கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

             கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
இதோ பட்டியல்

         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

        சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

        ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

        மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

       மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml  acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
 
      காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

      கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

       கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

      சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

      நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,  வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

       வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

       ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்

       பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

       பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.         பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம்        பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

       தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்

       சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

      குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

      ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

      நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

      தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்

     "கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

       இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

      சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

       தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்

        கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்
.
      ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

    முட்டை யில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டையாக விற்கிறார்கள்.

   மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம்
      விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.


Top 10 “Vegetarian” Foods Which Aren’t Actually Vegetarian

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Ghee is generally mixed with mashed potato or sweet potato to make it weighty and creamyOften old ghee (rancid stuff) is added. To detect this, take one teaspoon of melted sample and 5 ml. of HCL in a stoppered glass tube. Shake vigorously for 30 seconds. Add 5 ml. of 0.1 per cent of ether solution of phloroglucinol. Restopper and shake for 30 seconds and allow to stand for 10 minutes. A pink or red colour in the lower acid layer indicates rancidity.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Besan atta or pulses are adulterated with Kesari dal (Lathyrus sativus). To find out the adulterant, add 50 ml. of diluted HCL to a small quantity of dal and keep on simmering water for about 15 minutes. The pink colour, if developed, indicates the presence of Kesari dal.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Atta is generally contaminated with excessive sand and dirt. Shake a little quantity of sample with about 10 ml of carbon tetrachloride and allow to stand. Grit and sandy matter will collect at the bottom.
Often chalk powder is used in atta. To find out, shake sample with diluted HCL. Effervescence indicates chalk
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Common spices like turmeric, chilly and curry powder are also adulterated by colours.
Extract the sample with petroleum ether and add 13N H2SO4 to the extract. Appearance of red colour (which persists even upon adding little distilled water) indicates the presence of added colours. However, if the colour disappears upon adding distilled water the sample is not adulterated
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Lead chromate is used to give turmeric its natural color. Ash the sample. Dissolve it in 1:7 sulphuric acid (H2SO4) and filter. Add 1 or 2 drops of 0.1 per cent dipenylcarbazide. A pink colour indicates presence of lead chromate.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும். இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம். எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற - மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள்..
johnson baby oil, amla hair oil, clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது..
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது,இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.
. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)
அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நாட்டு சர்க்கரை தயாரிப்பில் சர்க்கரையை வெண்மையாக்க சூப்பர் பாஸ்பேட் சப்பலாய்ட்,ஹைட்றோஸ்,சோடியம் ஹைப்போ ஸல்பேட்,சோடா மாவு போன்றவர்றை கலப்படம் செய்கிறார்கள்.
seeyan இவ்வாறு கூறியுள்ளார்…
how and where did u get theese information mr.sakthi???
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.

போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள்அடக்கம்.

போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.

மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.

பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.
பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

நிஜ முட்டையும் போலி முட்டையும்...!

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை.

நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.

ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும் 12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.
டாபர் (Dabur),
பைதியான்ந் (Baidyanth),
பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),
காதி(Khadi) மற்றும்
ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான்.

‪#‎அதிர்ச்சி_முடிவுகள்‬
இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் போலி அரிசி பற்றிய காணொளி

https://www.youtube.com/watch?v=Uw65n3ajZu4
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சீனா போலி முட்டை பற்றிய காணொளி
https://www.youtube.com/watch?v=R54EvuNXEbs
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
https://www.youtube.com/watch?v=T55tz4qwFMo
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
போலி இறைச்சி பற்றிய காணொளி
https://www.youtube.com/watch?v=ZhgOEsAd1xY
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல எண்ணெய் எது ?
https://www.youtube.com/watch?v=Ev7jrLwgX7s
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
How to find out- Organic Mangoes vs chemical treated Mangoes

https://www.youtube.com/watch?v=6Fzspdomxr8
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
உத்திரபிரதேச மாநில அரசின் உணவு பாதுகாப்புத்துறை உதவி ஆணையர், மாநிலத்தில் பல்வேறு பகுதிளில் விற்பனையான மாகி நூடுல்ஸ் பாக்கெட்கள் சிலவற்றை வாங்கி, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த ஆய்வில், மோனோ சோடியம் குளுடாமேட் மற்றும் ஈயம் ஆகியவை மாகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது தெரிய வந்தது.

இதனால், பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, மாகி நூடுல்ஸ்சை தடைசெய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது உபி அரசு
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
64 per cent of loose edible oils sold in Mumbai are adulterated, according to a study conducted last year by the Consumer Guidance Society of India.

The study tested 291 samples of sesame oil, coconut oil, groundnut oil, mustard oil, sunflower oil, cottonseed oil and soybean oil. This apart, arsenic above “critical limits” was found in cereals, pulses, vegetables, roots and tubers. Cadmium above similar criticality was found in cereals, fruits and curd, in a 2013 MS University of Baroda study. Both heavy metals are toxic to human beings.

Looking at other items, 28 per cent of eggs sampled in Uttar Pradesh’s Bareilly, Dehradun and Izatnagar towns were contaminated with E. coli (effects are said to include diarrhoea, urinary and respiratory infections and pneumonia) and 5 per cent with multi-drug resistant salmonella bacteria (Effects: diarrhoea, fever, cramps), according to this 2013 study by the Indian Veterinary Research Institute.

More than half of all duck eggs — a local staple in Kerala — sampled in the prosperous town of Kottayam were contaminated with salmonella, according to this 2011 study. Nearly 69 per cent of 1,791 milk samples in a nationwide study did not conform to Indian standards (though they weren’t necessarily unsafe). Milk, as IndiaSpend reported earlier, is one of the most-commonly adulterated food items in India, followed by oil and eggs.
Lead and other carcinogenic heavy metals have also been commonly found in everything from spinach in Delhi and Nagpur to brinjal, tomato and beans in West Bengal. Indeed, there are few vegetables that do not display lead contamination, primarily deposited from vehicular exhaust, as this 2013 study of carrot, radish, beet, cabbage and other vegetables in West Bengal revealed.

But one is also unclear about how MSG crept into Maggi. Besides lead, high levels of monosodium glutamate (MSG), a taste enhancer, was also found in Maggi. This is a product widely used in what is called “Indian-Chinese” food.

MSG should not be added to “pastas and noodles (only dried products)”, according to Food Safety and Standards Rules, 2011. Similarly, glutamate is one of the most common, naturally, occurring non-essential amino acid, which is found in tomatoes, Parmesan cheese, potatoes, mushrooms, and other vegetables and fruits.

MSG is “generally recognised as safe” by U.S Food and Drug Administration, though it is considered harmful in India. Major complaints arising from MSG use include burning sensations of the mouth, head and neck, headaches, weakness of the arms or legs, upset stomach and hives or other allergic-type reactions with the skin.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…

காய், கனிகள்

உணவுப் பாதுகாப்புத் துறை, பழங்களைப் பழுக்கவைக்க, ‘எத்திலின்’ பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்தினாலும், பெரும்பாலான வணிகர்கள் அதைப் பயன்படுத்தாமல் கார்பைடு கல்லைப் பயன்படுத்துகின்றனர். தர்பூசணிப் பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, பீட்டா எரித்ரோசின் (Beta erythrocin) என்ற ரசாயனம் ஊசி மூலமாகச் சேர்க்கப்படுகிறது. மாம்பழம், தக்காளி, பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற பழுங்களை பழுக்கவைக்க, கார்பைட் (Carbide) பயன் படுத்துகின்றனர்.

விளைவுகள்: எலிகளை வைத்து எரித்ரோசின் பரிசோதிக்கப்பட்டதில், தைராய்டு கட்டி உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரித்ரோசின் கலக்கப்பட்ட பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் வரும். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும். கார்பைட்டினால் மறதி, மூளையில் ரத்த ஒட்டம் குறைதல், தலைவலி, மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனிக்க: ஒரே மாதிரி பழுத்துள்ள, பளபளப்பான பழங்களில், இயற்கையான வாசம் இருக்காது. சீசன் பழங்களை, சீசன் இல்லாதபோது வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை உப்பு நீரில் ஊறவைத்து நன்றாகக் கழுவி, தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.

அசைவம், தந்தூரி உணவுகள்

பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் நிறமும் வாசமும் தந்தூரியின் தந்திரம். முதல் சுவையிலே நாவை அடிமைப்படுத்த, சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. சிவப்பு நிறத்தில் தெரிய ‘ரெட் டை’ பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. மேலும், உணவகங்களில் மீதமாகிப்போன இறைச்சியை, வினிகரில் கழுவி, புதிது போல விற்கின்றனர்.

விளைவுகள்: சீக்கிரத்திலேயே பூப்பெய்துதல், நெஞ்சு எரிச்சல், அல்சர், தைராய்டு கட்டிகள், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தீயால் சுடப்படும் உணவுகளால், புற்றுநோய் வரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. ஸ்மோக்கி உணவுகளைத் தவிர்ப்பது ஒன்றே இதற்கு வழி.

கவனிக்க: சாப்பிட்ட தந்தூரியின் சிவப்பு நிறம் கையில் ஒட்டியிருக்கும், சோப் போட்டால் மட்டுமே போகும். கடையில் விற்கப்படும் இறைச்சி, சிவப்பாகவோ வெளுத்துப்போயோ இருக்கக்கூடாது. இறைச்சி, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

பால் பொருட்கள்

பால் அடர்த்திக்கு அமோனியம் சல்பேட், பால் நுரைத்து வருவதற்கு சோப், நீண்ட நாள் கெடாமல் இருக்க பார்மலின், யூரியா போன்றவை சேர்க்கப்படுகின்றன என, சமீபத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது. கடைகளில் விற்கப்படும் ‘சின்தட்டிக்’ மில்க்கில் வழவழப்பு, பளபளப்புக்கு வெள்ளை நிற வாட்டர் பெயின்ட், எண்ணெய், அல்கலி (Alkali) மற்றும் டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்படுகின்றன.

செம்மறி ஆடு மற்றும் பன்றியிடமிருந்து பெறப்படும் ரென்னட் (Rennet) என்ற பொருளிலிருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. வனஸ்பதி மற்றும் நெய்யில் விலங்குக் கொழுப்பு, வெண்ணெயில், மாட்டுக் கொழுப்பு, மைதாவில் மணிலா (வேர்க்கடலை) மாவு போன்றவை கலக்கப்படுகின்றன.

விளைவுகள்: வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, கெட்ட கொழுப்பு சேருதல், முக வீக்கம், இதயப் பிரச்னை, வயிற்றுக் கோளாறு, சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா போன்றவை வரலாம்.

கவனிக்க: வீட்டிலே தேங்காய், சோயா, பாதாம், எள்ளு, வேர்க்கடலை போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் பாலை அருந்தலாம். இந்த பாலிலும் தயிர், மோர் தயாரிக்கலாம். பசும்பாலைவிட எள்ளுப் பாலில் 10 மடங்கு அதிக கால்சியம் கிடைக்கும். சீஸுக்கு பதிலாக, சோயா டோஃபு, பாதாம், முந்திரியிலிருந்து தயாரிக்கப்படும் சீஸைச் சாப்பிடலாம்.

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பன்னாட்டு உணவுகள்

விளம்பரம், ஆட்கள் சேர்க்கை மூலம், இந்தியாவில் பரவலாக விற்கப்படுகின்றன பன்னாட்டு உணவுகள். இந்தியாவில், 100 பொருட்களை மார்கெட்டிலிருந்து திரும்பப் பெறச் சொல்லி, உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாத்திரை, கிரீம், ஹெல்த் டிரிங்ஸ், புரோட்டீன் பவுடர் போன்ற சில பன்னாட்டு உணவுகளில், நம் சூழல் சார்ந்த உடல் நலனுக்குப் பொருத்தம் இல்லாததால் அரசு தடை விதித்துள்ளது. மேலும், உலோகங்கள், தாவர நச்சுகள் இதில் கலந்திருக்கலாம்.

விளைவுகள்: சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கும். வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.

கவனிக்க: பன்னாட்டு உணவுகளைத் தவிர்ப்பது ஒன்றே மாற்று வழி.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ரெடிமேட் தோசை மாவு சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட், மிளகாய் தூளில் செங்கல்தூள், சூடான் டை, சிட்ரஸ் ரெட், கான்கோரைட். மல்லி தூளில் மரத்தூள், குதிரை சாணம், மாலசைட் பச்சை (Malachite green – வீட்டு வாசல் பச்சை நிறமாக மாற, சாணத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தும் நிறமி), மஞ்சள் தூளில் காரிய க்ரோமல், அக்ரிடைன் மஞ்சள் (Acridine yellow), கடுகில் ஆர்ஜிமோன் விதை, தூள் உப்பு கட்டியாகாமல் இருக்க ஆன்டிகேக்கிங் ஏஜென்ட், டீ தூளில் முந்திரி தோல் மற்றும் செயற்கை வண்ணங்கள், தேனில் வெல்லப் பாகு, சர்க்கரை, சமையல் எண்ணெய்களில் காட்டு ஆமணக்கு எண்ணெய் ஆகியவை கலக்கப்படுகின்றன.

விளைவுகள்: தொடர் தலைவலி, ஒற்றைத் தலைவலி, உடல்பருமன், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகக் கற்கள், கருச்சிதைவு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, நெஞ்சுவலி, நுரையீரல் பாதிப்புகள், குறைபாடுடன் குழந்தை பிறப்பது, அல்சர், கல்லீரல் வீக்கம், கணைய பாதிப்புகள், குழந்தையின்மை, ரத்தக் குழாய் மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனிக்க: லேபிளில், மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற உப்பு, பதப்படுத்தும் ரசாயனங்கள் மாற்று பெயரில் மறைந்திருக்கும். ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளே பாதுகாப்பானது.

சைவ உணவுகளில் அசைவ உணவுகள்

சிப்ஸ், பாக்கெட் மற்றும் டின் உணவுகளில் விலங்குக் கொழுப்பு, வெள்ளை சர்க்கரையில் கால்நடைகளின் எலும்புத் தூள், ரெடிமேட் ஆரஞ்ச் ஜூஸ், சில வகை பானங்களில் மீன் எண்ணெய், கம்பளியிருந்து எடுக்கப்படும் லனோலின், பூச்சியிலிருந்து எடுக்கப்படும் கார்மைன் (E 120) என்ற நிறமூட்டி ஆகியவை மறைமுகமாகச் சேர்க்கப்
படுகின்றன.

பேக்கரி உணவுகள், சூயிங் கம், ஜெல்லி மிட்டாய், ஜாம், காப்ஸ்யூல் மாத்திரைகளில், விலங்குகளின் முடியிலிருந்து, தயாரிக்கப்படும் எல்-சிஸ்டீன் (L-Cysteine), விலங்குத் தோல், கேப்ரிக் அமிலம் (Capric acid) ஆகியவை உள்ளன. இனிப்புகளின் மேல் முடப்படும் வெள்ளித்தாள், மாட்டுக் கொழுப்பால் தயாராகிறது. கால்நடைகளின் எலும்புத் தூளான ‘போன் பாஸ்பேட்’, செயற்கை பான பொடிகளில் சேர்க்கப்படுகிறது.

விளைவுகள்: அலர்ஜி, ஆஸ்துமா, தொடர் தும்மல், சரும பிரச்னை, உடல் பருமன், வயிறுத் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கலப்படம் இல்லாத சைவ உணவுகளைச் சாப்பிட விரும்புவோர், ‘வீகன் குறியீடு’ இருக்கிறதா எனப் பார்த்து வாங்கலாம்.

கவனிக்க

இ என்ற எழுத்துகளில் வரும் E120, E542, E441, E469, E631, E635,E901, E913,E920 ,E966, E1105 கோடு எண்கள், லேபிளில் பார்த்தால் அதில் விலங்குப் பொருட்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…

யாரிடம் புகார் செய்வது?

வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அவர்கள் எந்த பொருளால் உடல்
நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளை பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் என்று தெரிந்தால், விற்ற
வர் மற்றும் தயாரித்தவர் மேல் கேஸ் போடப்படும். பாதிக்கப்பட்டோர் நிவாரணமும் கேட்கலாம்.

தடை செய்யப்பட்ட வண்ணங்கள்!

உணவுத் தயாரிப்பில் அரசால் சில வண்ணங்கள் மட்டுமே சேர்க்கப்படலாம் எனச் சட்டங்கள் உள்ளன. ஆனால், இங்கு சின்தட்டிக் வண்ணங்கள், தடைவிதிக்கப்பட்ட நிறங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதைக் கண்டுபிடிக்க, அந்தந்த ஊர்களில் பரிசோதனை கூடங்கள் இல்லை. தமிழ்நாட்டிலும் ஆறே பரிசோதனை கூடங்கள்தான் உள்ளன.
saravanan இவ்வாறு கூறியுள்ளார்…
நிலப்பிரபுக்களின் கைகளில் வணிகம் இருந்த போது சிறிய அளவில் கலப்படம் செய்தனர். தற்போது கார்பரேட் முதலாளிகளின் கைகளில் வணிகம் சென்றதால் அவர்களின் கொள்ளை லாப வெறிக்கு மக்கள் பலிகாடாகின்றனர் இவர்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெற்றுக்கொண்டு அரசியல் வாதிகளும்,அதிகாரிகளும் நம்மை சுடுகாட்டுக்கு அனுப்புகின்றனர். இதை தடுக்க ஒரே வழி மக்களுக்கான ஆட்சி நடக்கும் போது மட்டுமே இது சாத்தியம். அதற்கு மக்கள் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
விழிப்புணர்வு தேவை.இயற்கை இலவசமாக தரும் உணவை மக்கள் தாங்களாகவே தேடிக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகள் பயிரிட வேண்டும்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சமையல் எண்ணெயில் கலப்படம்

https://www.youtube.com/watch?v=5WeKEmNUw_s