பிக் ப்ளாங்க் 6


 நாம்  முப்பரிமாண பிரபஞ்சத்ததில் சிறை பட்டிருக்கிறோம். இந்த முப்பரிமாணம் என்பதும் 3D காட்சியும் ஒன்றல்ல .காட்சியில் 3D என்பது நீளம், அகலம், ஆழம் எனும் பரிமாணங்கள் , நாம் இங்கே குறிப்பிடும் முப்பரிமாணம் என்பது இடம் , காலம், பொருள். அதாவது பொருட்கள் காலத்தில் நகரும்  இடத்தில் இருப்பதை உணர்கிறோம். நாம் பொருளாக ஒரு இடத்தில் பார்ப்பது உண்மையில் சக்தி அலைகளாக துடித்து எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது . அந்த அலைகளின் துடிப்பிற்கு ஏற்ப பல்வேறு பொருட்களாக நமக்கு தெரிகிறது, அப்படி தெரியும் எண்ணிலா பொருட்கள், அலைகள் இருக்கும் தளம் இடம், அலைகள் என்பது உண்மையிலேயே சுழல்கள். அந்த சுழல்கள் நாம் பார்க்கும் பக்க ஆங்கிளில் அலைகளாய் உணர்கிறோம். அந்த சுழல்களின் மறுபக்கம் நமக்கு மறைவாக இருக்கிறது. கடல் அலையை பார்த்தால் தெரியும்.

 வெளியின் சக்தி அலைகள் அங்கங்கே குவிந்து நட்சத்திரங்கள், அண்ட கோளங்களை உருவாகி பிரபஞ்ச வெளியே ஈர்ப்பு விசை ஏற்றத்தாழ்வு காரணம்  மேடும் பள்ளம் நிறைந்திருக்கிறது . நம்  பூமியில் எப்படி மலையும் மடுவும் இருக்கிறதோ? அது போல.  பூமி, சூரியன் நட்சத்திரங்கள் அனைத்தும் சுழலக் காரணம் அதன் பாதையே சுழற்சியாக இருப்பதால் தான். சுழற்சியான பாதையில் கோலிக்குண்டுகளை உருட்டி விட்டால் எப்படி போகுமோ அது போல இந்த வெளியே சுழன்று விரிந்து எல்லாவற்ரையும் இழுத்துக் கொண்டு  எங்கிருந்தோ எங்கோ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் ஓட்டத்துக்கு காரணம் என்ன? ஆக்சுவலா எது ஓடுகிறது ? வெளியா? அதை கவனிப்பவனின் மனமா? அதை அப்புறம் பார்ப்போம்.  
பொருட்கள் பல்வேறு பொருண்மையில் இருப்பது போல, இடம் பல்வேறு ஈர்ப்பு விசை மாறு பாடு காரணமாய் சுருங்கியும் விரிந்தும்  இருப்பதை போல , காலமும் சுருங்கி விரியும் தன்மை உடையது.  ஒரு இடத்தை கடக்க நடந்து போகும் ஒருவர் எடுக்கும் காலமும், விமானத்தில் போகும் எடுக்கும் காலமும் வேறு. அது போல நம் தன்னுணர்வின் அனுபவத்திற்கேற்ப காலம் கடந்து செல்லும்.  சாலையில் காரில் செல்லும் ஒருவர் சட்டென காரை நிறுத்தி ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுக்குள்   சென்று  சாதனங்கள் வாங்கி விட்டு மீண்டும் காரிலேறி பயணத்தை தொடர்வது போல காலத்திலும் நின்று ஹைப்பர் மார்க்கட்டுக்குள் சென்று மீண்டும் காலத்தில் பயணிக்க முடியும். நாம் அனுபவிக்கும் இடம் காலம் பொருள் எல்லாமே விர்ச்சுவல். இத்தகைய குகைகள், சுருக்கு பாதைகள் போர்டல்கள் (portals) நம் முப்பரிமாணத்தின் மூன்று அச்சுகளிலும்(Axis) இருக்கிறது. இதன் மூலம் மற்ற பரிமாணங்களுக்கு  செல்ல முடியும்.

 ஏன் இந்த மேடு பள்ளம் ?  இந்த போர்டல்கள் எப்படி உருவாகிறது? பரிமாணம் என்றால் என்ன? எத்தனை பரிமாணங்கள் இருக்கிறது ? இதற்கெல்லாம் காரணம் தேடிப்போனால்,இந்த பிரபஞ்ச அனுபவம் எங்கே? எப்படி? உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

 
இடமானலும், காலமானாலும் ,பொருளானாலும்  அதை ஒரு தளத்தில் உணரும் போது அதற்கென்று ஒரு வடிவம் இருக்கிறது அந்த வடிவங்களை fractal  கணித சமன்பாடுகள் தீர்மானிக்கிறது, அதன் படி அந்த வடிவங்கள் தோன்றுகிறது, மாறுகிறது. நாம் காணும் உலகின் அத்தனை வடிவங்களுக்கும், அமைப்புகளுக்கும் அதே fractal கணித சூத்திரமே அடிப்படையாக இருக்கிறது. அது மைக்ரோ லெவலிலும், மேக்ரோ லெவலிலும் மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறது . ஒரு செடியின் வேரின் வடிவம் தண்டாக மாறி ,கிளையாக மாறி, இலையாக, பூவாக வெளிப்படுவது வரை இயற்கையின் வடிவங்கள் அடிப்படையான யூனிட்டுகளால் ஆனவை. ஒரே பேட்டர்ன் திரும்பத் திரும்ப வந்து பல்வேறு தோற்றங்களை உருவாக்குவதால் தான் நாம் அவற்றை அடையாளம் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது.

பிரபஞ்ச தோற்றத்தை கணிதத்தால் விளக்கலாம். காரணம் கணிதம் மனிதன் உருவாகியதல்ல , இயற்கை கற்றுக் கொடுத்தது. அறிவியலுக்கும் கணிதம் தான் அடிப்படை. பிரபஞ்சத்தின் பல ரகசியங்களை கணிதம் தான் வெளிப்படுத்த உதவுகிறது. 26 வித பரிமாணங்கள் இருப்பதற்கான சாத்தியம் கணித மாதிரிகளில் கிடைக்கிறது. இந்த உலகில் காணப்படும் நேர்த்திக்கும் அழகுக்கும் பின்னால் கோல்டன் ரேசியோ (Golden Ratio) என்ற எண் இருக்கிறது. அன்னாசி பழத்திலும் , பூக்களின் இதழ் அமைப்பிலும், இயற்கையின் சில பேட்டர்ன்களிலும்  Fibonacci எண் வரிசைகளை காணலாம்.மொத்தத்தில் இந்த பிரபஞ்ச அமைப்பு நாத்திகர்கள் கூறுவது போல Random ஆன ஒன்று இல்லை . மிக மிக நேர்த்தியான கணிதத்தாலும், விதிகளாலும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அதுவும் மனிதனை போன்ற மிக சிக்கலான உயிர்கள் தோன்ற தேவையான சகல ஏற்பாடுகளையும் கருதி செய்யப்பட்டது போலிருக்கிறது. இந்த கணிதம் சற்று மாறினாலும் , விதிகள் சற்று வளைந்து கொடுத்தாலும் நாம் இருப்பது சாத்தியமல்ல எனும் அளவு நுட்பத்துடன் கட்டமைக்கப் பட்டுள்ளது.

விளக்க விளக்க இது சூனியக்கிழவி கதை போல போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. விஷயம்  அத்தனை சிக்கலானது. எத்தனை பேர் இதை ஃபாலோ பண்ணுகிறார்கள், புரிந்து கொள்கிறார்கள் என்ற ஃபீட் பேக் தெரிந்தால் தான் இன்னும் ஆழமாக போக முடியும். நான் எழுதியவற்றில் கேள்விகள் எழுப்பினால் விளக்கம் வேண்டினால் வரவேற்கிறேன்.

கருத்துகள்