கபடம் (Deception) - மதங்கள் -பகுதி 2

 

நாம் பிறந்த உடன் நாம் இயற்கை அறிவுடன் தெய்வீக தன்மையில் தான் பிறக்கிறோம். ஒரு  பூ மலர்வது போல. நமகென்று ஒரு உலகம் எல்லாம் அப்போது பிறந்திருக்க வில்லை. நம் பெற்றோர்களுக்கு எது உலகம் என்று கற்பிக்கப் பட்டிருகிறதோ அதை நமக்கு கற்று தருகிறார்கள். அவர்கள் நம்பிக்கைகளை நமக்குள் திணிக்கிறார்கள். நாம் சிந்திக்கும் சக்தியற்ற நிலையில் அதை ஏற்றுக்கொண்டு .பின் நம் சிந்தனை அந்த நம்பிக்கைகளின் படியே வளர்கிறது. நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட எதையும் அறிந்து கொள்வது பாவம் என்ற கடிவாளம் அங்கே போடப்படுகிது .முதன் முதலாக நம் உலகம் ஏதோ ஒரு வேற்றுமையின் விதையிலிருந்து உருவாக தொடங்குகிறது.


ஒவ்வொருவரையும் அவரவர் பெற்றோரின் மத நம்பிக்கைகள் நம்மை வெவ்வேறாக வார்த்தெடுக்க தொடங்கிவிடுகிறது. நம் உலகம் வெவ்வேறு புரிதல்களுடன் வளர்கிறது. மாற்று உலகை ஒரு போதும் பரிசீலிக்க முயலாமல் மன தடைகளை விதித்து கொண்டு.
அப்படியானால் இந்த மதங்கள் தவறானவையா? ஆரம்பத்தில் அதற்கு மதம் என்று பெயரில்லை . நற் போதனைகள் ,நேர்வழிக்கான உபதேசங்கள் இப்படித்தான் எல்லா மதங்களும் ஒரே கருத்தையே போதித்தன. அது தெய்வீக சக்தியின்  உபதேசம் தான் .ஆனால்  தீய சக்தி மதங்கள் என்ற நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் உண்மையான போதனைகளை திரித்து விட்டன.  எல்லா மதங்களும் நன்மை தீமை என இரு பேதங்களை  உருவாக்கி தீமையை எதிர்ப்பது நன்மை என்ற கருத்தை சொன்ன போது தீய சக்தி  மத கார்பரேட் வடிவில் ,  பிற மதங்கள் தான்  அந்த தீமை அதை எதிர்க்க வேண்டும் என்று திரித்து போதித்தது. மக்களை பல மதங்களாகப் பிரித்து.. மதங்களை உணர வேண்டும் என்பதற்ககு பதில் தங்கள் மதங்களை காப்பாற்றவேண்டும் ,தங்கள் மதத்தை திணிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது.  அவர்களுக்கிடையே ஒரு நிரந்தர சமாதானமின்மையும் அச்சத்தையும் விதைத்து ஒருவரை ஒருவர் சந்தேகமாய் பார்க்க வைத்தது.மீடியாக்கள் ,உணர்சியூட்டும் பேச்சுகள் மூலம்  பிரிவினைகள் அக்கிரமங்கள் அரங்கேற்றி அவர்கள் பிரச்சனைகள் தீர்க்க அதிகார மையங்களின் தேவையை உருவாக்கி அவர்களுக்கிடையே நீதி மையங்கள் எனும் கார்பரேட் அமைப்பாக கட்டு படுத்த துவங்கியது. நாம் ஒரே மனித இனம் என்பது மனிதர்களுக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு அதிகார பீடம் இருந்தால் அது தீய சக்தி. ஒரு முறை நாம் சார்ந்திருக்கும் மதத்தின் ஆணிவேரில் என்னதான் இருக்கிறது ,மற்ற மதங்கள் உண்மையாக என்ன தான் சொல்கிறது என ஆராய்ந்தால் இந்த சங்கிலி உடைந்து விடும் .. ஆனால் நாம் தயாரில்லை.இன்னும் நம் மேல் பூட்டப்பட்ட சங்கிலிகள் ஏராளம். ஒவ்வொன்றாய் பார்ப்போம்
தொடரும்….


கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

 

கருத்துகள்