நான் யார்? ( பகுதி 8 )

 


மனிதன் காலத்தில் பரிணமிக்கிறான்.
மனிதன் பரிணமிக்கிறான் என்றால் அவன் உடலா பரிணமிக்கிறது ? புல்லாகி புழுவாகி மீனாக மானாகி குரங்காகி..... இது பவுதீக பரிணாமம்...
இந்த பவுதீகத்தால் ஆன சகல தாவர ஜங்கம பிரபஞ்ச பரிணாமம் பெருவெடிப்பு எல்லாம் தன்னுணர்வின் அனுபவம் .அத்தனையும் மண்டைக்குள்(?) சூட்சும நினைவுகளில் நடக்கிறது.
அத்தனையும் வெறும் தகவல். Data .இங்கு ஆன்மா தான் பரிணமிக்கிறது வெளியே இருப்பதாக அறியப்படும் அத்தனையும் ஆன்மாவின் பரிணாமத்தின் பலகோடி படி நிலைகள். ஒரு குழந்தை வளர வளர பல நிலைகளில் எடுக்கப்படும் தனது ஃபோட்டோக்களை வீடியோக்களை பார்த்து வேறொருவருடையதாக நினைப்பது போல. நீங்கள் இயற்கை என்று காணும் அத்தனையும் அணு முதல் அண்டம் வரை புழு, பூச்சி, பறவை, மரம், மட்டை, மனைவி , பிள்ளை, பக்கத்து வீட்டு காரன், காதலி எல்லாமே நம் கான்ஷியசின் பல்வேறு பரிணாம நிலை .
பெரு வெடிப்பின் ஆரம்ப கணத்தின் அணுத்துகளின் கானஷியஸ் இன்று பரிணமித்து மனிதனாக மனித உடலில் அறிகிறோம். இந்த பயணத்தில் நம் அறிவுத்திறன் அதிகரிப்பதே லட்சியமாக இருக்கிறது. அதாவது நாம் எனபதே அறிவு. அந்த அறிவு தன் எல்லையை விரித்துக்கொண்டே போகிறது ஒரு புறம் அதே அறிவு ஒரு கட்டத்தில் தன் பேதத்தை அழித்து எதிர்திசைக்கு ஞானத்தை நோக்கி திரும்புகிறது. இறை நிலை அடையத்தான் இந்த பயணம். ஏற்கனவே நம்மை விட உயர் கானஷியஸ் இந்த பயணப்பாதையில் இருக்கிறது. நாம் நடுவழியில். நமக்கு முன்னும் பின்னும் நம் புலன்களுக்கு தட்டுபட்டு பவுதீகமாயும் புலன்களுக்கு தட்டுப்படாத சூட்சும படைப்புகளும் பயணிக்கின்றன. மனிதர்கள் தங்களுக்கு உயர்வான பல படி நிலைகளில் உள்ள புலப்படா higher entitiesஐ அல்லது lower entities ஐ தவறாக கடவுளாக்கியும் விடுகிறார்கள். பல வழி தவறுகின்றன. பல வழி கெடுகின்றன. பல மாயையில் உழல்கின்றன. சில சரியான வழியில் உயர் நிலைக்கு விழிக்கின்றன.
வெளிப்புறமாக மாயையில் பிரபஞ்சம் மனோ வேகத்தில் விரிவடைந்து வேற்றுமையில் பரிணமிக்கும் அதே வேளை அக முகமாக சூட்சும உணர்வில் பேதத்திலிலிருந்து ஏகத்தை நோக்கி ஒரு பரிணாமம் நடக்கிறது. பவுதீகத்திலிருந்து சூட்சுமத்தை நோக்கி கானஷியஸ் நகரும் போது பொருள் பற்றிய பேத அறிவு ஒடுங்கும். ஆன்மா உடலை கடந்து சூட்சும நிலையில் செயல்படும் தன்மை அடையும். விரும்பியது அடையும் நிலை பல மேஜிகல் ஆற்றல்கள் என கொஞ்சம் கொஞ்சமாக பண்டைய கடவுள் அவதாரங்களை போன்ற தன்மைக்கு மனிதன் நகர்கிறான். ஏற்கனவே இந்நிலை அடைந்தவர்களும் உண்டு. இன்னும் எண்ணிறந்த மாயை திரைகளை கடந்த பின் பூரண ஞான நிலையில் அறிவும் அறியாமையும் ஒரு புள்ளியில் இணையும். நான் எனும் பேதம் தேய்ந்து புள்ளியாகும் . கான்ஷியஸ் இவ்வாறு மாறும் போது அது உணரும் காலமும் அதன் உலகும் உடலும் மாறும்.ஆன்மா விழிப்படைய அதன் உடல் ஒளியாகி சூட்சுமாகி விடும் காலம் மெதுவாகி பின் ஓய்வுக்கு வந்து பிறகு இந்த இந்த சுழல் மீண்டும் தொடங்கும். காலம் ஓய்வுக்கு வரும் கணம் தான் இக்கண விழிப்பு. இது இறைவனின் நிலை. இந்த நிலை சத்திய நிலை .மற்ற பயணம் அனைத்தும் மாயையின் நிலைகள்.
 
 (தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும்

கருத்துகள்