சார்பியல் படி காலம் சார்பானது. பொதுவான நிகழ்காலம் என்று ஒன்று இல்லை. வெவ்வேறு கால வெளியில் வெவ்வேறு திசைவேகத்தில் இயங்கும் பொருட்களுக்கிடையே காலம் ஒன்றாயிருப்பதில்லை. இதிலிருந்து
எல்லா காலமும் ஏக காலத்தில் இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
நிகழ் காலம் என நாம் நினைப்பது கூட அது நாம் அதை கடந்த பின் தான் நம் அனுபவத்துக்கு வருகிறது. நம் எண்ணங்கள் நம்முடையதல்ல. நம் செயல்கள் அநிச்சையாய் நடக்கிறது. யாரோ ஸ்டார்ட் செய்து நம் கையில் தந்த கார் போல் நம் வழியே செயல்கள் வெளியாகிறது.அதன் வழியே நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். நாம் சிந்தித்து எடுப்பதாக கூறும் முடிவுகள் எல்லாமே கூட நம் அவ்வாறு சிந்தித்து அந்த முடிவுக்குத் தான் இயல்பாக வந்தாக வேண்டும் என்றே புரோக்ராம் செய்யப்படிருக்கிறது. பெருவெடிப்பு தோன்றிய காலம் முதல் இதுவரையிலான தன்னுணர்வின் அனுபவங்கள்,அறிவின் பரிணாமம் இன்னும் மறைவான பிரபஞ்ச சக்திகள் எல்லாமே நாம் இன்று எந்த சட்டையை அணிய வேண்டும், ஒரு விசயத்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. சுய தேர்வு என்பது நடக்கும் விஷயங்களில் நம் இருப்பை உணர்ந்து தக்க வைப்பது தான்.
அப்படியானால் நம் வாழ்வுக்கு அர்த்தம் இல்லையா ? நோக்கம் இலையா? உண்டு... யாருக்கென்றால் நம் ஆழ்மனதை இயக்கும் ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்திக்கு.. நாம் விழிப்படைந்தால் மட்டுமே நம்மை அந்த பிரபஞ்ச சக்தியாக அடையாளம் காண முடியும் . நம்மாலும் விருப்பட்ட ரியாலிட்டியை தேர்வு செய்ய முடியும்.
எதிரே ஒரு ப்ளேட்டில் ஒரு ஆப்பிளும், ஆரஞ்சும் உங்கள் முன் நீட்டப்படுகிறது. எதை எடுக்க வேண்டும் என உங்கள் அறிவு தீர்மானிக்கும் முன்னே உங்கள் ஆழ்மனம் அதை எடுக்கும் கட்டளையை தன் புரோக்ராம்படி எடுத்து விடுகிறது. அதாவது எடுக்கும் செயல் ஒரு தீர்மானத்தால் வந்தது அல்ல. ஒரு பட்டர் பிளை எஃபக்ட் போல உங்கள் அனுபவம் உணர்வு சூழலின் ஒரு விளைவு. கணித சமன்பாடு போல் செயல் நடக்கிறது .ஆனால் இங்கே உங்கள் செயல் நடப்பது குவாண்டம் வெளியில். நீங்கள் எடுக்கும்போது ஆப்பிளும் ஆரஞ்சும் அந்த நிலையில் வெறும் அதிர்வுகள். அது உங்கள் அறிவில் தன் சூப்பர் பொசிசனிலிருந்து ஆப்பிளாகவோ ஆரஞ்சாகவோ உருக்கொள்கிறது. நீக்கள் அன் கான்சியசாக இருந்தால் உங்கள் வினை விளைவு படி அடைந்த பழம் எதுவோ அதை நீங்கள் தேர்வு செய்ததாய் உணர்வீர்கள். ஆனால் நீங்கள் விழிப்பு நிலையிலிருந்தால் உங்கள் முன் பழத்தட்டு நீட்டப்படும் போது அதில் இரண்டு ரியாலிட்டி இரண்டு விளைவுகளுடன் எதிரே இரு கிளைகளாய் பிரிவதை காண்பீர்கள். உங்கள் கர்மா ஆரஞ்சை தேர்வு செய்தாலும் , நீங்கள் ஆப்பிளை தேர்வு செய்ததாக உங்கள் ஆழ் மனதை ரீப்ரோக்ராம் பண்ண முடியும் . இது உங்கள் கான்சியசை ஆப்பிளின் ரியாலிட்டிக்கு உருக்கொடுக்க செய்யும். அப்போது உங்கள் சுயம் இரண்டாகி இரு ரியாலிட்டியிலும் இரு பாரல்லல் யூனிவர்சிலும் பயணிக்கும். விழிப்புடன் ஆப்பிளை தேர்வு செய்து அந்த யூனிவர்சில் பயணிக்கும் உங்களுக்கு மற்ற யூனிவர்சின் உங்கள் சுயமானது உங்களை பொறுத்தவரை உருவற்ற குவாண்டம் அதிர்வு.
நாம் எப்போதெல்லாம் படைப்பு (manifestation ) நிகழும் கணத்துத்துக்கு , விழிப்புணர்வுக்கு நெருக்கமாக இருக்கிறோமோ அப்போது தான் நம் ரியாலிட்டியை தேர்வு செய்து உருக் கொடுக்க முடியும். மயங்கிய ஆன்மாவை கர்மா இழுத்து செல்லும். இங்கு ஆப்பிளும் ஆரஞ்சும் நாம் உணர்வது தான். சூட்சும நிலையில் ஆப்பிள் ஆரஞ்சு ஒன்றாகவே இருக்கிறது. ஏழ்மை , செல்வம் என்றெல்லாம் un manifested நிலையில் இல்லை. ஏழை பணக்காரன் என்ற ரியாலிட்டியை கட்டமைப்பதும் அதை தேர்வு செய்வதும் மைன்ட் செட். ஒரு ஏழை விழிப்புடன் பணக்கார ரியாலிட்டியை உருவாக்கி அடைய முடியும். மயக்கத்தில் , அல்லது விழிப்பில் ஏழையாயும் தொடரலாம்.
அதென்ன விழிப்பில் ஏழையாய் துன்பம் அனுபவிப்பது..தன் ரியாலிட்டியை மாற்றி சந்தோசமாக வாழ்வை கழிக்க வேண்டியது தானே...இங்கு தான் முக்கியமான விசயம். இன்ப துன்பம், ஏழ்மை, செல்வம் எல்லாம் இருமையில் உள்ளவை. ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல. ஒன்றை அனுபவிக்காமல் மற்ற நிலையை அனுபவிக்க முடியாது. ஆப்பிளை தேர்வு செய்தால் அடுத்து ஆப்பிள் திகட்டி அடுத்து ஆரஞ்சை தேர்வு செய்தாக வேண்டும் . அது போல ஆரஞ்சின் ரியாலிட்டியும் ஆப்பிளை அடைந்தாக வேண்டும். நம் ரியாலிட்டி எதுவோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு முழு விழிப்புடண் அனுபவித்து கடப்பதிலும் தவறில்லை.
விழிப்பு என்பதே பேதம் இழத்தல். நம் ரியாலிட்டியை , நம் எண்ணங்களை , நம் செயல்களை முழுவதும் கட்டுப்படுத்தி நம்மை ஆழ் மன அலைகள் ஒரு பொம்மலாட்டக் காரனின் கயிறுகள் போல நம்மை இயக்குகிறது. சூட்சுமமாய் நம்மை இயக்கும் அந்த மொம்மலாட்டக்காரன் யார்? எந்த சக்தி?
கருத்துகள்