கிராம ஃபோன் பெட்டியின் மின் பதிப்பு தான் ரிகார்ட் பிளேயர். கையால் சுற்றுவதை மோட்டர் சுற்றும். பிளேட்டில் பதிந்துள்ள அதிர்வுகளை மின்சார அலைகளாக மாற்ற ஒரு பிக் அப் காயில் இருக்கும்.
ரிக்கார்ட் பிளேயரை முதலில் பார்த்தது மம்மேலியின் சாயாக்கடையில் தான். தினமும் அதிகாலை என் அப்பா தவறாமல் சாயாக் கடைக்கு அழைத்து சென்று புட்டும் பழமும் வாங்கி விரவி ஊட்டுவார். சிறு பையனான என் கண் முழுதும் எதிரே இருக்கும் ரிக்கார்ட் பிளேயரில். ஒரு நடன மங்கையை போல் சுழலும் இசைத்தட்டிலும் அதன் மேல் நிரடிசெல்லும் ஊசியிலும். ஸ்பீக்கரில் வழியும் பாடலிலும் மனம் லயித்திருக்கும். ஊரில் எங்கு மைக் செட் காரர்கள் கடை விரித்திருந்தாலும் என்னை ரிக்கார்ட் பிளேயருக்கு அருகே காணலாம்.
ஒருநாள் எனக்கும் அது போல் ஒரு பிளேயர் வாங்கிக் கேட்டு உண்

அதன் பின் மோனோ ட்ராக் எல்லாம் போய் பாடல்கள் ஸ்டீரியோ வந்தது."ஙோ"என்று ஒலிக்கும் குழாய் ஒலிபெருக்கி போய் "சில்" என்று ஒலிக்கும் பாக்ஸ் ஸ்பீக்கர் வந்தன. அப்புறம் புதிய மாடல் பிளேயர் வந்தது. ஆட்டோ மேட்டிக்காக ஸ்டைலஸ் நகர்ந்து இசைத்தட்டில் உட்காரும் பாடல் முடிந்தது பழைய இடத்துக்கு வந்து விடும்.
நான்கு பாடல் உள்ள சிறிய இசைத்தட்டு முதல் பதினெட்டு பாடல்கள் உள்ள பெரிய இசைத்தட்டு வரை வெளியாயின. கொலம்பஸ், எச் எம் வி இவைதான் இசை தட்டு கம்பனிகள். ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையே கோடுகளால் பிரித்திருப்பார்கள். ஒவ்வொரு வகைத் தட்டுக்கும் ஒரு வேகம் இருக்கும். அதற்குரிய வேகத்தில் சுழலச் செய்ய குமிழ் இருக்கும். சில வேளை அந்த குமிழைத் திருகி வேகம் கூட்டும் போது எஸ் பி பி மழலையாக மாறி விடுவார். அவசரம் அவசரமாக பாடுவது கேட்க ஜாலியாக இருக்கும். பிறகு நிறைய இசைதட்டுகளை அடுக்கி வைத்து ஒவ்வொன்றாக தானியக்கும் பிளேயர்களும் வந்தன. அப்போதெல்லாம் என்னிடம் ஒரு பெட்டி நிறைய அருமையான பாடல்கள் கொண்ட ரிக்கார்ட்கள் சேர்ந்து விட்டது. ரிக்கார்ட் பிளேட்டுகளில் பிரச்சனை என்பது கீறல் அல்லது கோடுகள் விழுவது தான். இதனால் சில வேளை பாடகர் சொன்னதையே திருப்பி சொல்லி கடுப்பேற்றுவார்.
ஒரு சுப முகூர்த்தத்தில் நேசனல் பானசோனிக்கின் ஒரு அழகிய டேப் ரிக்கார்டர் அப்பா வாங்கித் தந்தார். இதில் புதிய டெக்னாலஜியாக இரும்பு ஆக்ஸைட் பூசப்பட்ட ஃபிலிம் நாடாக்களில் மின் காந்த முறையில் பாடல்

ஒருமுறை சமையலறைப் பாத்திரங்கள், வாளி, குடம் எல்லாம் வைத்து இசை அமைத்து பாடி பதிவு செய்தேன். அந்த சின்ன வயதுக்கு நன்றாகவே இருந்தது அந்த பதிவு. எங்கு பாட்டுக் கச்சேரி நடந்தாலும் அதை தூக்கிகொண்டு போய் ரெக்கார்ட் பொத்தானை அழுத்துவது வழக்கம். பாட்டியின் கதை, யாசகனின் தாளப் பாட்டு, எம்ஜியார், கலைஞர் மேடைப் பேச்சு, தம்பியின் அழுகை என நிறைய சுவாரசியமான பதிவுகள் செய்திருந்தேன். மறக்காமல் என்னிடம் இருந்த எல்லா ரிக்கர்ட் பிளேட்டுகளையும் காசட்டுகளாக்கி விட்டேன். புதிய மொந்தையில் பழய கள்ளு.

காசட்டுகள் குழந்தைகள் கையில் கிடைத்தால் அத்தனை ஃபிலிமையும் வெளியே இழுத்துப் போட்டு விடுவார்கள். நாடா அறுந்து விடுவது சிக்கிக்கி கொள்வது போன்ற பிரச்சனைகளோடு, காசட்டில் ஒரு பாடலைத் தேடுவது சிரமம் தான். சிறிய வாக்மேன் களை இடுப்பில் கட்டிக் கொண்டு நடக்கும் ஃபேஷனும் வந்தது
சிடி பிளேயர் வந்த போது அதன் ஒலித்தரம் மிக அருமையாக இ


கிராமஃபோனின் மற்றொரு அவதாரம் ஹார்ட் டிஸ்க். அதே சுழலும் தட்டுகள்.ஆனால் பதிவது டேப்பில் உள்ளது போல் மின் காந்த பதிவு. சிடியில் உள்ளதை போல் டிஜிடல் முறை. உராய்வில்லை.
ஒருவழியாக இந்த தட்டின் சுழற்சியை நிறுத்தியது ப்ளாஷ் மெம

எல்லாம் மாறிப்போய்விட்டன ஆனால் என் ஃபிளாஷ் மெமரியில் ஒரு ஃபோல்டருக்குள் எனது பழைய '70,'80 களின் கலெக்சன் பத்திரமாய் சட்டைப்பைக்குள் இருக்கிறது. டேப், காசட் எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன். இன்று ரீ மிக்ஸ் என்ற பெயரில் பாட்டிக்கு மீண்டும் ஃபிராக் உடுத்தி அழகு பார்க்கிறார்கள். எதுவும் ரசிக்கும் படி இல்லை. பழைய பாடல் அவமதிக்கும் செயலாகவே பார்க்கிறேன்.
சமீபத்தில் வீட்டில் பரணில் கிடந்த ஒரு இசைத்தட்டை என் மகன் எடுத்துவந்து அது என்னது? என்று கேட்டான். இது தான் அந்த கால சிடி என்றேன்.
இதில் என்ன பாட்டு இருக்கிறது என்று கேட்டான். எனக்கும் தான் அந்த கேள்வி. அதன் நடுவில் இருந்த எழுத்துக்கள் ஒன்றும் தெரியும்படி இல்லை. ஒரு பேப்பரை எடுத்து கோன் போல செய்து அதன் முனையிலொரு குண்டூசியை செருகிக்கொண்டேன் பழைய இசை தட்டை கழுவி சுத்தப்படுத்தி ஒரு குச்சியில் மாட்டி சுழலச்செய்து காகித கோனின் குண்டூசி முனையை அதில் வைத்து பிடித்ததும் "தழுவிடும் இனங்களில் மானினம், தமிழும் அவளும் ஓரினம்" என்று எஸ் பி பி கீச்சுக்குரலில் பாடியதை மெய் மறந்து கேட்டேன். என் மகன் என்னைப்பற்றி என்ன நினைத்தானோ I pod ன் ஹெட் ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு காலரை தூக்கி விட்டு கை கால்களை உதைத்தபடி நடையைக் கட்டினான். அதில் "ஆடுங்கடா என்ன சுத்தி அய்யனாரு வெட்டுகத்தி "என கசிந்து கொண்டிருந்தது.
கருத்துகள்
அழகான தலைப்பிட்டு
நல்ல அலசல்
எனக்குள்ளும் ஓர் இசைத்தட்டு சுழலுது
விரவி என்றால் என்ன?
ம்ம்ம், அதெல்லாம் ஒரு காலம். அந்தக் கடைசிப் பத்திதான் இன்றைய காலம்:)!