ஒன்றா பலவா?

 

நாம் உலகில் காணும் பல விசயங்கள் பொருட்கள் தோற்றத்தில் ஒன்று போல இருக்கிறது. அல்லது சிறு சிறு வித்தியாசங்களுடன் இருக்கிறது. உதாரணம் அணுக்கள் ,மூலக்கூறுகள், செல்கள், பாக்டீரியாக்கள் ,வைரசுகள் ,மனிதர்கள், தலை முடி,பறவைகள் ,விலங்குகள், தாவரங்கள், இலைகள் , நட்சத்திரங்கள் , கிரகங்கள், காலக்சிகள், என ஒவ்வொரு பொருட்களும் அதற்கென்றே உள்ள வடிவ குணாதியஙகளுடன் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறது.. ஏன் இத்தனை எண்ணிக்கை. உண்மையில் இத்தனை எண்ணிக்கையில் அவை அப்படி பிரிந்து கிடக்கிறதா? அல்லது ஒரே விசயம் தான் அப்படி பல்வேறாக பிரிந்து தோன்றுகிறதா? ஏன் அப்படி பிரிந்து தோன்றுகிறது..

அடிப்படையில் நம் Perception ல் ஏதோ தவறு இருக்கிறது. ஆயிரம் ஜன்னல்கள் உடைய ஒரு அறையின் மையத்தில் வைக்கப்பட்ட ஒரு ஆப்பிள் பழத்தை ஆயிரம் ஜன்னல் வழி பார்த்து அதை ஆயிரம் ஆப்பிள்களாக ,ஆப்பிளின் பல்வேறு தோற்றங்களக பார்க்கிறோமோ அது போல ஏதோ ஒன்றை பலகோடி பார்வையில் பார்க்கிறோம்.

எல்லா அணுக்களும் ஒன்றின் நிழலே ,எல்லா செல்லும் மற்றொரு பமாண (Dimension)பார்வையில் ஒன்றே. எல்லா மனிதர்களும் ஆன்ம தளத்தில் இணைந்து இருக்கிறோம். எல்லா இலைகளும் ஒரு கிளையின் projection தான் . parellal world கோட்பாடு கூட இது போன்ற விளைவே. எல்லையற்ற பிரதிபலிப்பே இந்த பிரபஞ்ச பிரம்மாண்டத்துக்கு காரணம். Quantum entanglement பற்றி கூர்ந்து நோக்கினாலும் இதையே உறுதிப்படுத்துகிறது.. நம் புலன்களாலும் அதன் தகவலை கொண்டு இந்த உலகை புரிந்து கொள்வதிலும் தொடர்ந்து ஏமாறுகிறோம். உண்மை நாம் உணர்வதற்கு அப்பாற்பட்டது.. நீங்களும் நானும் வேறில்லை,, ஒரு வேளை எண்ணவியலா அளவில் பெருகிக்கிடக்கும் இந்த கொரோனா வைரஸ், அப்படி தனித்தனியான ஒரு கிருமியல்லாது ஒரு மாபெரும் entityயின் மீச்சிறு பிரதிபலிப்புகளாக இருந்தால் ? அவை வேறு பரிணமத்தில் ஒரே ஆன்மாவுடன் இருந்தால் ? அதற்கு ஒரு நோக்கம் இருந்தால்? அதை நாம் அறியாமலிருந்தால்?

கருத்துகள்