நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 2

 

ஆபத்தான அச்சத்தின் விதைகள் 
     நம் வாழ்வில் எப்போதோ ஏற்பட்ட ஆழமான காயங்கள்,  பேரிழப்புகள், அதிர்ச்சி, அச்சம்   நம் மன வளர்ச்சியை அந்த காலத்தை கடந்து போகவிடாமல் தடுத்து நிறுத்தி  விடும், நாம் கடந்து போக வேண்டிய அந்த வலியை  ஆழ்மனதின் உள்ளே கட்டி  வைத்து  ரகசியமாய் மீண்டும் மீண்டும் அதையே அசை போட்டு  ஒரு பூதமாக யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருவோம். சில வேளை நம் மூதாதையரின்  நினைவு பதிவுகளில், நம் நாட்டின் ,சமூகத்தின் கடந்த கால அனுபவ நினைவுகளில்,  அப்படி ஒரு மிருகம்  இருந்து அதன் பாகங்கள் நம் ஜீன்களில்  பங்கு வைக்கப்பட்டிருக்கலாம். குற்ற உணர்ச்சி கூட ஒரு தூங்கும் மிருகம் தான்.  காலப் போக்கில் நம்  வெளி அறிவு கூட  உள்ளே இருக்கும் பூதத்தை மறந்து போய் நாமும் சாதாரணமாக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்போம். அந்த காயங்களில் மற்றவர்கள் உரசி விடாமல் கவனமாக நம் தேவையான முகத்தை மட்டும் காட்டி பிறருடன் உறவு பேணுவோம்.
    அமைதியாக உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவுகள் ஆபத்தானவை. அவை தூங்குவது போல் இருந்தாலும் எப்போதும் நம் புற அறிவில் காதை கூர்மையாய் தீட்டி வைத்துக்கொண்டு தூங்கும். எப்போதாவது எதோ ஒரு சந்தர்ப்பங்களில் ஒரு சொல் ,ஒரு காட்சி, ஒரு அனுபவம் ,அது சம்பந்தப்பட்ட  நபர் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் போது  அது விழித்து ஆக்ரோசமாக எழுந்து தாக்க அல்லது தற்காக்க தயாராகி  விடுகிறது. இதனால் தான் நெகடிவ் சூழ்நிலைகள் சொற்கள் இவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது. அதனால் நாம் உளவியல் ரீதியாக மட்டுமல்ல உடல் இயக்க ரீதியாகவும்  தாக்கப்படுகிறோம்.பழைய உருவேற்றப்பட்ட தீவிர  அச்ச உணர்வு  தூண்டப்பட்ட உடனே    நம் உடலில்  அட்ரீனல் சுரப்பியில்   கார்ட்டிசோல் என்ற ஹார்மோனை  சுரந்து இரத்தத்தில் கலந்து விடுகிறது. இது நம் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் , ஜீரண மணடலத்தையும் ,உடலின் வளர் சிதை மாற்றத்தையும் பாதித்து  பல வித உணர்ச்சிகளையும் உடலின் இயக்கத்தில் மாற்றங்களையும் உருவாக்கி உடலில் நோய் குறியாக வெளிப்படுகிறது. நாம் நோயாளியாகிறோம்.

 உண்மையில் இது நம் உடல்  நெடுங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் ஆபத்து நேரத்தில்  உயிர் காக்கும் ஒரு  தற்காப்பு சிஸ்டம், ஆனால் நவீன கால மனிதனின் அபார சிந்தனை வளர்ச்சி கற்பனையான பயத்தை கூட அதிக அளவு உருவாக்கி விடுவதால்  இந்த தற்காப்பு முறை தேவையற்ற நேரத்திலும் விழித்தெழுந்து நம் உடலையே கண்ட மேனிக்கு தாக்கி விடுகிறது. .இது தான் மனப்பதட்ட நோய். சில வேளை அது ,மன அதிர்ச்சி தாக்குதலாக கூட மாறும். .அந்த நேரம் உடலில் ஒரு வித இறுக்கம் .கண்களை  திறக்க முடியாமல் சொருகுதல் , முகம் கை கால் எல்லாம் வீங்குதல்,நெஞ்சு படபடப்பு,மூச்சு அடைப்பு,தலைவலி, மைக்ரேன், வாந்தி , பேச்சு குழறல். ஸ்ட்ரோக் நினைவிழத்தல் ஏற்படலாம்.

அதீதமான அச்சம் சில வேளை உயிர் இயக்கத்தை நிறுத்திவிடும். ஒருவன் மரண பயத்தை தூண்டி இனி உயிர் பிழைக்க முடியாது என நம்பத்தொடங்கினால் உடலின் ஒவ்வொரு   இயக்கத்தையும் மூளை நிறுத்தி விடும். கவலை உண்டானலே ஜீரண மண்டலம்  திறன் குறையும், கிட்னி அடிவாங்கும் இதயம் பாதிக்கும்,  அச்சம் ஒருவனை அடிமைப்படுத்துகிறது அவன் சுயத்தை மண்டியிட வைக்கிறது.

 மனிதர்களை அடிமைப்படுத்தவும் ,நோயாளிகளாக்கவும் சாத்தானிய நிழல் அதிகார மையங்கள் மீடியாக்கள் மூலம் அச்ச உணர்வை பரப்புகின்றன, கொரானா  பற்றிய பரப்புரைகளும் போர்கள் பற்றிய அச்சமும் அப்படி மனித மனங்களில் மீடியாக்களால்   விதைக்கப்படும் அச்சத்தின் விதைகள் தான்.  பிற மதம் பற்றிய அச்ச விதைகள் விதைக்கப்பட்டு மதவெறி எனும் மிருகங்கள் ஆழ்மனதில் வளர்க்கப்படுகிண்றன. இதற்கு சிலரின்  அதிகாரம் ஆதாயம் பொருளாதார ஆதாய வெறியே  காரணம். வரலாற்றில் மக்களை நோய் கொன்றதை விட அச்சம் கொன்று கூட்டியது தான் அதிகம். தலைவர்களின் ஒரு வார்த்தை ரகசியமாய் வளர்க்கப்பட்ட மிருகத்தை தட்டிஎழுப்பி  ஒரு பெரும் மனித கூட்டத்தை  நொடியில் மிருக கூட்டமாக்கி விடும். மத கார்பரேட்கள்  கூட மக்களை அடிமைப்படுத்த அச்ச உணர்வையும் குற்ற உணர்வையும்  பயன்படுத்துகின்றன.

எளிய மனித வாழ்வை சட்டங்கள், வரிகள்,கட்டுப்பாடுகள்  இட்டு சிக்கலாக்கி  எளிய பெரும் மக்கள் கூட்டத்தை பணத்தைத் தேடிய ஓட்டம் ,வேலை ,போலியான வாழ்க்கை முறை , தீங்கான உணவு , பரபரப்பு ,கவலை, கல்வி ,மருத்துவச்  செலவு ,என்ற சங்கிலியில் கட்டி என்னதான் வாழ்வு என சிந்திக்க கூட அவகாசம் தராமல் அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். இன்றைய  வாழ்வின் மன அழுத்தத்தின் நூறு சதவீத காரணம் நம் மனதில் கொட்டப்படும் குப்பைகளும். அது விதைக்கும் அச்ச விதைகளும் தான், ஒரு பூனைக்கு இங்கு இருக்கும் நிம்மதி மனிதனுக்கு இல்லை. ஒவ்வொரு மனிதனும் யாருக்கோ எதற்கோ போராடி வாழ்கிறான். கடைசியின் உண்மை உணரும் போது முதுமை மற்றும் நோய்களுடன் தனிமைப்பட்டு நிற்கிறான்,
தொடர்ச்சியான கவலை ,மன அழுத்தம்  நம் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் உடல் இயக்கத்தையும்  சீர் குலைத்து  எப்படி ஒவ்வொரு நோயாக வரிசையாக வெளிப்படுத்கிறது என அடுத்த பதிவில் பார்ப்போம்.

(தொடரும்....)

நோய் நாடி நோய் முதல் நாடி -பாகம்1 

கருத்துகள்