மஞ்சள் பால் -அற்புத பானம்

    
மஞ்சள் (turmeric) மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் மிக்க உணவுப் பொருள். இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத இடம் மஞ்சளுக்கு உண்டு. பல நூற்றாண்டுகளாக மஞ்சள்  உடலை தூய்மையாக்கும் மருந்தாக பாவிக்கபட்டு வருகிறது. உடல் உள்ளுறுப்புக்களும் மூட்டுக்களுக்கும் ஆரோக்கியம் தரும் மஞ்சள் உடலின் நோய் எதிர்பு சக்திக்கு பலம் சேர்த்து சிறந்த ஆன்டி பயாட்டிக்காக விளங்குகிறது. மஞ்சளுடன் இன்னும் சில சத்துப்பொருட்களை சேர்த்து தயாரிக்கும் பால் மிக சிறந்த அற்புதமான ஆரோக்கிய பானம்.

தேவையான பொருட்கள்
2 கப் பாதாம் பால் (almond milk) (வீட்டிலே தயாரித்தது நல்லது)
1 மேசைக்கரண்டி சுத்தமான தேன் (honey)(தேனை சூடு படுத்தக்கூடாது .பாலை கொதிக்க வைத்தபின் சேர்க்க வேண்டும்)
1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் (coconut oil) (தேவைப்பட்டால் )
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்(turmeric powder)
1 துண்டு லவங்கப் பட்டை (கறுவாப் பட்டை) (cinnomon)அல்லது தூள் ஒரு தேக்கரண்டி
1 சிட்டிகை நல்ல மிளமிளகு (black pepper)மற்றும் நசுக்கிய இஞ்சி(ginger)
செய்முறை: 
அனைத்தையும் கலந்து ஒரு வாணலியில் வைத்து மிதமாக சூடு படுத்தவும். 5 முதல் 7 நிமிடத்தில் தங்க நிறம் வந்ததும் இறக்கி தேன் கலந்து
பருகவும்.
 இந்த அற்புத பானம் உடலின் பிரச்சனைகளை சரிசெய்து,உடலை தூய்மைப்படுத்தும் இதை பருகிய பின் ஒரு கப் தண்ணீர் அருந்துவது நல்லது

நன்மைகள்
  • கேன்சரை தடுக்கிறது,
  • ஜலதோசம் ,இருமல் ,காய்ச்சலுக்கு நல்ல மருந்து
  • சுவாசப்பிரச்சனைகளுக்கு குணமளிக்கிறது
  • மாத விடாய் கால வலிக்கு நிவாரணமளிக்கிறது
  • வலி நிவாரணி
  • தூக்கமின்மைக்கு நிவாரணம் தருகிறது
  • மூட்டுவலிக்கு குணமளிக்கிறது
  • இரத்தததை தூய்மை செய்கிறது
  • எலும்புகளுக்கு பலம் அளிக்கிறது

கருத்துகள்

Rajakamal இவ்வாறு கூறியுள்ளார்…
true, nothing but nothing