வாய் துர்நாற்றம் (halitosis)

சிலர் வாய் திறந்து ஏதாவது பேசினாலே நமக்கு தலை சுற்றி மயக்கமாக வரும். ஆனால் நம் வாய் நாறுகிறதா என்று நாம் அறிய முடியாது. எதிரிலிருப்பவரும் சொல்ல சங்கோஜப்படுவார்.ஆனால் முத்தம் கொடுக்கச் சென்றால் மனைவி அல்லது காதலி முகத்தை திருப்பினால் பெரும்பாலும் காரணம் மோசமான சுவாசம் அல்லது வாய் துர்நாற்றம் தான். சுதாரித்து கொள்ளுங்கள். முதல் முத்தம் கடைசி முத்தமாகி விடக்கூடும்.

வாயை சுத்தமாகப் பேணாவிட்டால் வாய் துர்நாற்றம் வரும்.இது வேறு பல நோய்களின் அடையாளமாகவும் இருக்கலாம்.சில உணவுகள், சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

சாப்பிட்ட உணவால் சுவாசத்தில் நாற்றம்:
முதலில் எல்லா உணவுகளும் வாயில் தான் ஜீரணத்தை தொடங்குகிறது. சில உணவுப் பொருட்கள் உதாரணமாக பூண்டு ,உள்ளி போன்றவைகளில் உள்ள ஸ்மெல் உணவு ஜீரணமாகி இரத்தத்தில் உறிஞ்சப்படுவாதால் பின்னர் அது நுரை ஈரலை அடைந்து மூச்சுக்காற்றில் வெளிப்படும். என்ன தான் வாய் கழுவினாலும் வியர்வையில் மூச்சில் நாற்றம் இருக்கும்.

பல் துலக்கா விட்டால் :
தினமும் முறையாகப் பல் துலக்கவிட்டால் பல்லிடுக்குகள் மற்றும் ஈறுகளுக் கிடையே சிக்கிய உணவுத் துணுக்குகளில் பாக்டீரியாக்கள் பெருகி நாற்றமுள்ள வாயுக்களை வெளிவிடும். நாக்கிலும் பெருமளவு பாக்டீரியாக்கள் காணப்படும்

புகைப் பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மெல்லுதல், வெற்றிலைப் பாக்கு, பான் பராக் பழக்கங்கள், பற்களில் கறை, வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும். நாக்கின் சுவை அறியும் திறன் பாதிக்கப்படும், ஈறு வலி ஏற்படும்.

வாய் துர்நாற்றத்தால் தொடரும் உடல் நலக்கேடுகள்:
வாய் துர்நாற்றமும் நாக்கில் சுவை குறைவும் ஈறு வியாதிகளுக்கு அடையாளம். பற்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் படியும் மஞ்சள் கறை (plaque) ஈறுகளை பாதிக்கும். பாக்டீரியாக்கள் வெளிவிடும் நச்சுப் பொருட்கள் ஈறுகளுக்கு எரிச்சலூட்டும்.அப்படியே கவனியாது விட்டால் ஈறுகளும் தாடை எலும்புகளும் சிதைவடையத் தொடங்கும்.வாய் மற்றும் பற்குழிகளில் ஈஸ்ட் தொற்று இருந்தாலும் பற்கள் பாதிப்படையும்.வாய் துர்நாற்றம் உண்டாகும்.

வாய் உலர்வும் துர்நாற்றமும்:
வாயில் சுரக்கும் உமிழ்நீர் வாயை எப்போதும் ஈரமாக வைத்துக் கொள்கிறது. பாக்டீரியாக்கள் வெளியிடும் அமிலங்களை சமனப்படுத்தி சுத்தப் படுத்துகிறது. வாய்க்குள் சேரும் இறந்த செல்களை சுத்தப் படுத்தும்.இல்லாவிட்டல் இந்த செத்த செல்கள் அழுகி துர்நாற்றம் உண்டாக்கும். பல் வேறு மருந்துகள் உட்கொள்வதும், உமிழ் நேர் சுரப்பிக் கோளாறும் ,வாய்வழியாக அதிகம் சுவாசிப்பதும் வாய் உலர்வை ஏற்படுத்தி துர்நாற்றம் உண்டாக்கும்.

சுவாசக் குழாய் பாதிப்பு, நிமோனியா, பிராங்கைடிஸ், சைனஸ் பாதிப்பு , நீரிழிவு, எதுக்களிப்பு, ஈரல், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.
வாய் துர்நாற்றத்தை ஒழிப்பது எப்படி?
  • வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.முறையாக இருமுறை பல் துலக்கவும். பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துணுக்குகள் மஞ்சள் கறை எல்லாம் போகும் படி தரமான புரூஸ் மற்றும் பற்பசை உபயோகித்து மேல் கீழ் உள்ளே வெளியே, இடம் வலம் எல்லாம் நன்றாகத் துலக்கவும்.
  • நாக்கையும் சுத்தப்படுத்த மறந்து விடாதீர்கள்.
  • சில வேளை பல் துலக்கும் போது எதுக்களிப்பு ,வாந்தி வருமானால் உப்பு அல்லது எலுமிச்சை சுவையுள்ள பற்பசை உப்யோகிக்கலாம்.
  • 2 அல்லது3 மாதங்களுக்கு ஒரு முறை ப்ருஸை மாற்றவும்.
  • பல் செட்டுகளைஇரவில் கழற்றி எடுத்து சுத்தப்படுத்திக் காலையில் மாட்டவும்.
  • வருடத்திற்கு இரு முறையாவது பல் மருத்தவரைக் கண்டு சோதனை செய்து முறையாக பற்களை சுத்தப்படுத்தவும்.
  • புகையிலைப் பழக்கமிருந்தால் விட்டொழியுங்கள்.
  • தாராளம் தண்ணீர் அருந்துங்கள். இனிபற்ற சுவிங்கம் மெல்லுவதும் உமிழ்நீரை அதிகம் சுரக்க வைத்து வாயை சுத்தப்படுத்தும்
  • சளி ,இருமல் போன்ற நோய் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும.
சிலர் "தண்ணியடித்து விட்டு" நாற்றத்தை பபிள் கம் அல்லது பான் பராக் போட்டு மறைப்பது போல் ப்ல நறுமண மருந்துகள் தற்காலிகமாகவே வேலை செய்யும். ஆனால் வாயிலுள்ள பாக்டீரியாக்களை கொல்லும் ஆன்டிசெப்டிக் மவுத் வாஷ்கள் பல மார்கெட்டில் கிடைக்கின்றன. இவ்வகை மவுத் வாஷ்கள் உணவை செரிக்க உதவும் சில நல்ல பாக்டீரியாக்களையும் சில வேளை அழித்து விடும். டாக்டர் ஆலோசனைப் படி உபயோகிக்கலாம்.

மேலும் அறிய:பற்கள்,ஆரோக்கியத்தின் அஸ்திவாரக் கற்கள்

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
The awkward irony of halitosis is that many people aren't aware that they have it. This is because the cells in the nose that are responsible for the sense of smell actually become unresponsive to the continuous stream of bad odour.

For these reasons, the simplest and most effective way to know whether one has bad breath is to ask a trusted adult family member or very close friend ("confidant"). If the confidant confirms that there is a breath problem, he or she can help determine whether it is coming from the mouth or the nose, and whether a particular treatment is effective or not.[24]

One popular home method to determine the presence of bad breath is to lick the back of the wrist, let the saliva dry for a minute or two, and smell the result. This test results in overestimation, as concluded from research, and should be avoided.[2] A better way would be to lightly scrape the posterior back of the tongue with a plastic disposable spoon and to smell the drying residue. Home tests that use a chemical reaction to test for the presence of polyamines and sulfur compounds on tongue swabs are now available, but there are few studies showing how well they actually detect the odor. Furthermore, since breath odor changes in intensity throughout the day depending on many factors, multiple testing sessions may be necessary.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
The Beginnings of Bad Breath

Bad breath starts by what you put in your mouth. Garlic for lunch? A late morning latte? They may taste delicious but consider yourself warned.
Food you eat: Although garlic and coffee are two main offenders, other eats like onions and spicy food can bring on bad breath. The odors of these foods enter your bloodstream and head right to your lungs, coming out with each exhale.
Food "trapped" in your mouth: We're not talking about a little spinach on your teeth. After a meal, any food particles that remain between your teeth, in your gums, and on your tongue can release their odor into your breath -- which gets worse as that food decays. And without good care of your teeth and gums, this stuck food can set off a cascade of events leading to gum disease.
Tobacco: There are lots of reasons to avoid tobacco; bad breath is another on the list.
Diets that lead to weight loss: We agree that it seems unjust, but when your body breaks down fat, the process releases chemicals that can give your breath an unpleasant smell.
Dry mouth: Feeling parched? Saliva’s job is to serve as a continuous rinse cycle for your mouth. If you don’t have enough, your mouth loses its freshness fast. In fact, morning breath is worse for people who sleep with their mouths open. A dry mouth is a smelly mouth.
Medications or health issues: Drugs that cause dry mouth can also contribute to bad breath. Health problems such as seasonal allergies, chronic sinusitis, bronchitis, respiratory infections, stomach problems, diabetes, and liver and kidney diseases factor in, too. Unrelenting bad breath may also be a sign of gum disease.
How to Make Your Breath Better

There are some quick and easy ways to banish bad breath. Just remember, the odor from what you eat sticks around until the food works its way completely out of your system -- up to three days later!
Clean those teeth: Not only does it prevent odor-causing plaque from building up in your mouth; it’s healthy for your gums and teeth, too. If you can’t brush after a meal, give your mouth a good rinse with water to at least loosen up and free those trapped bits.
Clean that tongue: Bacteria on your tongue can contribute to bad breath. When you brush your teeth, brush your tongue, too, or use a tongue scraper.
Use a mouthwash or dental rinse. Mouthwashes don't typically relieve bad breath for long. But some specialized rinses can help kill bacteria that cause bad breath and help with other underlying issues. Antimicrobial mouth rinses, for instance, help kill plaque-causing bacteria that can lead to gingivitis, an early, mild form of gum disease. Adding a fluoride rinse to your daily routine can help prevent tooth decay.
How to Make Your Breath Better continued...

Drink water: If your bad breath is caused by weight loss, water can dilute the chemicals that cause the odors. Water also helps wash away bacteria and food particles.
Eat breakfast: Even if you brush your teeth when you get up, your morning breath may reappear if you don't eat. Morning mouth may be associated with hunger.
Eat a hard fruit or vegetable: Apples, carrots, celery, and other hard fruits and vegetables help clear odor-causing plaque and food particles from your mouth.
Chew sugarless gum with xylitol: Gum with the natural sweetener xylitol can prevent the growth of bad-breath bacteria. The gum itself can bring more saliva to your mouth, which will naturally make your mouth fresher.
Take care of health problems: Work with your doctor to keep diabetes, allergies, and other conditions under control.