நான் யார்? ( பகுதி 6)

 

இந்த பகுதியில் நாம் ஏன் மனிதனாக இருக்கிறோம்? என காண்போம்.

நாம் என்பது நம் அனுபவங்கள் மற்றும் அதன் நினைவுகளால் கட்டி எழுப்பபடும் ஓர் கட்டிடம். நம் ஒவ்வோர் தேர்வும் நம் அனுபவத்தை மாற்றுகிறது. அதனால் நாமும் மாறிவிடுகிறோம். கணந்தோறும் இந்த மாற்றம் நடக்கிறது. ஒர் சிகரெட் பிடித்தால் ஒரு பழம் சாப்பிட்டால். ஒரு பொய் சொன்னால் ஒரு தவறை கண்டும் காணாமல் சென்றால் ஒரு தவறை செய்தால் ஒரு நன்மை செய்தால் அக்கணம் நீங்கள் மாறிவிடுகிறீர்கள். உங்கள் செயலின் அல்லது தேர்வின் விளைவு உங்களுடன் ஒட்டிக்கொள்ளும். இது தான் கர்மா.
உங்கள் இப்போதய உடலும் மனித உணர்வும் கர்மாவால் ஆனது.
ஒருவருக்கு பணம் தேவைப்படுகிறது அதை நிறைவேற்ற ஒரு வேலையில் சேர்கிறார். உடனே அந்த வேலை எனும் பாத்திரம் அவருடன் ஒட்டிக் கொள்கிறது. அவர் அந்த பாத்திரமாகிவிடுகிறார். ஒரு மருத்துவர் ,கண்டக்டர் வக்கீல் என. அது போல நம் ஒவ்வொரு நிலைபாடும் தேர்வும் நம்மை பாதித்து மாற்றிக் கொண்டே இருக்கிறது.
ஒருவரிடம் கடன் வாங்கினால் அது எப்படி சுமையாக உறுத்தலாக இருக்குமோ அது போலத்தான்..
நாம் செய்யும் நற்கருமங்கள் என்பது நமக்கும் நம் சந்ததிக்கும் கர்மாவில் சேர்க்கும் சொத்து.
நம் தன்னுணர்வு ( concious) என்பது நம் முன்னோர்களின் தன்னுணர்விலிருந்து கிளைத்து பிரிந்தது. நாம் அவர்களின் உட்பிரிவு. அவர்கள் வினையும் நமது இன்றைய நிலைக்கு காரணமாகின்றது. உடலில் வேறுபட்டாலும் ஆன்ம ரீதியாக ஒரு மரத்தின் கிளைகள்.
அனுவங்களின் தேர்வு கர்மாக்களை உருவாக்குகிறது. கர்மா உடலுக்கு, வாழ்வுக்கு காரணமாகிறது.
இந்த கர்மா என்பது உண்மையில் நினைவுகளாகத்தான் இருக்கிறது. ஒரு பொது நினைவு வெளியில் வேறு பரிமாணத்தில் இருக்கிறது. நம் அனுபவங்கள் அறிவுகள் எல்லாம் மூளையின் நியூரானகளின் மையம் வழி அணு மையம் வழி மற்றொரு பரிமாணம் செல்கிறது. அது போல நம் பூர்வ கர்மா இப்போதய கர்மா எல்லாம் அணுமையங்களாக DNA,RNA க்களாக ரசாயன மின் அலைகளாக நம் மூளையை அடைந்து நாம் யாரென வெளிப்பட்டு நிற்கிறது. நம் குரோம சோம்களில் உண்டாகும் MUTATIONக்கும் உயிர்களின் பரிணாமத்திற்கும் (Evolution) இந்த கர்மா தான் காரணம்.
இந்த நினைவு வெளியை Akashik records என்றோ லவ்குல் மஹபூல் (இஸ்லாமில்) என்றோ சொல்வார்கள்.
அனைத்து விஷயங்களும் இங்குதான் பதியப்படுகிறது. இங்கிருந்து தான் அனைத்தும் அறியப்படுகிறது.ஒரு ஹார்ட் ட்ரைவ் போல. ஒரு செர்வர் போல.
உங்கள் உணவு டேபிளில் நீங்கள் பார்க்கும் ஆம்லெட்டை அவ்வாறு காணபதற்கும் அவ்வாறு உணர்வதற்கும் சுவைப்பதற்கும் காரணமே உங்கள் பூர்வீக நினைவு பதிவுகள் தான். உடலில் ஏற்படும் நோய் ,முதுமை ,மரணம். இங்கிருந்து தான் வருகிறது.
இக்கண உணர்வாயிருக்கும் உங்களுக்கு உடல் மற்றும் இடம் ,கால அனுபவம் தருவதும் இந்த நினைவு பதிவுகள் தான். நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என உணர்த்துவதும் இந்த மெமரி தான்.
நம் கர்மாவின் நினைவுகளில் ஆதி மனிதன் வரை இருக்கிறான். அதற்கப்பால் அமீபா வரை இருக்கிறது .அதற்கப்பால் அணு எலக்ட்ரான் வரை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கிளைகள்.
ஆதி பிதா ஆதமின் கானஷியஸ் பகுத்தறிவை அடைந்த போது அதிலிருந்து நம் நம் நிலை மனிதனாக தொடர்கிறது. இன்னும் அந்த கர்மாவை விட்டு நாம் மீளவில்லை. அந்த முதல் பாவம் சுமக்கிறோம்.
நம் கான்ஷியஸ் என்பது ஒரு கிளை தான் இந்த பூமியின,சூரியனின் காலக்சியின் பிரபஞ்த்தின் கானஷியசின் ஒரு கிளை. கிளையிலிருந்து ஒவ்வொரு நிலைக்கும் விழிப்படைய விடுதலை பெறுவோம்.
இங்கு நமக்கு கொடுக்கப்பட்ட கருவிகளைக்கொண்டு கொடுக்கப்பட்ட வேலை முடித்து வெளியேற வேண்டும். கொடுக்கப்பட்ட கருவி சிந்தனை. அதைக்கொண்டு அடைய வேண்டியது விழிப்பு. இல்லாவிட்டால் இந்த பயணம் மிகவும் நீண்டது . மீளவே இயலாதவாறு புதிய மாயைகளில் புதிய உடல்களில் சிக்கிக்கொள்வீர்கள். ஒரு கம்பனியில் ஒருவன் மேனாஜராக புரோமசன் பெறுவதும் பியூணாக டிப்ரமோசன் ஆவதும் போல நம் செயல்கள் எண்ணங்கள் தேர்வுகள் நம் நிலைகளை உயர அல்லது தாழ செய்து விடுகிறது. இதுவே சொர்க்கம் நரகம் என உவமிக்கப்படுவது.
நம் எண்ணங்கள் செயல்கள் தேர்வுகளை உயர்நிலைகளை பற்றியிருக்க செய்வதன் மூலம். உயர் கானஷியஸ் தொடர்பால் நாம் விழிப்படைகிறோம். உயர்நிலை அடைகிறோம். நாம் தெய்வீகமாகிறோம். புனிதம் பெறுகிறோம். கர்மா மற்றும் மனித உடல் சிறையிலிருந்து விடுபடுகிறது ஒரு பூ காயாகி கனிந்து மரத்திலிருந்து விடுபடுவதைப் போல.. நாம் புதிய பரிமாணத்தில் புதிய தெளி நிலைக்கு சுதந்திர நிலைக்கு....மாறிவிடுவோம்
 
 
(தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்