உடல்நலக் குறிப்புகள்


 • உயிர் வளர்க்கத் தேவையான எல்லா சத்துக்களும் நிறைந்த சரியான உணவை அன்றாடம் தவறாமல் உண்பதே ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வை அடையும் வழி.
 • பழங்களையும், வேகவைத்த காய்கறிகளும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலின் எடையை அதிகரிக்கமலேயே உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்கி ஆரோக்கியம் காக்கிறது.
 • மன இறுக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். எரிச்சல், கோபம், டென்சன், மன இறுக்கம் யாவும் உடலில் கார்டிசோல் -எனப்படும் ஸ்டீராய்டைச் சுரக்க செய்து உடலின் வளர் சிதை மாற்றங்களை மந்தப்படுத்திவிடுகிறது. இதனால் உடல் எடை கூடிவிடும்.முக்கியமாக தொப்பையை உருவாக்கும்.
 • தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கரோட்டினாயிடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதய நோய், மற்றும் புற்று நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. தக்காளியில் விட்டமின் சி எராளம் இருக்கிறது. ஆனால் இதை சமைக்கும்போது பெரும்பாலான விட்டமின்கள் அழிந்து விடுகிறது.
 • முட்டை, மற்றும், கேரட்டில் காணப்படும் விட்டமின் ஏ, தோல் உலர்ந்து போவதை தடுத்து முதுமை தோற்றத்தை தள்ளிப் போடுகிறது.
 • தினமும் எட்டு முதல் பன்னிரெண்டு கோப்பை தண்ணீர் அருந்துவது உடலில் தேங்கும் நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.
 • பொரித்த உணவு வகைகள் உண்பதை கோடை காலங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிமான கொழுப்புணவு உடலை மேலும் சூடாக்கும்.
 • கோடை காலங்களில் சில்லென்ற குளிர் பானங்கள் அருந்துவது, உண்மையில் இரத்தக்குழய்களை சுருங்கச் செய்து ,தோல் வழியே வெப்பம் வெளியேறுவதை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பம் குறைவதில்லை.
 • காலை எழுந்ததும் ஒரு கோப்பை வெது வெதுப்பான தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்துங்கள்.இது உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதுடன் தோலையும் பளபளப்பாக்கும்.
 • டீ ,காபி போன்ற ஊக்க பானங்கள், உடலின் தண்ணீர் தேவையை அதிகரித்து தோலை வறட்சியடையச் செய்கிறது. இதற்குப் பதில் பழ ரசங்கள் அருந்தலாம். அதிக பட்சம் இரு கோப்பை டீ ஒரு நாளைக்குப் போதுமானது. அதிலும் சர்கரையின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
 • உடல் எடை குறைய ஸ்கிப்பிங் செய்வது உதவாது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. கொழுப்பை கரைப்பதற்குப்பதில் தண்ணீரையும், திசுக்களையும் தான் இழக்கச்செய்கிறது.
 • சர்க்கரை அதிகம் சாப்பிடுவது கண்ணொளி மங்கச்செய்கிறது. உணவு செரிக்கத்தேவையான என்சைம்களின் திறனைக் குறைக்கிறது. இது பான்கிரியாசுக்கு வேலைப்பளு உண்டாக்குகிறது. இரத்த்தில் சேரும் கொழுப்பின் அளவில் மாவுச்சத்திலிருந்து உண்டாகும் கொழுப்பின் அளவை விட 2 முதல் 5 மடங்கு சர்க்கரையிலிருந்து தான் உண்டாகிறது.
 • இரும்பு சத்துக் குறைபாடு கண்ணைச் சுற்றி கருவளையம் உண்டாக்கும்.
 • ஆரஞ்சு மற்றும் வாழைப் பழங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
 • வெங்காயம் மிகச்சிறந்த ஆன்றி ஆக்ஸிடன்ட் ஆனதால்அலர்ஜி மற்றும் வைரசுகளுக்கு எதிரான குணமுடையது.
 • நிலக்கடலை புற்று நோயை உருவாக்கக் கூடும். அதில் பூஞ்சைகளும், கிருமிநாசினிகளும் காணப்படலாம்.
 • வாழைப்பழம் -உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதில் அதிக அளவு பொட்டாஷியம், குறைந்த அளவு உப்பு உள்ளது.
 • பால் சேராத கருப்பு சாக்லேட்டுகளில் இரத்தக்குழாய்களை பாதுகாக்கும் ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வது நல்லது. இது மாவு சத்து, குளுகோசாக மாற்றமடைவதை மட்டுப்படுத்துகிறது
 • தூங்கும்போது தலைக்கு இரண்டு தலையணை வைத்துக் கொள்ளாதீர்கள். முதலில் சுகமாக இருக்கும். காலப் போக்கில் கழுத்து வலி நிச்சயம். தலையணையே வைக்காமல் அல்லது மெலிதான தலையணை வைத்துக் கொண்டு படுப்பது நல்லது். மூளைக்கு ரத்தம் சீராகச் செல்லும். கழுத்துக்கும் நல்லது
 • மிருதுவான மெத்தை நல்லது அல்ல. கடினமான மெத்தையே முதுகுக்கு நல்லது.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்காதீர்கள். அவ்வப்போது எழுந்து நடக்கப் பழகுங்கள். உட்கார்ந்து வேலை செய்யும் போது நாற்காலியில் முதுகு ஒட்டியிருக்கட்டும். ஏனெனில் முதுகுக்கு ஆதரவு தேவை.
 • அதிக எடை உள்ள பொருள்களைத் தூக்கி முதுகுக்குக் கஷ்டம் கொடுக்காதீர்கள். அதிக எடை உள்ள பொருள்களை முன்னால்குனிந்து தூக்காதீர்கள். பொருளுக்கு நேராக உட்கார்ந்து தூக்குங்கள். இப்படிச் செய்தால் முதுகு, இடுப்புப் பிடிப்பைத் தவிர்க்கலாம்.
 • காதில் அழுக்கிருந்தால் ஊசி, ஹேர் பின், பென்சில், குச்சி ஆகியவற்றாலோ பஞ்சு சுற்றிய குச்சிகள் கொண்டோ அகற்ற முயற்சிக்கக் கூடாது. இவற்றால் செவிப்பறை கிழிந்து நிரந்தரக் காது கேளாமை நேரலாம். காதுகளைத் தினமும் சுத்தம் செய்யத் தேவையில்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதி இயற்கையாகவே காதுக்கு உள்ளது.
 • தோலில் வியர்வை உண்டாவதுபோல் காதில் எண்ணெய்ப் பசை கொண்ட குருமிகள் உள்ளன. இவ்வமைப்பு எறும்பு போன்ற சிறு பூச்சிகள் காதுகளில் நுழையாது தடுக்கின்றன. ஒருவேளை பூச்சிகள் நுழைந்துவிட்டால், சிறிது உப்பு கலந்த நீரைக் காதுக்குள் விட்டால் போதுமானது. பூச்சிகள் இறந்து மிதக்கும்.
 • தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி அணிந்து கொள்வது தலைவலியைப் போக்கப் பயன்படாது. மேலும் பார்வைத் திறனில் உள்ள குறைபாடு காரணமாகவே தலைவலி தோன்றுவதால் அக் குறை நீக்கத் தரப்படும் கண்ணாடியை வலி நிவாரணியாகக் கருதாமல், பார்வை மேம்பாட்டுச் சாதனமாகக் கொண்டு எப்போதும் அணிவது அவசியம்.
 • சர்க்கரை நோயாளிகளும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண் சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த இரு நிலைகளிலும் பார்வைத் திரை ("ரெட்டினா') ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவேற்பட வாய்ப்பு உண்டு. இக்கசிவுகள் பார்வைக் குறைவையோ, பார்வையிழப்பையோ உண்டாக்கக் கூடுமாதலால் முன்னெச்சரிக்கை தேவை.
 • தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்ணை மூடி ஐந்து நிமிஷம் இருந்தால் போதும். தூசு ஏற்படுத்தும் உறுத்தலால் பெருகும் கண்ணீர் வெள்ளம், அந்தத் தூசை வெளியே கொண்டு வந்து விடும். ஐந்து நிமிஷக் கண் மூடலுக்குப் பிறகும் தூசு இருப்பதாக உணர்ந்தால், கண் மருத்துவரிடம் சென்று தூசை அகற்றிக் கொள்ள வேண்டும்.
 • தோலில் வியர்வைத் துளைகள் கீழ்நோக்கி அமைந்துள்ளன. அதனால் குளிக்கும்போது எதிர்ப்புறமாய், அதாவது மேல்நோக்கித் தேய்த்துக் குளிக்க வேண்டும். வழித்துவிட்டாற்போல் கீழ்த்தேய்ப்பு செய்து குளித்தால் பயன் ஏதுமில்லை. அடைத்திருக்கும் வியர்வைத் துளைகளைத் திறந்துவிட எதிர்த் தேய்ப்பு உதவும்.
 • உதடுகளிலும் வாயின் உட்புறத்திலும் ஏற்படும் குழிப் புண்கள், பி - காம்ப்ளெக்ஸ் சத்துக் குறைவாலும் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. இப் புண்கள் மரபு வழித் தொடர்புடையவை. அமைதியின்மை, மன இறுக்கம், ஓயாத சிந்தனை ஆகியவற்றைத் தவிர்த்து தியான முறைகளைப் பின்பற்றுவது தொடர் துன்பம் தவிர்க்கும். ஈஸ்டு சத்துள்ள மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை பெற்று உட்கொள்ளலாம்.
 • குழந்தையின் கன்னம், காதுப் பகுதிகளில் அறைவது மிகவும் ஆபத்தானது. இத்தகு கோப அறைகள் காதிலுள்ள செவிப்பறை கிழியக் காரணமாகி விடுகின்றன. அடி பலமாக இருந்தால் காது நரம்பு முற்றிலுமாய்ப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
 • மிக அதிகமாகப் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் உறுப்புகளுள் நாக்கும் ஒன்று. நாட்பட்ட ஆறாத புண், நாக்கின் பக்கப் பகுதிகளிலோ அல்லது கீழ்ப் பகுதியிலோ ஏற்படும் கட்டிகள், வீக்கம் ஆகியவை ஆபத்தானவை. நாக்கில் ஏற்படும் சாதாரண புண்கள் 15 நாள்களுக்குள் ஆறாவிட்டால் மருத்துவரைப் பார்ப்பது பாதுகாப்பானது.
 • பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போது சரிவான நிலையில், அதாவது குழந்தையின் தலையை உயர்த்திக் காலைத் தாழ்த்தி வைத்தபடி கொடுக்க வேண்டும். சமமாகப் படுத்த நிலையில் குழந்தை பால் குடிக்கும் போது காது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 • இமைக் கட்டிகள் "சூட்டால்' வருவனவல்ல. இமைகளில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் தொற்றும் அடைப்புமே இத்தகு சீழ்க்கட்டிகளுக்குக் காரணிகள். பெரும்பாலான சீழ்க் கட்டிகளை மருந்திட்டுச் சரிப்படுத்தலாம். சீழ் இறுகிப் போகும் நிலையில் சில கட்டிகளை அறுவையால் மட்டுமே சரி செய்ய முடியும்.
 • தோலைப் பாதுகாக்க குளியல் சோப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதிகக் காரத்தன்மை கொண்ட சோப்புகளைப் பயன்படுத்துவதில் புத்துணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அது தோலைப் பாதிக்கும்.
 • சொறி, சிரங்கு, பூஞ்சை ஆகியவை பரவலாகக் காணப்படும் தோல் நோய்கள். குறுகிய இடங்களில் அதிகம் பேர் வசிப்பது, குளியலறை வசதியின்மை போன்றவையே சொறி நோய் ஏற்படக் காரணம். இந் நோயில் ஏற்படும் அரிப்பு இரவில் அதிகமாக இருக்கும். கந்தகம் கலந்த களிம்பு மூலம் இதைக் குணப்படுத்தலாம்.
 • ஒவ்வாமை காரணமாகத் தோல் நோய் உள்ளவர்கள், அமிலத் தன்மை வாய்ந்த தக்காளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, சர்க்கரை, குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 • நாக்குப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளில் ஒன்று புகையிலை. வாயில் புகையிலையை நெடு நேரம் அடக்கியிருப்பது கன்னப் புற்றையும், நாக்குப் புற்றையும் உண்டாக்கலாம். புகையிலையைப் போலவே, நாக்கில் உரசி அடிக்கடி புண்ணேற்படுத்தும் ஒழுங்கற்ற பற்களும் ஆபத்தானவை. பல் மருத்துவரிடம் காட்டி இத்தகு சீரற்ற பற்களைச் சீரமைத்துக் கொள்வது அவசியம்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
very good
நிகழ்காலத்தில்... இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கட்டுரை

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Removing skin tags

1)Tea Tree Oil- Tea tree oil works very well for removing skin tags as well as moles. In fact, tea tree oil is used on various skin disorders. To use this all you need is a little tea tree oil and a cotton ball. Soak the cotton ball in the oil and apply it directly to the affected area. Do this once or twice daily for up to 4 weeks or until the skin tag vanishes

2) Take a little baking soda and mix it with the castor oil to create a paste. I suggest you add some citrus oil as it will stink to high heaven. Apply it to the affected area and cover with a band-aid. The typical time it will take is 2-4 weeks before the skin tag vanishes.

3) Apple Cider Vinegar-Apple cider vinegar works very well for removing skin tags. simply dab some of it on a q-tip or cotton ball and apply it directly to the skin tag.pple Cider vinegar may cause a stinging sensation for a couple minutes after being applied. Typical time until the skin tag vanishes?....2-4 weeks.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கால் ஆணியால் அவதியா.? கவலையை விடுங்க.!

அம்மான் பச்சரிசி செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி வந்தாஅந்தப் பிரச்னை மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம் கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.

மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க பாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா மூணுநாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும்.

அப்படி வந்தா ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும்.
கால் ஆணி நீங்க இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.

5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும்.

படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (24 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.