முதல் உதவி

விபத்துக்கள் யாருக்கு எங்கே எப்போது நடக்கலாம் என்று சொல்ல முடியாது. யாராவது காயமடைந்தால் அல்லது திடீரென ஆபத்தான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே பக்கத்தில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல வேண்டியிருக்கும். என்னதான் பக்கத்தில் மருத்துவ மனை இருந்தாலும் அங்கே கொன்டு சென்று சேர்ப்பதற்குள் நோயாளிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எது வெல்லும் என தெரியாது. இந்த நேரம் நோயாளிக்கு மிக முக்கியமான நேரம். அப்போது நாம் அருகே இருந்தால் என்ன உதவிகள் செய்து அவரைக் காப்பாற்ற முடியும் என தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். அதில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். முதலுதவிக்குரிய மருந்துகளை வீட்டில் எங்காவது ஒரு மூலையில் வைத்து விட்டு அவசரமாகத் தேவைப்படும் நேரங்களில் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. எப்போதும் கண்ணில் படும்படியான இடத்தில் அதற்கென்று ஒரு பெட்டியில் வைப்பது முக்கியம். அதை பூட்டு போட்டு பூட்டி வைக்காதீர்கள். குழந்தைகள் கைக்கெட்டும் இடத்தில் வைக்காதீர்கள். கெட்டுப் போன தேதி முடிந்த மருந்துக்களை அவ்வப்போது சரி பார்த்து பத்திரமாக களைந்து விடவும். ஆம்புலன்ஸ், மற்றும் பக்கத்தில் உள்ள அவசர மருத்துவ உதவி மையங்களின் தொலை பேசி எண்ணை அதில் எழுதி வையுங்கள். ஒவ்வொரு வாகனத்திலும் முதலுதவிப் பெட்டி இருக்கும். தேவைபடும் போது அதை மறந்து விடாதீகள்.

முதலுதவிப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் தேவை:
  • சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் - பல அளவுகளில்
  • பேண்டேஜ் துணி ரோல்கள்
  • ஒட்டும் டேப்புகள்
  • முக்கோண, மற்றும் ரோலர் பேண்டேஜ்கள்
  • பஞ்சு (1 ரோல்)
  • பேண்ட் எய்ட்- பிளாஸ்டர்
  • கத்திரிக்கோல்
  • சிறியடார்ச்
  • தெர்மோ மீட்டர்
  • லேடெக்ஸ் கையுறைகள் (2 ஜோடிகள்)
  • சிறிய கிடுக்கிகள்
  • ஊசி
  • ஈரப்பதம் கொண்ட டவல்கள், சுத்தமான, உலர்ந்த துணிகளின் துண்டுகள்
  • ஆன்ட்டி செப்டிக் (சவ்லான், டெட்டால்)
  • பெட்ரோலியம் ஜெல்லி ட்யூப்
  • ஊக்குகள் – பல அளவுகளில்
  • சுத்தப்படுத்தும் கரைசல் அல்லது சோப்
மருந்துகள்:
  • ஆஸ்பிரின் அல்லது பாரசட்டமால் வலி நிவாரணிகள்
  • வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்து
  • பூச்சிக்கடி, தேனீக்கள் கொட்டுதல் ஆகியவற்றுக்கான ஆண்டிஹிச்டமீன் க்ரீம்.-Calamine lotion
  • ஆண்டாசிட் (வயிற்றுப் போக்குக்கு)
  • லக்ஸேட்டிவ்
  • ஆன்டி பயாடிக் ஆயின்மென்றுகள்
  • Hydrogen peroxide
  • தீப்புண்ணுக்கான களிம்பு
  • Children's acetaminophen
  • Smelling salt
அவசர நிலையில் உள்ள காயம் பட்ட நோயாளிக்கு முதலில் சுவாசம் தடைபடாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். நாக்கு அல்லது வாயிலிருந்து வரும் கோழை மூச்சு திணறலை உண்டாக்கலாம். நோயாளியால் சரியாக சுவாசிக்க முடியாவிட்டால் உடனே செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டியது அவசியம்.

நோயாளியின் நாடித்துடிப்பு சீராக இருக்கிறதா? இரத்தம் அதிகமாக வெளியேறுகிறதா? எனப் பார்க்கவும். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலோ, நோயாளி விஷம் சாப்பிட்டிருந்தாலோ, இதயம் அல்லது மூச்சு நின்றாலோ விரைந்து செயல் பட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வினாடிகள் எண்ணப்படும் நேரம் அது.

காயம் பட்டவரை உடனே தூக்கிச் செல்ல வேண்டியிருந்தாலும் கழுத்து அல்லது முதுகுத்தண்டில் காயம் பட்டிருந்தால் மருத்துவ உதவி வரும் வரை அசையாமல் கிடத்தியிருப்பது தான் நல்லது. அல்லது நிலமை மேலும் மோசமாகி விடும்.
அவர் வாந்தியெடுத்தால் கழுத்து முதுகுத் தண்டில் அதிக பாதிப்பில்லை எனக் கருதலாம். ஒருக்களித்து படுக்க வைத்து போர்வையால் சுற்றி கதகதப்பாக வைக்கவும்

ஒருவர் முதலுதவி செய்து கொண்டிருக்கும் போதே மற்றொருவர் மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மருத்துவ உதவிக்கு அழைப்பவர் நோயாளியின் அவசரத் தன்மையை எடுத்துக்கூறி உதவி வந்து சேரும் வர அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். உதவி தேவைப்படும் இடத்தையும் தெளிவாக எடுத்துக்கூறவும். நீங்கள் பதற்றப் படாமல் இருப்பது அவசியம். நோயாளியையும் பதற்றப் படாமல் ஆறுதல் படுத்தவும்.

நினைவிழந்த நிலையில் அல்லது அரைகுறை நினைவு நிலையில் இருக்கும் நோயாளிக்கு தண்ணீர் அல்லது சோடா போன்ற திரவப்பொருள் கொடுக்காதீர்கள். இதனால் தண்ணீர் மூச்சுக்குழாய்க்குள் சென்று மூச்சுத் திணறல் ஏற்படுத்தி விடும். நினைவிழந்த நிலையில் இருப்பவரை அறைந்து குலுக்கி நினைவு கொண்டுவர முயலாதீர்கள் .ஆபத்து.

 மாரடைப்பு வரும்போது செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்
3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்
5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்.
மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.

வெட்டுக்காயங்கள்:
காயத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவ வேண்டும். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தால் அழுத்தம் கொடுத்து இரத்தத்தை நிறுத்த வேண்டும். சுத்தமான பேண்டேஜ் துணியால் காயத்தை சுற்றிக் கட்ட வேண்டும். ஆழமான காயத்திற்கு உடனே மருத்துவரை அணுகவும்.

சிராய்ப்புகள் மற்றும் சிறுகாயங்கள்:
இளஞ் சூடான நீரில் சோப்பினால் காயத்தினை நன்கு கழுவவும்.இரத்தம் கசிந்தால் சுத்தமான துணியினால் காயத்தை கட்ட வேண்டும்.

மூச்சுத் திணறல்:
பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தில்லை என்று கருதலாம். தொண்டையில் ஏதாவது பொருள் அடைத்திருந்தால் மூச்சுத்திணறினால் உடல் நீலநிறமாக மாறும். அவரால் பேச முடிகிறதா? மூச்சுவிட கஸ்டமாக இருக்குறதா? எனக்கேட்பது அவசியம். அவரால் பேசமுடியாத நிலையிலும் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். ஏனெனில் மாரடைப்பு ஏற்பட்டாலும் இதே அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச முடியும். உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மயக்கம்:
தலை லேசாகி சுற்றுவது போலிருந்தால், சோர்வு, வாந்தி, தோல் வெளுத்துக் காணப்படுவது மயக்கம் வருவதற்கான அறிகுறி. இன்னிலையில் மயக்கம் வருவதை தவிர்க்க முன்புறமாக சாய வேண்டும். முழங்கால்களுக்கு நேராக கீழே தலையை சாய்த்துக் கொள்ள வேண்டும். இதயத்தை விடக்க் கீழே இருக்கும் போது மூளைக்கு அதிக இரத்தம் கிடைக்கிறது. அதையும் மீறி நினைவிழந்தால் தலைப்பகுதியை விட கால் பகுதி உயர்ந்திருக்கும் நிலையில் படுக்க வைக்கவும். உடைகளை தளர்த்தி ஈரத் துணிகளை முகம் மற்றும் கழுத்தில் போடவும். இதன் மூலம் சுய நினைவு திரும்பினால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்

வலிப்பு:
வலிப்பு ஏற்ப்பட்ட ஒருவருக்கு கை கால் விறைத்து வெட்டி வெட்டி இழுக்கும். உடல் நீலமானால் ஆபத்து. நாக்கில் எச்சில் பெருகும் நாக்கை கடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. சுற்றியுள்ள ஆபத்தான எல்லாப் பொருட்களையும் அப்புறப் படுத்த வேண்டும். தலைக்கு தலையணை போன்று எதாவது வைக்கவும். பாதிக்கப் பட்டவருக்கு எந்த திரவங்களையும் கொடுக்கக்கூடாது. மூச்சிழந்தால் சுவாசக் குழாயில் தடையிருக்கிறதா எனப் பார்க்கவும். காற்றோட்டம் செய்யவும். பதற்றப் படாமல் இருக்கவும். முடிந்தவரை உடனே மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.

அதிக வெப்பப் பாதிப்பு:
அதிக வெப்பத் தாக்குதலுக்கு உள்ளானவரை உடனே குளிர்விக்கவும். தண்ணீரில் தூக்கிப் போடலாம். நனைந்த துணியால் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுக்கச் செய்யவும். எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது. மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

விஷம் அருந்தியிருந்தால்:
மருத்துவரை அழைக்கவும். என்ன விஷம் என்பதை அறிந்து மருத்துவருக்கு தகவல் தெரிவித்தால் அதற்குரிய மாற்று மருந்து கொண்டுவர இயலும். மூச்சுக்காற்றின் நாற்றம் வைத்தும் சில விஷங்களை அடையாளம் காணலாம்.
மருத்தவர் ஆலோசனையின்றி எதுவும் சாப்பிட,குடிக்கக் கொடுக்காதீர்கள். மருத்துவர் ஆலோசனையின்றி வாந்தி எடுக்க வைக்காதீர்கள். பாதிக்கப்பட்டவர் தானாக வாந்தி எடுத்தால் சுவாசம் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும்.
கார்பன் மோனாக்ஸைடு காரணம் பாதிக்கப்பட்டால் நோயாளிக்கு உடனே சுத்தமான காற்று கிடைக்கச் செய்யவும்.

நெருப்புக் காயம்: நெருப்புக் காயம் பட்டவுடன் குளிர்ந்த நீரில் நனைக்கவும். தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். மிக ஆழமான நெருப்புக் காயங்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஆபத்தாகிவிடும். அப்படி செய்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிர்ச்சி உண்டாகும். அந்த நிலமைகளில் பாதிக்கப்பட்டவரின் எரிந்த உடைகளை மாற்ற முயலாதீகள். எரியும் பகுதியிலிருந்து , புகை மற்றும் வெப்பமான இடத்திலிருந்து அப்புறப் படுத்தி விடுங்கள். இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருக்கிறதா எனப் பாருங்கள். இல்லாவிட்டால் cardiopulmonary resuscitation(CPR) முறையில் இதயத்தை துடிக்க வைக்க முயற்சிக்கலாம். காயத்தை கிருமி நீக்கிய ஈரமான பேண்டேஜ் துணியால் மூடவும்.

அமிலம் பட்டால்: அமிலம் போன்ற ரசாயனப் பொருட்கள் பட்டால் அந்த இடத்தை பைப் தண்ணீரால் 20 நிமிடங்கள் கழுவி அதன் வீரியத்தைக் குறைக்கவும்.

மின்சாரத் தாக்குதல்: உடனே மின் இணைப்பைத் துண்டிக்கவும் .மின்சாரம் தாக்கியவரை மின் இணைப்பைத் துண்டிக்காமல் தொடாதீர்கள். எதாவது பிளாஸ்டிக் பொருளால் தட்டி விடலாம். மின்சாரம் இதயத்தை தாக்கி இதயத்துடிப்பை நிறுத்தக்கூடும். தேவைப்பட்டால் செயற்கை சுவாசம் கொடுக்கவும்.

பிராணிகள் கடித்தால்: பாம்பு ,நாய் ,பூனை, எலி ,அணில்,சிலந்தி போன்ற பிராணிகள் கடிப்பது சில வேளை மிக ஆபத்தாகிவிடும். பாம்பு கடித்தால் ஆழமான இரண்டு விஷப்பல் அடயாளம் இருந்தால் அது விஷப்பாம்பு. அல்லமல் சிறிய பற்கள் மட்டும் பதிந்திருந்தால் விஷமற்ற பாம்பாக இருக்கலாம். சாதாரண பாம்பு என்றால் காயத்தை சுத்தமாக கழுவி விட்டாலே போதுமானதாகும். விஷப்பாம்பு என்றால் உடனே மருத்துவ உதவி தேவை. கடி பட்டவர் பதற்றமடைவதோ ஓடுவதோ ஆபத்து.விஷம் இரத்தத்தில் கலந்து வேகமாக பரவி விடும். கடிபட்ட இடத்தை தாழ்வாக வைத்திருக்க வேண்டும். கடிபட்ட இடத்தை சோப்பிட்டு நன்றாக கழுவவும்.முதலுதவி செய்பவர் கடிபட்ட இடத்தை கீறவோ,வாய் வைத்து இரத்தம் உறிஞ்சவோ செய்ய வேண்டாம். சீக்கரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மற்ற மிருகங்கள் கடித்தால் காயத்தை சோப்பிட்டு கழுவி Antibiotic Ointment இட்டு சுத்தமான துணியால் கட்டவும். வெறிநாய் கடித்தால் Rabbis எனும் வைரஸ் தாக்கலாம். எலியால் plague வரலாம். எலி சிறுநீர் பட்ட தண்ணீர் அருந்தினால் எலிக் காய்ச்சல் வரலாம். மனிதன் கடித்தாலும் பெரும் பாக்டீரியதொற்று ஏற்படலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தையின் கண்களில் தூசு விழுந்தால் நீரால் அந்தப் பகுதியைத் துடைத்து விடலாம். கண்ணில் ஏதாவது சிறு பொருள் தென்பட்டால் ஒரு சுத்தமான துண்டு துணியின் முனையால் அதை எடுக்கலாம். ஆனால் ஒருபோதும் குழந்தை கண்களை கசக்கி விடக்கூடாது.
காதுகளில் ஏதாவது பொருள் சென்றுவிட்டால் அதை எடுக்க முயல . உடனே மருத்துவரிடம் செல்லவும். சிறு பூச்சியாக இருந்தால் காதுக்குள் வெது வெதுப்பான தண்ணீரை சிறிது ஊற்றலாம். பூச்சி மேலே வந்து மிதக்கும். எடுத்து விடலாம்.
குழந்தையின் மூக்கிலிருந்து ஏதோ ஒரு திரவம் வடிந்து கொண்டிருக்க, அது விடாமல் அழவும் செய்தால் எதையோ மூக்கிற்குள் அது செலுத்திக் கொண்டுவிட்டது என்று யூகிக்கலாம். பாதிக்கப்படாத மூக்கின் பாதியை நீங்கள் விரலால் அழுத்திக் கொண்டு மற்றொரு பாதியின் மூலம் வேகமாக வெளியே மூச்சை விடச் சொல்லலாம். இதன்மூலம் அந்தப் பொருள் வெளியே வரவில்லையென்றால் டாக்டரிடம்தான் போயாகவேண்டும்.
குழந்தைகள் காசு போன்ற சிறு பொருட்கள் எதையாவது வாய்க்குள் போட்டுக்கொண்டால் நிறைய பிரெட் அல்லது வாழைப் பழம் கொடுங்கள் . பெரும்பாலும் இவை ஜீரணப்பாதை வழியாக வெளிவந்துவிடும். ஆனால் உணவுக் குழாயிலோ, காற்றுக் குழாயிலோ சிக்கிக் கொண்டு பெரும் அவஸ்தை கொடுத்தாலோ, உள்ளே விழுங்கிய பொருள் கூர்மையான முனைகள் உடையது என்றாலோ உடனே மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்.

 அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 108

இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் அவசரமாக தேவைப்படுவோர்களும் இந்த தளத்தை பயன் படுத்தலாம். 

மேலும் அறிய:

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
How To Stop Serious Bleeding In Just 10 Seconds!
If you or someone in your home has ended up with a bleeding wound, it can be pretty easy to treat or potentially life threatening. Whether you find yourself wanting to plug a cut or need to slow down bleeding while medics get to you, there’s one trick that Native Americans have used for thousands of years. They put Cayenne pepper on their wounds. Cayenne is a great addition to any first aid kit for backpackers, campers, or even just at home.

It’s easy to use for external wounds. Just apply the powder directly to your cut or laceration. The bleeding should stop shortly after. If your wound is larger than just a minor scrape or cut, a teaspoon of cayenne powder mixed in a glass of water taken orally can help slow the bleeding. The spice is a styptic, meaning it stops bleeding when applied to a wound and helps the blood clot when taken orally.

Dr. Richard Schulze, ND, MH, proclaimed, “If you only master one herb in your life, master cayenne pepper. It’s more powerful than any other.”
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
How to Stop a Heart Attack in 1 Minute

An American herbalist, Dr. Christopher, has never lost a patient to a heart attack in his 35-year career. What he does is he gives a cup of cayenne pepper tea (a teaspoon to a cup of water) to patients who are still conscious. These theory is scientifically proven from personal experience and not on studies done in controlled conditions. So it is even more trustworthy.

how to stop a heart attack

The reason why Cayenne pepper helps with heart attack is because it has at least 90,000 Scoville units, according to the Scoville Heat Units (SHU). This also includes Habanero, Thai Chi, African Bird, Jalapeño, Jamaican Hot Pepper, and Scotch Bonet. A combination of a teaspoon of cayenne pepper and a glass of water can be given to patients who have had a heart attack, but are still conscious and breathing.

If the person is unconscious, put a few drops of cayenne pepper extract under the patient’s tongue.

This will increase the heart rate and carries blood to all parts of the body, thus balancing circulation. It has hemostatic effect, stops bleeding, and helps in heart recovery.

The remedy below is considered to be the best remedy for emergency cases of heart attacks. Just remember to use cayenne pepper and not hot pepper.

Ingredients:

Cayenne pepper powder
a few fresh cayenne peppers
50% alcohol (you can use vodka)
glass bottle (1 litre)
Gloves

Preparation:

Put your gloves on because cayenne peppers are pretty hot.
Fill a quarter of the glass bottle with cayenne pepper powder and put enough alcohol to cover the powder. If possible, do this on the first day of a New Moon.
Blend a few fresh cayenne peppers, and add enough alcohol so it gets a sauce-like texture.
Add the mixture to the bottle which should now be 3/4 full.
Fill the bottle to the top with alcohol and close it well. Shake it several times during the day.
Leave the tincture until the next New Moon (after 28 – 29 days), and strain it using a gauze. Keep it in a dark bottle.
If you want to have a very strong tincture, strain it after 3 months.
Close the bottle and store it in a dry and dark place. It doesn’t spoil, so you can use it as long as you want.

Dosage: 5 – 10 drops of the tincture to a conscious patient who has suffered a heart attack or a stroke. Add another 5-10 drops in 5 minutes. Repeat the treatment until the patient’s condition improves.

If the patient is unconscious, put 1-3 drops under the tongue, and start a CPR. Repeat the treatment every 5 minutes until the patient’s condition improves.

how to stop a heart attack 2

Health benefits:

Cayenne pepper has antifungal properties which prevent the occurrence of Phomopsis and Colletotrichum
It has a beneficial effect on the digestive system – it stimulates the production of gastric juices, and relieves gases.
It has anticancer properties, especially for lung cancer and smokers. The capsaicin in cayenne pepper is known to prevent the development of tumors caused by tobacco, and similar results are noticed in patients diagnosed with liver cancer.
It helps in the treatment of stomach problems, migraines, flu symptoms, allergies, obesity, redness, toothache and arthritis.

There are 26 different nutrients in cayenne pepper, like calcium, zinc, selenium, magnesium, vitamins C and A.

Prepare this remedy and always have it handy, because cayenne pepper is one of the strongest natural spices that can do miracles for the heart.
Gane6644 இவ்வாறு கூறியுள்ளார்…
எலி கடித்தால் என்ன செய்வது
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கடி பட்ட இடத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு மருத்துவமனைக்கு செல்லவும்.