வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.
பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.
வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.
வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்
- கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?
- பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.
- கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா.
- இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம்
- தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்
- புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
- அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
- ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
- வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.
ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.
அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.
முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?
வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.
பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?
வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.
நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.
காலையில் ஒரு எறும்பு வரிசையை பார்த்தேன். சில எறும்புகள் தலையில் ஓர் அரிசியுடன் போய்க் கொண்டிருந்தது. இந்த எறும்பெல்லாம் எங்கே போய் வருகிறதென்று உற்று பார்த்த போது தான் தெரிந்தது கலைஞர் படத்துடன் ஒரு அரிசி ஒரு ரூபாய் போர்டுடன் சிறிய ரேசன் கடை
கருத்துகள்
ஹா ஹா ஹா
இரசித்தேன் ...
நானும் கூட வேற்று கிரக வாசி பற்றி ஒரு கதை எழுதினேன் (http://mukkonam.blogspot.com/2009_01_01_archive.html).
enna sir neenga solringa manithan piranthathu jeengal matrum amino amilangalin matrangalinaal than endru athu vinggana poorva kandu pidippaanaalum
ALLAH than thiru marai quranil manithanai naam mannil irunthum intheri thuliil irunthum padithom engiraane? quranin paarvaila ungalin vinggana kootru poi aaga therigirathey? satru vilakkamudiyumaaa?
என் முன்னே சில ரொட்டிகள் இருக்கிறது பக்கத்தில் டார்வின் இருந்தார்.இந்த ரொட்டி எப்படிப்பா வந்தது என்று கேட்டேன்.அவர் சொன்னார்.முதலில் இது ஒரு கோதுமையாக இருந்தது அப்புறம் அதை மண்ணில் விதைத்ததும் அது மண்ணின் வளத்தை உறிஞ்சி பல கோதுமை மணிகளாக விளைந்தது.பின்னர் அந்த கோதுமை மணிகளை பொடித்து கோதுமை மாவாயிற்று அப்புறம் ஒரு நாள் அந்த மாவை தண்ணீரில் குழைத்து சிறு உருண்டைகளாக்கினார்கள் பின் அதை தட்டையாக் பரத்தினார்கள் பின் அவை சுட்டு எடுக்கப்பட்டு ரொட்டிகளாயின அது தான் இது என்றார். கடவுளே இப்படியா ரொட்டி உருவாகிறது என நான் வியந்த போது கடவுள் சொன்னார் ஆம் மனிதா உன்னைப் போல் இந்த ரொட்டியை ஒரு சிறு கோதுமையிலிருந்து உருவாக்கினோம்.நீ உண்ணும் இந்த ரொட்டி முழுக்க முழுக்க மண்ணில் விளைந்தது தான். இதை நீ உண்டபின் இது உன் உடலின் தசையாக மாறும் பின் நீ மாண்டபின் மீண்டும் மண்ணாக மாறும்.
எனக்கு ஏதோ புரிந்தது ஆனால் இரு கூற்றிலும் எங்கே முரண்பாடு என தான் புரியவில்லை?
அது போல //டார்வினுடைய பரிணாம கோட்பாடு (கவனிக்கவும் கண்டுபிடிப்பு அல்ல)// என்று கவனிக்கும் படி எடுத்து சொல்லியும் குதர்கம் பேசுகிறீர்களே.அவர் ஒரு கருத்தை சொல்லி விட்டு போனால் அது டார்வின் கொள்கை என்று அறியப்படுகிறது.அது விஞ்ஞான விதி ஒன்றும் அல்ல. பல அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொன்டிருக்இறார்கள் .சிலர் அப்படியில்லை மறுக்கிறார்கள் அது அவரவர் விருப்பம் டார்விவினிசத்துக்கு வக்காலத்து வாஙுகுவது என் கட்டுரையின் நோக்கம் அல்ல .ரொட்டிக்ககதை ஒரு உதாரணம் தான் அது கற்பனை தான் டார்வினுடன் ரொட்டியெல்லாம் சாப்பிடவில்ல.பின்னூட்டமிட்ட மற்றொரு நண்பருக்கு விளக்கியது.புரியாவிட்டால் விட்டு விடுங்ககள். சரி டார்வினுடைய எந்த கருத்தை மறுத்து புதிய கோட்பாடு வைத்திருக்கிறீர்கள். சும்மா தெரிந்து வைத்து கொள்ளத்தான்
\\வேற்றுக்கிரகத்திலிருந்து யாரோ பறக்கும் தட்டில் இங்கு வந்து டீ குடித்துவிட்டு போகிறார்கள் என்ரு நான் சயன்ஸ் பிக்சன் கதை எழுதவில்லை.\\
நீங்கள் \\கெட்டியான பாறை போல் இருக்கலாம், ..\\ என்பதில் ஆரம்பித்து \\தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்\\ என்பது வரைக்கும் இருக்கலாம்... இருக்கலாம்.. என்று சொல்லியிருந்தாலும் நீங்கள் சொல்லியுள்ள விதம் அவர்கள் ஏதோ உங்கள் வீட்டிற்கு வந்து டீ குடித்துவிட்டுப் போனது போலத்தான் உள்ளது. வேற்றுக் கிரகங்களில் உயிரனங்கள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை, அதே சமயம் இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரையில் இல்லை, அப்படியிருக்கும் போது, ஒருவேளை அப்படி உயிரநகல் இருந்தால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இங்கே இப்படியெல்லாம் இருக்கலாம் என்று நீங்கள் இங்கே சொல்லியிருப்பதற்கு ஆதாரமென்ன?? கண்ணில் பார்க்காமல், அனுமானத்தில் மூலமாக எழுதுவதற்குப் பெயர் தான் Science Fiction!! நீங்கள் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.
\\குதர்கம் பேசுகிறீர்களே\\ அப்படிப் பேச நீங்கள் என்ன எனக்கு விரோதியா, இல்லை நமக்குள் பங்கு தகறாரா?
\\பல அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொன்டிருக்இறார்கள் .\\ அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்பு, ஆனால் அறிவியல் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
\\சரி டார்வினுடைய எந்த கருத்தை மறுத்து புதிய கோட்பாடு வைத்திருக்கிறீர்கள். \\ ரொட்டி வேண்டுமானால் சொல்லுங்கள் செய்து வைக்கிறேன், ஆனால் கொள்கை கோட்பாடு பண்ணும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.
ஆக வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறது அல்லது இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.இதை தானே நான் இருக்கலாம் என்று சொன்னேன். நீங்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்துக்கு ஆதாரம் கேட்கிறீர்களே? //உங்களுக்கே இது அநியாயமா தோணலியா!! //
//அப்படி உயிரநகல் இருந்தால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்//
இதை தானே நான் சொல்கிகிறேன் அயல் உயிரின்ங்களில் நாம் பூமியில் உள்ள உயிர்களின் குணாதிசங்களை தேடக்கூடாது அவர்கள் எவ்வடிவிலும் இருக்கலாம் என்று சிலதை பட்டியல் போட்டு இப்படியெல்லாம் கூட இருக்க்கூடும் என்று தான் சொன்னேன்.இருக்கிறது என்று கண்டுபிடித்து எழுதவில்லை ஆதாரம் தருவதற்கு.அப்படியே ஒன்றைப் பிடித்து உங்கள் கையில் தந்தாலும் அது ஒரு உயிரினமாக இருக்கக் கூடும் என்று உண்ரவும் மனித அறிவால் முடியாமல் போகலாம். /நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம்
வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது/
//அனுமானத்தில் மூலமாக எழுதுவதற்குப் பெயர் தான் Science Fiction!! நீங்கள் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.//
எதிர்காலத்தில் நடப்பதாக எழுதப்படும் விஞ்ஞான கற்பனை தான் Science Fiction!!
அனுமானம் என்பது விஞ்ஞானத்தின் முதல் சுவடு.நாம் அனுப்பும் ராக்கெட் சரியாக அதன் இலக்கை அடையும் என்பது அநுமானம்.இது விஞ்ஞானம் தான்.அடைந்தால் அது சாதனை
அடையாவிட்டால் அது ஏன் என்ற சோதனை.இந்த அனுமானத்திற்கு பெயர் Science Fiction அல்ல.இன்றைய quantum விஞ்ஞானம் மொததமுமே அனுமான விஞ்ஞானம் தாம்.மனித
புலன்களின் , கருவிகளின் எல்லையை தாண்டி இன்றைய விஞ்ஞான்ம் கணிததத்தையும் தர்க சாஸ்திரத்தையும் கொண்டு தேடுகிறது.
//மதநூல்களில் சொல்லப் பட்டிருப்பதற்கும் டார்வினின் கொள்கைக்கும் முரண்பாடே இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்.// இப்படி ஒரு கருத்தை எங்கே நான் சொன்னேன்.
/இரு கூற்றிலும் எங்கே முரண்பாடு //என் கேட்டது?
என் கடவுள் கொள்கைக்கும் ப்ரிணாம கொள்கையும் மோதிக் கொள்ளவில்லை என்ற அர்த்தத்தில் தான்.
என ஏனென்றால் ஒன்று கடவுளின் கூற்று ஒன்று மனிதனின் கூற்று. ஒருவிசயத்தை பற்றி இந்த இரு கூற்றுகளும் ஒரே பார்வையுடன் இருக்காது.
அம்மா சொல்கிறாள் (நோ பாலிடிக்ஸ்) தான் தாயாகி மகனை
பெற்றெடுத்தேன்.மகன் சொல்கிறான் நான் பிறந்ததால் தான் தன்னை பெற்றவள் அன்னை ஆகினாள் என்று.இந்த முரண்படும் கருத்த்களில் யார் சொல்வது சரி.
//நீங்கள் எந்த மத நூலை எடுத்துக் கொண்டாலும், இறைவன் உலகைப் படைத்தார், இங்குள்ள உயிரனங்கள் அத்தனையும் ஒருங்கே படைத்தார் என்றே கூறுகின்றன//
எல்லா மத நூல்களும் ஒன்றோடு ஒன்று கருத்து வேறுபடுகிறது.கருத்து வேறுபடுவதால் தான் அது தனிதனி மதமாக இருக்கிறது.ஒரே இறைவனின் கருத்து ஒரு போதும் மாறுபடாது.என்வே பரிணாம
தத்துவத்துக்கு மு ன் மோதுவதற்கு முன் .கடவுள் இருக்கிறாரா? என்ற தெளிவு பெறவேண்டும். எந்த மத நூல் கூறும் கருத்து உண்மையானது என்று ஆராய்ந்திருக்க வேண்டும்.பொதுவான மத நூல் என்று எதுவும் இல்லை. முதலில் நீங்கள் எந்த கொள்கையில் இருக்கிரீர்கள் என்றாவது தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.பிறகு எப்படி முரண்படுகிறது என நிறுவ முயல்லாம்.
அடுத்து டார்வினசத்தையே விஞ்ஞானிகள் அப்கிரேடு செய்து புதிய பரிணாமக்கொள்கை வரைந்துள்ளார்கள்.எனவே பாவம் டார்வினை விட்டுவிடுங்கள் அவரது இன்றைய பரிணாமக்கொள்கையை
சரிவருமா என பாருங்கள். தவறிருந்தால் நீங்களும் திருத்தலாம்.
//டார்வின், முதலில் தலைபிரட்டை வந்தது, அது மீனாக மாறியது, அப்படியே குரங்காகியது அப்புறம் மனிதனாகியது என்று சொல்கிறார். நீங்களே சொல்லுங்கள் இது இரண்டும் ஒன்றா??//
கண்டிப்பாக டார்வின் கூறியதாக நீங்கள் கூறுவது டார்வின் கூறியதும் ஒன்றல்ல.எனவே நீங்கள் முரண்படுவதாக் கூறும் இரண்டு கருத்துகளும் உங்களுக்கு தெளிவாக தெரியவில்லையென்ற கருத்தில் நான் உடன்படுகிறேன்.ஆனாலும் யார் என்ன எழுதினாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கருத்து தெளிவுபெற முயற்சிப்பது பாராட்டுக்குரியது.கண்டிப்பாக நீங்கள தெளிவாக என்ன கேட்டாலும் என் கருத்தை சொல்ல ஆவலாய் தான் இருக்கிறேன்.
\\என் கடவுள் கொள்கைக்கும் ப்ரிணாம கொள்கையும் மோதிக் கொள்ளவில்லை என்ற அர்த்தத்தில் தான்.\\
நீங்களாக உண்டு பண்ணிய கடவுள் கொள்கையா?? உங்களுக்கு சொந்தமா ஒரு கொள்கை, டார்வினுக்கு சொந்தமா ஒரு கொள்கை... இரண்டு சொந்தங்களும் சொந்தம் கொண்டாடுது. ஹா...ஹா...ஹா..
\\எல்லா மத நூல்களும் ஒன்றோடு ஒன்று கருத்து வேறுபடுகிறது.கருத்து வேறுபடுவதால் தான் அது தனிதனி மதமாக இருக்கிறது.\\ எல்லா மதங்களிலும் அடிப்படை ஒன்றே, பேதம் பார்ப்பது சரியான புரிதல் இல்லாததால்தான்.
\\கடவுள் இருக்கிறாரா? என்ற தெளிவு பெறவேண்டும். எந்த மத நூல் கூறும் கருத்து உண்மையானது என்று ஆராய்ந்திருக்க வேண்டும்.\\ கீதை, குரான், பைபிள் இவற்றை ஏற்றுக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் இப்போது கற்பிக்கப் போகும் கடவுள் கொள்கையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
\\அடுத்து டார்வினசத்தையே விஞ்ஞானிகள் அப்கிரேடு செய்து புதிய பரிணாமக்கொள்கை வரைந்துள்ளார்கள்.எனவே பாவம் டார்வினை விட்டுவிடுங்கள் அவரது இன்றைய பரிணாமக்கொள்கையை
சரிவருமா என பாருங்கள். தவறிருந்தால் நீங்களும் திருத்தலாம். \\ அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் படாத கொள்கையை பற்றி கருத ஒன்றுமில்லை.
\\கண்டிப்பாக டார்வின் கூறியதாக நீங்கள் கூறுவது டார்வின் கூறியதும் ஒன்றல்ல.\\ அதாவது literal ஆக எடுத்துக் கொண்டீர்களோ என்னவோ தெரியவில்லை. முதலில் உயிர்களே இல்லை, வெறும் ஜடப் பொருட்களே தோன்றின, அப்புறம் ஏதேதோ நடந்து ஒரு செல் உயிர்கள் தோன்றின, அவை பரிணாம வளர்ச்சியடைந்து மற்ற உயிர்கள் வந்தன. குரங்கு வந்தது, குரங்கு காலப் போக்கில் மனிதனாக ஆகிவிட்டது. இதுதானே டார்வின் கொள்கை? இதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும். அல்லது சுருக்கமாக நீங்களே டார்வினின் கொள்கையைச் சொல்லவும்.
\\அப்படியே ஒன்றைப் பிடித்து உங்கள் கையில் தந்தாலும் அது ஒரு உயிரினமாக இருக்கக் கூடும் என்று உண்ரவும் மனித அறிவால் முடியாமல் போகலாம்.\\ மனிதனால் உணரமுடியாதது என்றால் கையில் பிடித்துக் கொடுக்கப் போவது யார்? அவருக்கு மட்டும் எப்படி அந்த உயிரினம் தெரியும்?
\\"மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது\\ தாவரங்களுக்கு உயிருண்டு என்று பத்மா புராணத்தில் எப்போதோ சொல்லப் பட்டுள்ளது.
jalaja nava-laksani sthavara laksa-vimsati
krmayo rudra-sankhyakah paksinam dasa-laksanam
trimsal-laksani pasavah catur-laksani manusah
"There are 900,000 species of aquatic life; 2,000,000 species of plants and trees; 1,100,000 species of insects; 1,000,000 species of bird life; 3,000,000 species of beasts, and 400,000 species of human life."-Padma Purana
\\எதிர்காலத்தில் நடப்பதாக எழுதப்படும் விஞ்ஞான கற்பனை தான் Science Fiction!!\\ \\அனுமானம் என்பது விஞ்ஞானத்தின் முதல் சுவடு.நாம் அனுப்பும் ராக்கெட் சரியாக அதன் இலக்கை அடையும் என்பது அநுமானம்.இது விஞ்ஞானம் தான்.அடைந்தால் அது சாதனை அடையாவிட்டால் அது ஏன் என்ற சோதனை.இந்த அனுமானத்திற்கு பெயர் Science Fiction அல்ல.\\ குருட்டாம் போக்காக யார் வேண்டுமானாலும் அடித்து விடலாம், ஆனால் சொல்வதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.
\\இன்றைய quantum விஞ்ஞானம் மொததமுமே அனுமான விஞ்ஞானம் தாம்.\\ ஏன் அதற்க்கு சோதனை வடிவான ஆதாரங்கள் எதுவும் இல்லையா?
என் கடவுள் நம்பிக்கை உங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கக்கூடாதா என்ன? என்சட்டை என்பதற்கு நானே உருவாக்கிய சட்டை என்றா பொருள் கொள்வீர்கள்? நீங்கள் சிறந்த அறிவாளி தான்.
//அவர்கள் பேன்ட் பூடிருக்கலாம், சட்டை இல்லாமலிருக்கலாம் என்று பதிவு முழுவதும் அவர்கள் இருப்பர்க்கான சாத்தியக் கூறுகளைச் சொன்ன நீங்கள்,//
நான் சொல்லாததை சொன்னதாக கூற உங்களுக்கு வெட்கமாக இல்லை.
//வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. //இப்படியல்லவா நான் எழுதியிருக்கிறேன்
இறைவனுக்கு உருவமில்லை. அவனைத்தவிர வேரு இறைவன் இல்லை,பெற்ரோர்,பிள்ளைகள் , அவனுக்கு இல்லை ,அவதாரங்கள் இல்லை -இது இஸ்லாம்
இறைவன் தந்தை,மகன்,பரிசுத்த் ஆவி என் மூன்றாக நிற்கிறான்- இது கிறிஸ்தவம்
இறைவன் பல அவதாரமெடுப்பது -இந்து மதம்
--எனக்கு தெரிந்தவரை மூன்று மதங்கள் இப்படி அடிப்படை கருத்தில் வேறுபடுகின்றன்.உங்கள் சரியான் புரிதல் என்னவோ? பின் ஏன் இத்தனை மதங்கள். அட்லீஸ்ட் சரியான புரிதலுடன் மத குருக்களையாவது ஒன்றிணைக்க முயலலாமே?
//கீதை, குரான், பைபிள் இவற்றை ஏற்றுக் கொள்ள உங்களால் முடியவில்லை//
நீங்கள் இம்மூன்றையும் படித்த்து கருத்து வேறுபாடில்லாமல் ஏற்றுகொண்டுள்ளீர்களா?
இதை தான் டார்வின் கொள்கை உங்களுக்கு தெரியாது என்று சொன்னது. தாத்தா காலப்போக்கில் பேரரானார் என்பதற்கும் தாத்தாவின் சந்தததியில் பேரன் என்ற பொருளுக்கும் வித்தியாசம் உள்ளது. டார்வினிசம் பற்றி ஆர்வமிருந்தால் இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளவும். டார்வினிசத்துக்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பில்லை அது டார்வின் கருத்து. என் கருத்தல்ல என்று கூறினாலும் விவாதத்திற்கு பதில்"வாக்கு"வாதமே செய்கிறீர்கள். நான் ஏற்கன்வே சொன்னது போல் இது ஒரு கோட்பாடு மட்டுமே. விரும்பினால்
முதலில் அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் அதற்கு மாற்றுக்கருத்து இருந்தால் நீங்கள் ஒரு கோட்பாட்டை உருவாக்குங்கள்.
//தாவரங்களுக்கு உயிருண்டு என்று பத்மா புராணத்தில் எப்போதோ சொல்லப் பட்டுள்ளது. //
இதற்கான என் பதிலை நிங்களே சொல்லிவிட்டீர்கள்//குருட்டாம் போக்காக யார் வேண்டுமானாலும் அடித்து விடலாம், ஆனால் சொல்வதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். //--நன்றி
\\இன்றைய quantum விஞ்ஞானம் மொததமுமே அனுமான விஞ்ஞானம் தாம்.\\ ஏன் அதற்க்கு சோதனை
வடிவான ஆதாரங்கள் எதுவும் இல்லையா?//
ஒர் அணுவில் எலெக்ட்ரானின் இருப்பிடத்தை சோதனை செய்து நிச்சயமாக சொல்லமுடியுமா?
ஒளி என்பது அலையா? பார்டிக்கிளா?
பிரபஞ்ச எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது?
காலம் என்பது என்ன?
சொல்லுங்கள் எப்படி சோதிப்பீர்கள்
எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறார், நம்மையும் இந்த மண்ணுலகையும் படைத்தவர் அவரே.
எல்லோரையும் நேசிக்க வேண்டும், யாருக்கும் தீங்கிழைக்கக் கூடாது.
இங்கே வாழும் வாழ்வு நிரந்தரமற்றது, பரலோக என்று நிரந்தர உலகம் உள்ளது, நாம் இறப்பிற்குப் பின்னர் அங்கு சென்று இறைவனை அடையும் வகையில் வாழ வேண்டும்.
வாழ்வின் லட்சியம் should be to develop unalloyed love for God.
It is told in the Bible – not only in Indian scriptures – that God created man after His own image. If God has no shape or form, then how can He create human bodies? It is not only stated in Indian scriptures and the Bible, but also in the Koran: “Inallah kalaka mein suratihi – Hoda (or Allah) has created human bodies similar to His own form.” If this were not so, then why has it been written in the Koran? God has a form and He is very merciful. We should try to trust Him.
Prophet Mohamed had seen God with his own eyes. [ 53: 2-18].
ஒளி என்பது அலையா? பார்டிக்கிளா?
பிரபஞ்ச எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது?
காலம் என்பது என்ன?
சொல்லுங்கள் எப்படி சோதிப்பீர்கள்.\\ அதனால டார்வினின் கொள்கையும் குவாண்டம் இயக்கவியலும் ஒண்ணாயிடுமா நண்பரே!! நீங்க இப்படியெல்லாம் விவாதத்தை எடுத்து வச்சா உங்களுக்கு ஏதோ விஞ்ஞான அறிவு இருப்பதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இந்தக் கேள்விகளில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு அறிவியலைப் பற்றி அடிப்படை விஷயங்களே தெரியவில்லை என்று!! அது தெரிந்திருந்தால் டார்வின் கொள்கை ஒரு அண்டப் புளுகு என்று நீங்கள் எப்போதோ உணர்ந்திருப்பீர்களே!!
// இறைவன் இருக்கிறார், நம்மையும் இந்த மண்ணுலகையும் படைத்தவர் அவரே.
பரலோக என்று நிரந்தர உலகம் உள்ளது, நாம் இறப்பிற்குப் பின்னர் அங்கு சென்று இறைவனை அடையும் வகையில் வாழ வேண்டும்.//
முதலில் நீங்கள் ஒரு விஞ்ஞானியா?அல்லது மதபோதகரா என்று உங்களுக்குள்ளே வாதம் செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள். (நீங்கள் அன்னியன் விக்ரம் அல்லது கஜினி சூர்யா இல்லையென்று நம்புகிறேன்)
அப்புறம் 200 வருசத்துக்கு முந்திய டார்வினை போஸ்ட் மார்டம் செய்யலாம். பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு இப்போது விமரிசனம் எழுதி கொண்டிருக்க நான் முட்டாளில்லை.நீங்களே டார்வினசத்தை படித்து ஆராய்ந்து அட்ல்லீஸ்ட் அவரது கோட்பாடுகள் என்ன என்ற் சிறு குறிப்பாவது எழுதி எதில் நீங்கள் கருத்து வேறுபடுகிறீகள் என்று எழுதி நீங்களே ஒரு பதிவிடுங்கள் நான் வந்து அபிப்பிராயம் சொல்கிறேன்.நான் பதிவிடுவது என் கருத்துகளை என் நண்பர்க்ளோடு பகிர்ந்து கொள்ள.அது பற்றி அழகிய முறையில் கருத்து பரிமாறவும் செய்யலாம். வேறு எதைப் பற்றியாவது விவாதம் செய்ய விருப்பம் என்றால் அது சம்ப்ந்தமான் ஃபோரம் களில் போய உங்கள் புலமையை வெளிப்படுத்துங்கள்.
ஹலோ பின்னூட்டப்பகுதி மத பிரச்சாரம் செய்வதற்கு அல்ல? அதுவும் குரானில் சொல்லப்படாத கருத்தை சொல்லப்பட்டாதாக திரித்து ஒரு டயலாக்கை எழுதிவிட்டு பெரிய பண்டிதர் போல இங்கே வந்து கூசாமல் புழுகுகிறிகளே.கிணற்று தவளைகள் கிணற்றுகுள்ளே இருக்க வேண்டியது தானே.விஷமத்தனமாக எழுதுவதாக இருந்தாலோ வயிறு சரியில்லாவிட்டாலோ அதற்குரிய இடங்களில் போய் ஒதுங்கவும்.இங்கே வேண்டாம். சுயமாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு பிறரிடம் அது பற்றி தர்கித்து கொண்டிருப்பது ஒருவகை மனநோய அது உங்க்ளுக்கு இல்லையென்று நம்பி இத்துடன் விடுகிறேன. விஞ்ஞானி போல் வேடமிட்டு வந்த நீங்கள் யார் என்று புரிந்து விட்டது.இனி இது போல் பசுத்தோல் போர்த்தி எழுதவேண்டாம்.மதங்கள் பற்றிய கருத்துக்கள் இங்கே இடவேண்டாம்.அது அவரவர் நம்பிக்கை.
A Life in Science
About Life
Darwin Dangerous Idea
Darwin autobiography
Evolution and Science
Evolution and the Fossil Record
Evolution of Sleep
Genetics For Dummies
God the Devil and Darwin
Human Evolution
The insect man
Lost-Creatures
Mysterious Creatures
On the Origin of Species
The Evolution of the Curious Mind
The Science of Mass Extinction
The Selfish Gene
The Voyage of the Beagle
The Genomics Age
The Selfish Meme
The Biology of Death
The-Cell
The Rise of Homo Sapiens
The Theory of Evolution
What Is Life
Life The Science of Biology
இவ்வளவு புத்தக்ங்களும் நான் படித்த. என் புத்தக அலமாரியில் உள்ள ,ஒரு சிறு பகுதியான பரிணாமம் பற்றி மடுமே புத்தங்கள்.முட்டாள்கள் எழுதிய இவவளவு புத்தக்ங்களையும் நான் படித்தும் நீங்க்ள அறிவுபூர்மாக பரிணாமம் பற்றி எடுத்துவைத்த(?) கருத்துக்களுக்கு பதிலளிக்க முடிய்வில்லை.தூங்குகிறவனை எழுப்பலாம் .தூங்குபவன் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்பதால் உங்கள் விஞ்ஞான அறிவுக்கு மதிப்பளித்து நிறுத்துகிறேன்.
//நான் பதிவிடுவது என் கருத்துகளை என் நண்பர்க்ளோடு பகிர்ந்து கொள்ள//இது தானே நான் எழுதியது.இதில் "கருத்துக்கள்" என்பதற்கு நான் அழுத்தம் கொடுத்திருந்தேன்."என் நண்பர்கள்" என்ற் வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துவிட்டீர்கள்.சரி நீங்கள் பின்னூட்டம் இட்டு விட்டீர்கள். கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் நன்றி நண்பரே என்று அந்த உடனேயே உங்களை நண்பன் என்று முதலில் அழைத்தது நானா நீங்களா?
என் கருத்துக்களை படிக்கும் அனைவரையும்(உங்களையும் சேர்த்து)"என் நண்பர்கள்" என குறிப்பிட்டது தவறு என்று தானே சொல்கிறிர்கள்.
மாடரேசன் போடாமல் உங்கள் எல்லா விமர்சனத்துக்கும் பதில் எழுதுகிறேன் தவறா?
உங்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.என் தளத்துக்கு வந்த உங்களை வருத்தப் படுத்தியிருந்தால் மன்னிக்வும்.ஆனால் அதற்கு என்னை தூண்டிய காரணங்கள் உங்களிடமே என்பதை புரிந்து கொள்ளவும்
அதை விடுத்து இருக்கலாம் என்று posibility யாக எழுதியதை ,இருக்கிறது என் நான் சொன்னதாக திரித்து நான் சுட்டிக்காட்டியபின்னும் புரிந்து கொள்ளாதது
உதாரனமாக இந்த பதிவில் மீண்டும் உங்கள் பின்னூட்டம் இருக்கலாம் என எழுதுகிறேன் இதில் என்ன பிழை காண்கிற்ர்கள்?
உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றால் மேற்கொண்டு படிக்காதீர்கள். தெரிந்து கொள்ளும் ஆர்வமிருந்தால் என் கருத்தை சொல்கிறேன் இதில் விவாதம் வேண்டாம்
சார்லஸ் டார்வின் என்றோரு மனிதர் 1831 முதல் 1836 வரை பல நாடுகள்,தீவுகள் .கடல் வ்ழி சஞ்சரித்து ப்ல வகை உயினங்களை பற்றிய குறிப்பெடுத்துக் கொண்டார். சில வகை உயிரினங்களுக்கிடையே உள்ள பொதுவான தன்மைகளைக் கொண்டும் அதன் வாழ்விடங்களைக் கொண்டும் அதை பலவாறாக வகைப்படுத்தினார். உயிரினங்கள் பல தலைமுறகளைக் கடக்கும் போது தங்கள் வாழிட தன்மைக்கு ஏற்றாவாறும் தேவைக்கு ஏற்றவாறும் புதிய பண்புகளை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று புதிய இனங்களாக மாறுகின்றன என்று அவராக ஒரு கொள்கையை உருவாக்கினார்.
டார்வின் கோட்பாடு என்பது ,உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கும் ஒரு கருத்து மட்டுமே உயிரினங்கள் பரிணாமம் பெறுகின்றது என்று சொன்ன அவரால் அது ஏன் எப்படி என்று விளக்க முடியாமல் வேலை முடிவுறாத கட்டடம் போல இருந்தது.அதனால் தான் அதை பற்றி விவாதிக்க வில்லை . இன்று நவீன பரிணாமவியலாளர்கள் அதை புதிப்பித்து ஓட்டை அடைத்து சுவர்களை இடித்து கட்டி பூசி விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள் அறிவியலில் எததனையோ கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கின்றன ஆனால் யாருக்கும் இல்லாத எதிர்ப்பு டார்வினுக்கு ஏன்?
முக்கிய்மானது டார்வின் கோட்பாடு விவிலியத்துடன் முரண்பட்ட்து. கடவுள் ஆறு நாளில் ஒவ்வொன்றாக படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்.டார்வின் சொன்னது ஒன்றின் சந்ததியிலிருந்து தான் கிளைகள் போல மற்ற இனங்கள் தோன்றின அதுவும் பல்லாயிரக் கணக்கான வருடங்க்ளை எடுத்துக்கொண்டு.அது இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கவனிக்கவும் உயிர் எப்படி தோன்றியது என்று டார்வின் ஆராயவில்லை ,இருக்கும் உயிரினங்களுக்கிடையே உள்ள தொடர்பை வைத்து எது எதிலிருந்து என்று மட்டுமே ஆராய்ந்தார்.
"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் பின் குரங்கு இன்னும் குரங்காகவே இருக்கிறதே" இதெல்லாம் பாமரக்கேள்விகள் டார்வின் அப்படி சொல்லவில்லை .இன்றைய குரங்கும் இன்றைய மனிதனும் நேற்றைய ஒருவகை குரங்கினத்தன் இரு கிளைகளாக பரிணமித்தவை
எனவே டார்வினுக்கும் விவில்யத்துக்கும் இடையே இந்த முரண்பாடு மிகப்பெரிய முரண்பாடு. டார்வினை ஏற்றால் விவிலியம் பொய்யென்றாகி விடும் விவிலியத்தை ஏற்றால் டார்வின் அண்டப்புழுகு என் முத்திரை குததப்படுவார்.இந்த குழாய் சண்டை கால காலமாக 1839ல் தொடங்கி இன்றுவரை நடக்கிறது.
ஆனாலும் விவியத்தின் முதல் பக்கத்தையே மறைத்து கொண்டு டார்வின் வைத்த பாறாங்கல்ல நகர்த்த இடையாறாது டார்வினை பழித்து கொண்டு திரிவது. இரண்டுமே நம்பிக்கைகள் என்ற அடிப்படையில் அவரவர் நம்பிக்கையில் இருக்க வேண்டியது தானே. இத்தை விடுத்து நூற்றைம்பது ஆண்டுக்குமேலாக நடக்கும் இந்த அர்த்தமில்லாத கருத்துப்போரை ஏதோ ஒரு பதிவில இன்னூட்டமிட்டு தீர்த்துவிடலாம் அல்லது விவாதித்து முடிவுக்கு வரலாம் என்பதில் எனக்கு உடன் பாடில்லை.அது டார்வினுக்கும் விவிலியத்தும் உள்ள பிரசச்சனை அதில் நான் என்ன நாட்டாமை. விஞ்ஞானிகள் ஒன்றும் டார்வினை குப்பையில் போடவில்லை அவர் போட்ட பாதையில் வெகு தூரம் நடந்து வந்து விட்டார்கள் என்பதே உண்மை ஆனால் பலர் கிடைத்த இடத்தில் எல்லாம் டார்வின் மேல் புழுதிவாரி தூற்றுவதும் குளம் கண்ட இடத்திலெல்லாம் குண்டி கழுவதுமாக இருக்கிறார்கள்.
நான் என் தளத்தில் இது போன்ற எந்த மதபிரச்சனைகளுக்கும் அறிவுக்கு முரணான வாக்குவாதத்தையும் தவிர்கிறேன்.விஞ்ஞானக் கருத்துகளை விவாதிக்கலாம் நம்பிக்கை அவரவர் நப்பிக்கையாகவே இருக்கட்டும் அதில் விவாதம் வேண்டாம்.உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இததகை முட்டையிலிருந்து கோழி விவாதத்தை விரும்பியதால் தான் கேட்டேன் நீங்கள் மத போதகரா விஞ்ஞ்னியா என்று.விஞ்ஞானி என்றால் விவாதிக்கலாம் மத போதகர் என்றால் என்பதிவில் இடமில்லை.
ஒளி என்பது அலையா? பார்டிக்கிளா?
பிரபஞ்ச எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது?
காலம் என்பது என்ன?
சொல்லுங்கள் எப்படி சோதிப்பீர்கள்?\\ அறிவியல் எல்லாவற்றையும் விளக்கப் போகிறேன் என்று ஒருபோதும் சொல்ல வில்லை. ஆப்பிள் கீழே விழுவது ஏன்? ஒரு காலத்தில் அதற்க்கு விடை இல்லை, தெரியாத விஷயமாக இருந்தது. நிறையுள்ள எந்த இரு பொருளும் ஒன்றையொன்று ஈர்க்கும், பூமியும், ஆப்பிளிலும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன என நியூட்டன் கண்டுபிடித்தார். சரி, புவிஈர்ப்பு விசைக்கு காரணமென்ன? Graviton என்ற நிறையில்லா துகள்களை நிறையுள்ள எல்லா பொருட்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன. அதுசரி, அவை ஏன் Graviton களை பரிமாறிக் கொள்ள வேண்டும்? இதற்குப் பதில் இப்போது இல்லை, நாளை பதில் கண்டுபிடித்தாலும் அந்த காரணத்துக்க காரணமென்ன என்ற கேள்வி எழும். நீங்கள் எவ்வளவுதான் கண்டுபிடித்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விளக்க முடியாத விஷயம் திரும்பவும் இருந்து கொண்டே தான் இருக்கும், வெங்காயத்தில் தோலை உரிப்பது போல. மேலும், அறிவியலில் எடுத்துக் கொள்ளப் படும் Postulates களுக்கு நிரூபணம் தேவையில்லை. ஐன்ஸ்டீன் ஒளியின் வேகம் மாறிலி என்ற Postulate ஐ எடுத்துக் கொண்டார், அதை அவர் நிரூபிக்கத் தேவையில்லை, ஆனால் அவரது தியரி இதுவரை நடந்த சோதனைகளை விளக்க வேண்டும், இனிவரும் சோதனை முடிவுகளையும் விளக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எந்த அறிவியல் கோட்பாடுகளும் Absoute Truth என்றோ, Universal Truth என்றோ யாரும் சொல்ல முடியாது. சோதனை முடிவுகள் சாதகமாக இருக்கும் வரை கோட்பாடு இருக்கும், விலகிப் போனால் தூக்கிப் போட்டுவிட்டு, புது தியரியை உருவாக வேண்டும். ஆயிரம் சோதனை முடிவுகள் ஒரு தியரிக்கு சாதகமாக வந்தாலும் அது அந்தத் தியரியை உண்மை என்று சொன்னதாக அர்த்தமில்லை, ஆனால் ஒரு சோதனையின் முடிவு தியரிக்கு எதிராக வந்தாலும், அந்த தியரியை செல்லாததாகி விடும். இதைச் சொன்னவர், ஐன்ஸ்டீன்!!
"One thousand experiments can never prove me right....
A single experiment can prove me wrong!"
http://fc.unity.k12.wi.us/~lee_lillquist/nobel/student_einsteinstheories.html
\\ஒளி என்பது அலையா? பார்டிக்கிளா?\\ எதைஎடுத்தாலும் இது ரெண்டுல ஒன்னாத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தது நம்ம தப்பு.
\\பிரபஞ்ச எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது?\\ வட துருவத்துக்கு வடக்கே என்ன இருக்கிறது?
\\காலம் என்பது என்ன?\\ நீங்கதான் சொல்லிட்டீங்களே, இறைவன்தான் காலம்னு!!
இதற்கு பதில் என் இந்த பதிவிலேயே இருக்கிறது
//நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.//
வேறு உயிரினங்கள் நம்மையும் நாம் அவற்றையும் அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால்.நாம் இந்த உலகத்தை புரிந்து கொளவதும் அதன் இயற்கையும் ஒன்றல்ல. உதாரணமாக ஒரு மாம்பழத்தை வெவ்வேறு நாட்டுக்காரர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.அந்த பெயர்கள உண்மையில் அந்த மாம்பழத்திற்குரியது அல்ல.அந்த பெயரை அப்படி அமைத்து அதை அடையாளப்படுத்துபவர் அதன் பார்வையாளர்களே.அந்த அடையாளத்துக்கு பொருள் அந்தத்த பாஷைக்காரர்களுக்கு தான் புரியும்.மற்றவர்களிடம் மாம்பழம் என்று சொன்னால் அது ஏதோ பொருளற்ற ஒலி தான்.இப்படித்தான் நா காணும் உணரும் எல்லாமே நம் அறிவும் மனமும் உருவாக்கிய அடையாளங்கள் மட்டுமே.நம் மனம் அப்படி ஒரு அடையாளத்தை உருவாக்கும் போது தான் நாம் ஒரு ஏலியனை அடையாளம் காணமுடியும்.ஏலியன்களை பற்றி நாம் எப்படி எதிர்பார்கிறோமோ அப்படிதான் அதனை அடையாளம் காண்போம்.ஒரு பொருள் உருவாவதில் அதன் பார்வையாளனுக்கு முக்கிய பங்கு உண்டு.அது போல நாம் ஒரு எதிரியையோ நண்பனையோ உருவாக்குவதில் நமக்கும் சரிபாதி பங்கு உண்டு.அப்படியே சினிமாவில் காட்டுவது போல ஏலியன் வந்தாலும் (அதற்கு சாத்தியம் குறைவு)நாம் வாழும் பூமி அவர்களைவிட நமக்கு தான் சாதகமாக இருக்கும்.ஓசோன் மண்டலமும் காற்று மண்டலமுமே நமக்கு பெரிய கேடயம் ஏலியனை விட நம்க்கு நாம் தான் பேரழிவை உண்டாக்கிகொள்ள வாய்ப்பு இருக்கிறது
//வாலுள்ள மனிதனின் Fossil இன்று வரை இல்லை,//வாலில்லா குரங்கு உள்ளதே.மனிதனின் எக்ஸ் ரே எடுத்து பார்தால் முதுகெலும்பின் கீழ் நுனியில் உள்ள எலும்பு வாலின் பர்ணாம எச்சம். மனிதனின் வயிற்றிலுள்ள அப்பென்டிக்ஸ், கண்ணின் ஓரத்தில் உள்ள சவ்வு என மனிதனுக்கு தேவைப்படாத பரிணாம எச்சங்களை குறிப்பிடுகிறார்க்ள். வாலுடன் பிறந்த குழந்தையும் உண்டு.
//வேறு எந்த உயிரினத்துக்கும் Evolution stage- ல் உள்ள Fossil இல்லவே இல்லை//
For example, scorpionflies
(Mecoptera) and true flies (Diptera) have enough similarities that entomologists consider them to be closely related. Scorpionflies have four wings of
about the same size, and true flies have a large front pair of wings but the back pair is replaced by small club-shaped structures. If Diptera evolved from
Mecoptera, as comparative anatomy suggests, scientists predicted that a fossil fly with four wings might be found—and in 1976 this is exactly what was discovered.//
Isn’t the fossil record full of gaps?
Though significant gaps existed in the fossil record in the 19th century, many have been filled
in. In addition, the consistent pattern of ancient to modern species found in the fossil record is strong evidence for evolution. The plants and animals living
today are not like the plants and animals of the remote past. For example, dinosaurs were extinct
long before humans walked the earth. We know this because no human remains have ever been
found in rocks dated to the dinosaur era. Some changes in populations might occur too
rapidly to leave many transitional fossils. Also,many organisms were very unlikely to leave fossils,
either because of their habitats or because they had no body parts that could easily be fossilized.
However, in many cases, such as between primitive fish and amphibians, amphibians and reptiles,reptiles and mammals, and reptiles and birds,there are excellent transitional fossils.
If humans evolved from apes, why are there still apes?
Humans did not evolve from modern apes, but humans and modern apes shared a common ancestor,a species that no longer exists. Because we
shared a recent common ancestor with chimpanzees and gorillas, we have many anatomical, genetic, biochemical, and even behavioral similarities with the African great apes. We are less similar
to the Asian apes—orangutans and gibbons—and even less similar to monkeys, because we shared common ancestors with these groups in the more distant past. Evolution is a branching or splitting process in
which populations split off from one another and gradually become different. As the two groups
become isolated from each other, they stop sharing genes, and eventually genetic differences increase until members of the groups can no longer interbreed.
At this point, they have become separate species. Through time, these two species might give
rise to new species, and so on through millennia.
Can a person believe in God and still accept evolution?
Many do. Most religions of the world do not have any direct conflict with the idea of evolution.Within the Judeo-Christian religions, many people
believe that God works through the process of evolution.That is, God has created both a world that is
ever-changing and a mechanism through which creatures can adapt to environmental change over time.
At the root of the apparent conflict between some religions and evolution is a misunderstanding
of the critical difference between religious and scientific
ways of knowing. Religions and science answer different questions about the world.
Whether there is a purpose to the universe or a purpose for human existence are not questions for
science. Religious and scientific ways of knowing have played, and will continue to play, significant
roles in human history.
-Evolution and science என்ற புத்தகத்திலிருந்து.
http://www.4shared.com/document/qp99lVeX/Forbidden_Archeology.html
http://www.filestube.com/eXzLsAF1p4vWo3yuwpqhii/Cremo-Michael-Richard-Thompson-The-Hidden-History-Of-The-Human-Race-Forbidden-Archeology.html
பசுவின் மடியிலிருந்து பெறப்படும் வெண்மையான திரவம் எந்த நாட்டிலும் பாலாகத்தான் உணரப்படுகிறது.அதே பால் தன் குணம் கொஞ்சம் மாறி திரிந்து விட்டால் அதை தயிர் என்பார்கள அதன் குணத்தை மேலும் மாற்றும் போது அது மோர்,வெண்ணெய்,சீஸ் என்று வெவ்வெறு பொருளாகிறது. ஹைடஜன் என்பதெல்லாம் நாம் வைத்த பெயர் தான் அதன் ப்ண்புதான் அதன் அடையாளம்.அந்த பண்பு கூட நாம் நம் அறிவால் அறிந்து கொண்டாவை தான் நம்மால் அறிய முடியாத பண்புகளும் அதற்கு இருக்கலாம்.இதே பண்புள்ள பொருள் பிரபஞ்சத்தல் எங்கே இருந்தாலும் அதை நாம் ஹைட்ரஜனாகத்தான் அறிவோம்.நம் அறிவுக்கு வெளியே ஹைடரஜன் என்ற்பொருளுக்கும் அதன் பண்புக்கும் பெயருக்கும் அர்த்தம் இல்லை.
//இப்போது உள்ள தனிம அட்டவணைப் படி [Table of elements] உள்ள அணுக்கள் தானே மற்ற இடங்களிலும் இருக்கும்? //
இந்த தனிம அட்டவணை என்பது இந்த பூமியில் நாம் தனிமங்களாக உணர்ந்து கொண்டாதை நம் அறிவால் வரையறுத்துக்கொண்டது தான்.ஏலியன்களுக்கு இது பொருந்தாது.தமிழ்நாட்தில் இத்தனை மாவட்ட்ங்கள் என்று பிரித்து.இது குமரி மாவட்டம் இது மதுரை மாவ்ட்டம் என்றெல்லாம் நாம் இடங்களை வேறுபடுது வைத்திருப்பது நாம் புரிந்து கொள்வதற்காக். வேடந்தாங்கலுக்கு வெளி நாட்டிலிருந்து பறவைகள் அது பற்றி அலட்டிக்கொள்ளாது. எல்லா தனிமஅணுக்களும் அடிப்படையில் ஒன்று தான் ஒரு அணு தன் மின் துகளில் அல்லது மின் சகதியில் கொஞ்சம் இழந்தாலோ ஏற்றுக்கொண்டாலோ இன்னொரு தனிம்மாக அறிவோம்
என்து பொய்சொல்லும் புலன்கள் என்ற பதிவையும் படித்துவிடுங்கள்
http://sathik-ali.blogspot.com/2009/03/blog-post_16.html
வண்ணமில்லா வானவில் என்ற
http://sathik-ali.blogspot.com/2009/03/blog-post_29.html
இந்த பதிவையும் படித்துவிட்டு இன்னும விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள் அடையாளம் காண முடியாது என்பதை விட அதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது என்பதே உண்மை.
இல்லை நண்பரே நம் அறிவுக்குப் புலப்பாடாமல் இருக்கலாம் என்பது தான் என் கருத்து. பவுதீகத்தை விஞ்ஞானத்தயெல்லாம் கொஞ்சம் ஓரமாக வைத்து விட்டு கொஞ்சம்
லாஜிகலாக சிந்தித்து பார்த்தால் இது புரியும். நிறைய காரணங்கள் என்னால் சொல்ல முடியும்
நாம் இந்த உலகை எப்படி அறிகிறோம்? உள்ளது உள்ள படியா? இல்லை உணர்ந்த படியா?
ஒரு கவிஞன் ரசித்த நிலவு வேறு நீல் ஆம்ஸ்ட்ராக் ஆராய்ந்த நிலவு வேறு. உங்கள் முன் இருக்கும் பொருள் ஒரு கணினி யென்று உங்களுக்கு தெரியும் ஆனால் அதை பார்க்கும் ஒரு ஒரு ஆட்டுக்குட்டிக்கும் அயல் உயினத்துக்கும் அது கணினி என்ற பொருளாக தெரியாது.இது போல் நாம் உலகில் காணும் எந்த பொருளையும் நாம் கண்ணால் மட்டும் காண்பது அல்ல அறிவால் அதன் பயனை தன்மையை உணர்ந்து கொள்ளும் போது தான் அது ஒரு பொருளாகிறது அது வரை அணுக்கூட்டம் தான். பத்து வருடத்திற்கு முன் ஒரு பாட்டியிடம்
ஒரு செபோனை கொடுத்தால் ஒரு வேளை அவர் அதைக்கொண்டு வெற்றிலை தல்லியிருக்கும் சாத்தியம் உண்டு.அணியும் ஆடை முதல் இநத உலகம் முழுவதும் ஐடியாக்களால் ஆனது .இந்த யோசனைகள் தான் பொருளாக உணரப்படுகிறது.
நீங்கள் காணும் இந்த இணைய பக்கம் இப்படியில்லை வெறும் HTML Code தான்அல்லது binary தான் . இதை நீங்கள் அறியும் வண்ணம் காட்டுவது உங்கள் ப்ரவுசர். HTML வரையறைக்கு உட்படாத எழுத்துக்களை அது காட்டாது இது போல நம் அறிவுக்கு எல்லை
உண்டு,அறிவு சார்பானது, நம் அறிவால் வரையறுக்க முடியாத ஒன்றை அறிவது கடினம். நம் அறிவு குறைபாடுடையது எனும் உண்மை நமக்கு தெரிந்து விட்டால்.நம்மால் அறிமுடியாத உலகமும் இருக்கிறது என ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்
உங்கள் பெயர் Jayadev Das.இதனை ஒரு தமிழன் வாசித்தால் ஜயதேவ தாஸ் என பொருள் கொள்வார் ஆனால் ஒரு ஆங்கிலேயர் ஜயடெவ் டாஸ் என்பார் காரணம் என்ன? ஒரே வார்த்தையை இரு மனிதர்கள் வெவ்வேறாக உச்சரிக்க காரணம் அவர்களது மொழியின் விதிகள் மாறியதால் தான்.
ஒரு கற்பனை உவமானம். கோலார் தங்க சுரங்கத்திற்குள் தங்க தாதுவால் ஆன ஒரு அயல் உயிரி ஒரு கல்லின் வடிவத்தில் கோமா ஸ்டேஜில் இருந்தால் .அது ஒரு அயல் விருந்தாளியாக கருதப்படுவாரா? அரைத்து உருக்கப்பட்டு நகைகளாக அம்மணிகள் கழுத்துல் தொங்குவாரா? உயிர்கள் இப்படித்தான் இருக்கும் என்ற விதியை நாம் பூமியின் உயிகளை பார்த்து தானே எழுதிக்கொண்டோம். பூமிக்கு வெளியேயும் செல்லுபடியாக அது கணித சமன் பாடு இல்லையே . உயிர்கள் என்பதற்கு என்ன யூனிவர்சல் வரையறை வைத்திருக்கிறோம்? நாமும் ஒரு கிரகத்தின் உயிரினம் தானே நம்மை யார்?எங்கிருந்து வந்தோம் என்று கேள்வி கேட்டு உணர்ந்திருக்கிறோமா?
இந்த தனிமங்கள் ,மூலப்பொருட்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் அடிப்படை பொருள் அல்ல. நாம் அப்படி அறியும் பொருள் தான்.அது சக்தியாகவும் கூட அறியப்படுகிறது.
அன்பு நன்பரே இந்த பதிவுகளுக்கு வேளியே எதாவது கருத்துக்கள் பரிமாற விரும்பினால் அது பயனுள்ளதாக இருக்குமானால் இ-மெயில் அல்லது சாட்டிங்கில் வாருங்கள்.