பொருளிலாப் பொருள்

நாம் பொருட்கள் என்று கருவது எதை.?    
  உதாரணமாக ஒரு மிட்டாயை பொருளாக பார்க்கிறோம்.இது உண்மையில் என்ன? இது ஒரு இடத்தில் இருப்பதை உணர்கிறோம்,இதற்கு ஒரு வடிவம் , நிறம் ,சுவை, திடத்தன்மை எல்லாம் உணருகிறோம். இவையெல்லாம் அந்த மிட்டாயின் பண்புகள் சரிதானே? இந்த பண்புகளுக்கு மிட்டாய் என்று பெயர் வைத்துள்ளோம். எனவே மிட்டாய் என்பது பெயரும் பண்புகளுமே.
        இந்த பெயர் என்பது மிட்டாயை முதன் முதலாக சீனியை உருக்கி வண்ணம் சேர்த்து சதுர வில்லையாக்கி அல்லது உருட்டி தந்தவர் இட்டபெயர். அதற்கு முன் அது சீனி ,நிறப்பொடி என்ற பொருளாகத்தான் இருந்தது. மிட்டாய் என்ற பொருளை அவர் புதிதாக உருவாக்கி விடவில்லை. அவர் சீனியையும் நிறப்பொடியையும்  கலந்து நம்மிடம் மிட்டாய் என்ற பெயரில் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு நாம் இந்த காம்பினேசனில் காண்பதை மிட்டாய் என்று உணர்கிறோம்.
       மிட்டாய் என்ற பெயரும் எதை மிட்டாய் என்று அழைக்க வேண்டும் என்ற அதன் பண்புகளை பற்றிய அறிவும்  நம் நினைவில் இருந்தால் தான் மிட்டாய் என்ற பொருளை நாம் அடையாளம் காண மூடியும்,
         இனி இதன் பண்புகளான நிறம் ,மணம் ,சுவை ,திடம் போன்ற பண்புகளை புலன்கள் வழி பெறும் மின்சார தூண்டுல்களாகவே மூளையை அடைகிறது. மிட்டாயின் மூலக்கூறுகளின் மின் காந்த விசை நம் கையின் நரம்புகளின் மூலக்கூறுகளுடைய மின் காந்த விசையுடன் உண்டாக்கும் எதிர்ப்பை நரம்புகள் வழி மூளை உணர்ந்து மிட்டாயின் திடத்தன்மையை பற்றிய தகவலை மூளையில் ஒரு நியுரான் இணைப்பில் தகவலாக போட்டு வைக்கிறது.

     கண்கள் அதே போல மிட்டாயில் பட்டு எதிரொளிக்கும் ஒளியின் மிச்சம் விழியின் நரம்புகளில் உண்டாக்கும் மின் அலைகளை மூளை பதிவு செய்து ஒரு தகவலை உருவாக்குகிறது.
     சுவை அது போல மிட்டாயின் மூலக்கூறுகள் நாவின் சுவை மொட்டின் ரசாயனங்களுடன் வினை புரிந்து கிடைக்கும் மின் அலைகள் மூளையில் சுவை பற்றி தகவலை பதிவு செய்கிறது.

         இவ்வளவு பண்புகளாக மூளையில் தகவல் பதித்தாலும் எல்லாம் வெறும் மின் சமிக்ஞைகள் தான்.இத்தனைக்கும் காரணமான மிட்டாய் நாம் அறியும் மிட்டாயாகத்தான் அங்கே இருக்கிறதா? என்றால் இல்லை. சர்க்கரை மூலக்கூறுகளாக இருக்கிறது.
மூலக்கூறுகள் எனும் மற்றொரு பொருளாகவா இருக்கிறது?என்றால் அதுவும் இல்லை அதுவும் ஒரு கருத்து தான். அணுக்களாக இருக்கிறது.
.     அணுக்கள் என்ற பொருளாகவா இருக்கிறது? என்றால் அதுவும் இல்லை ஒவ்வொரு அணுவின் 99.99% காலியிடம் தான் இருக்கிறது. சரி அந்த 0.99% ஆவது உள்ள பொருள் தான் மிட்டாயா ? என்றால் இல்லை
   அந்த அணு உட்பொருளையும் குவாண்டம் அறிவியல் அது பொருளாக இல்லை அலையாக இருக்கிறது என்று கூறுகிறது.
      நாம் கவனிக்கும் போது பொருளாகவும் கவனிக்காத போது அலைகயாகவும் இருக்கிறது. அதாவது மிட்டாய் நாம் கவனிக்கும் போது அதன் எல்லா குணத்துடன் ஒரு இடத்தில் இருக்கிறது நாம் கவனிக்காத போது அலையாக இடமற்ற வெளியில் வெறும் அதிர்வாக துடித்துக் கொண்டிருக்கிறது,
    மிட்டாய்க்குத் தானா இந்நிலை. இல்லை அதைகாணும் நாமும் நம் உடலும் புலன்களும் ,மூளையும் எல்லாம் பொருட்கள் தானே.அப்படியானால் எல்லாமே நீங்களும் நானும் உலகமும் எல்லா பொருட்களும் இடமற்ற வெளியில் வெறும் அதிர்வுகளாகத்தான் இருக்கிறோம்
        நாம். அப்படியென்றால் நம் மூளையில் பதிந்த எண்ணங்களும் அதிர்வுகள் தானே. இது தான் இடமெற்ற எண்ண வெளி. இங்கு எல்லா பொருட்களாக அறிபவையும் அதிர்வுகளாக இருக்கிறது. இதை நம் மனம் உணரும் விதம் தான் பொருட்களாக இடத்தில் அதனதன் குணங்களுடன் அறிவது.

   ஒரு குறிப்பிட்ட அலைவரிசையின் அதிர்வாக நம் உடலை உணர்கிறோம். மூளையை உணர்கிறோம்.மூளையில் மிட்டாய் என்ற உணர்வை உண்டாக்க காரணமான அதிர்வின் தூண்டுதல்கள் உண்டாக்கும் நினைவு பதிவை, முந்தய நினைவுகளை கம்பேர் செய்து மூளை மிட்டாய் என்ற பொருள் அதன் நிறம் , வடிவத்துடன் வெளியே இருப்பதாக ஒரு உணர்வை உண்டாக்குகிறது. அதை நாம் நம்புகிறோம் உண்மையில் எல்லாமே இடம் பொருள் அற்ற வெளியில் அதிர்வுகளாக இருக்கிறது.
          நாம் ஒரு புதிய பொருளை கண்டுபிடித்தாலும் ,ஒரு கல்லை நகர்த்திப் போட்டாலும் ஒரு கவிதையை மனதில் எண்ணினாலும் அது ஒரு குறிப்பிட்ட அதிர்வாக இந்த வெளியில் தான் இருக்கிறது. நான் ரகசியமாய் எண்ணுவது நீங்கள் ரகசியமாய் செய்வது ரகசியமான இந்த வெளியில் அதிர்வுகளாக இருக்கிறது நம் மூளைக்குள் மட்டும் பொத்தி வைத்த நினைவுகள் என்பது வெறும் நம்பிக்கைதான். அனைத்தும் ஒரு வெளியில் அதிர்வுகளாய் இருக்கிறது, கொல்பவனும் செத்தவனும் சாட்சியானவும் ஒரே வெளியின் அதிர்வுகள் தான். இடத்தில் காலத்தில் உண்டாக்கும் வேறுபாடு எல்லாம் வெறும் தோற்றங்கள்.நேற்று நாளை இல்லை இவ்வெளியில் இக்கணத்தின் அதிர்வுதான்.நேற்று பற்றிய நினைவும நாளை பற்றிய கனவும் அதிர்வுகளாக இக்கணத்தின் துடிப்புதான்.,நம் தன்னுணர்வும் இந்த துடிப்பின் கணத்திலே இருக்கிறது துடிப்பின் கணத்தையே அனுபவிக்கிறது.மற்றெல்லாம் நினைவென்னும் துடிப்பில் இருக்கிறது.இதை தான் அறிவியல் ஸ்ட்ரிங் தியரியாகக் காண்கிறது. இது தான் மாயைத்தத்துவமும்.
           இதை கணினியியலில் விளக்க வேண்டுமானால் இன்றைய கிளவுட் சிஸ்டம் என்ற கருத்துருவுக்கு ஒப்புமை படுத்தலாம். நம் டெஸ்க் டாப்பில் உள்ள எல்லா ஃபைல்களும் நாம் நம் கணினியில் உள்ளதாக கருதினாலும் அவையெல்லாம் அங்கு இல்லை cloud ல் இணையத்தில் பொதுவெளியில் இருக்கிறது.நான் ஒரு டெக்ஸ்ட் ஃபைலை எழுதி என் டெஸ்க் டாப்பில் போட்டாலும் வேறு கணினியும் அதை எடுத்துக்கொள்ளலாம். இப்படித்தான் நான் உதைக்கும் பந்தை தடுத்து திருப்பி நீங்களும் எனை நோக்கி உதைக்க மூடிகிறது. ஆனால் நம் இருவர் மூளையும் தனித்தனியாக அனுபவிக்கும் உலகத்தின் நிகழ்வாக இருக்கின்ற போதும்.

கருத்துகள்