கபடம் (Deception) பகுதி 6

 


         நம் முன்னோர்களது உலகில் உணவு இலவசமாக கிடைத்தது. வீட்டு கொல்லை புறம் கிணற்றில் எட்டி பார்க்கும் தூரத்தில் சுத்தமான தண்ணீர். கார்பன் மோனாக்சைடு வாசம் இல்லாத காற்று. வீட்டை சுற்றி உணவு காய்க்கும் மரங்கள் தாவரங்கள். இன்று எல்லாம் இழந்து தண்ணீர் உட்பட அனைத்து உணவுக்கும் சூப்பர் மார்கட்டுகளை நம்பி இருக்கும் நிலைமை. நமக்கான உணவை பன்னாட்டு நிறுவனங்களிடம் காசு குடுத்து வாங்குகிறோம். உணவில் வணிகம் புகுந்தபின் எவ்வளவு இயற்கையான உணவுகளை நாம் இழந்து விட்டோம்..
இல்லை இல்லை .திட்டமிட்டு அவை அழிக்கப்பட்டன.
               நம் மண் மலடாக்கப்பட்டது. நம் பயிர் விதைகள் அழிக்கப்பட்டது. தொழில் நுட்பங்கள் மூலம் இயற்கை விவசாயம் ஒழிக்கப்பட்டது . மரபணு மாற்றப்பட்ட, கலப்பட உணவு பொருட்கள் சந்தையில். உள்ளூர் விவசாயம் அழிக்கப்பட்டு விவசாயிகளும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள். விவசாயம் முழுக்க பெரும் முதலாளிகளின் பண்னையில் அடைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களில் அரசு ஆர்வம் காட்டாததும் அறிமுகப்படுத்தாததும் விவசாயிகள் நலம் பேணாததும் ,விவசாய நிலங்களை கனிம வளத்துக்காக கார்பரேட்டுகளுக்கு தாரை வார்த்ததுக்கும் முழுக்க ஊழல் அரசியல் தான் காரணம், விவசாய நாடு இன்று உணவுக்காக பிற நாட்டு உணவு நிறுவங்களை கையேந்தும் நிலைக்கு ஆக்ரமிக்கப்பட்டோம், சுய நல அரசியல்வாதிகளின் தொலை நோக்கற்ற பார்வையாலும் .விளம்பரங்களால் மழுங்கடிக்கப்பட்ட மக்கள் மூளையாலும் இந்த துயர நிலை..
             நாம் உண்ணும் காய்கறிகளிலும் அரிசியிலும் வியாபாரம் பூச்சிமருந்தை தெளிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயிரெடுக்கும் ரசாயனங்கள். கலப்படமில்லாத உணவே காண்பதரிது எனும் நிலை. பாலை போன்ற பால் ,முட்டையை போன்ற முட்டை, இறச்சியை போன்ற இறைச்சி, பழச்சாறு போன்ற ரசாயன சாறு.எல்லாம் வியாபார புராடக்ட் ஆகி போனது.
இங்கு விளையும் தரமான பொருட்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு ,வெளிநாட்டு கம்பனிகள் இங்கு தயாரித்து தரும் தரமற்ற உணவை அதிக விலை கொடுத்து உண்ண பழக்கப்படுத்திவிட்டார்கள். கபடமான TV விளம்பரங்களில் வீழ்ந்து விடுகிறார்கள் மக்கள்.
தாய்ப்பாலை ஓரங்கட்டிய பால் மாவுகள்.. பால்மாவுக்குள் சோயா பவுடர்கள். பாக்கட் பால்களில் 30% தான் பால் இருக்கிறது. அடுத்து உங்கள் குழந்தை அரோக்கியமாக வளர சத்து மாவு பானங்கள் என குழந்தை பாசத்தை குறிவைத்து வியாபாரம். பால் முட்டை கோழி ,கோதுமை ,மக்காச்சோளம் ,இவைகள் தான் உணவு வியாபாரத்தின் முக்கிய கண்டென்ட்.. சமையல் எண்ணெய்கள்கள் நம்பகமற்றவை , அது எண்ணெய் போன்றவை. கெடாமலிருக்க ஹைட்ரஜன் ஏற்றப்படுவதால் கேடானவை.
            ஒரளவு சுத்தமாக லோக்கலில் கிடைத்துக்கொண்டிருக்கும் சத்துணவான இறச்சிக்கும் மதம் மற்றும் கிருமி அரசியலை பயன்படுத்தி ஆப்பு வைத்து செயற்கை இறச்சியை சந்தைப்படுத்தவும் திட்டம்.
நீங்கள் உண்னும் உணவில் மிகப்பெரிய ஆபத்தும் மோசடியும் சூழச்சியும் ,வியாபாரமும் அரசியலும் இருக்கிறது. நீங்கள் உணவுக்குக்காவும் தன்னீருக்காவும் காற்றுக்காவும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் .கையேந்த வேண்டும் ,அடிமையாக இருக்க வேண்டும் ,தற்சார்புடன் இருக்கக்கூடாது என்பது தான் அது. தகுதி சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் அல்லாது சாமானியர்கள் உணவு விளைவிப்பது குற்றம் எனும் ரீதியில் சட்டங்கள் வரலாம்,
ஒரு வாழைப்பழத்தை உரித்து தின்பது போல எளிதாக இருந்த உணவு பழக்கம் இன்று , இடித்து வறுத்து நசுக்கி,அவித்து பொரித்து வறுத்து பல ரசயனங்கள் சேர்த்து உருமாற்றி, சுவை மாற்றி, தரம் மாற்றி அதன் சத்து மதிப்பை விட்டு தோற்ற மதிப்பு, சுவை மதிப்புக்கு அடிமையாகி விட்டோம்.
          நம் உடல் தேவைக்கு மிஞ்சிய சக்தி உணவுகளாக உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறோம். அதிகாமான சத்துகள் ஒருபுறம் சிலருக்கு நோயாக உடலில் சேமிக்க , தேவையான உணவின்றி நோய்வாய்படும் மற்றொரு பெரும் கூட்டம்.உங்களை கொஞ்சம் கொஞ்சமாக நோயாளி ஆக்குவதே உணவு நிறுவனங்களின் நோக்கம். ஏனெனில் அவர்கள் தான் நோயாளிகளுக்கான மருந்தையும் தயாரிப்பவர்கள்.
(தொடரும்) 

கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 
 

கருத்துகள்