எது வெளியே இருக்கிறதோ? அது தான் நம் உடலிலும் இருக்கிறது. அதன் சூட்சும வெர்சன் தான் ஆன்ம தளத்திலும் இருக்கிறது. உலகின் அத்தனை தனிமங்களும், பாக்டீரியா போன்ற மைக்ரோ உயிர்களும் நம் உடலில் உண்டு. உடலில் 60% தண்ணீர் இருக்கிறது. இரும்பு, செம்பு, தங்கம் ,முதலான அத்தனை தாதுக்களும் உண்டு. உடலின் பெரும்பகுதி கரிம வேதியலால் ஆனது. உடல் என்பது எத்தனையோ ரசாயனங்களை உற்பத்தி செய்யும் ரசாயன ஆலை. உடலில் மின்சாரம் கூட உற்பத்தியாகிறது. நம் எல்லோர் உடலிலும் இது எல்லாம் இருக்கிறது. உடல் ஒரு அற்புதம் . உடல் ஒரு பிரபஞ்சம். உடல் என்பது ஆன்மாவின் அனுபவம்.
தனித் தனியானவர்களாக உணரும் நாம் உண்மையில் தனியானவர்களா? மற்ற மனிதர்களுக்கும் நமக்கும் ஏதாவது சூட்சும தொடர்பு இருக்கிறதா? இந்த பிரபஞ்சம் நம்மோடு தொடர்பிலிக்கிறதா? ஆம்... எல்லாவற்றுகும் ஆம்.
நாம் உணரும் கான்சியஸ்னஸ் இந்த ரசாயன கலவையிலிருந்து எப்படி தோன்றியிருக்க முடியும்? ஒவ்வொரு அணுக்களுக்கும் கான்சியஸ்னஸ் இருக்கிறது அல்லது ஒரே கான்சியஸ்னஸ் ஒவ்வொரு அணுக்களாயும் விர்சுவலாக நம் ரியாலிட்டியில் தன்னை வெளிப்படுத்துகிறது..நம் உடலின் ஒட்டு மொத்த அணுக்களின் தன்னுணர்வு மூலக்கூறு தனிமங்கள் செல்கள் என தொகுப்பாகி நம் தன்னுணர்வாய் வெளிப்படுகிறது. ஒவ்வொரு அமைப்புக்கும், ஒவ்வொரு நிலைக்கும் அதற்குரிய கான்சியஸ்னஸ் இருக்கும்.அவை ஒவ்வொன்றும் அதற்குரிய அதிர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த அதிர்வலைகள் இடம் தூரம் என்பதை கடநத நிலையில் தொடர்பில் இருக்கும்.
நாம் ஒருவரோடு கைகுலுக்கும் போது ஃபிசிகலாக தொடர்பு கொள்கிறோம். அதன் வழி ஒரு அன்பை பரிமாறுகிறோம். மொழி மூலம் தொடர்பு கொள்கிறோம். இதெல்லாம் மனிதன் உருவாக்கியவை. பூமியின் ஈர்ப்பு விசை,சூரியனின் ஈர்ப்பு விசை நம் அனைவரையும் இணைக்கிறது. இந்த ஈர்ப்பு விசை பிரபஞ்சம் முழுவதிலும் ஒன்றை ஒன்று ஈர்த்து இணைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த ஈர்ப்பு விசைக்கு காரணம் பொருண்மை (mass). பொருண்மைக்கு என்பது சக்தி செறிவு. இந்த ஈர்ப்பு விசை தான் ஆன்ம தளத்தில் அன்பாக ஹார்ட் சக்ராவில் வெளிப்படுவது.
சூரியனிலிருந்து அதே சக்தி தான் ஒளியாக பூமியை அடைந்து அனைத்து உயிர்களுக்கும் சக்தி அளித்து வளரச் செய்கிறது. காற்று அனைத்து மனிதர்கள் சுவாசத்திலும் சுழன்று உயிரை நிலை நிறுத்துகிறது. கால காலமாக இங்கிருக்கும் காற்றும் ,நீரும், தனிமங்களும் ,உயிர்சத்துகளும் உடல்களாக உருமாறி கணந்தோறும் உடல்களை கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எததனயோ ஒளி ஆண்டுகளை கடந்து சக்தி அதிர்வுகள் நம்மை அடைந்து ஏதோ தகவலை , நினைவுகளை நம்மிடம் சேர்க்கிறது.
என் உடலில் உள்ள தண்ணீரும் உங்கள் உடலில் உள்ள தண்ணீரும் வெவ்வேறு பாத்திரத்தில் உள்ள ஒரே entity கள். என் ரத்தத்தில் கலந்திருக்கும் இரும்பும் உங்கள் உடம்பில் உள்ள இரும்பும் வேறு வேறு இடத்தில் இருந்தாலும் அவை ஒரே ஜீவன் தான் . இந்த இடம் என்பது நாம் உணர்வது மட்டுமே. உண்மையில் அவை நம்மைப்போல் இடம் உணர்வதில்லை. ஒரு மணியிலிருந்து வரும் நாதம் பல காதுகள் கேட்கலாம். காதுகள் பல ஆனால் நாத அதிர்வின் மூலம் ஒன்றே .
தாதுக்கள் தனிமங்கள் மட்டுமல்ல உலகின் அத்தனை பேக்டீரியாக்களும் நம் உடலில் உண்டு. அவற்றின் உணர்வின் பங்கு நம் உணர்வில் உண்டு . அத்தனையும் வெவ்வேறு உடல்களில் இடங்களில் நாம் உணர்ந்தாலும் ஒரு நிலையில் அவை அதனதன் சோர்சிலிருந்து (source)வெளியாகும் ஒற்றை சக்தி அலைகளே..ஒரு இசைக்கச்சேரியில் பல கருவிகளின் இசையை பலரும் கேட்பது போல. நான் கேட்கும் கிடார் ஒலியும் நீங்கள் கேட்கும் கிடார் ஒலியும் ஒலித்தது ஒரே கிடார்.
நம் உடலின் தாதுக்களும் மூலகங்கள் ஒவ்வொன்றும் அதற்குரிய ஒரு நிலையில் இணைந்திருப்பது மட்டுமல்ல .அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பரிணாம (evolutionary state) நிலையில் அதற்குரிய கால ப்ரக்ஞையுடன் கூட இருக்கிறது. அதற்கேற்ப அதன் தன்னுணர்வும் (consciousness) இருக்கிறது. அதாவது ஹீலியம் அணுக்கள் எத்தனை கால பரிணாமத்தில் ஹைட்ரஜனாக ஆக்சினாக பின் நீராக தோன்றி அதன் பின் இத்தனை காலம் கடல் பூமி மனித உடல் என சுழன்று பெற்ற அத்தனை அனுபவ மெமரியும் அதன் கான்சியசில் இருக்கும்.
இப்படி நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள கான்சியசின் ஒட்டு மொத்தம் தான் நம் கான்சியஸ். இதையே வேறு விதமாய் சொல்வதென்றால் நம்
கான்சியசின் பிரதிபலிப்பு தான் பிரபஞ்ச கான்சியஸ். உண்மையில் நம் உடலில் ரத்த அணுக்களுக்கு காரணமாக இருக்கும் இரும்பு ஒரு காலத்தில் பூமியின் உலோகமே அல்ல. விண்ணிலிருந்து காலகாலமாய் பூமியை அடைந்தவை. அதன் கான்சியஸ் நம் பகுதியாக இருக்கும் பட்சத்தில் நம் கான்சியஸ் எங்கிருந்தோ பூமிக்கு வந்த எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியலா? உயிர்களின் தோற்றத்தில் பரிணாமத்தில் இரும்புக்கு முக்கிய பங்கு உண்டு.
இடத்தில் பிரிந்திருக்கும் நாம் எல்லோரும் சூட்சுமாய் இணைந்திருக்கிறோம்.
quantum entanglement ம் இதனடிப்படையில் தான்.. இதுவே ஆன்மீக நிலையில் நம் ஆன்மாக்கள் தனித்தனியாக தோன்றினாலும் ஒவ்வொரு நிலைகளில் அது மற்ற ஆன்மாகளோடு தன்னை பங்கு வைத்துக்கொள்கிறது. அதாவது என் ஆன்மா என தனித்து உணரும் போது ஒரு நிலையில் என் பெற்றோர்கள், பிள்ளைகள் ஆன்மாக்களின் பகுதியாகவும் இருக்கிறது இன்னும் ஆழத்தில் அதன் மூலமாக ஒரே ஆன்மாவே இருக்கும்.
பின் ஏன் நாம் வேற்றுமை உணர்கிறோம். நம் ஒவ்வொருவரும் முழுமையாக தன் consciousness ஐ உணராமல் unconscious ஆக இருப்பதால்.
கருத்துகள்