நான் யார் ? (Part-1)

 

இந்த கேள்விக்கு சுலபமான பதில் ஏதும் இல்லை. நான் யார் என்று விளக்கும் எந்த பதிலிலும் உண்மையில் நான் இல்லை.அது விளக்க முடியாத அனுபவம்
என்னை நான் மூன்று அடையாளங்களில் காண்கிறேன்,
1) நான் யார் என்று என்னை உணர முயலும் என் தன்னுணர்வு.
2) என்னைபற்றி நான் உணர்ந்தவற்றைக்கொண்டு உருவாக்கிய மனம்.
3)என்னைப்பற்றி பிறரது கருத்தில் உள்ள பிம்பம்
சுருக்கமாக சொன்னால் நான் என்பது மூன்றாகப் பிரிந்திருக்கிறேன். உணரும் நான் ,உணரப்பட்ட ‘நான் , உருவாக்கப்டட நான்
இதில் எது உண்மையான நான்?
மூன்றாவது “நான்” என்பது என் செயல்களை கொண்டு பிறர் மனதில் உருவாகும் என்னைப் பற்றிய கருத்து, அண்ணனாக ,தம்பியாக அப்பாவாக நண்பனாக எதிரியாக என பல விதங்களில் நான் அறியப்படலாம்.இது நான் இறந்த பின்னும் இருக்கும்.மேலும் இதை உருவாக்க என் உடலும் மூளையும் தேவையாயிருக்கிறது.நான் ஒரு செயலற்ற ,பயனற்ற ஒன்றாய் இருந்தால் இந்த மூன்றாவது நான் இருக்க முடியாது. அதே நேரம் என் செயல்களால் பிறருக்கு உண்டாகும் நன்மையையோ தீமையையோ பொறுத்து என்னப்பற்றிய ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. எனவே இதுவல்ல உண்மையான நான்.
இனி இரண்டாவது “நான்” இந்த உடலும் மூளையும் நான் உருவாக்கி உணர்வது. இந்த மனித உடலுக்கு ஒரு தோற்றமும் ஒரு ஆயுளும் இருக்கு ஒரு முடிவும் இருக்கு என்று உணர்கிறோம். மனித உடலில் என்னை எப்போது உணர்ந்தேன்?. புலன்களும் உடலும் உருப்பெற தொடங்கியதிலிருந்து புலன்களால் நம்மை உணர்ந்து அது பற்றிய அறிவை நாம் வளர வளர வளர்த்துக் கொண்டோம். இந்த நான் என்பது பிறப்பிலிருந்து பிறந்து வளர்ந்து ஒரு நாள் மடிகிறது. இது நம் மூளையில் நரம்புகளாக சேமிக்கப்படும் அறிவு. மூளை அழியும் போது இந்த நான் அழிந்து விடும்.
இந்த நான் தான் உண்மையான நானா என்றால் இல்லை.என் பிறப்புக்கும் முன்னே நான் இருக்கிறேன், அதன் காரணமாகத்தான் தான் பிறப்பே நடக்கிறது. .ஆனால் அந்த என்னைப்பற்றிய தகவல்கள் என் மூளையில் இல்லை ஏனெனில் எனது மூளை நான் உருவாக்கிக் கொண்டது.அந்த என்னை பற்றிய தடயங்கள் என் செல்களுக்கு தெரியும் என் ஜீன்களின் நினைவில் இருக்கலாம்.அதற்கும் முன் மூலக்கூறுகளுள் அணுக்களின் உள்ளேயிருந்து என் பூர்வீகம் வெளிப்படுகிறது
( தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்

Rashid Faizee இவ்வாறு கூறியுள்ளார்…
Following