என் ஓட்டு யாருக்கு?


தேர்தல் வருகிறது
எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம், எந்த கட்சி நல்ல கட்சி என்று எல்லோரும் அலசிக் கொண்டிருக்கிறீர்கள், சில உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்
எல்லா அரசியல் கட்சிக்களுக்கும் கொள்கைகள், மக்கள் நலம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தான் முதல் கொள்கை ,எல்லாம் ஒரே குட்டையின் மட்டைகள் தான்.
விதி விலக்காக இருந்தவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள், அல்லது இனி மேல் பிறக்க வேண்டும்,
கொள்ளையடிக்க அவர்களுக்கு பதவி தரும் அதிகாரம் தேவைப்படுகிறது. இந்த பதவியை பெற அவர்கள் போடும் நாடகம் தான் தேர்தல்.
ஜனநாயக தேர்தல் முறையில் ஒரு சிக்கல் இருக்கிறது,
இதன் பாதகமான அம்சம் தற்போதய மக்கள் நிலை தான்,
  • மோசமான மறதி, 
  • சாதிய, மத ,இன வெறி  
  • அல்பமான இலவசங்களுக்கு ஆசைப்படுவது,  
  • பணத்திற்காக ஓட்டு விற்பது
  •  மீடியாக்கள் கூறும் கதைகளையும் பொய்களையும் நம்புவது , 
  • கருத்து திணிப்பில் கவிழ்ந்து விழுவது 
  • பெரும்பான்மை மக்கள் கல்வியோ தொலை நோக்கு பார்வையோ இல்லாதிருப்பது 
  • மதுவுக்கு அடிமையாயிருப்பது  
  • சினிமா உருவாக்கும் பிம்பங்களை நிஜமென கருதுவது 
  • பொருளாதார குற்றங்கள் ,லஞ்சம் ,ஊழல் போன்றவற்றின் அபாயம் பற்றிய விழிப்புணர்வற்றிருப்பது
 மோசமானவர்கள் மட்டுமே அரசியலில் இருக்க மூடியும் என்ற சூழ்நிலைய உருவாக்கிய ஊழல் ,லஞ்சம் போன்ற பொருளாதாரக்குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வோ, அக்குற்றங்கள் செய்வதற்கு வசதியாக அமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தை சரி செய்வது பற்றியோ குற்றவாளிகளை எளிதாக தப்பிக்க விடும் நீதித்துறை பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை

நீதித்துறையும், லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையும் அரசியல் வாதிகள் பிடியில் இல்லாமல் வேகமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும். பொருளாதார குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 
மக்களை எதையும் எளிதில் மறக்கடிப்பதில் மீடியாக்கள் திறமையாக பயன்படுத்தப்படுகின்றன.,

கட்சிகள் எதுவானாலும் பெரும் முதாலாளிகள் முதல் முடக்கி தங்களுக்கு உதவும் அரசியல் வாதிகளை எளிதில் வெற்றி பெற வைத்துவிடுவார்கள் , பணத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் வாங்கி விடலாம் எனும் நிலை, வெற்றி பெற்றவர்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்து முதலாளிகளுக்கு சாதகமாக எல்லா வசதிகளும் சலுகைகளும் செய்து அவர்கள் போட்ட எலும்புத்துண்டுக்கு மக்கள் இறச்சியை முதலாளிகளுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள்.
சிறு வியாபரிகளை அழிக்க, தேவையான நிலத்தை அபகரிக்க,வரி ஏய்ப்பு செய்ய, கோடி கோடியாய் வங்கி கடன் பெற என அரசியல் வாதிகள் விசுவாசமாய் உதவுகிறார்கள்,
அந்த பணத்தில் அவர்களும் திளைக்கிறார்கள். யாருக்கு ஓட்டு போட்டாலும் உங்களை ஆண்டு அபகரிப்பது இவர்கள் தான்,

அளவுக்கு அதிகமான வரி விதிப்பு மூலம் மக்கள் தங்கள் கோவணம் உருவப்படுவது தெரியாமல் இருக்க அவர்கள் விழித்துக்கொள்ளாமல் தாலாட்டு பாடி உறங்க வைக்க, மக்கள தங்கள் கவலைகள் பிரச்சனைகளை சிந்தித்து அதற்கான தீர்வுக்கு நகர விடாமல் அவர்கள் சில யுக்திகளை பயன் படுத்துகிறார்கள்
  • பணத்தை இறைத்து மீடியாக்களை கொண்டு பொய்களை திரும்ப திரும்ப கூறி மக்களிடமிருந்து உண்மையை மறைத்து பொய்களை நம்ப வைப்பது, 
  • மக்கள் பணத்தை சாராயம் மூலம் கொள்ளையடிப்பது மட்டுமின்றி, அவர்களை மது அடிமகளாக மாற்றி வைப்பது  
  • சீரியல் சினிமா கிரிக்கெட் மாயையில் ஆழ்த்தி உறக்காட்டுவது 
  • விலைவாசியை உயர்த்தி மக்களை கடுமையாக உழைப்பில் கட்டி போடுவது
  • இலவசம் மற்றும் செயல் படாத திட்டங்களை அறிவிப்பு செய்வது போன்று மக்களை ஏமாற்றுவது 
  • பெரும்பாலான மக்கள் கல்வி பெறக்கூடாது எனறு கல்வியை இலவசமாக்காமல் கவனமாக இருப்பது.மேலும் நடைமுறையில் இருக்கும் கல்வியோ மாணவர்கள் சிந்தனையோ ஒழுக்கத்தையோ அறத்தையோ போதிப்தாக இல்லை, சம்பளம் பெறத்தகுந்த வேலைத்தகுதி வளர்ப்பதாக மட்டும் தான் இருகிறது, கல்வியும் பணம் சம்பாதிக்க மட்டுமே என்றாகி போனது 
  • கட்சிகளை பலவாறு உடைத்து அதன் மூலம் மக்களை ஓட்டு வங்கிய பிரித்து எந்த கட்சியும் ஏகோபித்த ஆதரவு கிடைக்காமல் செய்து அதன் மூலம் ஆட்சி உருவாக்கும் அதிகாரத்தை மக்களிடமிருந்து பிடுங்கி பணம் மட்டும் தான் தீர்மானிக்கும் நிலையில் வைத்திருப்பது என பலவகைகளில் இந்த அரசியல் விளையாட்டில் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
          விழித்துக்கொண்டவர்கள் தொடர்ந்து எல்லா மக்களையும் விழிப்படைய செய்ய வேண்டும்.  மக்கள் புரட்சி உண்டாக்கி, இருக்கும் அமைப்புகளில் மாற்றம் உண்டாக்கினால் மட்டுமே நல்லாட்சி சாத்தியம், ஊழல் ஒழிந்தால் நேர்மயறவர்கள் அரசியலில் இருக்க மாட்டார்கள்,நல்லவர்களுக்கு வழி கிடைக்கும்.
           அரசியலில் ஜாதி,மத  முலாம்கள் பதவிக்காவும் அதன் மூலம் கொள்ளை அடிக்கும் பணத்துக்காவே. எனவே ஜாதி அரசியல்,இன அர்சியல் கூட உங்கள் இரண்டாம் எதிரிதான், முதல் எதிரியான ஊழலை ஒழிக்காதவரை எம்மாற்றமும் உண்டாக போவதில்லை, ஊழலை ஒழிக்காதவரை மக்கள் வாழ்க்கை தரமும் உயரப்போவதில்லை,  எந்த வடிவத்தில் மக்கள் பணம் சுரண்டப்பட்டாலும் கேள்வி கேளுங்கள். நிறை வேற்றப்படாத வாக்குறுதிகளை மறந்து விடாமல் நிறைவேற்ற  கேளுங்கள்.நீதிகள் விலைக்கு வாங்கப்படுமானால் நீதிக்காக களமிறங்கி போராடுங்கள், 
           ஒரு நாட்டை சீரழிப்பது உழலில் கிடைக்கும் கணக்கற்ற வருவாய் தான், மக்கள் உறக்கம் கலையாமல் மாற்றமில்லை, சமூக வலைத் தளங்களில் லஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு உருவாக்குங்கள், 
        யார் யாரெல்லாம் உழல் செய்தார்களோ அவர்களை முதலில் புறக்கணியுங்கள், எந்த வேட்பாளர்கள் தங்கள் கட்சிக்கு அதிகமாக பணம் கொடுத்து தேர்தலில் சீட் வாங்கினார்களோ அவர்களையும் அடுத்து புறக்கணியுங்கள், கொள்கையற்றவர்கள், திறமையற்றவர்கள், செயல் படாதவர்களையும் புறக்கணியுங்கள்.சிந்தனைத்தெளிவு ,தொலைநோக்கு அற்றவர்கள் மக்களை சந்திக்காதவர்களையும் புறக்கணியுங்கள், அப்படி யாரும் இல்லாவிட்டால் கவலை வேண்டாம் உங்கள் வாக்கு சீட்டை விட வலிமையானது விழிப்புணர்வு,விழித்துக்கொள்ளுங்கள் மாற்றம் வரும்
என் ஓட்டு லஞ்சம் ஊழலுக்கு எதிராக

கருத்துகள்