நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 6


 பதற்றம் ,கவலை போன்ற உள பிரச்சனை எப்படி  உடல் பிரச்சனையாகவும் வெளிப்படுகிறது என்ற  வரிசையில் குடலில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்சனை Leaky Gut என்பதாகும்.  நிறைய பேருக்கு இது  பற்றி தெரியாததால்  தவாறாக சிகிட்சை அளிக்கப்படும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது..
  நம் சிறு குடலில் செரிக்கப்படும் சத்துக்கள்  குடல் சுவர்களில் உள்ள நுண்ணிய இழைகள் போன்ற குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது .குடலில்  மோசமான ஒட்டுண்ணி புழுக்கள், பேக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது,  அவை குடலின் உட்புற சுவர்களை  அரிக்க ஆரம்பிக்கிறது. அதிக அமிலம் , மாவு சத்து ,சர்க்கரை, ரசாயனங்கள் கலந்த துரித உணவுகள், மைதா , கடலை மாவு பலகாரங்கள்  ,பேக்கரி உணவுகள்,,மதுப் பழக்கம், வயோதிகம், ஆன்டி பயாடிக் ,மற்றும் வலி மாத்திரைகள் , தீவிர உடல் நோய்கள் ,குடல் வீக்கம்  போன்ற காரணங்களால் சிறு குடல்  பாதிக்கப்படுகிறது. கவலை அதீத மன அழுத்தம் , தூக்கமின்மை  குடலை பாதிக்கும் முக்கிய காரணி. இதனால்  செரிக்கப்பட்ட சத்துக்களோடு சிறு உணவு துகள்களும்  குடலிலிருந்து இரத்த ஓட்டத்தில்  ஊடுருவி   கலந்து விடும் அளவு மோசமடைகிறது..

 சிலருக்கு காபி டீ குடித்தால், பால் சாப்பிட்டால்  அடி வயிற்றில் சுரீரென வலிக்கும், மீன் முட்டை, சிப்பி , சோயா, நிலக்கடலை ,போன்றவை முக்கியமாக அரிசி,கோதுமை போன்ற பசைத்தன்மயுள்ள தானியங்களில் உள்ள குளுட்டன் எனும் பொருள் ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தி   குடல் உறிஞ்சிகளில்  உள்ள சிறு நுண் துளைகளை அகல திறந்து விட்டு  உணவு துணுக்குகளை ரத்தத்தில் கடத்தி விடுகிறது. இந்த ரத்தம் உடலின் எல்லா பாகமும் செல்கிறது. நம் நோயெதிர்ப்பு மண்டலம் இதானால் அந்த மாசு பட்ட இரத்தத்தை  தாக்கி அழிக்க முயல்கிறது. இது ஆட்டோ இம்மூன் நோயாக மாறுகிறது. 

உடல் முழுதும் திசுக்கள் காயமுற்று கை, கால் வீக்கம் ஏற்படுகிறது. வீக்கத்தால் இவர்கள் முகம் கூட உருண்டையாகி விடும். அடி வயிறு பெருத்து வீங்கி இருக்கும். கணுக்காலில் அழுத்தினால் குழி விழும். தோலில் அரிப்பு போன்ற தோல் நோய்கள் ஏற்படும். ரத்தததில் ESR அளவு கூடி வாதக்கோளாறு ஏற்படும். உடல் எலும்பு ஜாயின்டுகளில் வலி உளைச்சல், வீக்கம் ஏற்படும். கை விரல்கள் மடக்க முடியாமல் முடக்கு வாதம் ஏற்படும், பீனிசம் ,அலர்ஜி ,ஜலதோசம் , மைக்ரேன் , இரத்த சோகை, சோர்வு, மனக்குழப்பம், பயம்,  எரிச்சல், உறவில் நாட்டமின்மை , தசைப்பிடிப்பு, கை கால்களில் இரத்த ஓட்டமின்றி மரத்து போதல், உடல் பருமன், ஆஸ்த்மா, தைராய்டு, நுரை ஈரல் பிரச்சனை, டைப் 1நீரிழிவு, தண்டுவடம் மரத்தல் ,என பல்வேறு நோய்களாக வெளிப்படும், எப்போதும்  லேசான உடல் வெப்பம் இருக்கும். குளிர் மற்றும் வெப்பம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.

இதை சரி செய்ய நேர்மறை எண்ணங்கள் கொண்டு மனதை சீர் செய்ய வேண்டும், நல்ல ஆரோக்கியமான வாழ்வு சூழலை உருவாக்க வேண்டும். கவலைகளை திரும்ப திரும்ப நினக்காமல் வேறு நல்ல விஷயங்கள்  ஆழ் மனதில் இட வேண்டும்,  உடற்பயிர்ச்சிகள் குடலுக்கு அசைவு தந்து குடல் தசைகள் வலுவாக உதவும். அலர்ஜி உணவு எது என கவனித்து அதை உறுதி செய்து  தவிர்க்க வேண்டும், அமைதியான் இரவு தூக்கம் ஓய்வு தேவை, கெட்ட உணவுகளை தவிர்ப்பது, நுண் சத்துகள் நிறைந்த கீரை, முட்டைக்கோசு , போன்ற உணவுகள் அதிகம் எடுத்துகொள்வது நல்லது . தயிர் ,கெஃபிர் (kefir) , sauerkraut போன்ற probiotic உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இது கெட்ட பேக்டிரியாக்களை கட்டுபடுத்தும். காரட் அதிகமாக எடுத்துக்கொள்வதால் அதிலுள்ள மண் நுண் உயிரிகள் குடலுக்கு நல்லது. அதிகாலை சூரிய வெளிச்சத்திலிருந்து இலவசமாக வைட்டமின் D உடல் நிறைய வாங்க வேண்டும். ஜீரணத்திற்கு உதவும் supplement எடுத்துக்கொள்ளலா 

 பெர்ரி பழங்கள். நெய்யுள்ள மீன்கள், புரொக்கொலி,அவகடோ. மிழகு, க்ரீன் டீ, காளான், இஞ்சி, மஞ்சள், ஆலிவ் எண்ணெய், செக்கு தேங்காய் எண்னெய்,கொக்கோ, டார்க் சாக்லெட்,தக்காளி செர்ரி. இவை உடல் வீக்கம் குறைக்கும் உணவுகள், இவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
பால் பொருட்கள், கோதுமை பொருட்கள், பார்லி, பொரித்த பலகாரங்கள் ,பொரித்த உணவுகள், ரீபைன்ட் ஆயில். ரீஃபைன்ட் உணவுகள் , ரெட் மீட், மரபணு மாற்றிய உணவுகள், புராசஸ்ட் ஃபுட், ஃபாஸ்ட் புட், இனிப்பு குளிர் பானங்கள், சர்க்கரை,  ட்ரான்ஸ்ஃபேட் எண்ணைய் மற்றும் கொழுப்புகளான வனஸ்பதி. ரசாயான பொருட்கள் ,emulcifiers சேர்க்கபட்ட உணவுகள். உடல் வீக்கம் உண்டாக்கும் இவற்றை  தவிர்ப்பது நல்லது.
உடல் வீக்கத்தை கண்டு கொள்லாமல் விட்டால் நாள்பட இதயம் ,நுரையீரல் ,கிட்னி, மூளை போன்ற உள் உறுப்புகள் பாதிக்கும். கான்சருக்கு அஸ்திவாரமிடும்

(தொடரும்...)

கருத்துகள்