அ..ஆ....ஆச்ச்.... தும்மல்


சாதாரணமாக நாம் காணும் பல நோய்களுக்கு ஒவ்வாமை எனப்படும்அலர்ஜிதான் காரணம். தினந்தோறும் பயன்படுத்தப்படும் பலவகையான சோப்பு, பவுடர், பேஸ்ட், வாசனைப் பொருட்கள், எண்ணெய், சாக்ஸ், ஆடைகள், அணிகலன்கள் போன்ற பொருட்கள் முதல் தும்பு, தூசிகள், நெடி, உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள், சாதாரண தலைவலி மாத்திரைகள் போன்றவை வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்குஅலர்ஜியைத் தோற்றுவிக்கக்கூடும். இதன் காரணமாகவும், நாளுக்குநாள் அதிகரித்துவரும் தொழிற்சாலைக் கழிவு, சுற்றுச்சூழல்கேடுபோன்றவற்றாலும், அலர்ஜியைப் பற்றிஅதிகமாகத் தெரிந்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அண்மைக் காலமாக நம் மக்களிடையே அதிகரித்துவருகிறது. அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன? அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில்தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோமூச்சுமுட்டி திணறல் ஏற்படும். வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை. அதே அலர்ஜிப் பொருளால்உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்றுமூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும்எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும்பல்வேறு நோய்களாகும். தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்குஅலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும். பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன. தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா? இந்த முக்கிய அறிகுறிகளக் கொண்டு தும்மல் நோயை அலர்ஜியால் வரும்தும்மல்நோய், அலர்ஜி இல்லாமல் வரும்தும்மல்நோய் மற்றும் வேறு காரணங்களால் வரும் தும்மல்நோய் என்று இலண்டனில் 1994 ஆம் வருடக் கருத்தரங்கில் இந்த நோயைப் பிரித்துஅணுகி, ஆராயவேண்டும் என்றுபரிந்துரைக்கப்பட்ட.து இதன் அடிப்படயில் தும்மல் நோய் பலவகப்படுகின்றது. அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி? பொதுவாக பெரும்பாலான சமயங்களில் பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத் துகள்களினாலேயே இத்தும்மல் நோய் ஏற்படுகின்றது.பல்வேறு மகரந்தத்துகள்கள், பல்வேறு காலங்களில், பல இடங்களுக்குக் காற்றில் பரவுவதால் இத்தும்மல்நோய் உண்டாகின்றது. எனவே, ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் உதாரணமாகபனி, பூ பூக்கும் காலங்களில்மட்டும் இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் தும்மிக்கொண்டே இருப்பார்கள். வருடத்தின் மற்றமாதங்களில் இந்நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலேயே இருக்கும். எனவேதான் இது ஒவ்வாமை பருவக் கால மூக்கழற்சி நோய் (Allergic SeasonalRhinitis) என்றழைக்கப்படுகின்றது. இத்தும்மல் நோய் பெரும்பாலும் இளவயதிலேயேஆரம்பிக்கும். சிறுவர்கள் இளைஞர்கள், இளம் பெண்களேநடுத்தர மற்றும் வயதானவர்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளங்காலை அல்லது விடியற்காலை மற்றும் மாலை வேளைகளில் காற்றில்மகரந்தத்துகள்களின் அளவு அதிகம் இருப்பதால் இவ்வகையான மூக்கு அலர்ஜி இருப்பவர்களில்பெரும்பாலோர் படுக்கையிலிருந்து எழுந்து குளித்து முடிக்கும் காலம் வரை பல மணித்துளிகளுக்குத்தொடர்ந்து தும்மிக் கொண்டே இருப்பார்கள். குறைந்தது 50 முதல் 100 தும்மலாவது தொடர்ந்து தும்முவார்கள். பின்புநல்ல வெயில் வந்தவுடன் வழக்கம்போல் எந்த பாதிப்புமின்றி தங்கள் பணிகளைச் செய்வார்கள்.இது மிதமான தும்மல்நோய் ஆகும். இந்நோயால் துன்புறும் சிலரின் மூக்கில் கடுமையான எரிச்சல் அல்லஅரிப்பு இருந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில், வாயின் மேற்புறத்தில் உள்ள அன்னச்சதையும் எரியும். அல்லது அங்கு நமைச்சல் ஏற்படும். எனவே நாக்கைக் கொண்டு அவ்வப்போது மேல் அன்னத்தைத் தடவிக் கொண்டோஅல்ல சப்புக் கொட்டிக் கொண்டோ இருப்பார்கள். பல சமயங்களில் தொண்டையும் எரியும். இவற்றைத் தொடர்ந்து பலமானதொடர் தும்மல்கள் ஏற்படும். தும்மித்தும்மித் துவண்டு விடுவதுமுண்டு. மூக்கிலிருநது; வெறும் நீர் வடிந்தவண்ணம் இருக்கும். கண்களிலும்அதன் ஓரங்களிலும் அதிக நமைச்சலுடன் கூடிய ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கண்களில் நீர் தேங்கி நின்று, கண்கள் வீங்கிச்சிவந்துவிடும். சிலர் வருடம் முழுவம் தும்மல் நோயால் துன்பப்படுவார்கள். அவர்களின்மூக்கு எந்நேரமும் அடைப்பட்டிருப்பதால் இவர்கள் வாய் திறந்தபடியே மூச்சுவிடுவார்கள்.இரவு நேரங்களில் உற்பத்தியாகும் சளி தொண்டைக்கும் இறங்குவதாலும், எந்நேரமும், மூக்கு அடைபட்டுக் கிடப்பதாலும், இவர்கள் தூங்கும்போது குறட்டைச் சத்தமும்கேட்கும். தொண்டைக்குள் சளி அடைப்பதால் அவ்வப்போது தூக்கமும் கெட்டு, எழுந்து உட்கார்ந்து, சளியைத் துப்பியபின்பு, சிறிது நிவாரணம் பெறுவார்கள். பகல் நேரங்களில்தொண்டையில் சளி சேர்வதால், தொண்டைக்கும், காதுக்கும் இடையே உள்ள காற்றைச் சமன்படுத்தஉதவும். உட்செவிக் குழல் Eustachian tube)) அடைத்துக் கொண்டு காதும் சரிவர கேட்க முடியாமல்போய்விடும். எனவே அவ்வப்போது வாயைத் திறந்து திறந்து மூடுவார்கள். இதனால் காது கேட்கும்திறன் சற்றுக்கூடுதலாகும். இந்நோய்க்கான முறையான சிகிச்சயை மேற்கொள்ளாவிடில் காற்றறைகளிலும், நடுக்காதுகளில் சளித் தேங்கி Allergic மற்றும் இது போன்ற நோய்கள் ஏற்பட்டு தலைவலி, காதுகளில் சீழ்வடிதல் போன்ற தொல்லைகள் ஏற்படுவதுடன்சிலர் இருமலாலும், தோல் தடிப்பாலும்ஆஸ்துமா இழுப்பாலும் கஷ்ட்டப்படுவார்கள். இலேசான குளிர்காற்று,பனி, வெயில், தூசி,புகை, விரல்கள் போன்றன மூக்கில்பட்டாலே முன்பு சொன்ன அனைத் அறிகுறிகளும் படிப்படியாகக் காலை நேரங்களில் மட்டுமல்லாதுமற்ற நேரங்களிலும் ஆரம்பித்த பின்பு நாட்கள்,வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் தொடர்நது நீடிக்கும். இவ்வகையான தும்மல் நோய்க்கு வருடம் முழுவதும் இருக்கும் அலர்ஜித் தும்மல்நோய் Perennial allergicrhinitis என்று பெயர்.எனவே இந்நிலை ஏற்படாமல் இருக்க முதலிலேயே தங்கள் குடும்ப மருத்துவரின் வழியாக நல்லஅலர்ஜி ஆஸ்த்மா சிறப்பு மருத்துவரின் ஆலோசனப் பெறுவதே நல்லதாகும். இந்நோய்க்கு என்னென்ன பரிசோதனகள் முக்கியமாகச் செய்யவேண்டும்? பொதுவாக அலர்ஜிப் பிணியாளர்கள் கூறும் நோய்க்குறி குணங்களைக்கொண்டு, மருத்துவப் பரிசோதனைகள்மேற்கொள்ள வேண்டும். தும்மல் நோயைப் பொறுத்தவரை நோய் தோன்றியவிதம், இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், எந்தெந்த மாதங்களில் நோய் தீவிரமடைகிறது, வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பூந்தோட்டங்கள், மரம்,செடிகள் உள்ளனவா, சாதாரண ஜலதோஷத்திலிருநதுஇவ்வகையான தும்மல் நோய் எவ்வாறு வேறுபடுகின்றது, எந்தச் சீதோஷ்ண நிலைகளில் இந்நோய் குறைகிறது, இதனுடன் மற்ற அலர்ஜி நோய்களாலும் துன்புறுகின்றனரா, பெற்றோர்கள் மற்றும் அவர்கள் வழி வந்தவர்கள்ஆஸ்துமா, கரப்பான், தோல் அலர்ஜி தொடர்பான நோய்க்குக் குணங்களக் கொண்டிருக்கின்றனரா, அவர்கள் செய்யும்தொழில் என்ன என்பது போன்ற மிகவும் விரிவாக Care history மேற்கொள்ளப்படவேண்டும். மூக்குச்சளிச் சோதனை,சாதாரண இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர், மலம்,சைனஸ், மார்பு எக்ஸ்ரே போன்றENT பரிசோதனகளுடன்முக்கியமான தோல் அலர்ஜி டெஸ்டுகளையும் செய்ய வேண்டும். பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத்துகள் அடங்கிய வெவ்வேறுவகையான, இதற்கென்றே பிரத்யேகமாகத்தயார் செய்யப்பட்டுள்ள கரைசல்களில் ஒரே ஒரு துளியை எடுத்து தோலின் மேலோட்டமாக வலியேதும்இன்றிச் செய்யப்படும் இவ்வகையான modified prick allergens test மூலமாகத் துல்லியமாகத் தும்மல் நோய்க்கானகாரணங்களை அறியலாம். இதை முறையுடன் அலர்ஜி ஆஸதுமா சிறப்பு மருத்துவரின் முதலுதவி வசதிகள்கொண்ட மருத்துவமனையிலேயே செய்து கொள்வது மிகமிக முக்கியம். முக்கியமான சிகிச்சை மற்றும் தவிர்க்கும் வழிகள் என்னென்ன? இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தோல் அலர்ஜி டெஸ்டுகளின் மூலம் கண்டறியப்பட்டஉடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள முறையாகப் பட்டியலிட்டுத் தவிர்க்க முடிந்தவற்றத்தவிர்த்து முடியாத பலவகை மகரந்தத்துகள்கள், காளான், முடi;டகள், வீட்டுத் தூசி, சாலைத் தூசி, கரப்பான், பாச்சான், வீட்டுத்தூசி பூச்சி போன்றவற்றிற்கு முறையாக அலர்ஜித் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும். இவ்வகையான தடுப்பூசி சிகிச்சை முறை, அலர்ஜியினால் வரும் அனத்துவகைத் தும்மல் நோய்களைமுழுமையாகக் குணப்படுத்வடன் மற்ற அலர்ஜிகளால் வரும் ஒவ்வாமை ஆஸ்துமா, ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைக்கும் அர்டிகேரியாநோய்களும் வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகின்றது. Oral nonsedative antihistamine H2 blockers மாத்திரைகள் போன்றவைதற்காலிக நிவாரணம் தந்தாலும், தும்மல் நோய்க்கானமூல காரணங்களுக்கு முறையாக சிகிச்சை மேற்கொள்வது நீண்டகால அல்ல முழுமயான சிகிச்சை முறையாகும். பனி, பூ பூக்கும்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வருவது, பிரயாணங்கள், தோட்டப்பணிகள் போன்றன கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும். குறிப்பாக, அலர்ஜி தன்மையுடயசிறுவர் காலையிலும், மாலையிலும் வெளியேநீண்ட நேரம் விளயாடுவதைக் குறைத்தல் நல்லது. படுக்கை அறையில் ஜன்னல்கள் இதுபோன்ற காலங்களில் மூடி இருப்பதேபயன்தரும். குறைந்த பொருட்களுடன் கூடிய படுக்கை அறையே இவர்களுக்குக் குதூகலத்தைக் கொடுக்கக்கூடிய.துவீட்டைச் சுற்றி புல், பூண்டுகள், பூந்தோட்டம், மரம்,செடிகொடிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்வதே இவர்களைப் பொறுத்தவரை சுகமளிக்கக்கூடியது. சுகாதாரமானது.

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சிற்றிருமல்
நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கோழை இருமல்
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும்,
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
How To Relieve Your Sinus Infection In Under 30 Seconds

Here’s my method:

Push your tongue against the roof of your mouth. Apply pressure but don’t go overboard.
Place your thumb between your eyebrows.
Press down with your thumb for about 30 seconds, applying a decent amount of pressure. Don’t push too hard though.

Your sinuses will begin to drain almost immediately. This works because the vomer bone in your nasal passages rocks back and forth with the pressure, which loosens up the phlegm in your sinuses, allowing it to drain.
Next time you’re feeling stuffed up, give it a try.


Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
*
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
*
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
*
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
*
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்...
* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.
* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.