நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 5

 


நம் உடலின்  செல்கள் தனக்கு  தேவையான  சத்துக்கள் பற்றிய  சிக்னலை  மூளைக்கு அனுப்புகிறது.அதற்கேற்ற  உணவை நம் அனுபவ பதிவுகளிலிருந்து கண்டு மூளை அதன் மீது நாட்டம்  ஏற்படுத்துகிறது, அந்த  உணவை பார்த்ததும்,நுகர்ந்தததும் அந்த உணவை அடையாளம் கண்டு அதை ஜீரணிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்கிறது, அதை சுவைத்ததும் அந்த உணவுக்கேற்ற சுரப்புகளை சுரந்து வாயிலிருந்து செரிமானத்தை தொடங்குகிறது , அரைத்து கூழாக்கி பல்வேறு வேதி வினைக்கு உட்படுத்தி உணவின் நுண் சத்துக்களை பிரித்து ரத்தத்தில் ஈர்க்கிறது. உண்ணும் உணவு நம் கவனத்தில் பதியாமல், சுவைக்காமல் அவசர அவசரமாக அள்ளி கொட்டினால் இது முறையாக நடக்காது. பதட்டமான மன நிலையில்  ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் வேறு சுரந்து ஜீரண சக்தியை உடலின் தற்காப்புக்கு தயாராக மடை மாற்றிவிடுகிறது. இதனால்  செரிமானம் பாதிக்கிறது. 

        உணவை நொதித்து அதன் மூலக்கூறுகளை பிரித்தெடுக்க ஒவ்வொருவர் குடலிலிலும் சுமார் 100 ட்ரில்லியன் நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் இருக்கிறது .இது சுமார் 200 கிராம் அளவு. .அவை நம் உணவை செரிக்க உதவி வாழ்நாள் முழுவதும் நம் வயிற்றில் வாழ்பவை.அதில் நல்ல பாக்டீரியாக்களும் உண்டு கெட்ட உயிர்களும் உண்டு. ஒவ்வொன்றும் நம் உடலின் செல்களை போலவே நம் மூளையோடு தொடர்பு கொள்கிறது நம் தவறான உணவு பழக்கத்தால் நம் குடல் மோசமான பேக்டீரியாக்களின் கூடாரமாகலாம். கெட்ட பேக்டீரியாக்கள் தா வளர்வதற்கு தேவையான   கெட்ட  உணவுகளின் Grocery list ஐ  மூளைக்கு அனுப்பி விடுகிறது. சூப்பர் மார்கட் செல்லும் ஒருவர் எந்த செக்சனுக்கு போகிறார் என்பதை பொறுத்து அவர் குடலின் நிலை, உடலின் நிலை, மனதின் நிலை  உணரலாம். 

    நம் குடல் இரண்டாவது மூளை என்னும் அளவு குடலுக்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.கெட்ட பேக்டீரியாக்கள் . நம் உள்ளத்தில் dippression, mood swing, எரிச்சல் ,கோப உணர்வு ஆகியவற்றை உண்டாக்கி நம் உள நிலையும் கெடுக்கும். குடலை சீர் செய்தால் மன ஆரோக்கியத்தில்  உணர்வுகளில்  நல்ல மற்றம் உண்டாகும், அது உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். அது போல நம் மன நிலையை சீராக்குவதன்  மூலம் கெட்ட உணவின் மீதான டெம்டேசனை  தவிர்த்து கெட்ட பாக்டீரியாக்களையும் மட்டுபடுத்தலாம்,

 தீராத  கவலை  மன அழுத்தம் பொறாமை எண்ணங்கள்,  எதோ பெரிய நோயால்  உயிருக்கு ஆபத்து என்ற பயம் நெஞ்செரிச்சல் , வயிற்றுப்புண். ஆகிய நோய்களுக்கு காரணமாகிறது. கேண்டிடா,ஹெலிகோ பேக்டர் பைலோரி, குடல் புழுக்கள்,குடலின் உட்புற சுவர்களை அரித்து புண்ணாக்கி விடுகிறது. அதன் கழிவுகள் விஷமாக இரத்தத்தில் கலந்து உடல் முழுதும் பரவுகிறது அதை வெளியேற்ற  கல்லீரல் கிட்னிக்கு அதிக வேலை கொடுக்கிறது. மோசமான குடல் பாக்டீரியாக்கள் ஜீரண மண்டலத்தை கெடுத்து, வாயு, எதுக்களித்தல் , நெஞ்செரிச்சல், குடல் புண், தலைவலி போன்றவை உண்டாக்கும். குடல் வால்வுகள் சிதைவுறும், குடல் வீக்கமும் சேர்ந்து அமிலம் மேலேறி மூச்சு குழாயில் சேதமுண்டாக்கும். இதனால் தீராத இருமல்  நுரையீரல் தொற்று, சுவாச பிரச்சனை, மூச்சு திணறல்  உண்டாகும் , இதயத்துக்கு அருகே செல்லும்  உணவுக்குழாய் புண்ணில் அமிலம் தட்டுவதால் உண்டாகும் நெஞ்செரிச்சல்  பல வேளை ஹார்ட் அட்டாக் போல மரண பீதி  ஏற்படுத்தி விடும். நுரை ஈரல் பிரச்சினை இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்து மூளைக்கு மற்றும் உடலின் எல்லா பாகத்துக்கும் செல்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.முக்கியமாக மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் வாந்தி ,மயக்கம்,வாய் குளறல்  உண்டாகும். கரியமில வாயுவின் வெளியேற்றத்தையும் குறைத்து இரத்தத்தின் ph விகிதத்தை மாற்றி பல பிரச்சனைக்கு காரணமாகிறது.

       குடலில் கெட்ட பேக்டீரியாக்கள் அதிகமானால் நல்ல பேக்டீரியக்கள் குறைவாக இருக்கும். தயிர், பழைய சாதம் இவற்றில் நல்ல பேக்டீரியாக்கல் உண்டு, ஆனால்  குடல் கெட்டவர்களுக்கு இவை அலர்ஜி உண்டாக்கி விடும். நல்ல பேக்டீரியாக்கள் குறைவால் நம் உணவு சரியாக நொதித்து நல்ல சத்துகள் குடலால் உறுஞ்சப்படாமல் போகும், முக்கியமாக் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு அது ரத்த சோகையை அதிகமாக்கும், தேவையிண்றி எடுத்துக்கொள்ளும் ஆன்டி பயாட்டிக் மருத்துகள் குடலின் நல்ல பாக்டீரியாக்களையும்  ஒழித்து விடுகிறது. சிறிய குழந்தைகள் அடிக்கடி தொற்றுக்குக்குள்ளாகும் போது அவர்கள் நோயெதிர்ப்பு சக்தியே அதை கவனித்துக்கொள்ளும்.இது இயல்பு. ஆனால் ஆர்வக்கோளறில் சிறு தொற்றுக்கெல்லாம் அவர்களுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுப்பது அவர்கள் குடலில் உள்ள பாக்டிரியாக்களை முழுமையாக அழித்து விடுகிறது. இதற்கும் ஆட்டிசம் போன்ற மூளை பாதிப்புகளுக்கும் தொடர்பு உண்டு.
         சில பசையுள்ள தானிய உணவுகளில் உள்ள குளுட்டான்  எனும் பொருள் சிலருக்கு அலர்ஜியாகி குடலில் சத்துக்களை உறிஞ்சும் பகுதியை தாக்கிவிடுகிறது இது leaky Gut மிக முக்கியாமான குடல் பிரச்சினையாகும். அப்போது உணவின் நுண் துகள்கள் எளிதில் ஊடுருவி  இரத்தில் கலந்து விடுகிறது.   நம் நோயெதிர்ப்பு அதை சக்தி தாக்கி அழிக்க முயல்வதில் உடல் முழுதும் தாக்கப்பட்டு வீக்கம் (inflamation) ஏற்படுகிறது.
குடலது செம்மையானால் மனமது செம்மையாகும் உடலது செம்மையாகும், "அவனுக்கு பொறாமை, வயித்தெரிச்சல்.". "அவனுக்கென்ன கிருமி கடியா ?" , "வயித்தில பட்டாம் பூச்சி பறக்கிறது", "Gut feeling "எனும் சொல்வழக்கு சும்மாயில்லை.

கருத்துகள்