நம் உடல் என்பது பல்வேறு உறுப்புகளால் ஆனதாக உணர்கிறோம். அவை யாவும் கோடிக்கணக்கான செல்களால் ஆனது என அறிகிறோம், ஒவ்வொரு செல்லுமே ஒரு தனித்த உயிரினம் தான்.நமக்குள்ள எல்லா தன்மையும் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் இருக்கிறது. செல்கள் பிறக்கிறது , இறக்கிறது, சாப்பிடுகிறது, கழிவு வெளியேற்றுகிறது உணர்கிறது. இந்த கோடிக்கணக்கான செல்கள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறி தொடர்பு கொள்கிறது. அனைத்து செல்களின் ஒட்டு மொத்த உணர்வு தான் நாம் என்ற உணர்வாக நம்மை பார்க்கிறது. இப்படி நம்மை பார்க்கும் நான் தான் முதலாவது நான்.
சரி இப்போது இரண்டு நான் இருக்கிறேன், இதில் பார்க்கும் நான் யாராகவெல்லாம் இருக்கிறேன், பார்க்கப்படும் என்னை எப்படியெல்லாம் உணர்கிறேன் என்று பார்ப்போம்.
இந்த பார்க்கும் நான் என்பது நான் குழந்தையாய் இருந்த போதும் இப்படித்தான் பார்த்து அனுபவித்தது உடல் வளர்ந்த போதும் அதன் தன்மையில் எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே தான் இருக்கிறது. அது என் நினைவு தோன்று முன்னே இருக்கிறது, இதற்கு பிணி மூப்பு சாக்காடு எதுவுமில்லை . இது தான் நம் தன்னுணர்வு எனப்படும் கானசியஸ்.இது உணரும் உடல் தான் மாற்றமடைகிறது.
உடலை பல பாகங்கள் கொண்ட எந்திரமாக ஒரு புறம் உணர்கிறோம், அதற்கு குறிப்பிட்ட வடிவம், வண்ணம், அது இருக்க இடம் எல்லாம் உணர்கிறோம். உடல் என்பது பல கோடி செல்களின் கூட்டு ஸ்தாபனம். நாம் என்ற ஒற்றை உணர்வு ஒரு மாயை, இந்த உணர்வின் சூத்திரக்கயிறு ஒவ்வொரு செல்லின் உணர்விலும் இருக்கிறது என உணரும் போது நான் என்ற ஒற்றை பிம்பம் கலைந்துவிடுகிறது.
நம் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான செல்கள் மட்டுமல்ல கோடிக்காண பாக்டீரியாக்கள் கூட இந்த கூட்டு தாபனத்தின் பங்காளிகள்.
நம் உடலில் தினமும் லட்ச கணக்கான செல்கள் இறந்தும் பிறந்தும் கொண்டிருக்கின்றன. ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.சுவாசம் உணவு மூலம் பிரபஞ்ச ஆற்றல் கணந்தோறும் நம்மில் உள்வாங்கப்பட்டும். வெளியாகிக்கொண்டும் இருக்கிறது .நான் என்ற நினைவை தொடர்ந்து புதுப்பித்து கொண்டு உடல் கணந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்