்.,இதற்கு தீர்வு இந்த மனக் காயங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு சிறப்பான ஒரு வாழ்வை எப்படி வாழவேண்டும் என கற்றுக்கொள்ள தயாராவதே. அதை வியாபார மருத்துவம் சொல்லித்தராது. எப்படி என இன்ஷா அல்லா  அடுத்த பதிவில் ஆராயலாம்... ஆழமான விஷயங்களை அலசும் போது பதிவு நீளமாகி விடுகிறது மன்னிக்கவும், பொறுமை உள்ளவர்களுக்கு மட்டுமே  இந்த தொடர் எழுதுகிறேன்..

கருத்துகள்

Rashid Faizee இவ்வாறு கூறியுள்ளார்…
நம் உணர்வுகள் என்பது பவுதீகமாக ரசாயன மாற்றங்களாக வெளிப்படுகிறது.//
எப்படி உணர்வுகள் பவுதிகமாக வெளிப்படுகிறது....???
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
https://youtu.be/9DIcpGWA7U0?si=kqBwjLnEVIZdFCAA