நான் யார்? ( பகுதி7)

 


நான் என்பது அடிப்படையாக நுண்ணறிவின் அதிர்வு ( vibration of intelligence ) . நம் கர்ம வினைககளின் பதிவுகள் காரணம் மாயையில் இவ்வுடலெடுத்து வாழ்கிறோம் என முன் பதிவுகளில் பார்த்தோம்.
இந்த அதிர்வு ஏன் ஏற்பட்டது?
அனைத்துக்கும் மூலமான பரம் பொருளை நம் அறிவால் அறிய முடியாது எனினும் அதை பற்றி நாம் அறிய முடிகிற ஆதி அம்சம் அறிவாகவே இருக்கிறது. அறிவிலிருந்து தான் அனைத்தும் பிறக்கிறது.
இந்த பரம் பொருளாகிய நுண்ணறிவு ஏகமாக இருக்கிறது. அறிவது அறியப்படுவதுஅறிவு என்ற பேதமற்ற நிலையில் இருக்கும் பரம் பொருளானது அந்நிலையில் அறியப்படாத காரணத்தால் அது இருக்கிறது என்றோ இல்லை என்றோ நிர்ணயிக்க முடியாது. தன்னை அறியாத பரம்பொருளை முழுமையானது என்றோ அறிவு என்றோ கூற முடியாது.
எனவே அறிவு தன் இருப்பை அறிவதன் மூலமே முழுமையாகும். தன்னை அறிவதற்காக அந்த ஓரான்மா தனக்கொரு பிம்பத்தை தான் விரும்பியவாறு உருவாக்கி கொள்கிறது. பின் அந்த பிம்பத்தை தானாக கருதிவிடுகிறது இதனால் முதல் கர்மா உருவாகிவிடுகிறது. பிம்பத்தில் சிறைபட்ட ஆன்மா தன் மூலமான சுத்த ஆன்மாவை இறையாக அறிகிறது. இந்த பிம்பம் கர்மாவை சுமப்பதால் குறைபட்டதாகிறது. இந்த குறையால் அமைதி இழக்கிறது. இனி இதன் முன் இரு சாய்ஸ் தன் மூல நிலைக்கு திரும்பலாம். அல்லது இன்னொரு பிம்பத்தை உருவாக்கி அதை தானாக உணரலாம். மூல நிலைக்கு திரும்புவது என்பது தன் இருப்பை existence ஐ இழப்பது ஆகும் எனவே. இன்னும் இன்னும் தன்னை மாயையில் அடையாளம் காணும் பொருட்டு தன் நகல்களின் நகல்கள் என மாயைக்குள் மூழ்கிவிடுகிறது. மாயை மூலம் ஏற்பட்ட பந்தத்தால் இருப்பில் ஆசை ஏற்பட்டு மாயையில் வாழ ஆரம்பிக்கிறது. அதனால் கர்மாவும் உடலும் துன்பமும் ஏற்றுக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் துன்பம் அதிகமாக போய் விடுதலையை நாடும் அப்போது முதல் அந்த ஆன்மா நகல்களை விட்டு தன் மூல உணரவுக்கு திரும்ப ஆரம்பிக்கும் புதிய கர்மாக்கள் தொடர்வதை தவிர்த்து பழைய வினைகளை வாழ்ந்து அழித்து விடுதலை பெறும் . இது எதுவரை என்றால் முதல் நகல் வரை. உண்மையில் இந்த ஆன்மா பரம்பொருளை விட்டு வேறானதில்லை என்றாலும் ஒரு போதும் இந்த ஆன்மா மாயையை கடந்து பரம்பொருளாய் தன்னை உணராது. ஏனெனில் அந்நிலையில் இருப்பு கேள்வியாகிவிடும். எனவே மாயைக்குள் உயர் தாழ் நிலையென சுழற்சியில் இருக்கும். இந்த மயக்கம் விழிப்பு ஜென்மங்களாய் வாழ்வாய் அனுபவப்படுகிறது
எனவே வாழ்வின் நோக்கம் மயக்கமா விழிப்பா என நம் கர்மா தான் தீர்மானிக்கிறது. எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் நாம் நீச்சலடிக்க தேவையில்லை .இலக்கு தேவையில்லை. ஓடும் நீரில் மிதப்பது போல் கிடத்தலே வாழ்வாகும். இது தான் சரணாகதி.
நீங்கள் ஃபேஸ் புக் எனும் மாயையில் லாகின் ஆவதால் எங்கோ இருக்கும் என்பதிவு பாரக்க முடிகிறது. இப்படி ஒரு நன்மை தேவைப்படுவதால் மாயையை தேர்வு செய்கிறோம். இது வேண்டாம் என்றால் லாக் அவுட் ஆகி உங்கள் பக்கத்திலிருக்கும் குழந்தையை கொஞ்சலாம் .அதுவும் வேண்டாம் என்றால் உங்கள் ரியாலிட்டியிலிருந்து கொஞ்ச நேரம் லாக்அவுட்டாகி கண்ணை மூடி தியானித்து உங்கள் மனதை கவனிக்கலாம்.ஒரு பூர்வ மனதின் தேவை தான் புதிய பரிமாணங்களில் log in ஆக காரணம். தேவை முடிந்து வெளியேறிவிடும். ஆனால் எந்த உணர்வு நிலையை அனுபவப்படுகிறதோ அதற்குரிய விதிகள் அப்பொழுதிருந்து செயல்பட்டு கட்டுப்படுத்தும். விழிப்பு என்பது மாயையிலிருந்து விடுதலை என்றாலும் அது சுயத்தின் இழப்பும் கூட. ஏனெனில் சுயம் ( self) என்பது மாயையின் படைப்பு.
 
(தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்