09 June 2009

கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது?


எந்த விழாக்களானாலும் பார்ட்டியானாலும் சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர் பானங்கள் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந்த வண்ண திரவங்களால் உடலுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக அவற்றுள் அடங்கியுள்ள நச்சுப் பொருட்கள் உடலுக்கு கேடு செய்கின்றன என்ற விழிப்புணர்வாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

பற்கள் பாதிப்பு அடைகின்றன: பொதுவாக எல்லா குளிர் பானங்களும் அமிலச்சுவையுடன் இருக்கின்றன.இதில் கலந்துள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பதம் பார்த்து கரைத்து விடுகின்றன.மேலும் அதிலுள்ள சர்க்கரை சத்து பற்களைத் தாக்கும் பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது.
பல பிராண்டட் குளிர் பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நச்சுப்பொருள் எச்சம் உள்ளது என்று 2003-ல் அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் அறிக்கை வெளியிட்டது. இது செவிடன் காதில் சங்காய் அலட்சியப் படுத்தப்பட்டு இன்றும் நாகரீகமான பானமாகவே பொதுவாக கருதப்பட்டு பயன் படுகிறது. இதன் கெடுதல் தன்மை ஒரு புறம் இருக்கட்டும் இத்தகைய பானங்களில் எந்த வித ஊட்டச்சத்தும் இல்லை என்பதே உண்மை. ஒருகரண்டி சர்க்கரைக்கு சமமான சர்க்கரை சத்தும் தண்ணீரும் உடலுக்கு தேவைப்படாத சில ரசாயனமும் தான் அதில் உள்ளது. தேவைக்கு அதிகமான சர்க்கரை சத்து இரத்தத்தில் கொலெஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். பின்னர், நீரிழிவு, இரத்த அழுத்தம் , இதய நோய், பக்க வாதம் எல்லாம் இதன் செல்லப்பிள்ளைகள்.

ஆபத்தான ரசாயனங்கள்
Aspartame
          "Light:" அல்லது "Diat"  குளிர்பானங்களில்  சர்கரைக்கு பதில் aspartame  என்ற செயற்கை இனிப்பூட்டி ரசாயனம் சேர்கப்படுகிறது. இது கலோரி தருவதல்ல ஆனாலும் இது தாகத்தை தணிப்பதற்கு பதில் . பசியும் தாகத்தையும் அதிகரிக்க செய்யும்.. 2010ல் ~நடைபெற்ற ஆய்வில்  இது ஈரல்,நுரையீரல் மற்றும் மூளையில் ட்யூமர் கட்டிகள் உருவாக்க கூடும் என கண்டறியப்பட்டது.
          இந்த aspartame  சிதைவுற்று methanol ஆக மாறுகிறது. இது சுற்று சூழலுக்கு கேடு விளவிக்கும் ஒரு காரணியாகும்.
        மனித உடலில் இந்த methanol மேலும் சிதைவுற்று formic acid மற்றும் formaldehyde ஆக மாறுகிறது.இது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு விஷப்பொருள். இதனால் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி, மந்தம் ,பார்வைக்குறைபாடு மற்றும் மறதியை இந்த செயற்கை இனிப்பூட்டி உருவாக்கும்
Caramel
         கோலா பானங்களின் பிரவுன் நிறத்திர்க்காக இந்த ரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.இதில் உள்ள  ammonia மற்றும் sulphite  ஈரல் மற்றும் நுரையீரல் புற்று நோயை உருவாக்குகிறது.மேலும் தைராய்ட், லூக்கேமியா போன்ற நோய்க்கு காரணமாவதாக CSPI U.S. research institute தெரிவிக்கிறது.
Phosphoric acid 
       சிட்ரிக் ஆசிட்டுக்கு பதிலாக கோலா பானங்களில் சேர்க்கப்படும் இந்த ரசாயனம் சிறுநீரக செயலிழப்பு மற்றும் Osteoporosis எலும்பு உடைதல் நோய்க்குக் காரணமாக இருக்கிறது.
Benzoic acid
        குளிர் பானங்கள் நெடு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பென்ஸாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.
 Sulphur Dioxide
       எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர் டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஓருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க் கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர் மூலம்சேர்ந்த சல்பர் டையாக்ஸைடே காரணம்.
 Caffine
         பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப் படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. இதனால் தூக்கமின்மை, நரம்புக் கோளாறு, எரிச்சல், வயிற்றுப் பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப் பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறு விதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்கு பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.
இத்தகைய ஊக்க பானங்களை மதுவுடன் சேர்த்து அருந்துவது உடலுக்கு மிக்வும் கேடு செய்யும். ஏனெனில் இவை தற்காலிகமாக மூளையை தூண்டுகின்றன. ஆனால் மது மூளையை மந்தப்ப்படுத்துகிறது. இந்த முரண்பட்ட தன்மையால் மனிதனின் நரம்பு மண்டல கட்டுபாடு சீர்குலைகிறது. மயக்கம் வாந்தி, இதயத் துடிப்பில் சீரின்மை உண்டாகிறது.
Tartrazine
       ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப் படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் Tartrazine என்ற கலரை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்து, உடலில் வீக்கம், கடுமையான ஜலதோஷம், கண்கள் சிவப்பாக மாறுதல், பார்வைக் குறைபாடு, நரம்புக்கோளாறு ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்றுநோய் போன்றவற்றை உருவாக்ககூடும்.
       குளிர் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை, சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.
 carboxymethylcellulose
       ஐஸ்க்ரீமில் உள்ள carboxymethylcellulose எலிகளிடம் செய்த சோதனையில் 80% புற்று நோய் உரு்வாக்குவது கண்டு பிடிக்கப் பட்டது.
Aluminium
அலுமினிய கேன்களில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்களில் அதன் அமிலத் தன்மையால் அலுமினியத்தோடு வினைபுரிந்து அலுமினியம் சிறு அளவாவது குளிர்பானத்தில் கலக்கும் வாய்ப்புள்ளது.மேலும் இந்த கேன்கள் பெட்டி பெட்டியாக கடைகளிலும் குடோன்களிலும் வைக்கப்பட்டிருக்கும் வேளையில் எலிகள் போன்ற பிராணிகளால்  கேன்களில் வாய் வைத்து குடிக்கும் பகுதியில் கிருமிதொற்று ஏற்படும் அபாயம் உள்ளது
        பாக்கெட்டுகளில் அடைத்து வரும் பழச்சாறுகள் பலதும் உண்மையில் பழச்சாறுகள் அல்ல. சர்க்கரை, தண்ணீர், அராபிக் கம் எனப்படும் கோந்து மற்றும் சில ரசாயன வண்ணங்களும் எஸ்சென்சும் தான். பல சாஃப்ட் ட்ரிங்க் பொடிகளும் ஆபத்தான வெறும் ரசாயனக்கலவைகளே.எனவே, அடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, மோர், லெமன்ஜூஸ், காரட் ஜூஸ், இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். அதுவே நல்லது.

தாகம் ஏற்பட்டல் உடனே தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். ஜூஸ் அதற்கு தீர்வாகாது.சுத்தமான தண்ணீர் என்ற பிரமையை உருவாக்கி வரும் மினரல் வாட்டர்களிலும் எந்த விதமான சத்துப் பொருளும் இல்லை பதிலுக்கு ரசாயனங்களே சேர்க்கபடுகிறது. தொழிற்சாலை கழிவுகள் ஆற்று நீரில் கலந்து பல இடங்களில் இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரே விஷமாகிக் கிடக்கிறது். இதை தான் குளோரின் கலந்து பல நகராட்சிகளில் குடிநீராக வினியோகிக்கிறார்கள். பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான குடிநீரையும் பரிசோதித்து  நல்ல குடி நீராக மாற்றி உபயோகப் படுத்துவதே நல்லது.

Download As PDF

12 comments:

shiyamsena said...

fine........... thanx


shiyamsena
free-funnyworld.blogspot.com

malar said...

சில பாகெட் ஜூச்சில் புழு கூட இருக்கும் .

நல்ல பதிவு

Joe said...

It is a very good post.
I don't drink soft drinks, at least I try to avoid them 99% of the time.

But then, people have forgotten these info previoiusly shared by many magazines and gone back to their old ways.

சாதிக் அலி said...

உண்மை தான் மலர்.ஒரு முறை நான் வாங்கிய மேங்கோ ஜூஸிஸ் பாட்டிலுக்குள் புழு இருந்தது.நல்ல வேளை சாப்பி்டு முன் கண்டேன்.மேலும் இங்கு எத்தனை பேர் எக்ஸ்பைரி டேட் பார்த்து குடிக்கிறார்கள் என்றும் தெரிய வில்லை.

சாதிக் அலி said...

வாங்க shiyamsena, malar, joe.உங்கள் கருத்துக்கு நன்றி

Ezhil Arasu said...

A good Article. please spread this out

Sathik Ali said...

As explained in The Encyclopedia of Natural Medicine:
Soft drinks have long been suspected of leading to lower calcium levels and higher phosphate
levels in the blood. When phosphate levels are high and calcium levels are low, calcium is
pulled out of the bones. The phosphate content of soft drinks is very high, and they contain
virtually no calcium. It appears that increased soft-drink consumption is a major factor that
contributes to osteoporosis. The link between soft-drink consumption and bone loss is
going to become even more significant as children who were practically weaned on soft
drinks reach adulthood. Soft-drink consumption in children poses a significant risk factor for
impaired calcification of growing bones. Since there is such a strong correlation between
maximum bone-mineral density and the risk of osteoporosis, the rate of osteoporosis may
reach even greater epidemic proportions.
The severe negative impact that soft drinks exert on bone formation in children was clearly
demonstrated in a study that compared fifty-seven children with low blood calcium levels,
aged eighteen months to fourteen years, to 171 matched controls (children with normal
calcium levels). The goal of the study was to assess whether the intake of at least 1.5
quarts per week of phosphate-containing soft drinks is a risk factor for the development
of low blood calcium levels. Not surprisingly, a strong association was found. Of the fiftyseven
children who had low blood calcium levels, thirty-eight (66.7 percent) drank more
than four bottles (12 to 16 ounces per bottle) of soft drinks per week, but only forty-eight
(28 percent) of the 171 children with normal serum calcium levels consumed as much
soft drink. For all 228 children, a significant correlation between serum calcium level and
the number of bottles of soft drink consumed each week was found. The more soft drinks
consumed, the lower the calcium level.
These results more than support the contention that soft-drink consumption leads to lower
calcium levels in children. This situation that ultimately leads to poor bone mineralization,
which explains the greater risk of broken bones in children who consume soft drinks.

Sathik Ali said...

Soft drinks make you ugly by altering your facial bone structure Consuming soft drinks can even alter your physical appearance by slowly destroying the bone structure of your face and jaw. Much of the calcium loss that impacts bones affects the dominant jawbone, which makes a person’s face look old, weak and sunken:
The differences between people who had eaten their ancestral diet from birth and people who had feasted on sugar, white flour products, and soft drinks are astonishing. The traditional wholesome diet produced wide faces with jaws wide enough to accommodate all thirty-two teeth with proper spacing, high cheekbones, few to no cavitations, and wide foreheads to house their brains. The facial structures of the people who enjoyed a more
“civilized” diet are not so
beautiful. Their jaws are narrow with so little room that the teeth
crowd together in two crooked rows. Cavities are common, and in cultures where dental care is inadequate, the pain and suffering are intolerable. Their foreheads are also narrow,or misshapen, with scarcely enough room for a growing brain.
- Carol Simontacchi, The Crazy Makers

Sathik Ali said...

Aluminum cans may present yet another health danger for soft drinks
No educated person in their right mind would eat or drink aluminum, and yet nearly everyone will
gladly drink highly acidic substances that have been rubbing molecules with aluminum for any
number of days, weeks or months. No metal is “100 percent solid,” as any physicist knows. Some
of the aluminum inevitably leeches into the soft drink itself.
Although aluminum is not a heavy metal, environmental exposure is frequent, leading to
concerns about accumulative effects and a possible connection with Alzheimer’s disease.
In the home, we are in constant contact with aluminum in foods and in water; from cookware
and soft drink cans; from consuming items with high levels of aluminum (e.g., antacids,
buffered aspirin, or treated drinking water; or even by using nasal sprays, toothpaste, and
antiperspirants).
- Disease Prevention and Treatment by The Life Extension Foundation

Sathik Ali said...

On Sunday a family picnic with a few drinks tin.Pada Monday, two family members admitted to hospital and placed in the Intensive Care Unit space. He died on Wednesday.
Autopsy results concluded it hit Leptospirosis. The virus is stuck to the tin cans are drunk, without the use of glasses / cups. Test results showed that tin was infected mice that had dried urine containing Leptospira i.
Highly recommended to rinse the parts evenly on all soda cans before drinking it. Cans are usually stored in the warehouse and delivered direct to retail stores without cleaning.
A study shows that the top of all beverage cans more contaminated than public toilets (full of germs and bacteria.)
So, clean it with water before putting mouth in order to avoid all accidents total.

Sathik Ali said...

‘டெட்ரா பாக்கெட்டுகளில் வரும் ஜூஸ்கள்... 100 சதவிகிதம் ஒரிஜினல் ஜூஸ் எனக் குறிப்பிட்டிருந்தால் ஓ.கே. மற்றபடி வெறுமனே ஃப்ரூட் ஜூஸ் என்கிற அடையாளத்துடன் வருபவற்றில், 30-40 சதவிகிதம் மட்டுமே பழக்கலவையும், மீதியெல்லாம் இனிப்புக்கான சிரப்புமாகவே இருக்கும். பெரிய நிறுவனத் தயாரிப்புகளில் HFCS (High fructose corn syrup) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை விலை அதிகம் என்பதால், சோளத்திலிருந்து எடுக்கப்படுகிற மலிவான, ஒருவித இனிப்பு சிரப்பான இதையே, பல தயாரிப்புகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Sathik Ali said...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=LZp29Qeu8_U