மருத்துவம் பயில வருபவர்கள் ஒன்று இந்த சமூகத்தை நோய்களிலிருந்து காக்கவேண்டும் அல்லது அட்லீஸ்ட் தன் குடும்பத்தையாவது என்ற நல்லெண்ணத்துடன் தான் மருத்துவ துறையில் நுழைகிறார்கள். பின் அத்துறை அவர்களை எதை கற்க வேண்டும் எப்படி மருத்துவம் செய்ய வேண்டும் ,எதை நம்பவேண்டும் எதை எதிர்க்க வேண்டும் என கற்பிக்கிறது.அவர்கள் பின்னர் அதை தவிர வேறு வழிகளில் சிந்திப்பதில்லை. நல்லவர்களான நேர்மையான ஆராய்ச்சியாளர்களும் , மருத்துவர்களும், தாதிகளும் அந்த பிரம்மாண்டமான கபடமான கட்டமைப்பில் சிக்கி பணி வாங்கப்படுகிறார்கள்.
எது மருத்துவத்துறையை அதிகாரம் செலுத்தும் சக்தியாக இருக்கிறது? எது அத்துறையின் விதிகளை கட்டுபடுத்துகிறது? எது இயக்குகிறது? ஊரெங்கும் மெடிக்கல் ஸ்டோர்கள் இருக்கிறது. கள்ளுக்கடைக்கு அடுத்து மருந்துகடைகளில் தான் மக்கள் கூட்டம்.. அங்கு ரேசனா குடுக்கிறார்கள்.வியாபாரம் செய்கிறார்கள். வீதிக்கொரு மருத்துவமனை ஊருக்கொரு மல்டி ஸ்பெசாலிடி மருத்துவமனை .எல்லாம் வியாபார நிறுவனங்கள். பணம் பண்ணும் பேராசை தான் அதை இயக்குகிறது. பணக்காரர்களின் பிள்ளைகள் தான் பெரும்பாலும் மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கி சம்பாதிக்க தான் வருகிறார்கள். நோயாளியாய் வருபவர்கள் மருத்துவமனையிடம் ஒரு நேர்மையும் நம்பிக்கையும் எதிர்பார்கிறார்கள் தங்களுக்கு என்ன நோய் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று நோயாளி தன்னை விட மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும்.. ஆனால் சிலவேளை இந்த நிறுவனங்களின் பேராசைக்கு நம்பிக்கைகள் இரையாகி விடுகிறது.
முந்தைய தலைமுறைகளில் எல்லாம் இப்படி வீட்டுக்கு வீடு நோயாளிகள் இல்லை.. தலைவலி, காய்ச்சல், உடல் வலிக்கு எல்லாம் ஒரே மாத்திரை. வயிற்று வலிக்கு ஓமத்திராவகம், காய்ச்சல் அதிகமானல் ஒரு ரோஸ் கலர் மிக்சர் சிரப். காயத்துக்கு கந்தக களிம்பு. இதை தவிர பெரிய நோய்களுடன் யாரும் அதிகம் அலைந்ததில்லை. அபூர்வமாக யாருக்காவது தான் உடல் நலம் கெடும். கெட்டால் ஐந்து,பத்து ரூபாயில் ஆஸ்பத்திரி போய் மருந்து வாங்கி வந்துவிடலாம்.
சட்டென ஒரு குறுகிய காலத்தில் காட்சிகள் மாறிவிட்டது.. மக்களுக்கு புதிது புதிதாய் பெயர்களில் நோய்கள் கற்பிக்கப்பட்டது. ஒரே நோய் புதிது புதிதாய் வெவ்வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைக்கு காதுக்கு மூக்குக்கு என தனித் தனி ஸ்பெசலிஸ்டுகள் தோன்றினார்கள், மருத்துவ மனைகள் சிறப்பு பிரிவுகளை உருவாக்கி விரிந்தது. மக்கள் அனைவரும் நோயாளியாகி போனார்கள்.
எங்கு தவறு … மருத்துவம் வளர நோய்கள் குறைய அல்லவா செய்ய வேண்டும்.மக்கள் நல அறிவு வளர மருத்துவமனைகள் குறைய அல்லவா செய்ய வேண்டும். ஏன் அப்படி இல்லை. ஏதோ ஒன்று மக்களை முன்னை விட அதிகம் நோய்வாய் படுத்துகிறது . அது என்ன?
மக்கள் தவறான உணவை உண்ண பழக்கப்படுத்தப்படிருக்கிறார்கள்.
தவறான முறையில் உண்ண பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
ஒரு நோய்க்கு தரப்படும் மருந்துகள் புதிய பல நோய்களை மக்கள் உடலில் விதைக்கிறது
நோய்களை பற்றி அச்சுறுத்தப் படுகிறார்கள். இன்று உலகமே அச்சத்தில் மிரண்டு போயிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவு சுகர், பிரசர், கொலஸ்ட்ரால் , கான்சர் நோயாளிகள் பெருகி மருத்துவ மனைகளின் வாழ்நாள் கஸ்டமர்களாக இருப்பதன் காரனமென்ன? நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த நோய்களுக்கு ஏன் இன்னமும் தீர்வு கண்டுபிடிக்காமல் கட்டுப்பாட்டிலே வைக்க முயல்கிறது..
--தொடரும்.
கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்