17 February 2009

அலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்

எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம் , வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.

1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.
2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்:-பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.
3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி:-அனேகமாக இது arthritis ஆக இருக்கலாம்.
4. கடுமையான வயிற்று வலி: வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.
5. கெண்டைக்கால் வலி: கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி: கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.
7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி: சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் " கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது "என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போது நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாம்ல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.

இது தொடர்பான மற்ற இடுகைகள்:
வலி
ஒற்றைத் தலைவலி

Download As PDF

7 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல்

நல்ல பகிர்வு.

Seemachu said...

சாதிக், நல்லா எழுதறீங்க.. உங்க பதிவுகளில் ஒரு பொறுப்புணர்ச்சி தெரியுது.. தொடர்ந்து எழுதுங்க..

உங்களை மாதிரி ஆட்களும் பதிவுகளும் வலையுலகத்துக்கு ரொம்ப தேவை...

அன்புடன்
சீமாச்சு

Sathik Ali said...

முதுகு வலி

வயதான பெண்களுக்கு முதல் முறை முதுகு வலி வரும்போது, அலட்சியம் கூடாது. கால்சியம் குறைபாட்டால், முதுகெலும்பு பலவீனமாகி, நொறுங்கி, வலி தீவிரமடையலாம். உடனடியாக கவனிக்காவிட்டால், நொறுங்கிய முதுகெலும்பு, தண்டுவடத்தை அழுத்தி, நிரந்தர நரம்புப்
பிரச்னைகளை உண்டுபண்ணும்.

இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள முதுகு சவ்வு தேய்ந்து, எலும்புகள் விலகுவதாலும், வயதான பெண்களுக்கு முதுகு வலி வரும். சாதாரண வலி மாத்திரையோ, ஓய்வோ இந்த வலிக்குத் தீர்வாகாது. மருத்துவரை அணுகி, நவீன வலி நிர்வாக சிகிச்சை முறையில், முதுகெலும்பு முறிந்தவர்களுக்கு ஒரு வகையான எலும்பு சிமென்ட்டை உள்ளே செலுத்திச் செய்யப்படுகிற ‘வெர்டெப்ரோபிளாஸ்டி’ எனப்படும் சிகிச்சை மட்டுமே பலன் தரும். கூடவே ஒவ்வொருவருக்கும் தகுந்த உடற்பயிற்சிகளை மருத்துவர் சொல்லித் தருவார். அவற்றைப் பின்பற்றினால் தொடர்ந்து வலியின்றி வாழலாம்.

Sathik Ali said...

இடுப்பு எலும்பு தேய்வதாலும், முன்பு ஏற்பட்ட ஏதோ ஒரு காயத்தின் விளைவாலும், கர்ப்பப்பை இறக்கத்தினாலும், ‘வெள்ளைப்படுதல்’ போன்ற நோயினாலும் இடுப்பு வலி வரலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

Sathik Ali said...

கட்டுப்பாட்டில் இல்லாத மற்றும் சரியாக கவனிக்கப்படாத நீரிழிவின் காரணத்தால், நரம்புகள் பாதித்து, கால் எரிச்சலும், வலியும் வருவது சகஜம். ‘டயபடிக் நியூரோபதி’ எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு சிறப்பு மருந்துகளும் சிகிச்சைகளும் உள்ளன. நடைப்பயிற்சியும் உதவும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே கால் வலி காணாமல் போகும்.

Sathik Ali said...

ஃபேஸட் ஜாயின்ட் பிளாக் என்பதே 40 - 50 சதவிகித முதுகு வலிக்கான காரணங்கள். இதை வழக்கமான சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் கண்டுபிடிக்க முடியாது. முதுகெலும்பு இணைப்பில் உள்ள சந்தேகத்துக்குரிய நரம்புகளை பிளாக் செய்து, வலி குறைவது கண்டுபிடிக்கப்பட்டால், பிறகு அதற்கேற்ப சிகிச்சை தொடங்கப்படும்.

Sathik Ali said...

நரம்பு தொடர்பான இதர வலிகளுக்கு, வலி உண்டுபண்ணும் நரம்புகளில் மருந்தைச் செலுத்தி, எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் மூலம் காரணம் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்படும்.