கபடம் (Deception) பகுதி 4 கல்வி

 

         படிச்சு ஒரு நல்ல கம்பனியில் வேலையில் சேர வேண்டும். அது ஒரே சேரில் பல வருசம் அடிமையாக குப்பை கொட்டுவதானாலும் சரி. லைஃப் சேஃபா இருக்கணும். இது தான் பலரது வாழ்வு லட்சியம். அடிமைகளின் உலகின் மற்றொரு கபடம் கல்வி முறை..
கல்வி என்பது அனுபவங்களில்லாமல் வெறும் தகவல்களை நினைவில் வைக்கும் அடிமை பென் டிரைவ்களை தான் உருவாக்குகிறது. பள்ளிக்கூடம் என்பது ஒரு தொழிற்சாலைக்குரிய வேலைக்காரார்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகவே இருக்கிறது.. அதன் அதிகார நிலை.. கட்டுப்பாடு ,நியமம் எல்லாம் ஒரு தொழிற்சாலையை நினைவு படுத்துபவை.. ஷூ ,டை ,ஸ்கூல் பஸ் , வேலை நேரம் ,மணியடித்தல் , வார விடுமுறை எல்லாமே ஒரு ஃபாக்டரி செட் அப் தான்.
இந்த கல்வி முறையில் மாணவர்களின் தனித்திறமைக்கு ,அனுபவ கல்விக்கு அதிக இடமில்லை., சிலபஸில் உள்ளதை மனப்படம் செய்ய வேண்டும் . மாணவனை சிறந்த மனிதனாக்கும் எந்த விசயமும் சிலபசில் இல்லை. மாணவனை அதன் சிலபசுக்கு வெளியே கற்கவோ கேள்வி கேட்கவோ அனுமதிக்காது. மேலும் கடந்த 100 வருடமாக இது இப்படிதான் எந்த மாற்றமோ மறுமலர்ச்சியோ இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. அன்றய கடித முறை மாறிவிட்டது ஆனால் கரும்பலகை மாறவில்லை.
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகை ஒவ்வொரு வேகத்தில் ஒவ்வொரு விதத்தில் கற்பவர்கள் .. ஆனால் ஒரே வித கற்பித்தல் எப்படி உதவும். பல நோயாளிக்கு மருத்துவர் ஒரே மருந்தை கொடுத்தால் எப்படி நோய் தீரும். மாணவர்கள் எந்த வடிவிலிருந்தாலும் அவர்களை தட்டி தகடாக மாற்றுவதே கல்வி முறையின் பணியாக செயல்படுகிறது
கல்வி முறை இப்படி குறை பாட்டுடனும். மானவனின் சுய சிந்தனையை,சுய திறமையை மழுங்கடிப்பதாகவும் , திட்டமிட்டே கார்பரேட் அடிமைகளை உருவாக்கவும் கட்டமைக்க பட்டிருக்கிறது.இதில் கற்று பட்டம் வாங்கி வருபவர்கள் ஏற்கனவே அதிகார வர்க்கத்தால் கட்டமைக்கபட்ட கார்பரேட் எந்திரத்தின் ஒரு பாகமாக வேலை செய்ய பயன்படுத்தப்படுவார்கள் .
ஒரு போதும் அவர்களுக்கு தாங்கள் வேலை செய்யும் அந்த எந்திரத்தின் நோக்கமோ அறமோ தெரியாது . வேலை சம்பளம் எனும் வட்டத்துக்குள் முடங்கிவிடுவார்கள். மிக சிறு எண்ணிக்கையிலான எலைட் கள் இப்படிபட்ட பெரும் எந்திரங்களைங்களை கொண்டு கபடமான இவ்வுலகை உருவாக்கியுள்ளனர். ஒரு சாதாரண பிரஜையான உங்கள் வாழ்வை ராட்சத அதிகார எந்திரங்கள் கரும்பைப் போல பிழியும் போது அதன் பற்சக்கரங்களாயிருப்பதும் இவ்வாறு வேலை செய்ய பயிற்றுவிக்கப்பட்ட உங்களில் ஒருவர் தான். அவர் கடமை அது என்பதை தவிர எதுவும் சிந்திக்க அந்த பற்சக்கரத்திற்கு பயிற்றும்விக்கப்படவில்லை.. உழைத்து சம்பாதிப்பதை விட அடிமை பயிற்சி நிலையங்களின் சான்றிதழ்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் .ஆனாலும் அந்த அதிக சம்பளத்தால் அவர்கள் சுதந்திரமாகிவிடக்கூடாது என அவர்களது லைஃப் ஸ்டைலையும் அதற்கேற்ப வடிவமைத்து அவர்களை கடன் சுமையிலேயேயும் அந்த வேலையையை விட்டு வெளியேற முடியாத ஒரு நச்சு சுழலிலும் வைத்திருக்கும். அவர்கள் முற்றிலும் அடிமைகளாகிவிட்டவர்கள். அவர்கள் மொத்த வாழ்வும் எதோ ஒரு கம்பனி முதலாளிக்கு அற்பணிக்க பட்டு விடும். அதை தவிர அவர்களுக்கு எந்த வாழ்வு நோக்கமும் இல்லை.
கல்வி என்பது ஒரு முடிவற்ற கிளைகளுடைய வியாபாரம். .அந்த காலத்தில் ஆசிரியர்கள் மட்டுமே அறிவு போதிக்கும் தகுதியிலிருந்தார்கள். அவர்களை வைத்து உருவானது தான் கல்வி நிலையங்கள். ஆனால் இன்று அடிப்படை எழுத்து வாசிப்பு கல்விக்கு பிறகு ஏராள அறிவு இணையத்தில் இருக்கிறது.. ஆனால் கல்வி நிலையங்களோ ஆசிரியர்களோ இந்த நவீன இணைய உலகில் மிகவும் பின் தங்கி உள்ளனர். மாணவர்களுக்கு இயல்பாக உள்ள இணைய கல்வி ஆர்வத்தையும் மட்டுபடுத்தி விடுகிறது. போட்டி தேர்வு,மதிப்பென் ,கிரேடு போன்ற சொற்கள் கல்வித்துறையில் மானவர்களை அதிகமான மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள சிக்கலுக்கும் தள்ளுகிறது. குழந்தை பருவம் மற்றும் இளம் பருவத்தை முழுவதும் உலக அனுபவத்திலிருந்து தவிர்க்க வைத்து ஒரு நாற்காலிக்கும் புத்தகத்துக்கும் இடையே கட்டி போட்டு விடுகிறார்கள். தகுதி சான்றிதழ் என்ற ஒற்றை சொல்லை வைத்து பெரும் பணத்தை அறுவடை செய்யும் மற்றொரு வியாபார நிறுவனம் தான் இவைகள்..ஆசிரியர்களும் சம்பளம் வேலை என்ற அதே கான்செப்டில் தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களும் ஒரு ராட்சத எந்திரத்தின் பல் சக்கரம் தான்.
(தொடரும்) 

கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 
 

கருத்துகள்