நாம் வேறு நம் உடல் வேறா?
எது உணர்கிறதோ ?அந்த entity தான் நாம் . எதை உணர்கிறோமோ? அதெல்லாம் நாமில்லை. மாயை. ஆனால் மாயையின் படைப்பை நமக்கு சொந்தமானதாகவோ அன்னியமானதாகவோ கருதுகிறோம். நம் கையையோ காலையோ நாம் என்று சொல்லிக் கொள்வதில்லை. நம் கை, கால், நம் மூளை என்று நமக்கு சொந்தமானதாகத் தான் சொல்கிறோம். விபத்தில் கால் போனாலும் நாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் துண்டான காலுக்கு நம் உணர்வு இருக்குமா? விபத்தில் கை கால் இழந்தவர்கள் கொஞ்ச நாள் தங்கள் கை , கால் அந்த இடத்தில் இருப்பதாகவே உணர்வார்கள். இது phantom limb sensation என்பார்கள் .இல்லாத காலில் வலி உணரும்.
இந்த நாம் என்ற உணர்வு தான் consciousness . மூளையை வெட்டினால் கூட வலிக்காது
இந்த conciousnes ஆன்மீக விஷயம் . ஆனால் அறிவியல் இப்போது தான் conciousness பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. அதாவது அனைத்து பொருட்களின் சூட்சுமமான மற்றொரு நிலை conciousness என்று அறிவியல் சொல்கிறது. கவனிக்கும் போது தான் அதிர்வு அணுவாகி பொருளாகிறது.
இந்த உலகுக்குள், உடலுக்குள் சூட்சுமமாய் நம் தன்னுனர்வு இருப்பது போல் தோன்றுவது மாயை. நம் தன்னுணர்வின் மாயை அனுபவம் தான் இந்த உடல். Physical ஆக counciousnes எங்கிருக்கிறது என்றால் மூளையில் ஒரு தொகுப்பாக உணரப்பட்டாலும் அதன் உணர்வுத் தொடர்பு நரம்புகள் வழி உடலின் ஒவ்வொரு செல்களின் தன்னுணர்வு, ஒவ்வொரு அணுக்களின் தன்னுணர்வின் தொகுப்பு உணர்வு.
நமக்கு முற்றிலும் பரிச்சயமற்ற இன்னொரு உயிர் வடித்துக்கு நம் உடல் தெரியாது. நாம் அரூபிகள். அது போல அவைகள் அனுபவப்படும் உடல் நம் கண்ணுக்கும் தெரியாது. அதனால் தான் அயலுயிரிகள் நம் கண்ணுக்கெட்டிய தொலைவு இல்லை. கண்ணுக்கு எட்டாமல் எங்கும் உயிர் வடிவங்கள் நிறைந்திருக்கிறது. நம் நினைவிலோ பூர்வ நினைவிலோ அடையாளம் காண முடியாத எந்த பொருளும் நம் ரியாலிட்டியில் தெரியாது. மறந்து போவதால் மறக்கடிக்கப் படுவதால் கூட சில உயிர்வாழிகள் , நாம் முன்னோர் அனுபவித்த ரியாலிட்டி எல்லாம் வெறும் myth களாக புராணக் கதைகளாக மாறிவிட்டிருக்கும் சாத்தியமுண்டு. ஒரு வேளை நாம் கடந்து வந்த ரியாலிட்டி வேறொரு கிளையாக பரிணமித்துக் கொண்டிருக்கலாம் நம் அறிவுக்கு அகப்படாமல்.
உங்கள் தன்னுணர்வு அதன் இயல்பான தன்னை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது இருமை நிலை உணர்கிறது. தான் மற்றும் தானல்லாதது என்ற பிரிவை உண்டாக்கி தன்னை ஒரு பகுதிலும் தான் அறியாததை எதிரிலும் காண்கிறது. எதிரில் உள்ளதை அறிய அறிய தன்னுனர்வு புதிய நினைவு மற்றும் பழைய நினைவின் மறதிக்கு உட்பட்டு புதிய அனுபவத்தினூடாக நகர்கிறது. இந்த நகர்வு தான் , ஸ்ட்ரிங் தியரி கூறும் அதிர்வாக , அலையாக , சுழலாக அணுத்துகளாக , காலம், இடம் , பொருள் அனுபவத்தை நினைவில் உருவாக்குகிறது. இப்படி நம் தன்னுணர்வு காலத்தால் பரிணாமம் அடைந்து இன்று மனிதனாய் உணர்கிறோம். பூமி என்ற இடத்தில், இந்த ஒரு உடல் அனுபவத்தை அடைந்திருக்கிறோம். நம் தன்னுணர்வின் evolutionary பயணம் ஒவ்வொருவருக்கும் unique ஆனது என்றாலும் நம் தன்னுணர்வின் வேர்கள் ஒரு கட்டத்தில் மனிதர்கள் நாம் எல்லோரும் ஷேர் செய்கிறோம். அது முதல் மனிதனின் தன்னுணர்வு (Adam conciousnes) . இன்னும் அதற்கு முன்னும் விலங்குகள் பறவைகள் மீன்கள் பல பூர்வ தன்னுணர்வுகள் காலத்தால் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொன்றும் கிளைகளாக , புதிய இனங்களாக பரிணாமம் பெற்றாலும் முந்தைய வடிவங்கள் நினைவு தொடர்பு இருக்கும் வரை அப்படியே தொடரும். இதனால் தான் மீனும் இருக்கிறது , குரங்கும் இருக்கிறது, மனிதனும் இருக்கிறான்.
அணுக்களுக்கும் தன்னுனர்வு அதற்குரிய நிலையில் உண்டு . ஆதம் , ஆதி, என்பது போல முதல் பொருள் atom . நம் கான்சியசுக்கும் ஆணிவேர் இந்த அணு கான்சியஸ் தான். எல்லா பொருட்களுக்கும் அதற்குரிய evolutionary நினைவும் நிலையும் உண்டு. அதனால் தான் நாம் நம்மை தனியாக உணர்தாலும் நம்மை சுற்றி இந்த உயிர் வடிவங்களை பொருள் வடிவங்களை அடையாளம் காண முடிகிறது. Evolution என்பது டார்வின் கூறுவது போல physical body யில் நடப்பதல்ல, தன்னுணர்வு தான் கால நினைவுகளில் பரிணமிக்கிறது. உணர்விற்கேற்ற உடலை அனுபவிக்கிறது.
கருத்துகள்