தவ நோக்கம் பற்றிய விசாரணையின் முதல் பகுதியில் தவத்தால் கடவுளை அடைவதில் உள்ள சிக்கலை பார்த்தோம் இனி நாம் தவம் செய்து நம் சுயத்தை இழக்க முடியுமா? நம் உடலை நாமே சடுதியில் சுயமாக இல்லாமல் செய்துவிட முடியுமென்றால் தான் அது சாத்தியம். தற்கொலை செய்து தன்னை மாய்த்தவரும் தன் உடலை எதுவும் செய்ய முடியாமல் விட்டு செல்கிறார். தவமானாலும் தியானமானாலும் நம் ஈகோ தான் அதற்கான முயரற்சியை முதலில் துவங்குகிறது.பின் தான் என்பது ஈகோவல்ல அதை இயக்கும் இன்னொரு தான் உள்ளே இருக்கிறது என உணர்ந்து அந்த தான் வசம் தன்னுணர்வு கை மாறிய பின் ஈகோவால் உண்டான போலி சுயம் தான் அழிகிறது.. அல்லாமல் உண்மையான சுயத்தை இழப்பது என்பது தன் தலமுடியை பற்றி தானே தூக்க முயல்வது.
நம் போலி சுயம் என்பது நம் செல்களின் கூட்டு உணர்வு.. அந்த உணர்வு அழிந்தால் நம் செல்கள் தனிதனியாகி விடும் தனித்தனியாக அவை உயிர்வாழ முடியாமல் அணுக்கள் மூலக்கூறுகளாக் வேறு உயிர் வடிவத்தில் கரைந்து விடும்.நம் சுயம் என்பது வேறு பரிமாணத்துக்குள் வேறு பிறவிக்குள் சென்றுவிடும்..எல்லோருக்கும் இது இயலபாக நிகழும் என்றாலும் இதில் வலிந்து செய்யும் முயற்சிகள் தற்கொலைக்கு சமம்.
அறிவதற்கும் உணர்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நம் சட்டையை கழற்றி எறிவது போல சுயத்தை இழக்க முடியாது. காரணம் நம் சுயம் தான் அதற்கான முனைப்பையும் செய்யும் நிலையிலிருக்கிறது. ஒரு வெங்காயம் தன்னைத்தானே உரித்து ஒன்றுமில்லாமல் ஆகுமா? உரிக்க யாராவது வெளியே வேண்டும் .இதை தான் நியூட்டன் விதி கூறுகிறது. நிலையாக இருக்கும் அல்லது ஒரு இயக்கத்திலிருக்கும் ஒன்று வெளி விசை பாதிக்காமல் இருக்கும் வரை அந்நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.. தவத்தில் ஒருவர் சுயத்தை இழக்க முடிந்தால் பின் அவர் அதிலிருந்து மீள முடியாது மட்டுமல்ல.. வேறு எந்த நிலைக்கும் நகர்வது சாத்தியமல்ல.
அப்படியானால் தவத்தின் நோக்கம் என்ன?
ஆனால் தவம் செய்பவர் ஒருவித பேரின்ப நிலை (Ectacy) அடைகிறார்கள். இதுவரை அனுபவிக்காத ஒரு விடுதலை உணர்வு. உடலை கடந்து புலன்களின் எல்லைகளை கடந்து உணர்வாய் மாறுகின்ற ஒரு நிலையை அடைகிறார்கள். அறிவும் சிந்தனையும் ஈகோவும் இல்லாத நிலை.
புதிய புலனுணர்வு பெற்று வேறு பரிமாண தொடர்பு பெற்று, பிற entity களின் தொடர்பு பெறுகிறார்கள். பல வாசல்களை திறக்கிறார்கள் .இந்த தொடர்புகள் மூலம் அவர்கள் நல்லவற்றால் அல்லது தீயவற்றால் பயன்டுகிறார்கள் அல்லது பயன்படுத்த படுகிறார்கள். இங்கே சரணடைந்து நம் பரிமாணத்தை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது பிற entity களை நம் பரிமாணத்தில் அனுமதிக்கிறார்கள். அது தவம் செய்பவர் நோக்கத்தையும் அவர்கள் வழி முறைகளையும் நிலைகளையும் பொறுத்தது.
இதில் வெற்றி பெற்றவர் சிலரென்றால் தவறான வழிகாட்டலில் வீணாய் போனவர்கள் நிறைய.
தவம் ஒரு கூரான ஆயுதம்.
இனி தியானம், தவம் அல்லது யோகத்தின் வழிமுறைகள் என்ன?
இந்த பேரின்ப உணர்வு எதனால் ஏற்படுகிறது ? எப்படியெல்லாம் ஏற்படுகிறது ? உடல் இயக்கவியலில் என்ன மாற்றம் உண்டாகிறது? இதன் அறிவியல் என்ன?வேறு entity கள் எவை? எப்படி connection உண்டாகிறது? எப்படி நம்மை பாதுகாப்பது ? தெய்வீக தொடர்பு எப்படி ஏற்படுகிறது?வேறு பரிமாணம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது ? என நிறைய எப்படிக் களை இப்போது உங்களிடம் விட்டு வைக்கிறேன். கருத்துக்கள் சொல்லுங்கள் . நீங்கள் தவத்தை பற்றி வேறு மாதிரி உணர்ந்திருக்கலாம், கற்பிக்கபட்டிருக்கலாம் . அதையும் எழுதுங்கள். நான் உணர்ந்ததை ,உணர்ந்ததன் மூலம் அறிந்தவகளை எழுதுகிறேன் . நீங்கள் இன்னும் உணர்ந்திருக்கலாம் எழுதுங்கள். என் கருத்துக்களை நீங்கள் ஆமோதிக்கலாம்,விமர்சிக்கலாம், புதிய வெளிச்சம் தரலாம். அனைத்தும் வரவேற்கப்படுகிறது.Offencive ஆக எடுக்க வேண்டாம்.
--தேடலை தொடர்வோம்.
தவ நோக்கம் : மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்