நான் யார்? ( பகுதி 4)

 


சென்ற பதிவுகளில் நாம் அறியா தளத்திலிருந்து ( unmanifested) அறிதளத்திற்கு ( manifested) வெளிப்பட்டு நிற்கிறோம் என பார்த்தோம். குவாண்டம் அறிவியல் நோக்கில் நம் பூர்வீக நிலை தோன்றி மறையும் intelligence துடிப்புகளே அதன் வழியான தகவலை கொண்டு எல்லாமாக உணர்கிறது என பார்த்தோம்.
இதுவரை தான் அறிவியில் இதற்கு மேல் உள்ளவை அடிப்படை விதிகளிலிருந்து ஆழ் மனதிலிருந்து பெறப்பட்ட தர்க்கவியல் அநுமானங்கள் . இதை மேலும் விளங்குவோம்.
ஒரு தண்ணீர் கொதிக்கும் போது அதில் ஏற்படும் குமிழிகளை போல அல்லது ஒரு சோப்புத்தண்ணீரில் குமிழிகளை போல இந்த வெளிப்படுதல் ( manifestation) நடக்கிறது. தண்ணீர் அல்லது சோப்பு நீர் நிர்குண பிரம்மமாகவும் அதில் தோன்றும் குமிழிகள் படைப்புகளாகவும் சுமாராக உவமிக்கலாம். அதாவது அந்த குமிழிக்குள் இருக்கும் இடம் self concious எனும் தன்னுணர்வு. அதில் இருக்கும் காற்று மாயை. இந்த மாயை பிரம்மமல்ல. அந்த குமிழியை சூழ்ந்திருக்கும் சோப்பு நீர் படலம் அல்லது நீர் இறைவன் குமிழி மற்ற குமிழியிலிருந்து தன்னை வேறாக கருதுகிறது. இந்த குமிழிக்குள் இருக்கும் காற்று அதாவது பேத உணர்வால் உண்டாகும் மாயையில் அறிவு உருவாக்கியவை தான் அத்தனை படைப்புகளும் தன்னை பற்றிய உணர்வுகளும். இது அந்த குமிழியின் உட்பொருளாய் (content) ஆக illution ல் இருக்கிறது.
எல்லாக்குமிழிகளும் தன் எல்லை அழித்து பேதம் அழிந்து இணையும் போது அங்கு நீர் மட்டுமே இருக்கும்.
இனி இந்த குமிழிகள் கூட அதற்குள்ளே அதற்குள்ளே என பேத உணர்வால் குமிழிகளை படைத்துக்கொண்டும் குமிழிகளை உடைத்துக்கொண்டும் அனுபவத்தில் பயணிக்கின்றன.
இதையே வேறு மாதிரி உவமிக்கலாம்.
ஒரு இந்தியன் தன்னை தமிழன் மதுரை காரன் இன்ன தெரு காரன் இன்ன குலம் இன்ன ஜாதி ஆம்பிள்ளை டா என்றெல்லாம் குமிழுக்குள் குமிழாக உருவாக்கி சிறை படலாம். அதே வேளை தன்னை விட்டு வீட்டை விட்டு குலத்தை ஜாதியே இனத்தை விட்டு உணர்வால் வெளியேறி நான் மனிதன் என உணர்வது குமிழிச்சிறைகளை விட்டு வெளியேறுவது ஆகும். இன்னும் நான் ஒரு உயிர். இல்லையில்லை இந்த பூமி அதுவுமில்லை இந்த சூரியனின் பாகம் இல்லை இந்த காலக்சி என உணரும் போது ஒளி தேகத்தை நெருங்குகிறோம். இல்லை நான் இந்த பிரபஞ்சம் ....இல்லை இவை எதுவுமே இல்லை நான்.... என ஞானத்தை அடைகிறோம். இப்போது குமிழிகள் இல்லை.
இனி இந்த குமிழிக்குள் இருக்கும் நான் எப்படி வந்தது?
நம்மை விட்டு வெளியேறுவது எப்படி? சுயமாய் வெளியேற முடியுமா? ஏன் வெளியேற வேண்டும்? கர்மா என்றால் என்ன ? நிறைய கேள்விகள்... அதை இனி வரும் பதிவுகளில் இறைவன் நாடினால் பல்வேறு கோணத்தில் விளங்க முயல்வோம்... உங்கள் கேள்விகளை தயங்காமல் கீழே இட்டு வையுங்கள்.

(தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும்

கருத்துகள்