வண்ணங்களும் எண்ணங்களும்

உலகம் வண்ண மயமானது.நாம் காணும் ஒவ்வொரு நிறமும் நம் உள்ளத்தில் வெவ்வேறு உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது.இது பற்றி மன இயல் வல்லுனர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

கருப்பு: இருட்டின் நிறம்.கருப்பு வண்ணம் அதிகாரத்தை,வல்லமையை குறிப்பது.கருப்பு உடைஎப்போதும் அழகானது.அணிந்திருப்பவரை ஸ்டைலாக ஒல்லியாகக் காட்டும். பாதிரியார்கள் கருப்பு உடை உடுத்துவது கடவுளுக்கு தாழ்பணிவதை வெளிப்படுத்துகிறது.பெண்கள் அணிவது ஆண்களுக்கு தாழ்பணிவதை வெளிப்படுத்துகிறது. கருப்பு மேலங்கி அணிவது சர்வாதிகாரத்தை காட்டுகிறது.

சாம்பல்:நடுநிலையான வண்ணம்.

வெள்ளை:தூய்மையை உணர்த்தும் நிறம்.வெள்ளை எல்லா நிறத்துடனும் இணங்கிப் போகும்.வெள்ளை துணிகளில் அழுக்கானால் மற்ற துணிகளை விட எளிதில் தெரியும்.எனவே சுத்தம் செய்வது கடினம்.டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தங்கள் உடையில் சுத்தத்தை பேண வெள்ளை உடையே அணிகின்றனர்.வெள்ளை நிறம் விதவைகளை,வெறுமையை ஞாபகப்படுத்தும்.

ஊதா:அதிகாரம்,ஆடம்பரம்,செல்வம்.நுட்பம்,பெண்கள்,காதல் ஆகியவற்றை உணர்த்தும் நிறம்.இயற்கையில் அதிகம் காணப்படாத நிறம் என்பதால் இதனை பயன்படுத்துவது சற்று செயற்கையாக தோன்றும்.

நீலம்:வானத்தின் நிறம்,கடலின் நிறம் இது.முக்கியமான நிறங்களில் ஒன்று.இது சிவப்பு நிறத்திற்கு எதிரான குணமுடையது.மனதை அமைதிப்படுத்தி மயங்க வைக்கும்.படுக்கை அறைகளுக்கு ஏற்ற குளுமையான நிறம்.நேர்க்காணலுக்கு செல்பவர்கள் நீல நிற உடை நலம் பயக்கும்.நீல வண்ண அறையில் பணியாற்றுபவர்கள் திறன் அதிகமாக இருக்கும்.நீல வண்ண அறையில் பளு தூக்குபவர்கள் அதிக பளு தூக்குகின்றனர்.நீல வண்ணத்தைப் பார்க்கும் போது மூளை பதினொரு நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை ரிலீஸ் செய்து உடலை ரிலாக்ஸ் செய்கிறது.உடல் வெப்பம்,பசி குறைகிறது.அமைதியாக உட்கார்ந்து படிப்பதற்கு நீல வண்ண சூழல் உதவுகிறது.நீல வெளிச்சம் குற்ற செயல்களையும் தற்கொலை உணர்வையும் தடுக்க உதவுகிறது. ஈ,கொசுவை ஈர்க்கும்

பச்சை:இன்றைக்குள்ள சிறந்த அழகிய வண்ணம்.இந்நிறம் இயற்கையை குறிக்கிறது.கண்ணுக்கு எளிய நிறம்.பார்வையால் அதிகம் உணரப்படும் நிறம்.மன அமைதியும் புத்துணர்வும் தரும்.டி விக்கு முன்னால் தோன்றுபவர்கள் நிகழ்ச்சிக்கு முன் பச்சை நிற அறையில் அமர்ந்து ரிலாக்ஸ் ஆவது வழக்கம்.நோயாளிகளை அமைதிப்படுத்த மருத்துவ மனைகளில் இவ்வண்ணம் பயன்படும்.ரத்தத்தில் ஹிஸ்டமின் அளவை அதிகரித்து அலர்ஜி தாக்குதல்களைக் குறைக்கிறது.ஆன்டிஜென்களை தூண்டி நோயெதிர்ப்புத் தன்மையை அதிகரித்து குணமாக உதவுகிறது. கரும் பச்சை வலிமையையும்,பழமையையும்,செல்வத்தையும் உணர்த்தும்.இஸ்லாமிய மதத்தை ஞாபகப்படுத்தும்.

மஞ்சள்: மங்களகரமான நிறம். மூளையால் முதலில் உணரப்படும் நிறம்.மஞ்சள் நிறம் தங்கத்தை ஞாபகப்படுத்தும், கவனத்தை ஈர்க்கும்.மஞசள் நிற அறைகளில் அமர்ந்திரு்ந்தால் கோபம் குறையும்.குழந்தைகள் அதிகமாக அழக்கூடும். கண்களை வருத்தும். கவனத்தை அதிகரிக்கும்.நம்பிக்கையை வளர்க்கும்.வகுப்பறைகளுக்கு ஏற்ற நிறம்.

ஆரஞ்சு:இந்து மதத்தை ஞாபகப்படுத்தும்.சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு இடைப்பட்ட குணாதிசயமுடையது.கற்றுக்கொள்ளும் திறன் வளர்க்கும்.

பிரவுன்:திடம், நம்பகத்தன்மை,பாதுகாப்பை உணர்த்தும் நிறம்.பூமியின் நிறம்.அமைதிப்படுத்தும்,தளர்ச்சியைக் குறைக்கும்.இயற்கையில் அதிகம் நிறைந்துள்ள நிறம்.காவி நிறம் தரத்தையும் உண்மையையும் உணர்த்துகிறது.கடும் பிரவுன் நிறம்.தோல் மற்றும் மரத்தை குறிக்கிறது.சோகமான நிறம். அதிக மக்களுக்கு பிடித்த நிறம்

சிவப்பு:நெருப்பு,இரத்தம் ஆகியவற்றை நினைவு படுத்தும் இது அபாய எச்சரிக்கையின் நிறம். காதலின் நிறமும் கூட.pituitary மற்றும் adrenal gland களைத் தூண்டி adrenaline ஐ இரத்தத்தில் சுரந்து இதயத்துடிப்பையும்,சுவாசத்துடிப்பையும் அதிகரிக்கிறது.மோப்ப உணர்வை,பசியை தூண்டுகிறது.உணவகங்களுக்கு ஏற்றது.சிவப்பு உடை அது அணிபவரை கனமாகக் காட்டும்.சிவப்புக் கார்கள் தான் அதிகம் திருட்டுப் போகின்றனவாம்.சிவப்பு நிறப்பொருட்கள் அனைவரையும் எளிதில் கவரும்.

இளஞ்சிவப்பு வண்ணம் மோகத்தை தூண்டக்கூடியது.மனதை வலுவிழக்க செய்யும்

உணவுப்பொருட்களும் வண்ணங்களும்:
 நீலம் மிக முக்கியமான வண்னம் என்றாலும்.நீல நிற உணவுகள் பசியைத் தூண்டாது.நீல உணவுகள் இயற்கையில் அதிகம் கிடைப்பதில்லை.மனிதன் உணவைதேடி அலைந்தபோது.கெட்டுப்போன மற்றும் விஷப் பொருட்களைத் தவிர்த்து வந்தான்.இத்தகையப் பொருட்கள் பெரும்பாலும், நீலம், கறுப்பு, மற்றும் ஊதா வண்ணங்களையே கொண்டுள்ளன.பச்சை,பழுப்பு, மற்றும் சிவப்பு வண்ணங்களையே உணவில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இருண்ட வண்ணங்கள் பொதுவாக இரவை ஞாபகப்படுத்துகிறது மன அமைதியைத் தூண்டுகிறது பிரகாசமான வண்ணங்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகியவை சக்தியூட்டுகிறது, மனவெழுச்சியூட்டுகிறது, படைப்புத் திறனை தூண்டுகிறது. அதோடு ஆவேசம், உணர்ச்சி வசப்படுதலுக்கு காரணமாகிறது.மஞ்சள், இளம் ஆரஞ்சு,போன்ற வண்ணங்கள் நல்ல மனநிலையை தூண்டி படிப்பதற்கு ஏற்ற சூழலை உண்டாக்கும்.

நிறங்களின் தாக்கத்திற்கும் இடம்,காலம்,கலாச்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே மேற்கண்ட முடிவுகள் நூறு சதவீதம் உங்களுக்கு பொருந்தும் என கூறுவதற்கில்லை.சிலது மாறுபட்ட உணர்வுகளை தரலாம்.எது எப்படியானாலும் நிறங்கள் நம்மை நிச்சயம் பாதிக்கிறது என்றே தோன்றுகிறது. சரி் உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும்?

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
University of British Columbia researchers found that, in cognitive tests of 600 people:

Red groups did better on tests of recall and attention to detail, like remembering words or checking spelling and punctuation. Blue groups did better on tests requiring imagination, like inventing creative uses for a brick or creating toys from shapes.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

சிவப்பு நிறம் எதனையும் வெற்றி கொள்ளும் தன்மையையும் பாதுகாக்கும் தன்மையையும் அளிக்கிறது.

பழுப்பு நிறம் சுயநல எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.

பச்சை நிறம் ஒருவரின் மன உறுதியை வெளிப்படுத்தும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

மஞ்சள் நிறம் உயர்ந்த கொள்கைகளையும் நோக்கங்களையும் கொடுக்க வல்லது. மூளை செயல்திறன் குறைவாக உள்ளவர்கள் முன்னேற்றம் காண உதவும். ஆன்மிக எண்ணத்தைப் பிரதிபலிக்கும். மனோ தைரியத்தையும், அறிவுத் திறமையையும், சுறுசுறுப்பாக இயங்கும் செயல்திறனையும் அளிக்கும்.

நீல நிறம் உற்சாகத்தை வழங்கும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தவும் பயன்படும். நட்புறவு, மகிழ்ச்சி, அமைதி நிலவ உதவும்.

ஊதா நிறம் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும் சுபாவத்தைக் கொடுப்பது. ஆராய்ச்சி எண்ணங்களையும் படைப்பாற்றலையும் அளிக்கும். தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி நிலைபெறச் செய்யும்.

வெள்ளை நிறம் தியாக சிந்தையையும் தன்னலமற்ற குணத்தையும் தருகிறது.