எதிரே ஒரு ஆப்பிள் இருக்கிறது. அதற்கு ஒரு நிறம் , வாசனை, திடம். சுவை , இருப்பதை உணர்கிறோம் . உண்மையில் இந்த ஆப்பிளின் எதார்த்த நிலை என்ன?
ஆப்பிள் எதனால் ஆனது என அறிய அதை நுணுக்கி கூரிய கத்தியால் வெட்டிக் கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் ஆப்பிளின் மிகச்சிறிய சதை துணுக்கு கிடைக்கும். அப்போது ஆப்பிள் தன் வடிவத்தை, திடத்தை இழந்து கூழ் ஆகியிருக்கும். ஆனால் அதன் சுவை ,வாசனை அப்படியே இருக்கும். இன்னும் அதை நுணுக்கி பார்த்தால் ஆப்பிள் என்பது பலவித ரசாயனங்களால் மட்டும் ஆனது என உணர்வோம். அதன் சுவை , வாசனைக்கு அந்த ரசாயனம் தான் காரணம். அதன் ரசாயன மூலக்கூறுகள் நம் நாசியை அடைந்து olfactory lobe களில் ஏற்படுத்தும் வேதி வினைகளில் வெளிப்படும் சக்தி, மின் தூண்டுதல்களாக மூளையை அடைகிறது. மூளை அந்த தகவலை நினைவகத்தில் உள்ள தகவலோடு ஒப்பிட்டு "ஓ.. இது ஆப்பிள் வாசனை" என அறிகிறது. அது போலத்தான் ஆப்பிளின் ரசாயன மூலகூறுகள் நாவில் சுவை மொட்டுகளில் ஏற்படுத்தும் வேதிவினை தூண்டுதல்களும் மின் அலைகளாக மூளையை அடைகிறது.
ஆப்பிளை தொடும் போது அதன் திடம் எப்படி உணர்கிறோம்? ஆப்பிளின் மூலக்கூறுகளுக்கு இடையே ஈர்ப்பு இணைப்பு இருக்கிறது. நம் கையும் அது போல மூலக்கூறுகளால் ஆனது . அதுவும் அணு ஈர்ப்பு சக்தியால் இணைக்கப்படிருக்கும். நாம் ஆப்பிளை தொடும் போது ஆப்பிள் மூலக்கூறுகளின் பிணைப்பு சக்தி கைகளின் மூலக்கூறுகளின் பிணைப்பு சக்தியில் ஏற்படுத்தும் பாதிப்பு தோலுக்கடியில் உள்ள நரம்புகளிலும் சக்தி தூண்டுதல்கள் உருவாக்கி அது மூளைக்கு மின் சக்தி தகவல்களாக அனுப்பட்டு மூளை அதன் திடத்தை உணர்கிறது. ஆப்பிளோ கைகளோ தன் மூலக்கூறு இணைப்பு சக்தி குறைவாக இருந்தால் ஒன்றை ஒன்று எளிதில் ஊடுருவி விடும்.
பல வகை ரசாயனங்கள் பல வகை மூலக்கூறுகளின் இணைப்பால் உருவாகிறது . மூலக்கூறுகள் பலவகை. சேர்மங்களால் ஆனது. சேர்மங்கள் தனிமங்களால் ஆனது. இதுவரை உலகில் 118 தனிமங்களை அறிந்திருக்கிறார்கள். தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தி நிலையில் உள்ள அணுக்களால் ஆனது . ஆப்பிளின் ரசாயன நிலை பொறுத்து தான் வாசனை, சுவை. நிறம் எல்லாம். . நிறத்துக்கு காரணம் அதிலுள்ள நிறமிகள், அதன் தோலில் உள்ள சிகப்புக்கு காரணம் அதிலுள்ள மூலக்கூறுகள் அதன் மீது விழும் ஒளியில் சிகப்பு நிறத்துக்கு காரணமான அலைகளை தவிர்த்து மற்ற அலைகளை ஈர்த்து விடுகிறது. சிவப்பு நிறத்துக்கு காரணமான அதிர்வுடைய அலைகள் மட்டும் எதிரொளிக்கப்பட்டு பார்க்கும் விழியின் திரையில் லென்சால் குவித்து வீழ்த்தப்பட்டு அதில் இருக்கு Rods வகை செல்கள் ஒளி வேறுபாடுகளையும் அதன் cones வகை செல்கள் நிறங்களையும் உணரத் தேவையான தூண்டல்களை பெற்று அது மின் அலைகளாக மூளையை அடைகிறது. மூளை முன் அனுபவத் தகவலைக் கொண்டு ஒளியை , காட்சியை , நிறத்தை அடையாளம் கண்டு மூளையின் பின் பகுதியில் காட்சியாக உணரச் செய்கிறது.
இரு விழிகளிலும் இரண்டு கோணத்தில் ஆப்பிளை பார்த்து அந்த இருவித பார்வை தகவல்களை கொண்டு மூளையின் பிரத்யேக செல்கள் வெளி (space) பற்றிய உணர்வை உருவாக்கி அதில் ஆப்பிளின் வடிவத்தை அது இருக்கும் தூரத்தை , நிறத்தை கணித்து , மூளையில் விர்சுவலான காட்சி அனுபவத்தை ஏற்படுத்துகிறது. திடம் , மணம், குணம், சுவை, நிறம், வடிவம், இருக்கும் இடம் என ஆப்பிளை பற்றிய அனைத்து உணர்வும் மூளையில் தான் உணரப்படுகிறது. புலன்கள் தனக்கு வெளியே உள்ளது என உணரும் தளத்தில் இருக்கும் சக்தி அலைகளில் தன் தேவைக்கு ஏற்ற வகையில் வடிகட்டி உணர்ந்து மின் அலைகளாக மாற்றி அவை நரம்புகள் வழி மூளையில் அடைந்து முன் நினைவுளில் ஒப்பிட்டு அதை எப்படி உணர வேண்டுமோ அப்படி ஒரு காட்சி அனுபவத்தை மூளையில் உருவாக்குகிறது. அப்படி ஆப்பிளையும் தன் ரியாலிடியில் உருவாக்குகிறது. முக்கியமாக நாம் வெறும் ஐந்து வகை புலன்கள் வழி தான் ஆப்பிளை உணர்கிறோம் . அந்த புலன்களின் band width குறைவு. நம் காதால் கேட்க முடியாத கண்ணால் காண முடியாத தொட்டு அறிய முடியாத பல சக்தி அதிர்வுகள் உண்டு . அவற்றால் ஆன பிரபஞ்சம் நம் உணர்தலுக்கு நேரிடையாக வராது.மறைவான தளத்தில் இருக்கிறது.நம் புலன்களின் உணர் திறன் மாறினால் நம் பிரபஞ்ச அனுபவம் மாறிவிடும்.
ஆப்பிளை அந்த அனுவத்தை ஆப்பிள் என்று முன் யாரோ சுட்டிக் காட்டியதால் தான் குறிப்பிட்ட நிறம், சுவை, திடம் , வாசனை காம்பினேசனை முற்றிலும் புதிய பொருளாக ஆப்பிள் என பெயரிட்டு மூளை உணர்கிறது. முன் யாரும் அடையாளப்படுத்தாது இருந்தால் ஆப்பிளோ, வாசனையோ, நிறமோ, திடமோ வெறும் அனுபவமின்றி அது ஆப்பிளாக உணரப்படாது. அது நம் கண்ணெதிரே இருந்தாலும் கூட. ஒரு பொருளை உணர அதை எப்படி உணர வேண்டும் என்ற pre program நினைவு தரவில் அதன் பெயர்களோடு இருக்க வேண்டும். அப்போது தான் அது பொருளாக நம் ரியாலிட்டியில் புலப்படும். மற்றபடி ஆப்பிள் என்பது சக்தி அதிர்வு மட்டுமே. ஆப்பிளின் மணம் சுவைக்கு காரணமான ரசாயன சக்திக்கும் ,திட உணர்வுக்கும் நிறம் ஒளி, ஒலி எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பதும் ஆப்பிளின் பொருண்மைக்கு எடைக்கு மூலமாய் இருப்பதும் சக்தி தான். ஆப்பிளின் அடிப்படையாக இருக்கும் அணுக்களுக்கும் நாம் உணரும் ஆப்பிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிர்வுகளில் உள்ள தகவல் அதை தீர்மானிக்கிறது.
ஆப்பிளும் அணுக்களால் ஆனது ஆப்பிளுக்கு வெளியே இருக்கும் காற்றும் அணுக்களால் ஆனது .அணு எதனால் ஆனது? 99.999 வெற்றிடம் தான் இருக்கிறது .மீதி எலக்கட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான் , இன்னும் ஆழமாக அதை பிரித்து பார்த்தால் லெப்டான், போசான்,க்வார்க்ஸ், ஆனால் அணுவுக்குள் உள்ளவை என கருதும் பொருட்கள் அது நாம் கவனிக்கும் செயலாலே அல்லது கவனிக்க முடிவது வரை தான் அவை particle ஆகவும் matter ஆகவும் இருக்கிறது. அதாவது நம் கவனிப்பு நம் மூளையில் அதை matter ஆக உணரச் செய்கிறது .உணராத நிலையில் அவற்றின் இருப்பு matter அல்ல வெறும் சக்தி அதிர்வுகள் . இந்த அதிர்வுகள் பல frequency மற்றும் பல Dimensionகளில் இருக்கிறது, இப்படித்தான் பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் நிலை. ஒவ்வொரு பொருட்களும் அது பற்றிய அனுபவமும் அறியும் காலத்தால் பரிணாமம் பெற்று நினைவகத்தில் தகவலாக பதிந்தவை. அந்த அறிவு வளர space பற்றிய, பொருட்கள் பற்றிய அறிவு விரிய வெளியே பிரபஞ்சம் விரிவதாய் உணர்கிறோம்.
இனி முக்கிய கேள்வி ,வெளியே பொருள் தான் இல்லை. ஆனால் அது சக்தியாக நமக்கு நம் புலன்களுக்கு வெளியே தானே இருக்கு? யாருக்காவது இந்த கேள்வி வந்தால் பாராட்டுகள் . இன்னொரு கேள்வியும் இருக்கிறது .அதையும் அடுத்து அலசுவோம்.
கருத்துகள்