பி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி


சென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவில் புகார் அளிப்பதுடன் மாவட்ட அளவிலும்புகார் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வி முதன்மைச்செயலாளர் கே. கணேசன் கூறினார். பி.இ. படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவு கவுன்சலிங் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் சுமார் 1 லட்சம் பி.இ. இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கட்டணம்: அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் கல்விக் கட்டணம் ரூ.7,500. அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.8,500. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் குழு நிர்ணயித்துள்ளது.இதன்படி, தரச் சான்று பெற்ற பாடப் பிரிவுக்கு கல்விக் கட்டணம் ரூ.40ஆயிரம்; தரச் சான்று பெறாத பாடப் பிரிவுக்கு கல்விக் கட்டணம் ரூ.32,500. எச்சரிக்கை: சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் ரத்து: அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும், புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கையின் போது,அதிகக் கட்டணம் கேட்கும் கல்லூரிகள் மீது மாநிலம் முழுவதும் புகார் அளிக்க வசதி இருந்தது.இந்த ஆண்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், குழுவிடம் மட்டும் தான் புகார் அளிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு பதில் அளித்து உயர்கல்வி முதன்மைச் செயலர் கே. கணேசன் கூறியதாவது: அதிகக் கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார் செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என்றார். தமிழகம் முழுவதும் வசதி: இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். பேக்ஸ் எண்கள் அடைப்புக் குறிக்குள். 1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை: 044-22351018 (044 22201514) 2. ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல்-கோவை அரசு பொறியியல் கல்லூரி :0422-2432221/436 (0422-2455230) 3. சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்-சேலம் அரசு பொறியியல் கல்லூரி :0427-2346157/102 (0427-2346458) 4. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை, நாகப்பட்டினம்-காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி: 04565-224535/225349 (04565-224528) 5. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், தேனி-திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி: 0462-2552448/50 (0462-2554012) 6. தர்மபுரி, கிருஷ்ணகிரி-பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி : 04343-266101/067 (04343-265875) 7. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்-தந்தை பெரியார் ஈ.வே.ரா.அரசு பொறியியல் கல்லூரி : 0416-2267498/762 (0416-2267498). ----எல். சரவணன்: நன்றி: தினமணி நாளிதழ்

கருத்துகள்

jothi இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவுகளுக்கு நான் வழக்கமாக வந்து செல்பவன். உங்களின் தெளிவான பதிவுகள் மிக பிடிக்கும். உங்களுக்கு சுவாரஸ்ய விருது கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி.

http://jothi-kannan.blogspot.com/2009/07/blog-post_20.html
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சுவாரஸ்யமான விருது.என் பதிவுகளை சுவாரஸ்யமா படிக்கிறீங்களே என்பது தான் விருது.நன்றி ஜோதி
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்நாட்டில் மொத்தம் 13 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம், கல்லூரிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ரூ.2.3 இலட்சம் வரை ரூ.2.8 இலட்சம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7 இலட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படவேண்டும் என்று நீதியரசர் பாலசுப்பரமணியம் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசுக்குழு நிர்ணயித்ததைவிட அதிகமாக ரூ.6இலட்சம் கட்டணம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 20 ஆண்டுகளுக்கு பிறகும--------மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் கல்விக்கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும். தவறு செய்த மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.----http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1208/03/1120803024_1.htm