கபடம் (Deception) பகுதி 1

 

மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.

1) உண்மையை உணர்ந்தவர்கள்

2) உண்மையை உணராதவர்கள்

3) அதை பற்றி கவலைப்படாதவர்கள்.

அந்த உண்மை அடுக்கடுக்காக பல மாயைகளால் சூழப்பட்டிருகிறது.. மனிதன் என்று தன்னை நம்பிக்கொண்டிருப்பவன் அப்படி ஒரு மாயையின் படைப்பு. சரி இப்போது நாம் மாயையைப் பற்றி பேசவில்லை.. மனித இனத்தை சூழ்ந்து ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு கபட சக்தியை நாம் அறிந்திருக்க வேண்டும். பறவைகள் ,விலங்குகளுக்கு உள்ள சுதந்திரம் இன்று சராசரி மனிதனுக்கு இல்லை.. மனிதன் மனதால் உணருகின்ற காயங்கள் வலிகள் அவற்றுக்கு இல்லை. எது மனிதனை சிறை படுத்தியது.? பறவைகள் விலங்குகளை போலல்லாது மனிதன் ஏதோ ஒரு அதிகார சக்திக்குள் மாட்டிக்கொண்டுள்ளான். அவன் அடிமையாய் இருப்பதை விரும்பும் மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான், அது நிச்சயமாக கடவுள் சக்தியல்ல அதற்கு எதிரான ஒரு கபட சக்தி மனிதர்களின் உலகை கட்டமைத்து அதில் மனிதர்களை மட்டும் சிறைப்படுத்தியுள்ளது.. அது ஒரு தீய சக்தி .. சாத்தானிய சக்தி.. வணிகமாக ,அரசியலாக, கல்வியாக, மருத்துவமாக , மீடியாக்களாக , தொழில் நுட்பங்களாக ,மத நிறுவனங்களாக மக்களை மூளை சலவை செய்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.


மக்களை பல தளங்களில் பிரித்து அவர்களுக்கிடையே வேற்றுமை உணர்வை விதைத்து ,அவர்களிக்கிடையே வெறுப்பை ,அச்சத்தை விதைத்து அவர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்குவது. பின் அவர்களை பாது காப்பவன் போல வேசமிட்டு அதிகார கபட சக்தி அவர்களுக்கிடையே அத்தாரிட்டியாக உள்ளே நுளைகிறது. பின் இரு பக்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அடிமைப் படுத்திவிடுகிறது. அதிகார சக்தி உருவாக்கிய உலகில் கட்டுண்டு வாழ அந்த மனிதர்கள் சம்மதித்து தங்கள் சுதந்திரத்தை இழந்து துன்ப வாழ்க்கை வாழ்ந்து மடிகிறார்கள்.

ஏன் இந்த கபட சக்தி இதை செய்கிறது? மற்ற விலங்குகளிடமிருந்து மனிதன் மட்டுமே சிந்தனையால் பரிணமித்து வந்திருக்கிறான். இதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அது மனிதன் தன் சிந்தனையை பயன்படுத்தி அடுத்த தெய்வீக நிலைக்கு உயர வேண்டும் என்பதே..அதை தடுப்பதே இந்த கபட சக்தியின் நோக்கம். இயலபாக மனித இனம் விழித்துவிடக்கூடாது என்பதில் அவை கவனமாயிருக்கிறது. விழித்து விட்டால் அவற்றால் மனிதர்களை வசப்படுத்த முடியாது.

நாம் அந்த கபட சக்தியின் பிடியில் எவ்வளவு தூரம் சிக்கியிருக்கிறோம் என ஒவ்வொன்றாக பார்ப்போம்.
(தொடரும்) 

கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்