பணம் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று நம்பி அதை தேடி ஓடும் ஓட்டத்தில் காலுக்கு கீழே நழுவிப்போகும் நம் வாழ்வின் நோக்கம், உடல் நலம் பற்றி மறந்து விடுகிறோம். குழந்தைகளோடு செலவழிக்க நேரமில்லாமல் அல்லது அவர்களை சமாளிக்கும் நோக்கில், தெரிந்தோ தெரியாமலோ ஸ்மார்ட் ஃபோன்களை அவர்களுக்கு அறிமுகப் படுத்தி விடுகிறோம். அவர்கள் அறிவுத் திறனை மேம்படுத்தும் என எண்ணி ஒரு அனகோண்டாவை குழந்தைகள் கையில் கொடுத்திருக்கிறோம், அது மெல்ல மெல்ல அவர்கள் மூளையை விழுங்கி நம் குழந்தைகளை முழுமையாக விழுங்கி விடும் என்று பல பெற்றோருக்கு தெரிவதில்லை.
இதன் பின்னணி பயங்கரமானது . மிகப்பெரும் வணிக அரக்கர்கள் மிக மோசமான உளவியல் கோரைப் பற்களுடன் கண்ணுக்குத் தெரியாத டிஜிடல் ஜன்னல் வழி உங்கள் வீட்டுக்குள் ஊடுருவி குழந்தைகளின் மூளையை உண்டு செரிக்கின்றன.
குழந்தைப் பருவம் என்பது அவர்கள் ஐம்புலன்கள் வழி இந்த உலகை, நம் ரியாலிடியை புரிந்து கொள்ளும் பருவம். அந்த புலன்களின் தகவலைக் கொண்டு தான் புது புது நியூரான்கள் மிலியன் கணக்கில் உருவாகி நினைவுகளாக அனுபவமாக பதிகிறது. மூளையாக வளர்கிறது. அதை கொண்டு தான் யார் ? தன் சூழல் என்ன ? என்ற அவர்கள் self உணர்வு ஈகோவாக .அவர்களது ஐடென்டியாக வளர்கிறது. ஆனால் அந்த முக்கியமான கால கட்டத்தில் ஃபோனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது. முதலில் அதன் வண்னக் கோலங்களும் சப்தங்களும் அவர்களை ஈர்க்கிறது. அதை அவர்கள் பயன்படுத்த கற்றுக்கொள்ளும் போது அவர்கள் கண், காது தவிர மற்ற புலன்கள் புதிய அனுபவங்கள் பெறுவதில்லை. அவர்கள் பார்வை புலன் ஒரு சிறு சதுர டிஜிடல் ஸ்க்ரீன் அளவுக்கு சுருங்கி விடுகிறது. சுற்றி உள்ள ரியாலிட்டி அவுட் ஆஃப் போகஸ் ஆகி அவர்கள் கவனம் மீடியா கண்டென்ட் மற்றும் வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்களின் கையில் சிக்கி விடுகிறது.
அவர்களை எப்படி அடிக்ட் ஆக்குவது? என்று அந்த நிறுவனங்களுக்கு நன்றாக தெரியும். அதற்காக கோடிகள் செலவு செய்து மனோ தத்துவ முறைகளை பயன் படுத்துகிறார்கள். மீடியாக்களின் உருவங்கள் அசைவுகள் வண்ணங்கள், ஓசைகள், உங்கள் குழந்தைகளின் மூளையில் உண்டாக்கும் அதிர்வுகள் திட்டமிடப் பட்டவை. அதில் வியாபாரம் மட்டுமல்ல தாங்கள் உத்தேசிக்கும் புதிய ரியாலிட்டியை எதிர்கால மூளைக்குள் திணிக்கும் மாபெரும் உத்தேசம் இருக்கிறது .உங்கள் வாரிசுகளின் மூளையை சலவை செய்யும் சதி இருக்கிறது.
குழந்தைகளின் அட்ரீனலின் ஹார்மோன்களை அதிகம் சுரக்க செய்வதால் மூளை இயக்க வேகம் அதிகரிக்கிறது. கார்டிசோல் போன்ற ரசாயனங்களை சுரக்க செய்து நோயெதிர்ப்பு மண்டலத்தை நிலை குலைக்கிறது. இதனால் அடிக்கடி நோயுறுகிறார்கள். மருந்து கம்பனிகள் பணம் பார்க்கிறது.
கேம்கள் விளையாடும் போது கிடைக்கும் அவார்டுகள் அவர்கள் மூளையில் Dopamine என்ற ஹார்மோனை சுரந்து அவர்களை ஹேப்பி ஆக்குகிறது. இதனால் நீங்கள் அந்த ஃபோனை அவர்களிடமிருந்து பிடுங்கும் போது அவர்களால் தாங்க முடியாமல் அடம் பிடிக்கிறார்கள். வயலன்ட் ஆகிறார்கள். கேம்களில் பயன் படுத்தப்படும் சைக்காலஜி மற்றும் எமோசனல் ரோலர் கோஸ்டர் அவர்களுக்கு பயம், மன அழுத்தம், கோபம், பிடிவாதம், தந்திரம், அழுகை போன்ற பலவித உணர்ச்சி கொந்தளிப்புகளை ஏற்படுத்துகிறது.
அவர்கள் உங்களிடமிருந்து பிரிக்கப் படுகிறார்கள். உரையாடல் பயில்வதில்லை. கேம்களுக்கு விரல்கள் ரெஸ்பான்ஸ் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட pattern ல் மட்டும் அவர்கள் விரல் , நரம்புகள் தூண்டப்பட்டு அது ஆழ் மனதில் பதிந்து அனிச்சையாய் மாறுகிறது. ஸ்மார்ட் ஃபோன் பயன் படுத்தும் குழந்தைகள் மூளையையும் அல்லாத குழந்தைகளின் மூளையையும் ஸ்கேன் செய்து பார்த்தால் அதில் அமைப்பு வித்தியாசம் இருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் குழந்தைகள் மனதளவில் முற்றிலும் வேறொரு ரியாலிட்டியில் இருப்பார்கள்.
அவர்கள் நடவடிக்கை வினோதமாக ஹைப்பர் ஆக்டிவாக இருக்கும். தன் பெயர் தெரியாது. அழைத்தால் திரும்பி பார்க்க மாட்டார்கள். உண்ணுதல், மல ஜலம் கழித்தல் இவற்றை கூட தானாக செய்யக் கற்றுக் கொள்ள மாட்டர்கள். ஐ கான்டாக்ட் இருக்காது. அப்பா, அம்மா, என அழைக்க மாட்டார்கள், பேச்சு வராது, பேச்சு தாமதமாகும். தன் தேவைகளை சொல்லத் தெரியாது, யாரையும் இன்னார் என்று அடையாளம் காணவோ முகம் பார்த்து சிரிக்கவோ மாட்டார்கள். வினோதமாக உடல் சேஷ்டைகள் இருக்கும், வினோதமாக ஒலி எழுப்புவார்கள். ஆனால் ஃபோன் கேம் pattern களை புரிந்து அது போல் விளையாடுவார்கள், மீடியாக்களில் வரும் Rhyms களை அதே போல ஒப்பிப்பார்கள்,
ஹைப்பர் ஆக்டிவிட்டி காரணம் ஸ்கூலில் மற்ற குழந்தைகள் போல செயல்படுவதும் அவர்களுடன் கல்வி கற்பதும் சிரமம், உடல் இயக்கம் குறைந்து தசைகள் வலுவிழக்கும். தூக்கமின்மை , பார்வை குறைபாடு ஏற்படும். உளவியல் சிகிட்சை கவுன்சலிங் என பணம் கரையும், அவர்கள் இந்த காரணத்தை உங்களுக்கு சொல்ல மாட்டார்கள். குழந்தைக்கு Autism, ADHD.Down syndrom மூளை வளர்ச்சி குறைவு என பல்வேறு பெயர்கள் இட்டு Speach therapy,behavioral therapy என உங்கள் பணத்தை உருவிக் கொண்டிருப்பார்கள். உசாராகிக் கொள்ளுங்கள் இந்த ஆபத்தை புரிந்து கொண்ட பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இதை தடுத்து விட்டார்கள்.
குழந்தைகள் தங்களையும், சூழலையும் நன்கு உணரும் வரை ஃபோன் கொடுக்காதீர்கள். எலக்ட்ரானிக் மீடியா இல்லாத சூழலுக்கு மாற்றுங்கள். பின்னர் அவர்களுக்கு தேவைப்படும் பருவத்தில் ஸ்க்ரீன் டைமை லிமிட் செய்து பயன்படுத்த பழக்குங்கள், அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள், எதை மூளையில் திணிக்கிறார்கள் என்பதை கண்காணியுங்கள்,இல்லை உங்கள் இழப்பு அதிகமாக இருக்கும்.
கருத்துகள்