சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து  சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம் உணவின் சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்கப்பட்டு தேவையான இன்சுலினை பெற்று உடலால்ஏற்றுக்கொள்ளப்படும்.தவறான உணவுப்பழக்கத்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.   அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து  (fibre content)  சக்கரையின் அளவு  இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.

சாப்பிட வேண்டியவை
 காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. 

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

 வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

 மேலும் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி,  புடலங்காய், பலாக்காய்,காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்
சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
சாப்பிட வேண்டிய பழங்கள் :ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம்.
அருந்த வேண்டிய பானங்கள் : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா.

சாப்பிடக்கூடாதவை:
 வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதையும்  தவிர்க்கவேண்டும்
சாப்பிடக்கூடாத பழங்கள் : பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா., சீத்தா  போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 
அருந்தக் கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

தொடர்புடைய பதிவு:
நீரிழிவு நோய் -அறிந்துகொள்வோம்

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கோவைக்காய் கொஞ்சம் துவர்ப்பு சுவையுடையது. இதை பொறியல், கூட்டு, சாம்பார் என்றெல்லாம் பலவிதமாக செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இதில் கோவைக்காய் பச்சடி தான் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்ககரை அளவைக் கட்டுப்படுத்தும்.

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் சரியாகும். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். மோருடன் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன எல்லாப் பலன்களையும் பெறலாம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தாகம் அதிகமாகும் போது நீர் மோர் மிகவும் நல்லது. பழங்களில் மாம்பழம், திராட்சை சப்போட்டா அன்னாசி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மலைப்பழம் எப்போதாவது 1 அல்லது 2 சாப்பிடலாம். பருப்பு வகைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். காப்பி, டீ போன்ற பானங்களை சர்க்கரை போடாமல் சாப்பிட பழகி கொள்ள வேண்டும். தர்பூசணி பழம் மிகவும் நல்லது.

காய்கறிகளில் பாகற்காய் கோவைக்காய் வாழைத்தண்டு சிறந்தது. கிழங்கு வகைகளை திரும்பிக்கூப் பார்க்காதீர்கள். அவை வாய்க்குத்தான் ருசி நோயை கட்டுக்குள் வைக்காது. இயற்கை வைத்தியத்தில் வேப்பங்கொழுந்து கறிவேப்பிலை நாவற்பழகொட்டையின் பொடி இவை சர்க்கரை அளவை கட்டுபடுத்தும். அந்த காலத்தில் இன்சூலின் பற்றி தெரிந்திராதக் கிராம மக்களின் மருந்து வேப்பங்கொழுந்து தான். தினசரி காலை ஒரு நெல்லிகாய் அளவு வேப்பங்கொழுந்தை அரைத்து வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தனர். இது நிச்சயம் பலன் தரும் இயற்கை வைத்தியம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.
பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.
* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.
* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.
எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.
உணவு வகைகள்
உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.
* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.
* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
பழங்கள் (100 கிராம்)
* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி – 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு – 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை – 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா – 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்ல ி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற ்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதாம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதாம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று கூறுகிறார்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.

இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.

பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள்.

சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.

பின் குறிப்பு :-
நில வேம்பு ஒரு மூலிகை இலை. நாட்டு மருந்து கடைகளில் அதை பொடி செய்து சூரனமாக விற்ப்பார்கள்.

அந்த நில வேம்பு பொடியை தண்ணீர்ரில் போட்டு நன்கு கொதிக்க வெய்த்து வடிகட்டாமல் குடிக்க வேண்டும்.

சரி ஆனப்பின் விருப்பபட்டால் வாரத்திற்க்கு 1 அல்லது 2 முறை எடுத்து கொள்ளலாம். தினமும் எடுத்து கொண்டால் லோ சுகர் பிரச்சனை வந்து விடும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தரும். அனைத்து விச காய்ச்சலையும் குணப்படுத்தும் என்பதால் வாரம் 2, 3 முறை எடுத்து கொள்வதில் தவறில்லை.
Gandhi ram ramalingam இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்கள் நன்றி
Gandhi ram ramalingam இவ்வாறு கூறியுள்ளார்…
தகவல்கள் மிகவும் பயனுள்ளவை, நன்றி
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ரியாக்டிவ் ஹைப்போகிளைசெமியா
உணவுக்கு பின் சர்க்கரை அளவு மிக குறைந்துவிடுவது தான் ரியாக்டிவ் ஹைப்ப்போகிளைசெமியா
இதற்கு காரணம் உணவில் இருக்கும் உயர் சர்க்கரையே. வருடகணக்கில் ஒவ்வொருவேளையும் 200, 250 கிராம் சர்க்கரை உடலில் சேர்வதை நினைத்துகொள்ளுங்கள். ஒரு பருக்கை உணவு உள்ளே போனதும் உடல் உடனடியாக பர,பர என இன்சுலின் உற்பத்தியை துவக்கிவிடும். துவக்கி தேவைக்கு அதிகமான இன்சுலினை உற்பத்தி செய்துவிடும். உண்டபின் இன்சுலின் சுரப்பு அதிகம் ஆகி தலைசுற்றல், மயக்கம் எல்லாம் வரும்.
லோ கார்ப் டயட்டால் இது குணம் ஆகுமா? ஆகும். ஆனால் உடனடியாக ஆகாது. இத்தனை வருட உணவுபழக்கத்தில் நீங்கள் ஏராளமான கொழுப்பை உண்டாலும், உடல் ஆட்டோபைலட்டில் இன்சுலினை உற்பத்தி செய்யும். உங்கள் உணவில் சர்க்கரை இல்லை என்பதை உடல் உணர சிலகாலம் ஆகலாம்.
அதனால் ரியாக்டிவ் ஹைப்போகிளைசெமியா உள்ளவர்கள் லோ கார்ப் செல்லுமுன் பின்வரும் உத்திகளை பயன்படுத்தலாம்.
கொஞ்சம், கொஞ்சமாக உணவில் கொழுப்பின் சதவிகிதத்தை அதிகபடுத்தி வருவது.
கொழுப்பு அதிகம் உள்ள தேங்காய் மாதிரி உணவை உட்கொள்வது
கொழுப்பு நிரம்பிய உணவை உண்டபின் க்ளுகோஸ் மாத்திரைகளை எச்சரிக்கையுடன் கையில் வைத்திருப்பது. கைப்போகிளைசெமியா தாக்குவது போல் தெரிந்தால் உடனடியாக அதை உட்கொள்வது
சிலருக்கு 2 - 3 மணிநேரத்துக்கு ஒரு முறை உண்ண சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். சிலர் ஐந்து - ஆறுமணிநேரத்துக்கு ஒருமுறை உண்பது பலனளிக்கும். இதை ட்ரயல் அன்ட் எர்ரர் முறை மூலமே கண்டறிய முடியும்.
துவக்கத்தில் கொழுப்பும், சிறிது கார்பும் சேர்த்து கொள்ளலாம். மெதுவாக கொழுப்பின் சதவிகிதத்தை அதிகரித்து வாருங்கள். உதா: தோசை 3 உண்பதற்கு பதில் 2 முட்டை+ 1 தோசை என சேர்த்து நாள்போக்கில் மூன்று முட்டைக்கு மாறலாம். கார்பை முழுக்க துவக்கத்தில் இதுக்கவேண்டாம். புரதமும் அதிக அளவில் வேண்டாம். ஐம்பது அறுபது கிரமுடன் நிறுத்திவிட்டு கொழுப்பையும், நார்சத்தையும் சேர்க்கவும். தேங்காய், நட்ஸ், வெண்ணெய் எல்லாம் இதற்கு சரியான உணவுகள்.
லோ கார்புக்கு மாறுகையில் அடுத்த 1- 2 மணிநேரம் உடன் யாராவது இருக்குமாறு பார்த்துகொள்ளவும். க்ளுகோஸ் மாத்திரை கையில் வைத்திருக்கவும். உடல் லோ கார்ப் டயட்டுக்கு பழகியபின் இன்சுலினின் ஆட்டம் தானே குறைந்துவிடும்
--நன்றி திருநாவுக்கரசு -ஆரோக்கியம்‌ நலவாழ்வு
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்கள்,மிக்க நன்றி...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்கள்,மிக்க நன்றி...
kmv இவ்வாறு கூறியுள்ளார்…
சர்க்கரை நோயாளிகள் கொண்டைக்கடலை சாப்பிடலாமா