பிக் ப்ளாங்க் 21


ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம்  நம் அனுபவ அறிவியலை சில வேளை  குப்புற தள்ளி விடுகிறது. பிரபஞ்சத்தில் தனித்த எதுவும் கிடையாது அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. காலம் உட்பட.  இது தான் சார்பியல். பீர்பால் போட்ட கோடு போல ஒன்றின் அளவை நிர்ணயிக்க இன்னொன்று தேவைப்படுகிறது.

இடம் , காலம் என்பது ஒரு குறுகிய வட்டத்தில் தனித்தனியாக தெரிந்தாலும் விண்வெளி பயணத்தில் space time என்ற ஒரே விஷயமாக இருக்கிறது.
ஒரு ரயில்வே ஸ்டேசனில் மூன்று நண்பர்கள் ஒரே நேரத்தில் மூன்று ரயில்களில் ஏறுகிறார்கள். மறு நாள் அவர்கள் வீடியோ காலில் சந்திக்கும் போது , மச்சி இப்ப எங்க இருக்கே ? எனக் கேட்டால் ஒருத்தர் டெல்லியில் ஒருத்தர் கல்கத்தாவில் ,ஒருத்தர் சென்னையில் என்று சொல்லி விடலாம் . இதே போல மற்ற மற்ற மூன்று  நண்பர்கள்.அதில் இருவர் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் போகிற இரண்டு  ராக்கட்டுகளில் ஏறி விண் வெளியில் இரு திசைகளில் பயணிக்கிறார்கள் .ஒருத்தர் புதுசா கல்யாணம் ஆனவர் ஆனதால்   பூமியிலேயை இருக்கிறார். அடுத்த நாள் அவர்கள்  quantum entanglement தொழில் நுட்பத்தினாலான ஒரு அதிவேக தகவல் தொடர்பு வீடியோ காலில் சந்திக்கிறார்கள். அவர்கள் "இப்போ எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?என்று கேட்டால் மூவருமே வெவ்வேறு காலத்தில் இருப்பதாக சொல்வார்கள்.  இதில் யாருடைய காலம் நிகழ்காலம்? ஒருத்தரை பொறுத்து ஒருத்தர் கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ இருப்பார்கள்.  ஒவ்வோருவரும்  அவரவர் தன் நிகழ் காலத்தில் இருக்கிறார்கள். 

பொதுவான நிகழ் காலம் என்று ஒன்று இல்லை போல் தெரிகிறது. அப்படியானால் நிறைய டைம்லைன்கள் ஒரே சமயத்தில் இருப்பது சாத்தியம். நாம் எப்படி டெல்லிக்கு போய்விட்டு திரும்பி சென்னைக்கு வரமுடியுமோ அது போல கடந்த காலத்துக்கோ, எதிர் காலத்துக்கோ போய் வர முடியும். காலப்பயணம் சாத்தியம் என்ற முடிவுக்கு அறிவியல் வந்து விட்டது . அதற்கு இனி தேவை  ஒளி வேகத்தை நெருங்கும் பயண டெக்னாலஜி.  கடந்த காலப் பயணம் சாத்தியம் இல்லை என்பவர்கள் தாத்தா பேரன் புதிரை கூறுகிறார்கள். அதாவது ஒருவர் ஒரு டைம் மிசினை கண்டு பிடித்து  தன் தாத்தாவின் காலத்துக்கு  சென்று  தாத்தா திருமணம் செய்யு முன்னே அவரை கொன்று விட்டால் .எதிர் காலத்தில் இந்த பேரன் எப்படி பிறந்திருக்க முடியும்?  ஆனால் ஒருவர் கடந்த காலத்துக்கு செல்வது என்பதே அதுவரையான நினைவு தொடர்பை இழப்பதுமாகும்.  பேரன் தாத்தாவின் காலத்தில் எதிர்காலத்தின் பேரனாக இருக்க முடியாது . காரணம் அந்த ரியாலிடியில் பேரன் இல்லை. தாத்தா பாட்டியின் ஜீன்களில் , சூழலின் அணுக்களில் இருக்கலாம் . இதுவே பத்து வருசத்துக்கு முன்னே போவதென்றால் பேரன் காலேஜுக்கு போய்க் கொண்டிருக்கலாம். ஆனால் கூட்டிக்கொண்டு போன டைம் மிசின் கூட அப்போதய  ரியாலிட்டியில்  இருக்காது. வந்த நினைவும் இருக்காது. வழக்கமாக தூங்கி எழுந்து கல்லூரிக்கு போவார்.

காலப் பயணத்துக்கு இன்னோரு முட்டுக் கட்டை  entrophy.  அதாவது ஒரு முட்டையை உடைத்து ஆம்லட் போட்டு சாப்பிட்டு அது ஜீரணமானபின் காலத்தில் பின்னோக்கி பயணித்து நம் திசுக்கள்  , உடைத்து குப்பையில் போன முட்டை ஓடு எல்லாம் மீண்டும் முட்டையாவது எப்படி சாத்தியம். ஒரு நிகழ்வு இடியாப்ப சிக்கலாகிய பின் அது எப்படி தன் ஆதி நிலைக்கு வரும் ?
இதற்கு  அறிவியல் ஒரு விஷயத்தை சொல்கிறது. ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு பொருளின் நிலையிலும் அதன் வரலாறு ,நினைவு அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நம் உடலில் ஹைட்ரஜன் அணுவிலிருந்து இப்போ இட்லி சாப்பிட்டது வரையிலான நம் வரலாறு நினைவுத் தொடராக இருக்கிறது. பொருட்கள் என்பது நினைவினால் ஆனது. எங்கெங்கோ பிரிந்து பொருட்கள் உரு மாறிச் சென்றாலும்  ஒரு காலத்தில் அதை அந்த காலத்தின் நிலைக்கு கொண்டுவர முடியும். காரணம் நம் ரியாலிட்டி ஒரு விர்ச்சுவல் அனுபவம்.

விதிகள் அனுமதித்தால் எல்லாம் சாத்தியம்.

இன்னொரு சாத்தியத்தை கூறுகிறேன்.
சென்னையில் உள்ள நண்பன் டெல்லியில் உள்ள நண்பனை நேரில் சந்திக்கத்தான் ரயிலேறி போக வேண்டும்.ஆனால் அதை விட எளிமையாக ஒரு வீடியோ கால் போட்டு விர்சுவலாக பேசலாமே. அது போல கடந்த  கால அல்லது எதிர் கால ரியாலிட்டியில் உள்ள நம்முடன்  சூட்சும தொடர்பு கொள்ள முடியுமா?
நம் உள்ளுணர்வு , Gut feeling ,தேஜாவூ, கனவு, ஆன்மீக வழிகாட்டுதல், குரு எல்லாம் நம் எதிர்கால கடந்த கால சூட்சும தொடர்புகளாக இருக்கக் கூடுமா?
இடத்தை அடைய   எவ்வளவோ ஷார்ட் கட்கள் இருப்பது போல் காலத்திலும் இருக்கக் கூடும் தானே. காலத்தின் , இடத்தின் ஒரு சுழல் பாதையை குறுக்காக கடந்து முந்திய சுழலை  அடைய முடியும்  அதற்கு ஒரு வொர்ம் ஹோல் அல்லது போர்டல் இருக்கலாம். இடம், காலத்தை,ஈர்த்து சூட்சுமமாக்கும்  கருந்துளைகள் வெளியில் நிறைய இருக்கிறது.

இந்த பாரல்லல் ரியாலிட்டி என்பதெல்லாம் நம் இருப்பின் பல்வேறு சாத்தியக்கூறு மட்டுமல்ல பல்வேறு காலத்தின் சாத்தியக்கூறு கூட. காரணம் நம் கான்சியஸ்னஸில் ஏற்படும்  அதிர்வு பல்வேறு பரிமாணங்களில் இருக்கிறது . நாம் கான்சியஸ்னஸ் அதில் ஒரு அதிர்வை பற்றிக் கொண்டு அதற்குரிய ரியாலிட்டியை கட்டமைக்கிறது. நம் கான்சியஸ்னஸ் முழு விழிப்பிலிருந்தால் நம் அதிர்வை , நம் ரியாலிட்டியை மாற்ற முடியும். காலத்தையும் கூட . நாம் கான்சியசாக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பாரல்லல் ரியாலிடிக்கு நம்மை நகர்த்தும் போர்டல்கள்.
நாம் ஒரு சாப்ட்வேர், நம் ஃபிசிகல்  இருப்பு விர்சுவல் என்றால் காலத்திலும் சூட்சும பயணம் செய்து  ஃபிசிக்கல் ரியாலிட்டியை உணர முடியுமா? எதிர்கால மனிதர்கள் , அவதாரங்களாக , தெய்வங்களாக கடந்த காலத்தில் வர முடியுமா?
காலம் ஒரு நதி போல ஓடிக் கொண்டிருந்தாலும் அது ஒரு சுழல் . நதி ஓடி கடலில் கலந்து ஆவியாகி மேகமாகி மலையில் மழையாக பொழிந்து நதியாகி ஓடி கடலில்... .
இது போல கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம்  எல்லாம் ஒரு mobius strip ல் எறும்பின் யாத்திரை போன்றது வழியில் ஒரு துளையிட்டு மறுபக்கம் போனால் அது காலத்தின் ஷார்ட்கட்.  பிக பேங் என்பது நம் , கடந்த , நிகழ், எதிர் காலத்தின் சம்பவம். நம் ரியாலிட்டியின் கதை ஏற்கனவே எழுதப்பட்டது. நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். இது box universe என்ற அடுத்த புதிர் கதவைத் திறக்கிறது.

இதெல்லாம் அறிவியல் சாத்தியத்தை பற்றிய  ஒரு சிந்தனைப் பயிற்சி தான். அறிவியல் கோட்பாடுகள் அடிப்படையில் கண்டடைந்தவை. இதோடு கற்பனை கலந்தால் பல சயின்ஸ் ஃபிக்சன் சினிமாவுக்கான ப்ளாட் கிடைக்கும்.  

கருத்துகள்